Thursday, June 10, 2010

சாரு,மிஷ்கின் - சொல்வார்கள் இன்னும் சொல்வார்கள்

ஆறு மாதங்களுக்கு முன்

சாரு - "நந்தலாலா மாதிரி ஒரு படம் நான் பார்த்ததே இல்லை.."

இரும்புத்திரை - "நான் கூட பார்த்ததேயில்லை..ஜப்பான் மொழியில் அந்த படம் இருக்கிறது என்று தெரியும் வரை.."

மிஷ்கின் - "நான் சாருவுடன் சேர்ந்து குடிக்க ஆசைப்படுகிறேன்.."

சாரு - "நான் யுத்தம் செய் படத்திற்காக ஹெவி பிராக்டிஸ் பண்றேன்..இது மாதிரி எந்த தமிழ் எழுத்தாளனால் ஸ்டெப் போட முடியுமா..குறிப்பாக அந்த.."

மிஷ்கின் - "இளையராஜாவிற்கு என் மேல் கோபம் அவர் குடுத்த ஆறு பாடல்களில் நாலு பாடல்கள் படத்திலே இல்லை.."

ஆறு மாதங்களுக்குப் பின் படத்தில் சரியாக அந்த காட்சி மட்டும் காணாமல் போனால்

சாரு - "எனக்கு இன்னும் பேமண்ட் வரலை.."

சாரு - "என் முகத்தை மக்களுக்கு காட்டும் ஆசையில் தான் இப்படி எல்லாம் செய்கிறேன்..அதை தவறாக பயன்படுத்திக் கொண்டார்கள்.."

மிஷ்கின் - "அது படத்தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு..இளையராஜா பாடல்களே எடுத்து விட்டேன்.."

இரும்புத்திரை - "கொஞ்சம் அதை தான் கண்ணில் காட்டுங்களேன்.."

பதிவர்கள் - (யூ டுயூப் இணையத்தில் வெட்டப்பட்ட காட்சியை எடுத்து) பாருங்கள் சாருவுக்கு டான்ஸ் ஆட வரவில்லை.

சாரு - "நான் டான்ஸ் மாஸ்டரை நம்பினேன்..அவர் சரியாக செய்யவில்லை நானா பொறுப்பு.."

நீயா நானா கோபி - "சாரு நீங்கள் யுத்தம் செய் படத்தில் ஆடி உங்களுடைய வாசகர்களை நடனப் பள்ளிக்கு செல்ல தூண்டியதற்கு மன்னிப்பு கேட்பீர்களா.."

ஆண்டனி - "விடாதே..டோண்ட் லீவ் ஹிம்.."

சாரு - "ஆமாம் தவறுதான்.."

பதிவர்கள் - "சாரு மன்னிப்பு கேட்டு விட்டார்.."

சாரு - "மஞ்சள் சேலை கட்டிக் கொண்டு டான்ஸ் ஆடும் படம் எடுத்தால் உலகத்தரம் ஆகி விடுமா.."

சாரு - "எனக்கு அடுத்த படத்தில் நாயகன் வேஷம் தருவதாக சொன்னார்.. அதற்காகவெல்லாம் இந்த படத்தை பாராட்ட முடியுமா.."

ஹரன் பிரசன்னா - "சாரு பாராட்டி அவர் வாயில் வாங்கி கட்டி கொள்ளும் ஐந்தாவது இயக்குனர் மிஷ்கின்.. முன்னர் செல்வராகவன்,வசந்த பாலன்,அமீர்,சசிகுமார்.."

இட்லிவடை - "நன்றி ஹரன் பிரசன்னா"

லக்கி - "நன்றி அதிஷா நல்ல பதிவு.."

அதிஷா - "நன்றி லக்கி நல்ல பதிவு.."

மன்னிப்பு கேட்காதே (1)..

மன்னிப்பு கேட்காதே (2)

மன்னிப்பு கேட்காதே (3)

மன்னிப்பு கேட்காதே (4)

மன்னிப்பு கேட்காதே (5)

மன்னிப்பு கேட்காதே (6)

மன்னிப்பு கேட்காதே (7)

மன்னிப்பு கேட்காதே (8)

தொடரும்

தொடரும்

தொடரும்

தொடரும்

பதிவின் நீதி - உலகம் ஒரு உருண்டை அல்லது வட்டம்.

19 comments:

நீ தொடு வானம் said...

ஃபெட்டிஷ் சமுதாயம் பற்றி ஒண்ணும் வரவில்லையே

Kanagu said...

சாரு : சொன்னால் நம்ப மாட்டீர்கள். எங்கள் ஊரில் ஒரு எருமை, ஏரோப்பிளான் ஓட்டும்.

பகடி நன்றாக இருகிறது. :-)

இரும்புத்திரை said...

இது பகடியா என்ன கொடுமை.பகடி என்றால் பெயர் எல்லாம் மாறியிருக்கும்.இது உண்மை கனகு.

Rettaival's Blog said...

Brilliant one boss...!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பர்.. கலக்கலாயிருக்கு சார்...

வால்பையன் said...

டியர் சாரு!

உங்கள் உடலமைப்புக்கு டாங்க்கோ நடனம் அருமையாக வரும், அதை பயன்படுத்தி கொள்ளாத மிஷ்கினுக்காக நீங்கள் ஏன் வருத்தபட வேண்டும், உங்களின் அருமை அறியாத தமிழக மக்களுக்காக நான் வெட்க படுகிறேன்!


கோவிந்த்
இட்டாலி!


டியர் கோவிந்த், பாஸ்கோ பாரில் ஒருமுறை ஒரு இளம் பெண்ணுடன் டாங்கோ ஆட வாய்ப்பு கிடைத்தது, இன்று நினைத்தாலும் மனதில் மகிழ்ச்சி பொங்கும், ஆனால் அன்று வோட்கோ ஓவராக போய் விட்டதால் சேரை விட்டே எழமுடியவில்லை, அடுத்தமுறை இட்டாலி வர நேர்ந்தால் நிச்சயம் உங்களுக்கு இட்லி வாங்கி வருகிறேன், முடிந்தால் எனது புத்த்தகத்தை உங்கள் ஊர் நூலகத்துக்கு வாங்கி கொடுங்கள்!, இல்லையேல் எருமை தோல் தடியன் என்று திட்டுவேன்!

பெசொவி said...

Super....Super.....Supero Super!

மோகன் said...

excellent pakadi..;)))

ராம்ஜி_யாஹூ said...

சாரு உங்களின் இந்த பதிவை படித்து கொண்டு இருக்கும் போது, பாஸ்டனில் வசிக்கும் ஒரு நீண்ட நாள் வாசகி மின்னஞ்சல் அனுப்பி உடனே பதில் வேண்டும் என்று தொந்தரவு செய்து கொண்டு இருப்பதால், சாரு லாக் ஆப் செய்து விட்டார்.

butterfly Surya said...

:) :)

வாலு.. அடங்க மாட்டியா..?? சூப்பர்.

சு.சிவக்குமார். said...

உங்களுக்குத் தெரியுமா? இல்லையான்னு தெரியலை?

மிஷ்கின் சாருவிற்கு தன்னுடைய நந்தலாலா படத்தின் பிரீவியூவை சுமார் 4-5 மாதங்களுக்கு முன்னதாகவே போட்டுக் காண்பித்து விட்டார். படத்தைப் பற்றியும்,அதில் மிஷ்கினின் கதா பாத்திரம் பற்றியும் பயங்கரமா(!!!) புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

ஆனா இந்தப் பதிவை அவரோட பழைய வலைப்பக்கத்தில் எழுதியிருந்தார். இப்ப அது புது வலைப்பக்கத்தில் இருக்கா இல்லையான்னு தெரியலை. நாளைக்கு ஒரு வேளை படம் நல்லா ஒடுச்சுனா இந்தப் பதிவை ஒரு தீர்க்கதரசிமாதிரி பழைய தேதியில் போடுவார்.படம் சரியில்லைன்னா இந்த பதிவை டெலிட் பன்னிட்டு புதுசா ஒன்னை எழுதிருவார்...

தேடுதல் said...

@ வால்பையன்

கலக்கல்.

Unknown said...

எப்போ சாரு எதிர்ப்பாளனா மாறுனிங்க

Anonymous said...

one of the most interesting post i've read recently

இரும்புத்திரை said...

prabhuphotojournalist (http://prabhuphotojournalist.wordpress.com/) has left a new comment on your post "சாரு,மிஷ்கின் - சொல்வார்கள் இன்னும் சொல்வார்கள்":

one of the most interesting post i've read recently

பொன் மாலை பொழுது said...

அவன்தான் ஒரு கிறுக்குப்பயல் என்றால் அவனையே கட்டிக்கொண்டு இன்னமும் மாரடிக்க ஆசையா?
விட்டுதொலயுங்கள் பிள்ளைகளா? அந்த கிருக்கனுக்கென்று பதிவுகளை எழுதி ஏன் ??

Unknown said...

மிஷ்கின் ப்ரீவயு ஒன்றும் போடவில்லை.டிவிடியை நண்பர்கள் முக்கியமான திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு போட்டு காண்பித்தார்.அதில் சாருவும் ஒருவர்.அந்தே.

இரும்புத்திரை said...

ஆறு மாசத்துக்கு முன்னாடி உள்ளது.சோ நோ 100% லாஜிக்.ஒன்லி மேஜிக்.

karthi said...

thalaiva.


neenga theerkka tarisi....