Wednesday, February 17, 2010

சரக்கு கிடைக்காத செந்தில்,குடுக்காத கவுண்டமணி

கவுண்டமணியின் பேட்டிக்காக எடிட்டர் குடுத்த சரக்குடன் அவரை சந்திக்கிறார் இரும்புத்திரை.சரக்கின் மீதிருந்த ஆர்வத்தால் பேட்டி தருகிறார்.பாதி பேட்டியில் சரக்கைப் பிடிங்கி பார்க்கிறார்.பாதி தான் இருக்கிறது.எப்படி என்று தெரியாதவர்களுக்கு சுட்டி இங்கே.

இனி..

கவுண்டமணி - "எனக்கு அப்பவே தெரியும் நீ உடைப்பேன்னு..முன்னப் பின்ன சரக்கடிச்சிருந்தா தானே அதோட அருமை தெரியும்.நல்ல வேளை முழு பேட்டியும் குடுக்கல..ஒரு சொட்டு கூட மிஞ்சிருக்காது.."

இன்னும் கண்டபடி வைது விட்டு சரக்கடிக்க ஆரம்பிக்கிறார்.

இரும்புத்திரை - "மிச்ச பேட்டி.."

கவுண்டமணி - "செந்தில் வருவான் அவன் கிட்ட வாங்கு இல்ல வாங்காம போ..எனக்கென்ன உம் பாடு அவன் பாடு..இல்ல அவனே ஒரு _டு.."

செந்தில் வருகிறார்.பார்த்து விட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

கவுண்டமணி - "என்னடா சிரிக்கிற.."

செந்தில் - "சரக்கடிக்கிறவன் எல்லாம் தேவதாஸ் ஆக முடியுமா.."

கவுண்டமணி - "ஆமா நான் தேவதாஸ் தான்..என்ன நக்கலா...நாய்தான் இல்ல..பரவாயில்ல அதான் நீ வந்துட்டியே..ஒழுங்கா என்னை மாதிரியே பேட்டி குடுக்கணும்.."

செந்தில் - "நான் ரொம்ப பிஸி.."

கவுண்டமணி - "மூடிக்கிட்டு பேட்டி குடு..போகும் போது இந்த மூடியில சரக்க தர்றேன்.."

இரும்புத்திரை - "பிடித்த விளையாட்டு.."

செந்தில் - "டிக்கிலோனா.."

கவுண்டமணி - "ஏன் அது விளையாடி உதை வாங்கியது மறந்து போச்சா.."

செந்தில் - "அப்புறம் ஸ்பூன்லிங்கு.."

கவுண்டமணி - "அந்த கம்பிய அடுப்புல காய்ச்சு..போன வாட்டி சூடு சரியா விழல போல.."

இரும்புத்திரை - "கண்ணாடி அணிபவரா.."

செந்தில் - கண் மூடி யோசிக்கிறார்.ஜெயிந்த் படத்தின் முள்ளம்பன்றி தலையும் ஞாபகம் வருகிறது.கூடவே கண்ணாடியும்.கூடவே கவுண்டமணி உதையும். "இல்ல..அணிவது கிடையாது.."

கவுண்டமணி - "நீ எந்த சீனை நினைச்சன்னு எனக்குத் தெரியும்.."

இரும்புத்திரை - "எப்படிப்பட்ட படம் பிடிக்கும்.."

செந்தில் - "பேட்டா காசும்,லன்சும் தர்ற சினிமா பிடிக்கும்.."

இரும்புத்திரை - "கடைசியாக பார்த்த படம்.."

செந்தில் - "ஜக்குபாய்.."

கவுண்டமணி - "நெட்ல ரீலிஸ் பண்ணது நீ தானா.."

இரும்புத்திரை - "பிடித்த பருவ காலம்.."

செந்தில் - "குளிர்காலம்.."

கவுண்டமணி - "நீ இப்படி ஹின்ட் குடுத்தா நான் சரக்கை குடுத்திருவேனா..முதல்ல பேட்டிய முடி.."

இரும்புத்திரை - "இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்.."

செந்தில் - "டூ ஸ்டேட்ஸ்.."

கவுண்டமணி - "என்ன டூ பாத்ரூம் வருதா..இங்க போயிராத..வெளியே குழி வெட்டி வைச்சிருக்கேன்..போனப்பிறகு மண்ணுப் போட்டு மூடிடு.."

செந்தில் - "நான்சென்ஸ் மாதிரி பேசாதீங்க.."

கவுண்டமணி - "யாரு நானா..டூ ஸ்டேட்ஸ் அர்த்தம் தெரியுமா உனக்கு..பேச்சப் பாரு..பழமையப் பாரு.."

இரும்புத்திரை - "உங்கள் முன்னறையில் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு தடவை மாத்துவீங்க.."

செந்தில் - "தினமும்.."

கவுண்டமணி - "நீ பல்லு விளக்குறதைப் பத்தி கேக்கல.."

இரும்புத்திரை - "பிடித்த சத்தம்..பிடிக்காத சத்தம்.."

செந்தில் - "பிடித்த சத்தம் - பஸ் காரன் சத்தம்"

கவுண்டமணி - "டபுள் மீனிங்கு வருதுடா போண்டா தலையா.."

செந்தில் - "பிடிக்காத சத்தம் - சரக்கை உறியும் போது வரும் சத்தம்.."

கவுண்டமணி - (மனதுக்குள்) "உனக்கு ஒரு மூடி சரக்கும் கட்டுடா.."

இரும்புத்திரை - "வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகப் பட்ச தொலைவு.."

செந்தில் - "லண்டன்,அமெரிக்கா,இன்னும் பல நாடுகள்.."

கவுண்டமணி - "போக ஆசைப்பட்டான்..நடக்கல.."

இரும்புத்திரை - "உங்களுக்களிடம் தனித்திறமை ஏதாவது இருக்கிறதா.."

செந்தில் - "இருக்கு.." மெதுவாக "அப்புறமா சொல்றேன்.."

கவுண்டமணி - "சேர்ந்து இருக்கும் குடும்பத்தைப் பிரிச்சு விடுவான்..இதை விட தனித்திறமை வேணுமா.."

இரும்புத்திரை - "உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்.."

செந்தில் - "பக்கத்தில் இருப்பவர்களுக்கு தராமல் சாப்பிடுவது.."

கவுண்டமணி - "இதுவே அவன் பண்ணினா ஏத்துக்குவான்.."

இரும்புத்திரை - "உங்களுக்குள்ளே இருக்கும் சாத்தான்.."

செந்தில் - "பாசம் தான்.."

கவுண்டமணி - "அவனே ஒரு சாத்தான் தான்..அதான் அவனை வைச்சு சாத்தான் சொல்லைத் தட்டாதே படம் எடுத்தாங்க.."

இரும்புத்திரை - "உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்.."

செந்தில் - "நிலா.."

கவுண்டமணி - "பலான இணையத்தளம் தான் அவனுக்கு ரொம்ப பிடித்த தலம்,தளம்.."

இரும்புத்திரை - "எப்படி இருக்கணும்னு ஆசை.."

செந்தில் - "இப்படியே அரை டவுசர் போட்டுக்கிட்டு ஜாலியா.."

கவுண்டமணி - "அதையும் கழட்டிட்டு ஊருக்குள்ள சுத்து..இன்னும் ஜாலியா இருக்கும்..கிங்கிணி மங்கிணி.."

இரும்புத்திரை - "மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்.."

செந்தில் - "துணி துவைக்கிறது..பாத்திரம் கழுவுறது..இப்படி சின்ன சின்ன வேலை என்றாவது.."

கவுண்டமணி - "அவயிருக்கும் போது செஞ்சா சரியா செய்யலைன்னு அடி விழும்..அதான் பன்னி உஷாராத்தானிருக்கு.."

இரும்புத்திரை - "வாழ்வு பற்றி ஒரு வரி.."

செந்தில் - "வாழ்க்கைங்குறது வேட்டி மாதிரி..கட்டுனா கிழிஞ்சிரும்..கட்டலைன்னா இத்துரும்.."

கவுண்டமணி - " வேட்டியப் பத்தி நீயெல்லாம் பேசவே கூடாது..என்னைக்காவது கட்டியிருக்கியா.."

செந்தில் - "இப்போ கட்டப் போறேனே.." சொல்லி விட்டு கவுண்டமணி அசந்து இருக்கும் நேரத்தில் அவருடைய வேட்டியை உருவிக் கொண்டு ஓடுகிறார்.

கவுண்டமணி - "நான் உள்ள ஒண்ணும் போடலைடா..மரியாதையா குடுத்திரு.." என்று காலியான பாட்டிலை செந்தில் மீது எறிகிறார்.அது யூ டர்ன் அடித்து கவுண்டமணி மீதே விழுகிறது.கோபத்தை இரும்புத்திரை மீது திருப்பலாம் என்று வலியோடு தேடினால் ஆளை காணோம்.

5 comments:

அகல்விளக்கு said...

பேட்டி சூப்பர் தல.....

அடுத்த தடவ சிங்க முத்து.. வடிவேலுவ எடுங்க...

லோகு said...

ஹா..ஹா..

ரொம்ப நாளைக்கு பிறகு எல்லாருக்கும் புரியற மாதிரி ஒரு பதிவு :)

அட்டகாசமா இருக்குண்ணா, வாழ்த்துக்கள்!

மதார் said...

//ரொம்ப நாளைக்கு பிறகு எல்லாருக்கும் புரியற மாதிரி ஒரு பதிவு :) // nijam

துபாய் ராஜா said...

//அகல்விளக்கு said...

அடுத்த தடவ சிங்க முத்து.. வடிவேலுவ எடுங்க...//

ரிப்பீட்டு....

Unknown said...

ஹம்ம்.., பழைய ஃபார்ம தேடி கண்டுபிடிச்ச்சிட்டிங்களே