Saturday, February 27, 2010

எனக்கு கிரிக்கெட் பிடிக்காது

ஆமா..எனக்கு கிரிக்கெட் பிடிக்காது.அதுவும் இன்னைக்கு இந்தியா விளையாடும் போது கிரிக்கெட் பிடிக்கலை.காரணம் சச்சின் இல்லை.சச்சின் அடிக்காமல் இருந்தாலும் அன்னைக்கு நாம மேட்ச் ஜெயித்திருக்கிறோம்.அவர் இருந்தாலே யோகமும் கூடவே இருக்கிறது என்று நான் சொல்வேன்.இன்னைக்கு இந்தியா நிச்சயம் பல்ப் வாங்கும் என்பது என் கணிப்பு.

இப்போ ஏன் இவ்வளவு பில்டப்.எல்லாம் தொடர்பதிவுக்கு தான்.சங்கர் கூப்பிட்டு இருந்தார்.நான் படித்தால் அதை எழுதலாம் என்று சொல்லியிருந்தார்.என்ன கொடுமை.நானெல்லாம் கூப்பிட மாட்டார்களா என்று ஏங்கித் தவித்திருக்கிறேன்.

சச்சின் இன்னும் நூறு போட்டி டக் அடித்தாலும் நான் அவர் புகழ் பாடுவது நிச்சயம்.

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.

2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

எனக்கு எந்த அளவிற்கு கிரிக்கெட் பிடிக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.பத்து வருடங்களுக்கு முன் பபிள்கம்முடன் கிரிக்கெட் கார்ட் தருவார்கள்.ஒரு அட்டையும் விடாமல் சேர்த்து என் அப்பாவின் காசை கொஞ்சம் நான் மென்று துப்பியிருக்கிறேன்.அது இன்னும் என் வீட்டில் இருக்கிறது.எந்த கேள்விக்கும் பதில் சச்சினாக இருக்காது.கேள்விகளுக்குள் அவரை அடக்க பிடிக்கவில்லை.

1. பிடித்த கிரிக்கெட் வீரர்
கில்கிறிஸ்ட்,லாரா,கிப்ஸ்

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்
இஜாஸ் அகமது(89 பந்தில் 139 ரன்கள் அதுவும் இந்தியாவுடன்)

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர்
மெக்ராத், வாசிம் அக்ரம், முகமது அமீர்(சொல்லி சச்சின் விக்கெட்டை எடுத்ததால் சச்சின் இடது கை பந்து வீச்சாளர்களிடம் திணறுவார்.நிறைய உதாரணம் கொடுக்கலாம்)

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்
ஓலங்கா,காஸ்ப்ரோவிச்,கேடிக்(சச்சினிடம் வாய்விட்டு வாங்கி கட்டியதால்)

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர்
சக்லைன், முரளிதரன்,க்ளார்க்(மைக்கேல்)

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர்
சுழலே இல்லாமல் பந்து போடும் இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன்(அதுக்கு விளக்கம் வேறு தருகிறார்)

7. பிடித்த வலதுக்கை துடுப்பாட்ட வீரர்
பாண்டிங் (கால் நகர்த்தல்),மார்க் வா(ஸ்டைலாக விளையாடுவதில் இன்னும் இவருக்கு மாற்றி வரவில்லை)

8. பிடிக்காத வலதுக்கை துடுப்பாட்ட வீரர்
அப்ரிடி(நேரகாலம் தெரியாமல் அடிப்பது),அக்மல்

9. பிடித்த இடதுக்கை துடுப்பாட்டவீரர்
கில்கிரிஸ்ட், கங்குலி

10. பிடிக்காத இடதுக்கை துடுப்பாட்ட வீரர்
ஜிம்மி ஆடம்ஸ்,அமீர் சோகைல்

11. பிடித்த களத்தடுப்பாளர்
ஜடேஜா, ஜான்டி ரோட்ஸ், பால் கோலிங்குட்

12. பிடிக்காத களத்தடுப்பாளர்
க்ளூசனர்,நிடினி

13. பிடித்த ஆல்ரவுண்டர்
அக்ரம்,ஃப்ளிண்டாப்

13.1 பிடிக்காத ஆல்ரவுண்டர்
வாஸ்,காலிஸ்

14. பிடித்த நடுவர்
பில்லி பாவுடன், சைமன் டோபல்

15. பிடிக்காத நடுவர்
ஸ்டீவ் பக்னர்,அசோக டி சில்வா

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர்
ஹர்ஷா போக்லே, வாசிம் அக்ரம்

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் குறிப்பாய் யாருமில்லை
ரவி சாஸ்திரி (எதிர் அணிக்கு படம் போட்டு காட்டுவார் இங்கு ஆள் இல்லை என்று),

18. பிடித்த அணி
ஆஸ்திரேலியா(கடைசி வரை போராடும் குணம்)

19. பிடிக்காத அணி
ஆஸ்திரேலியா(ஏமாற்றத் துடிப்பது)

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி
இந்தியா - ஆஸ்திரேலியா

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி
இந்தியா - பாகிஸ்தான்(இதில் எனக்கு நாட்டுப்பற்று காட்டத் தெரியாது.சயீத் அன்வர் சதம் அடித்த போதும்,சென்னை டெஸ்டில் வென்று விட்டு மைதானத்தைச் சுற்றி பாகிஸ்தான் அணியினர் ஓடினார்கள்.எல்லோரும் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்.நான் அந்த கூட்டத்தில் ஒருவன்)

22. பிடித்த அணி தலைவர்
ஸ்டீவ் வா,கங்குலி(இருவருக்கும் பிறகு தான் இரண்டு அணியும் விஸ்பரூபம் எடுத்தது)

23. பிடிக்காத அணித்தலைவர்
லாரா,கெயில்,வக்கார் யூனிஸ்

24. பிடித்த போட்டி வகை
டெஸ்ட் போட்டி (இதில் தான் சச்சினுக்கு உண்மையான போட்டி இருக்கிறது)

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி
சேவாக் - கம்பீர்(டெஸ்ட்), ஜெயசூர்யா - கலுவித்ரனா(ஒரு நாள்)
26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி
சேவாக் - வாசிம் ஜாபர்

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர்
டிராவிட்

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்
இந்த கேள்விக்கு பதில் தர விரும்பவில்லை.அவர் பெயரைத் தான் சொல்ல மாட்டேன் என்று சொல்லி விட்டேனே.

இந்தப் பதிவைத் தொடர நான் அழைப்பவர்கள்

வெண்ணிற இரவுகள் கார்த்தி (திரும்ப அழைக்கிறேன்)

பேனா மூடி

8 comments:

Unknown said...

ஆகா... என்னையும் கூப்புட்டங்களே........,

சசிகுமார் said...

நல்ல சுவாரஸ்யமான பதிவு. தொடர்ந்து மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சங்கர் said...

//(திரும்ப அழைக்கிறேன்)//

எந்தப் பக்கம் திரும்பணும் :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சென்னை டெஸ்டில் வென்று விட்டு மைதானத்தைச் சுற்றி பாகிஸ்தான் அணியினர் ஓடினார்கள்.எல்லோரும் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்.நான் அந்த கூட்டத்தில் ஒருவன்)
//

சரித்திரம்..,

Tech Shankar said...

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin.
Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

அத்திரி said...

//2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்
இஜாஸ் அகமது(89 பந்தில் 139 ரன்கள் அதுவும் இந்தியாவுடன்)//



ஹா ஹா ரசித்தேன்

buvanesh said...

பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர்
சுழலே இல்லாமல் பந்து போடும் இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன்(அதுக்கு விளக்கம் வேறு தருகிறார்)//

அன்பு நண்பரே, ஹர்பஜனை பிடிக்காது என்பது உங்கள் சொந்த கருத்து.அதில் நான் சொல்ல ஒன்றுமில்லை.ஆனால் அவர் பந்து சுழலவில்லை என்று சொல்வது.................? மன்னியுங்கள் தாங்கள் சிறிது கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.எனக்கு தெரிந்து பல வருடங்களாக இலக்கண சுத்தமாக off spin போட்டு கொண்டிருக்கும் ஒரே bowler அவர்தான்.

மற்றபடி, உங்கள் பதிவு தரமானதுதான். அதுவும் ஸ்டைலிஷ் மார்க் வா வை நினைவு படுத்தியிருப்பது அருமை.
http://buvaneshk.blogspot.com/2010/02/blog-post_26.ஹ்த்ம்ல்

அன்புடன்,
புவனேஷ்.

buvanesh said...

http://buvaneshk.blogspot.com/2010/02/blog-post_26.html



buvanesh.k