Tuesday, February 16, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா

"அமர்..என்னை தெரியுதா.." ஒரு பெண் குரல் கேட்டதும் திரும்பி பார்த்தேன்.அழகாவே இருப்பதாகத் தெரிந்தது.அழகா முக்கியம் அவள் குரல் எனக்கு பிடித்திருந்தது.சற்றே ஆண்மை கலந்த குரல்.அதுவும் ஹஸ்கி வாய்ஸில் பேசியது எனக்கு போதையேற்றியது.

"தெரியல.." என்று சொன்னால் பேச்சு தொடராதோ என நினைப்பு வேறெங்கோ போய் வந்தது.கண் கொஞ்சம் பெரிதாக இருந்தது.இது மாதிரி கண்ணை நான் பார்த்தாக நினைவில்லை.

"என்ன யோசிக்கிற..தெரியலையா.." அவள் சொல்லும் போதே மெட்டி அணிந்திருக்கிறாளா என்று காலை பார்த்தேன்.ஷூ மறைத்திருந்தது.கொஞ்சம் நஞ்சமல்ல ஏமாற்றம்.

"பார்த்தியா.. மறந்துட்ட.." பதில் சொல்லலாம் என்று யோசித்து முடியாமல் அவள் உதடு அசைவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.ஏதாவது துப்பு குடுப்பாளா என்று அவளை இன்னும் நெருக்கினால் பார்க்க துப்பு கிடைக்காது எச்சில் தான் தெறிக்கும் என்பதால் இரண்டடி பின்னால் நகர்ந்தேன்.

"நீ கடைசியா பஸ்ல போகும் பார்த்த பார்வையை நான் இன்னும் மறக்கல.." முதல் துப்பு கிடைத்த சந்தோஷத்தில் பஸ் சம்பவம் எல்லாம் யோசிக்க விழுந்து வாறியது,டிக்கெட் எடுக்காமல் மாட்டி முழித்தது என்று சம்பந்தமேயில்லாமல் ஏதேதோ சம்பவங்கள் காட்சியாய் விரிந்தது.

"இன்னும் ஞாபகம் வரல..என்னை சுத்தமா மறந்துட்ட.." கண்ணில் அலை அடிக்க தொடங்கியது போல் தெரிந்தது.துடைக்க கைக்குட்டை எடுத்து நீட்டி அவள் பார்க்கும் முன் கையை மடக்கி கொண்டேன்.துவைச்சிருந்தால் கொடுத்திருக்கலாம்.

"என்ன பார்த்தா பைத்தியக்காரி மாதிரி இருக்கா.." தலையை ஆட்டினால் கூட சட்டையைப் பிடிக்கும் அபாயம் தெரிந்ததால் தலை மறந்தும் ஆடாமல் பார்த்துக் கொண்டேன்.

"நீ என் வாட்ச் கட்டுறதில்லை..உன் வாட்ச் எப்பவாது உடைஞ்சிருக்கா.." அவள் பேச்சில் சுவாரஸ்யம் இழந்து கொண்டிருந்தேன்.

"எனக்காக விண்ணைத் தாண்டி வருவேன்னு சொன்னது பொய்யா.." கோபத்தில் அவளுக்கு உதடு துடித்தது.எனக்கு நல்ல நாள்ல கூட ரொமண்டிக்கா பேச வராது நான் சொல்லியிருக்க மாட்டேன் என்று உறுதியாக நம்பினேன்.

"அப்போயெல்லாம் கணக்குல செண்டம் வாங்குவ..இப்போ சைபர் தான் வாங்குவ முண்டம்.." கடைசி க்ளூ எனக்காக குடுத்தது போலிருந்தது.

"இனி என் மூஞ்சிலேயே முழிக்காத.." போய் விட்டாள்.ஷிஸ் கான்.

ஏதோ புரிவது போல் தெரிந்தது.விஷயம் தான் முழுமையாக தெரியவில்லை.

கவனத்தை வேறு பக்கம் செலுத்தினேன்.இண்டர்வியூவில் தோற்ற பையனிடம் அவன் நண்பன் சொல்லிக் கொண்டிருந்தான்."இப்போ வந்து எல்லாம் சொல்லு..உள்ள பதில் சொல்லாம கோவில் மாடு மாதிரி தலையாட்டுனா எப்படி வேலை கிடைக்கும்.."

கண்டுப்பிடித்து விட்டேன்.விண்ணைத் தாண்டி வருவாயா ஃப்ரம் மின்சார கனவு.வருசம் 1997.நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன்.மேக்ஸ்ல செண்டம் ஒரு தடவை தான் வாங்கல.ஆற்றாமையில் வாட்ச்சை உடைத்து விட்டேன்.சமாதானப்படுத்த வந்த பெண்ணை திட்டினேன்.பெரிய கண்களாலே ஆறுதல் சொன்னாள்.கடைசி நாள் பஸ்ஸில் வரும் போது அவளை பார்த்துக் கொண்டே வந்தேன்.

"ஜெனிபர்..கிவ் மீ அனதர் சான்ஸ்.." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு "ஜெனிபர்..ஜெனிபர்.." என்று கத்திக் கொண்டே அவளை தேடியலைந்தேன்.

"பாருடா..கடலோரக் கவிதைகள் பார்ட் டூ ஓடுது.." நண்பனை தேற்ற என்னை பகடைகாய்களாக்கி கேலி செய்தவன் மீது பாய்ந்து என் கோபத்தை தீர்த்துக் கொண்டேன்."ஜெனிபர்..ஜெனிபர்.." எண்டு அடிக்கும் போதும் சரி அடி வாங்கும் போது வாய் மட்டும் அவள் பெயரை உச்சரித்து கொண்டிருந்தது.

என்ன முடிவா..சண்டையில் கிழியாத சட்டை,மூத்திர சந்து,ரொம்ப நல்லவன் இப்படி எல்லாம் கற்பனையை அலைய விட வேண்டாம்.

4 comments:

துபாய் ராஜா said...

பட விமர்சனம் இல்லையா...

Unknown said...

பதிவுக்கும் ரெண்டு படதுக்கும் சம்பந்தம் உண்டா இல்லயா...,

Unknown said...

ரீ பீட் கமெண்ட் அவ்வ்வ்வ்வ்

Sathya said...

super, how to blog in tamil i like ur blog and jetli blogs i have an english blog in sidcosathya.blogspot.com

thanks