Tuesday, February 23, 2010

இஷ்கியா - ஹிந்தி பட விமர்சனம்

இஷ்கியா இந்த படம் பார்த்தே ஆக வேண்டும் என்று அறையில் இருக்கும் போதும் மறந்து விடாமலிருக்க இந்த படத்தின் பெயரை உச்சரித்து கொண்டிருந்தேன்.காரணம் மூன்று விஷால் பரத்வாஜ் இயக்கிய ஓம்காரா,கமீனே ஏற்படுத்திய ஆச்சரியங்கள்.வித்யா பாலனின் முத்தக்காட்சி,கவுண்டமணி செந்திலுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க சூடுப் போட்டு விட்டு இஷ்கியா என்று கேட்பார்.

வித்யாபாலனில் இருந்து படம் ஆரம்பிக்கிறது.சாப்பிடும் போது தான் பிரச்சனைகளை எழுப்புவார்கள் மனைவிகள்.அப்படி ஒரு சராசரி பெண்ணாக வித்யா பாலன்.சந்தோஷமாக இருந்து விட்டு அப்படியே இருக்க ஆசைப்பட்டு கிரிமினல் கணவனை சரண்டர் ஆக சொல்ல வாக்குவாதங்களுக்கு பின் வீட்டிற்குள் சென்று திரும்பி வரும் வித்யாபாலன் வெடிகுண்டு விபத்தில் சிக்க,குற்றுயிரும் குலையுருமாக கிடக்கிறார்.

ஒவர் டூ நஸ்ரூதீன் ஷா,அர்ஷாத் வர்ஸி.சின்ன சின்ன திருட்டுகள் செய்து விட்டு சந்தோஷமாக இருக்கும் இருவரும் தலைவனிடம் வேலையை காட்ட,விஷயம் தெரிந்த தலைவன் காலில் நஸ்ரூதீன் ஷா விழுந்து கெஞ்சுகிறார்.(கவனிக்க இந்த படத்தை மொழிமாற்றம் நிச்சயம் செய்ய மாட்டார்).குழிக்குள் இறக்கப்படும் இருவரும் ஏமாற்றி பணத்தோடு தப்பித்து எங்கேயும் போக வழி தெரியாமல் அலைகிறார்கள்.யாரும் அடைக்கலம் தராத காரணத்தால் வித்யாபாலன் கணவன் நினைவுக்கு வர அங்கு வந்தால் விதவையாக வித்யாபாலன்.பின்னாலே தலைவனும் துரத்துகிறான்.

பணத்தை எடுத்து சந்தோஷமாக செலவு செய்யும் இருவரையும் தலைவன் வந்து புரட்டி எடுக்கிறான்.வீட்டில் பணத்தைத் தேடினால் பணமில்லை.அர்ஷாத் வர்ஸிக்கு வித்யாபாலன் மீது சந்தேகம்.வித்யாபாலன் நெற்றியில் துப்பாக்கி வைக்கப்பட நஸ்ரூதீன் ஷாவிற்கு சந்தேகம் வரவில்லை.திரும்பவும் கெஞ்சி கூத்தாடி அவகாசம் வாங்கி கொள்கிறார்கள்.பணம் சம்பாதிக்க வழி சொல்கிறார் வித்யாபாலன்.கணவனின் கடத்தல் தொழிலை கைத்தொழிலாக மாற்ற திட்டம் தீட்டுகிறார்கள்.நடுவே முறையே ஷாவிற்கும்,வர்ஸிக்கும் வித்யா மீது காதல்,காமம்.

திட்டம் தீட்டி ஒன்றுமே சரிவராமல் அவன் கோவிலில் அதிக நேரம் இருக்கிறானா எண்டு சந்தேகத்தில் துப்புத் துலக்க அது சின்ன வீட்டுக் கதையாக மாறுகிறது.சின்ன வீட்டின் கை ஏன் ஓங்கியிருக்கிறது என்று அந்த காட்சியைப் பார்க்க வேண்டும்.ஓளிந்திருந்து பார்க்கும் வர்ஸியும்,வித்யாவும் ஷாவின் முன்னால் அடக்க மாட்டாமல் சிரிக்க,ஷா முழிக்க.

கடத்தலுக்கு கார் தேவை என்று கார் திருட இருவரும் போக,நடுவழியில் வர்ஸி கழன்று கொள்ள நஸ்ரூதீன் ஷா மட்டும் போக அதுவும் வித்யாவின் காதல் ஞாபகத்திலேயே போக பஸ்ஸில் அவரை தவிர எல்லோரும் பெண்கள் அதற்கு அந்த பெண்ணும் அவரும் கொடுக்கும் உணர்வுகள்.இங்கே வீட்டிற்கு வரும் பூனைப் பானையை உருட்டி விட,நான் சொன்ன முத்தக்காட்சி பார்த்து விட்டு காதில் புகை வரலாம்.காரை திருடி விட்டு வரும் ஷா இருவரின் நெருக்கத்தையும் பார்க்க,கண்களில் கண்ணீர் ஒளிர்கிறது.மனுஷன் பின்னியெடுக்கிறார்.

காலையில் கடத்தலுக்கு போக,ஷா வர்ஸி மீது கோபத்தைக் காட்ட,திட்டத்தில் ஓட்டை விழுந்தாலும் ஆளைப் பிடித்து விடுகிறார்கள்.வாக்குவாதத்தில் இருவரும் அடித்து கொள்ள வித்யாபாலன் பணம் மட்டும் ஆளுடன் பறக்கிறார்.வித்யாவின் சூழ்ச்சி தெரிகிறது.

கடத்தியவனை விசாரித்து கணவன் இறந்த விதத்தை தெரிந்து கொள்ளும் வித்யாவை ஷாவும்,வர்ஸியும் அடித்து கட்டிப் போட்டு விட்டு அவனிடமிருந்து பணம் தர சொல்ல, அவனுடைய சின்ன வீடும்,பெரிய வீடும் ஒரே இடத்தில் இருக்க,வாங்க செல்லும் ஷாவும்,வர்ஸியும் எதிர்பாராத ஆளை சந்திக்க,சிறுவன் ஒருவனிடம் அவர்களை அந்த ஆள் கொல்ல சொல்லி விட்டு வித்யாவின் வீட்டிற்கு செல்ல,சிறுவன் ஏற்கனவே அறிமுகம் என்பதால் அவன் விட்டு விடுகிறான்.வரும் போது நடக்கும் கலாட்டாவில் போலீஸ் துரத்த அங்கு இருக்கும் கும்பலுக்கும்,போலீஸுக்கும் நடக்கும் சண்டையில் அவர்கள் தப்பித்து வித்யாவை காப்பாற்ற முயல,களேபரத்தில் மூவரும் தப்பிக்க வந்த எதிர்பாராத ஆள் மட்டும் கொல்லப்படுகிறான்.வித்யாவுடன் இருவரும் செல்ல,தலைவன் அவர்களை சுடாமல் குறிப்பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.காரணம் தொலைபேசியில் அவனுடைய மனைவி தடுக்கிறாள்.

வித்யாவை கொலை செய்ய முடியாமல் தவிக்கும் ஷாவுக்கும்,வர்ஸிக்கும் நடக்கும் உணர்வு போராட்டம் அருமை.

6 comments:

இரும்புத்திரை said...

வந்த ஆள் யார் என்பது நிறைய படம் பார்த்து இருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

Cable சங்கர் said...

நானும்படம் பார்க்க தியேட்டருக்கு போனால் ஷோவை மாற்றிவிடுகிறார்கள். டிவிடி வாங்கினால் கேமராபிரிண்டாக இருக்கிறது எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று ஒரு முடிவோடு இருக்கிறேன்.

Prasanna Rajan said...

விஷால் பரத்வாஜ் இந்த படத்தின் திரைக்கதையை மட்டும் தானே எழுதினார்??

Nathanjagk said...

செம ஸ்பீடு ட்ரைலர்தான்..
அங்கங்கே ​ஜெர்க் ஆகுது.. ​கணவர்கள் ரசித்துப் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.
நன்றி அர்விந்த்!

யூர்கன் க்ருகியர் said...

interesting. thx 4 sharing !

மரா said...

நல்லா எழுதியிருக்கிறீர்கள் நண்பரே! கொஞ்சம் டெக்னிக்கல் விசயம் சேர்த்திர்க்கலாம். உரிய படைப்பாளிகளுக்கு அங்கீகாரம் சென்றடைய வேண்டுமல்லவா!! வாழ்த்துக்கள்.