Wednesday, February 24, 2010

சச்சினை தரித்திரம் என்று திட்டிய வாய் இன்று????

இரண்டு நாட்களுக்கு முன் ரெடிஃப் இணையத்தில் சச்சின் எல்லாம் ஒரு ஆளா என்று பாண்டிங்குடன் ஓப்பீடு செய்து ஒரு பின்னூட்டம்.கிட்டத்தட்ட இந்த தலைப்பை பிரதிபலிக்கும் வார்த்தைகள்.இன்று அந்த நபரின் வாயும் கையும் புகழ்ந்து கொண்டே எங்காவது பின்னூட்டம் போடும்.சச்சின் தரித்திரம் அல்ல சரித்திரம் என்று.

முதலில் சச்சினை பாண்டிங் அல்லது லாரா அல்லது சயீத் அன்வர் என்று யாருடனாவது ஓப்பீடு செய்வது தான் நம் வேலை.நிச்சயம் இந்த மூவரையும் விட அவர் சிறந்தவர்.ஒரு காலத்தில் சச்சினுக்குப் போட்டியாக இருந்த அன்வர்,லாரா இருவரும் இன்று களம் இறங்குவதே இல்லை.பாண்டிங் என்ற இன்றைய சகாப்தத்திற்கும் இதே நிலைமை ஏற்படும்.சச்சினுடன் ஓப்பீடு செய்ய புதிதாக யாராவது வருவார்கள்.

சேவக் தான் முதல் ஆளாக ஒரு தினப்போட்டியில் இரட்டை சதமடிப்பார் என்று என் நண்பர்கள் நான் சொன்னேன் சச்சினுக்கும் வாய்ப்புள்ளது என்று மெல்லிய குரலில் சொன்னேன்.காரணம் சச்சின் கதை முடிந்து விட்டது என்று எல்லோரும் கருதிய,எழுதிய,சொல்லிய நாட்கள் அது.

பாண்டிங்,லாரா,அன்வர் இவர்கள் எல்லாம் டெஸ்ட் போட்டியில் முதல் மூன்று இடங்களில் தான் பேட் செய்வார்கள்.சச்சின் நாலாவதாகத்தான் இறங்குவார்.அதனால் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் ஆடுபவர்களால் அதிக இன்னிங்க்ஸ் ஆட முடியும்.அதுவும் டிராவிட் என்ற நங்கூரத்தையும் தாண்டி ஆட வாய்ப்பு கிடைத்து சாதனை புரிய வேண்டுமென்றால் அது சச்சின் என்ற ஒருவரால் மட்டுமே முடியும்.ஒரு தினப் போட்டியில் அவர் சாதனையை கொஞ்சம் கூட நெருங்க முடியாமல் பாண்டிங் தவிக்க காரணம் சச்சின் முதலில் களமிறங்குகிறார்.தவிர 1995லில் டெஸ்ட் ஆடத் துவங்கிய பாண்டிங் ஆடிய டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை 142.சச்சின் 1989லில் இருந்து ஆடுகிறார் அவர் ஆடிய போட்டிகள் 166.நடுவே அவர் விளையாடாமல் இருந்ததை கணக்கில் எடுத்தாலும் அது 180 போட்டிகளைத் தாண்டாது.பாண்டிங் பெரிய வீரராக உருவெடுத்த சமயம் வால்ஸ்,ஆம்புரோஸ்,அக்ரம்,யூனிஸ் போன்ற தலை சிறந்த வீரர்கள் ஓய்வு அடைந்து விட்டார்கள்.சச்சின் அப்படியல்ல மெக்ராத்,வார்ன்,வெஸ்ட் இண்டீஸ் அணியின் மார்ஷல்,இம்ரான் கான்,ஹாட்லி,மெக்டர்மோட் என்று வேகம் அனல் பறந்தப் போதும் சச்சின் ஆடியுள்ளார்.பாண்டிங் எப்படி இஷாந்த் சர்மா பந்தில் திணறினார் என்று உலகமே பார்த்தது.

சச்சின் இரட்டை சதமோ,இல்லை சதமோ அடிக்கும் போது அதை எடுக்க விடாமல் தடுப்பது எதிர் அணியில் விளையாடும் வீரர்கள் கிடையாது.நம் அணியில் விளையாடுபவர்கள் தான்.இன்று தோனி செய்ததை தான்,இலங்கையுடன் தினேஷ் கார்த்திக் செய்தார்,ஆஸ்திரேலியாவுடன் ரவிந்திர ஜடேஜா செய்தார்.பாகிஸ்தானுடன் விளையாடும் போது அருமையான கேப்டன் (அப்போதைய) கங்குலி டீக்ளேர் செய்தார்.என்ன கொடுமை.

இன்று சச்சின் இரட்டை சதம் அடித்தவுடன் எத்தனை வாய் அவர் பெயரை உச்சரித்திருக்கும்,எத்தனை காது அதை கேட்டிருக்கும்,என் எதிரி கூட மகிழ்ந்திருப்பான்.எத்தனை கைகள் என்னை மாதிரி தட்டச்சு செய்து கொண்டிருக்கும்.நாளை பதிவுலகத்தில் அனல் பறக்கும்.இந்த சாதனை மட்டும் கிரிக்கெட் போட்டியில் பெண்களுக்கு பிறகு நிகழ்த்தியதாக இருக்கும்.

எல்லாம் மறந்த தினத்தில் சச்சின் ஆட்டத்தை விட்டு விலகி விடலாம் என்று விமர்சனம் வரும்.அதையும் நாம் வேடிக்கை பார்த்து விட்டு ஆஸ்திரேலியாவை உதாரணம் காட்டி பேசுவோம்.சரியாக சொல்கிறார்களே என்று உச் இச் பச் சொச் என்று எதையாவது கொட்டுவோம்.

நாளை மராத்திய மண்ணின் மைந்தன் என்று தலையங்கம் மும்பையில் நிச்சயம் வரும்.எண்டுல்கர் என்று எழுதிய இங்கிலாந்து பத்திரிக்கைகள் சச்சின் படத்தை முதல் பக்கத்தில் போட்டு விற்பார்கள்.போங்கடா மானம் கெட்டப் பசங்களா.

32 comments:

இரும்புத்திரை said...

சச்சின் விரும்பும் வரை அணியில் விளையாடலாம்,நாங்களாக அனுப்ப மாட்டோம் என்று சொன்ன இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு என் நன்றிகள்.இன்னும் பல சாதனைகள் புரிய பிராத்தனைகளுடன் வாழ்த்துகள்.

லோகு said...

பதிவெல்லாம் ஓகே, தலைப்பு தான் இடிக்குது. அதிக ஹிட்ஸ், அதிக கவனத்தை ஈர்க்க வேண்டி வைத்த இந்த தலைப்புக்கும், பத்திரிக்கைகள் அவரை திட்டியதற்கும் பெரிதாய் வித்தியாசம் இல்லையே.

அத்திரி said...

தலைப்பை மாத்துறியா செல்லம்.......

இரும்புத்திரை said...

அதற்கு தான் பதில் முதல் பத்தியில் இருக்கிறதே லோகு.அதிக ஹிட்ஸ்,அதிக கவனம் என்பதே அதிகம்.எனக்கு படிக்க வருபவர்கள் தான் வருவார்கள்.இன்றும் அதே ரெடீஃப் தளத்தில் என்றோ காணாமல் போன சயீத் அன்வருடன் ஒப்பீடு நடக்கிறது.தலைப்பு நாளை அவர் ஆடாமல் போனால் இப்படி சொல்வார்கள் நான் அன்றும் அவரை புகழ்ந்து எழுதும் நல்ல தலைப்பு வைக்கிறேன் லோகு.கருத்துகளுக்கு நன்றி.

இரும்புத்திரை said...

நீங்க சொன்னால் மாத்தாமல் இருப்பேனா அண்ணா மாத்துறேன் ஆனா இன்னும் பயங்கரமாக இருக்கும்.இப்போ பாருங்க

அன்புடன் நான் said...

முதலில்... சச்சினுக்கு.... வாழ்த்துக்கள்.

//சச்சின் விரும்பும் வரை அணியில் விளையாடலாம்,நாங்களாக அனுப்ப மாட்டோம் என்று சொன்ன இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு என் நன்றிகள்.இன்னும் பல சாதனைகள் புரிய பிராத்தனைகளுடன் வாழ்த்துகள்.//

இதையே நானும் முன் மொழிகிறேன்.

நன்றி.

க ரா said...

வரலாறு முக்கியம் தோழரே. டிக்ளர் செய்தது டிராவிட்.கங்குலி அல்ல.

இரும்புத்திரை said...

பண்ணது டிராவிட் பண்ண சொன்னது யாரு

இரும்புத்திரை said...

Criticism
One of Dravid's most debated decisions was taken in March 2004, when he was standing in as captain for an injured Sourav Ganguly. The Indian first innings was declared at a point when Sachin Tendulkar was at 194 with 16 overs remaining on Day 2. Rahul was insisted by Sourav Ganguly to take this decision.

thanks to wikipedia while searching rahul dravid

க ரா said...

தோழரே ஒருவரை புகழ மற்றவறை இகழ வேண்டும் என்பது அவசியமென படவில்லை எனக்கு.

இரும்புத்திரை said...

நான் இகழவில்லை.ஒரு கோபத்தில் வந்து விட்டது.சச்சினை புகழ்ந்தால் உடனே சொல்வார்கள் தனிப்பட்ட சாதனைக்காகத் தான் விளையாடுகிறார் என்று.ஏன் அதை 150 ஓட்டங்கள் எடுத்தவுடன் செய்திருந்தால் இந்த விமர்சனம் வந்திருக்காதே.தவிர சேவக்கை அன்று துருப்புச்சீட்டாக பயன்படுத்தியது யார்.அதனால் தான் அவருடைய கடைசி காலம் கொஞ்சம் மோசமாகயிருந்தது.நன்றி தோழர் க.ராமசாமி

க ரா said...

நன்றி தோழரே. உள்ளே நடந்தது யாருக்கு தெரியும். கடைசியில் இந்தியா ஜெயித்தால் போதும் நமக்கு. தனிப்பட்ட சாதனைகள் முக்கியம் தான். ஆனால் தேசத்தின் வெற்றிக்க்கு முன்னால் அவை எதுவும் முக்கியமில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

தர்ஷன் said...

ஒரு உண்மை சொல்லவா
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்தாலும் பின்னூட்டம் எல்லாம் இடுவதில்லை. ஏனெனில் உங்களின் நிறையக் கருத்துக்கள் எனக்கு உடன்பாடில்லை. என்னடா இது எதை செஞ்சாலும் திட்டுறான் என யோசித்ததுண்டு. முதன் முறையாய் உங்கள் பதிவொன்றை பரவசமாய் படித்து முடித்தேன்.
நன்றி

புருனோ Bruno said...

For Multan Scorecard : http://usa.cricinfo.com/db/ARCHIVE/2003-04/IND_IN_PAK/SCORECARDS/IND_PAK_T1_28MAR-01APR2004_BBB-COMMS.html


At Tea, Sachin 165 Runs in 312 Balls. After that, 22 Runs in 27 Balls. 187* (339b) 4,0,0,1,0,0,0,0,2 194* (348b)
From 187, it was 7 runs in 9 balls After Tea Sachin has scored 29 Runs in 36 Balls [From 165* (312b) to 194* (348b)]

Fact is Sachin got 29 Runs in 36 Balls after tea and innings was declared as soon as Yuvraj Got Out, without giving him two more overs

Correct Fact he played 9 balls for 7 runs from 187 to 194

Belief 1. It was a misunderstanding / communication gap
Belief 2. It was deliberate to prevent Sachin’s 200.

புருனோ Bruno said...

சச்சின் இரட்டை சதமோ,இல்லை சதமோ அடிக்கும் போது அதை எடுக்க விடாமல் தடுப்பது எதிர் அணியில் விளையாடும் வீரர்கள் கிடையாது.நம் அணியில் விளையாடுபவர்கள் தான்.இன்று தோனி செய்ததை தான்,இலங்கையுடன் தினேஷ் கார்த்திக் செய்தார்,ஆஸ்திரேலியாவுடன் ரவிந்திர ஜடேஜா செய்தார்.பாகிஸ்தானுடன் விளையாடும் போது அருமையான கேப்டன் (அப்போதைய) கங்குலி டீக்ளேர் செய்தார்.என்ன கொடுமை.


சூப்பர்

இரும்புத்திரை said...

நன்றி சி.கருணாகரசு.

நன்றி க.இராமசாமி.சச்சின் சதமெடுத்தப் போட்டிகளில் நாம் நிறைய ஜெயித்திருக்கிறோம்.

நன்றி தர்ஷன்.எல்லோருமே ஏதாவது ஒரு புள்ளியில் இணைவோம்.உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் நீங்கள் சொல்லலாம்.

நன்றி டாக்டர்.நீங்களும் என்னை மாதிரி தீவிர விசிறியா என்று கேள்வியெல்லாம் கேட்க மாட்டேன்.எனக்கு தெரியும்.

butterfly Surya said...

வாழ்த்துகள்.

Long live Sachin

சீனு said...

//இன்று தோனி செய்ததை தான்,இலங்கையுடன் தினேஷ் கார்த்திக் செய்தார்,//

இதை கண்டிப்பாக ஒத்துக் கொள்ள முடியாது. சச்சினால் கடைசியில் ஓட முடியவில்லை. அதனால் தான் தோனியை அடிக்க விட்டுட்டார். ஆனால், இது கூட நல்லது தான். ஸ்கோரை தோனி உயர்த்த, சாதனையை சச்சின் உயர்த்திகிட்டார்.

மற்றும், சச்சினை பான்டிங்குடன் ஒப்பிட்டு யாரோ எழுதியிருக்கிறார்கள் போல. காரணம், இன்றைய ஆட்டத்தில் வர்னணையாளர்கள் அதை குறிப்பிட்டு காட்டி, பான்டிங்கை ஓரங்கட்டிவிட்டார்கள். டீம் அட்டகாசமாக விளாஇயாடும் பொழுது 100 அடிப்பதும், யாரும் விளையாடாதபோது தனி ஆளாஅக 100 அடிப்பதும் ஒன்றாகாது.

மற்றபடி, உங்கள் பதிவை படிக்கும் போது, என் உணர்வை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள்.

http://jeeno.blogspot.com/2006/07/blog-post.html

Tech Shankar said...

Well Brother. நன்றி. முடிந்தால் இவைகளையும் பாருங்களேன்!

சச்சின் 200 : சாதனைக் காணொளிகள்

சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம் - அரிய படங்களாக

Raju said...

சச்சின் 200 அடிச்சுட்டாப்லயா..!

தகவலுக்கு நன்றி பாஸ்.

எல் கே said...

nanba netru avar 180 nerungumbothe tadumarinar. hamstring and cramps in legs athan karanam athanalathan MSD athigam strike form pannar. also team scores are important than individal milestones. FYI, test matchla declare panrathuku oru 30 minsmummnadi batsmanku information pohum

Banureka said...

from Dinamalar :

கடுப்பேற்றிய தோனி: நேற்றைய போட்டியில் சச்சின் இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து சச்சினுக்கு பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு தராமல் தோனி, மறுமுனையில் தொடர்ந்து சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். ஒவ்வொரு ஓவரின் கடைசிபந்திலும் ஒருரன் எடுத்துவிட்டு மீண்டும், தனது பேட்டிங்கை தொடர்ந்த தோனி, ரசிகர்களுக்கு கடுப்பேற்றினார்.




5 ரன்கள்: நேற்று சச்சின் 195 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த 5 ரன்களை எடுக்க, 26 பந்துகள் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. இதன் விபரம்:




* 45.4 வது ஓவரில் 196 ரன்கள் எடுத்தார்.
* 46.1 ஓவரில் ஸ்டைன் பந்தில், ஒருரன் எடுத்த சச்சின் 197ஐ எட்டுகிறார்.
* 46.3ல் ரன் எதுவும் இல்லை
* 46.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க, 198 ஆகிறது.
* 47.3 ஓவரில் லாங்கிவெல்ட்டின் பந்தில் ரன் இல்லை
* 47.4 ஓவரில் ஒரு ரன் எடுத்த சச்சின் 199ஐ எட்டினார்.
* கடைசியில் 49.3 ஓவரில் லாங்வெல்ட்டின் பந்தை எதிர்கொண்டார் சச்சின். இதில் ஒரு ரன் எடுத்த சச்சின், 200 ரன்கள் கடந்து சாதித்தார்.

Bala said...

//சச்சின் இரட்டை சதமோ,இல்லை சதமோ அடிக்கும் போது அதை எடுக்க விடாமல் தடுப்பது எதிர் அணியில் விளையாடும் வீரர்கள் கிடையாது.நம் அணியில் விளையாடுபவர்கள் தான்.இன்று தோனி செய்ததை தான்,


நண்பரே என்னமோ சச்சின் ஒருவர் தான் நாட்டுக்காக விளையாடுவது போலவும், மற்றவர் எல்லாம் இல்லை மாதிரியும் எழுதி இருக்கிறீர்கள். அப்படி டோனி நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். ஆனால் சச்சின் 200 நாட் அவுட் ஆக வேண்டும், களைப்படைந்த சச்சினால் பெரிய ஷாட்ஸ் அடிக்க முடியாது ஒருவேளை 200 அடித்ததும் அவுட் ஆகி விட்டால்? எனவே இது சச்சின் ஒப்புதலுடனே நடந்தது என கருதுகிறேன்.

"ராஜா" said...

அருமையான பதிவு... வாழ்ந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்... யானைக்கு மட்டும் இல்ல இது சச்சினுக்கும்தான்...

buvanesh said...

சச்சின் ஒரு சகாப்தம் என்பதில் எள்ளளவும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் அன்று டிராவிட் declare செய்தது, நேற்று தோனியின் ஆட்டம், தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸர் எதையுமே நீங்கள் குறை சொல்ல முடியாது.ஏனென்றால் அவை அனைத்துமே அணியின் வெற்றிக்காக செயல்பட்டதுதான். இதை சச்சின் கூட ஒத்துக்கொள்வார். தனி ஒருவரின் சாதனை யை விட அணியின் வெற்றியே முக்கியம்.இது அவருக்கும் தெரியும். சச்சினை பாராட்ட ஏன் தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படுகிறீர்கள். அவருடைய விமர்சகர்களுக்கு அவர் எப்பொழுதுமே பதில் சொல்லி விடுவார். வார்த்தைகளில் அல்ல. அவர் batting இல்.

கலைக்கோவன் said...

//சச்சின் இரட்டை சதமோ,இல்லை சதமோ அடிக்கும் போது அதை எடுக்க விடாமல் தடுப்பது எதிர் அணியில் விளையாடும் வீரர்கள் கிடையாது.நம் அணியில் விளையாடுபவர்கள் தான்.இன்று தோனி செய்ததை தான்,இலங்கையுடன் தினேஷ் கார்த்திக் செய்தார்,ஆஸ்திரேலியாவுடன் ரவிந்திர ஜடேஜா செய்தார்.பாகிஸ்தானுடன் விளையாடும் போது அருமையான கேப்டன் (அப்போதைய) கங்குலி டீக்ளேர் செய்தார்.என்ன கொடுமை.//
சச்சின் பாகிஸ்தானுடன் 194* அடித்த ஆட்டத்தில் கேப்டன் டிராவிட்..,கங்குலி அல்ல

புருனோ Bruno said...

//ஆனால் அன்று டிராவிட் declare செய்தது//

திராவிட் டிக்ளேர் செய்தது கண்டிப்பாக சச்சினின் சாதனை தடுக்கத்தான்

அன்று 16 ஓவர்கள் மீதி இருந்தன

இந்த விவாதம் வரும் என்பதற்காக நான் அந்த் விபரங்களை மேலே எழுதியுள்ளேன் பாருங்கள்

இரும்புத்திரை said...

அவங்க என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க.விடுங்க டாக்டர்.

வெற்றி said...

// தர்ஷன் said...

ஒரு உண்மை சொல்லவா
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்தாலும் பின்னூட்டம் எல்லாம் இடுவதில்லை. ஏனெனில் உங்களின் நிறையக் கருத்துக்கள் எனக்கு உடன்பாடில்லை. என்னடா இது எதை செஞ்சாலும் திட்டுறான் என யோசித்ததுண்டு. முதன் முறையாய் உங்கள் பதிவொன்றை பரவசமாய் படித்து முடித்தேன்.
நன்றி //


ரிப்பீட்டு :))

Tech Shankar said...

Hi. I love Your post. I love Sachin the Master.
Have a look @ here too.

Anjali Tendulkar Rare Photos

buvanesh said...

டிராவிட் declare செய்தபோது 16 ஓவர்கள் இருக்கலாம்.ஆனால் அதை வைத்து பாகிஸ்தானின் எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று கணக்கு போட வேண்டுமே தவிர, ஒரு batsman (அது யாராக இருந்தாலும்)century அல்லது டபுள் century அடிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம்.அன்று அவர் declare செய்ததினால் இந்திய அணி வெற்றி பெற்றது.அது தான் முக்கியம்.

ram said...

ரொம்ப நாளைக்கு பிறகு அருமையான பதிவு.நன்றி.