Monday, February 15, 2010

துவையல் - சண்டை ஸ்பெஷல்

பதிவுலகத்தில் நுழையும் போது இரண்டாவது அடியே சண்டையோடு தான் எடுத்து வைத்தேன்.அதே போல் டூவிட்டரிலும் நடந்தது தான் மென்சோகம்.சரி பிற்காலத்தில் நான் ஒரு பிராபல டிவிட்டராக வருவேன் என்பதை நான் நினைத்தாலும் தடுக்க முடியாது என்பது தோராயமாகத் தெரிந்து விட்டது.இனி டிவிட்டர் பாடு அதை தொடரும் நண்பர்கள் பாடு.சின்ன வயதில் இருந்தே இருக்கும் பொழுதுபோக்கு வம்பிழுப்பது அல்லது வம்பளப்பது.இப்படி செய்யும் போது பால்யம் நிழலாடுகிறது.சின்ன வயதில் எங்கு சண்டை நடந்தாலும் நான் இல்லாவிட்டாலும் அவன் இருந்தானா என்று என்னைப் பற்றி கேட்டு விட்டே அடுத்த கட்டமாய் விசாரணை நகரும்.டிவிட்டரில் என்னுடைய அதிரடிகள் இன்று முதல் தொடங்குகிறது.சாம்பிளுக்கு இங்கு போய் பார்க்கலாம்.பிடிச்சவங்க தொடரலாம்.பிடிக்காதவங்க வெளுக்கலாம்.

புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருவாயா என்று அத்திரியுடன் பேசும் போது கேட்டார்.இல்லை என்று சொன்னேன்."என் புத்தகம் எல்லாம் வெளிவருமா.." என்று அவரை வம்புக்கு இழுத்து பார்த்தேன்."வரும் ஆனா வராது.." என்று வடிவேலு பாணியில் சொன்னார்."எப்படி சொல்றீங்க.." என்று தொடர்ந்து கேட்டேன்."நீ சண்டை போடாமல் இருந்தால் வரும்.." என்று சொன்னார்."அப்ப இந்த ஜென்மத்தில் கிடையாது.." என்று சொன்னேன். பின்ன என்ன வரும் 26ம் தேதி விண்ணைத் தாண்டி வருவாயா வருது.டிவி இல்லாத காரணத்தால் ட்ரைலர் விமர்சனம் போட முடியவில்லை. மலையாள படங்கள் தான் சிறந்தது என்று சொல்லி விட்டு தமிழில் படம் எடுக்கும் இயக்குனரின் படம் அது.சண்டை தொடங்குகிறது.

வலைப்பதிவுகளால் ஐந்து லட்சம் பேர் படம் பார்க்க முடிவு செய்கிறார்களாம்.ஐம்பது பதிவர்கள் ஐம்பது லட்சம் பதிவர்களுக்கு சமம் என்று சி.எஸ் அமுதன் சொன்னாராம்.அதற்கு நன்றிகள்.இனி இந்த வெற்றி தொடர்ந்து கிடைக்க அமுதன் இனி ஐந்து வருடங்களுக்கு ஸ்கூப் படம் எடுக்காமல் இருக்க வேண்டும்.முதல் பாதியில் விளையாடியவர்கள் இரண்டாம் பாதியில் கோட்டை விட்டு இருக்கிறார்கள்.நான் ஏதோ பழைய பதிவில் சொன்னது போல அதிக அளவு கிண்டல் இரண்டாம் பாதியில் மொக்கை ஆகி விட்டது.இரவுடிகளை கொலை செய்யும் விதம்,டி யார்,நாயகனின் அப்பா அம்மாவைத் தேடுவது என்று நீளளளளளளளளளளளமான காட்சிகள்.அதனால் தான் ஒரு சந்தேகத்தில் மன்னர் ப்லிம்சிடம் கைமாற்றிய படம் ஓட ஆரம்பித்தப் பிறகு மீண்டும் தயாரிப்பாளரின் கைக்கு வந்திருக்கிறது.நல்ல வேளை நான் படம் பார்க்கவில்லை.ஒரு சண்டையும்,மூணு பதிவும் ஒரு இருபத்திரண்டே கால்(மூணு ஏழரை) பின்னூட்டங்களும் மிச்சம்.படத்தைப் பற்றி தம்பியின் பார்வையும்,தெனாலி விமர்சனமும்,என்னுடைய கணிப்பும் சரியாக பொருந்தியிருந்தது.

சின்ன வயதிலிருந்தே அப்பா சொல்வார்."சின்னப் பசங்களுடன் மோதாதே..உன்னை விட வலியவுடம் மோது..".இதை ஃபாலோ செய்து சண்டையிட்டு ரத்தக் காயத்தோடு யாருக்கும் தெரியாமல் மருந்திட்டுக் கொள்வது வழக்கம்.சின்னப் பசங்களிடம் மோதி தெரியாமல் அவர்களிடம் அடி வாங்கி விட்டால் அவர்களை நாமே வளர்த்து விடுவது போல் ஆகும்.மை நேம் இஸ் கான் என்ற மொக்கை படத்திற்கு சிவசேனா குடுத்த பப்ளிகூட்டியும் இந்த வகையை சார்ந்ததே.சாதாரண படத்திற்கு வம்பு வந்தால் எப்படி பப்ளிசிட்டி செய்வது என்று ஷாரூக்கான் அகமதாபாத் ஐ.ஐ.எம்மில் பாடம் எடுப்பார்.அதையும் மீடியா ஒரு நாள் செய்தி போடும்.இந்த சண்டையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயந்து செத்த மும்பை மக்கள் அதை பார்ப்பார்கள்.

சண்டை வெங்காயத்தை நாம் பாதிக்கப்படும் போது தான் எடுக்கிறோம்.பெண்ணாகரம் தேர்தல் அசலுக்கு பா.ம.க எதிர்ப்பு.அசல் படத்திற்கு எதிர்ப்பு முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜீத்தின் பேச்சு.ரஜினியின் கைத்தட்டல் பாபா படத்தின் பெட்டி கடத்தலின் எதிரொலி.சக நடிகர்கள் ஆதரவு - பூனைக்கு மணி கட்டும் போது சாகும் முதல் எலி.நடிகர்களின் கட் அவுட்டில் பாலாபிஷேகம் பாரதிராஜா எதிர்ப்பு அஜித் பேச்சு பிடிக்கவில்லை.அஜீத்தின் கோபம் - எந்த விழாவிற்கும் போகாத தன்னை அங்கு வரவழைத்து விட்டார்களே என்ற ஆதங்கம்.இந்த பதிவில் எதிர்ப்புக்கு காரணம் - திரு நெல்வேலியில் காவல் துறை அதிகார்களின் கொலையாளிகள் என்னவானர்கள் தண்டனை கிடைத்தா அப்படி ஒரு செய்தியும் வராத காரணமும் ஒன்று.

படமோ,கவிதையோ,கதையோ,பதிவோ பொதுவில் வைத்தப் பிறகு அது படைப்பாளிக்கு சொந்தமில்லை என்பது தான் என் கருத்து.மிக சரியாக விமர்சனம் செய்து சண்டை போடுகிறோமோ என்றால் அது தான் இல்லை.மூனிச் படம் பார்த்தேன்.மொஸார்ட்டில்.மூனிச் ஒலிம்பிக்கில் கொல்லப்பட்ட இஸ்ரேல் விளையாட்டு வீரர்களுக்காக அதன் பிண்ணனியில் இருந்தவர்களை பழி வாங்கும் கதை.தனக்கே திரும்பும் போது பயத்தில் நடுங்கும் நாயகன் பிறகு மொஸார்ட்டில் இருந்து விலகி விடுகிறான்.அதே போல் விமர்சனம் செய்ய பயமோ,சண்டையிட தயக்கமோ வரும் போது நானும் விலகி விடுவேன்.

3 comments:

இரும்புத்திரை said...

உங்களுக்கு எப்போ பயம் அல்லது தயக்கம் வரும் எழுதுவதை நிறுத்துவீங்க இப்படி பின்னூட்டம் வரக் கூடாது என்பதற்காக நானே முன்னெச்சரிக்கையாய் போட்டுக் கொள்கிறேன்.

gulf-tamilan said...

நீங்களே போட்டுவிட்டபின் என்ன சொல்வது!!! :)))

Unknown said...

அந்த படத்துக்கு எப்போ விமர்சனம்