Friday, October 22, 2010

ஒன் டவுன் மேஜிக் - பத்ம வியூகம்

பழைய போர்களின் போது தினம் ஒரு வியூகம் வைத்து போரிடுவார்களாம்.பீஷ்மர் வீழ்ந்தப்பின் துரோணர் கௌரவப்படைகளின் தலைமை ஏற்கிறார்.பதிமூன்றாவது நாள் போர் நடக்கும் போது பத்மவியூகம் அமைக்கிறார் துரோணர்.அர்ஜூனை வேறு பக்கம் திசைத்திருப்பி விடுகிறார்கள். பாண்டவர்கள் பக்கம் பத்ம வியூகத்தை உடைக்க தெரிந்தவர்கள் இரண்டே பேர் தான்.அர்ஜூனனும் கிருஷ்ணனும் இருவரும் வேறு பக்கமிருக்கிறார்கள்.யாரை வைத்து பத்ம வியூகத்தை உடைக்கலாம் என்று யோசித்தால் அபிமன்யூ முன்னால் வந்து நிற்கிறான்.சுபத்ரையின் கர்ப்பத்திலிருக்கும் போது அர்ஜூனனும் கிருஷ்ணரும் பத்ம வியூகத்தை உடைப்பதைப் பற்றி பேசுகிறார்கள். நடுவில் சுபத்ரை தூங்கி விட கர்ப்பத்திருக்கும் அபிமன்யூவும் தூங்கி விடுகிறான்.பத்ம வியூகத்தை உடைத்து நுழைவது பற்றி மட்டுமே தெரிந்திருக்கிறது.வெளியே வரத்தெரியாது.தர்மன் அதனால் யோசிக்க அபிமன்யூ உடைக்கும் போது உள்ளே நுழைந்து விட முடிவு செய்கிறார்கள்.பத்ம வியூகத்தின் முகப்பில் துரோணர் நடுவில் துரியோதனன்.அபிமன்யூ உள்ளே நுழைந்ததும் கூடவே வரும் தர்ம,பீம சகோதரர்கள் ஜயந்திரனால் நிறுத்தப்படுகிறார்கள்.முடிவில் கௌரவப்படைக்கு சேதமானாலும் அபிமன்யூ கொல்லப்படுகிறான்.இறுதி வெற்றி பாண்டவர்களுக்கே கிடைக்கிறது.

ஒரு பெரிய ஸ்கோர் சேஸ் செய்யும் போது அது ஒரு சக்கர வியூகம் தான்.அதுவும் இந்திய அணியை பொறுத்த வரை பெரிய ஸ்கோரை உடைக்க முடியாத பத்ம வியூகம்.வரிசை அப்படி.அதற்கு ஏற்ற மாதிரி எவனாவது ஜயந்திரன் மாதிரி எல்லோரையும் அணைப்போட்டு நிறுத்துவான்.சில கட்டத்தில் அபிமன்யூ மாதிரி ஒருத்தனைப் பலி கொடுத்தாவது போட்டியை வெல்வார்கள்.அப்படி அபிமன்யூ முதல் முதலாக உருவாக்கப்பட்டவர் ஜவகல் ஸ்ரீநாத்.தீடிரென ஒன் டவுனில் இறக்கப்பட்டார்.ஒரு பிப்டி அடித்தார். அதோடு சரி.அதற்குப்பின் எனக்கு தெரிந்து ஸ்ரீநாத் வரவில்லை.முன்னாள் கேப்டன்கள் எடுத்த சில முடிவு வெற்றி பெறும் போது அதை சீரான இடைவெளி விட்டு அடுத்து வரும் கேப்டன்கள் உபயோகிப்பார்கள்.ஆச்சர்யமான விஷயம் என்றால் அது பெரிதாக எல்லோரும் முயற்சிக்கும் முன் அதை செய்தது சச்சின் தான்.தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஸ்ரீநாத் இறங்கிய சமயம் சச்சின் தான் கேப்டன். என்ன செய்ய தலைவருக்கு அது மட்டும் தான் இன்னும் கை வராத கலை.கேப்டன்ஷிப் போனப்பின் அசார் வருகிறார்.

பங்களாதேஷில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டி.பெஸ்ட் ஆப் த்ரி.ஆளுக்கு ஒரு பைனல் ஜெயித்தாகி விட்டது.மூன்றாவது போட்டி பாகிஸ்தான் பேட்டிங்.அன்வரும்,இஜாஸ் அகமதுவும் சதம் அடிக்கிறார்கள்.பத்து வருடங்களுக்கு முன் சேஸ் செய்ய முடியாத ஸ்கோர்.சச்சின் அடித்தளம் அமைக்க சச்சின் அவுட் ஆனதும் எல்லோரும் சித்துவை தான் வருவார் என்று நினைத்தால் ராபின் சிங்.கங்குலியும் ராபினும் ஜெயிக்கும் அளவிற்கு கொண்டு சென்று வெளியேறினால் வழக்கம் போல நம்ம ஆளுங்க கதகளி ஆடி ஒரு வழியாக கனிட்கர் என்று பத்து மாதம் இந்திய அணியில் இடம் பெற்ற நாயகனால் காப்பாற்றப்படுகிறார்கள்.

அதற்குப்பின் கங்குலி வந்ததும் சச்சினுக்கு எதிராகவே வளர்த்து விட சேவக் என்று கொம்பு சீவி விட்டாலும் அவர் கண்டுப்பிடித்த ஆயுதம் தான் தோனி.என்ன செய்ய அந்த ஆயுதமே அவரை உரசிப்பார்த்தது தனிக்கதை.பாகிஸ்தானிற்கு எதிராக தோனி ஒன் டவுனில் இறங்குகிறார். சதமடித்து ஒரு நாள் அணியில் நங்கூரம் பாய்ச்சுகிறார்.

அடுத்து டிராவிட்.ஸ்ரீலங்கா போட்டியில் சங்ககாரா சதம் அடித்து டார்கெட் மூன்னூறு வைக்கிறார்கள். அதிலும் தோனி ஒன் டவுனில் இறங்குகிறார்.அதிரடி ஆட்டக்காரர்.அவருக்கு மாற்றாகயிருந்த தினேஷ் கார்த்திக்,பர்தீவ் பட்டேல் எல்லோரும் தானாக விலக்கப்படுகிறார்கள்.விலகுகிறார்கள்.

தோனி கேப்டன் ஆனப்பின் இந்திய அணியில் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த கம்பீர், ரெய்னா,கோலி,ரோகித் சர்மா எல்லோருக்கும் அந்த ஒன் டவுன் இடம் தரப்படுகிறது.சதம் அடிக்கிறார்கள். இந்திய அணியிலும் நிலையான இடம் கிடைக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டியில் டிராவிட் இடத்தில் புஜாரா இறங்குகிறார்.

இந்திய அணி இதை ஒரு முறை ராபின் சிங்கை வைத்து பரிசோதனை செய்த நாட்களில் தென் ஆப்பிரிக்கா நிக்கி போஜே வைத்து செய்து வெற்றியும் பட்டார்கள். ரிக்கி பாண்டிங் அந்த இடத்திற்கு டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டியில் வந்தப்பின் தான் இத்தனை சதங்களும் கேப்டன் பதவியும்.ரிக்கி இல்லாத சமயம் அந்த இடத்தில் கிளார்க்.

தோனிக்குப்பின் கேப்டன் பொறுப்பேற்க ரெய்னாவும்,கோலியும் தான் போட்டிப் போடுவார்கள்.தோனி கண்டுப்பிடித்த கத்திகள் எப்படி பாயப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.சுதாரிக்காமலிருக்க தோனி கங்குலி இல்லை என்று நினைக்கிறேன்.

தோனி,ராபின் சிங்,கம்பீர்,ரெய்னா,கோலி,ரோகித்,புஜாரா எல்லோரும் பத்ம வியூகமான பெரிய ஸ்கோரை உடைக்க போகும் போது பின்னால் நாங்களிருக்கிறோம்,அடிக்கவில்லை என்றாலும் இன்னும் சில ஆட்டங்கள் நீயிருப்பாய் என்று சொல்லப்பட்ட நம்பிக்கையான் வார்த்தைகள் தான் நவீன அபிமன்யூக்கள் சாகாமல் தப்பியிருக்க காரணம்.சச்சின்,ஷேவாக்,கம்பீர் வந்தப்பின் தான் தெரியும் எத்தனை அபிமன்யூவின் பிரதிகள் வாய்ப்பளிக்கபடாமலே பின்னாலிருந்து சாய்க்கப்படுவார்கள் என்று தெரியும்.

4 comments:

Vikram said...

I think it was ஜெயத்ரதன்- the king who stood between Paandavas and victory and that fateful day.

டிஸ்கி - அப்படிப் பார்த்தால் Umpire முதல் எல்லாரும் சேர்ந்தால் தான் sachin-ஐ சில சமயம் அவுட் ஆக்க முடியும். அபிமன்யு is also = sachin.

ராவணன் said...

அது யாரு பத்மா?

வினையூக்கி said...

ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரை, இந்தியா மிகப்பெரும் இலக்குகளை அடைய அபிமன்யு வகையில் அனுப்புவது, ஸ்ரீகாந்த் அணித்தலைவராக இருக்கும்பொழுதே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. சேத்தன் சர்மாவை, 256 என்ற பெரிய இலக்கை விரட்டும் ஆட்டம் ஒன்றில் நான்காவது ஆட்டகாரராக அனுப்பி, அவரின் அதிரடி சதம் மூலம் அட்டகாசமாக இந்தியா வெற்றி பெற்றது.

பின்னாளில் கங்குலி தலைவராக இருந்தபொழுது அகார்கர், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடர்ந்து முன் வரிசை ஆட்டக்காரராக அனுப்பப்பட்டார்.

அருமையான பார்வை

மரா said...

// நடுவில் சுபத்ரை தூங்கி விட கர்ப்பத்திருக்கும் அபிமன்யூவும் தூங்கி விடுகிறான் //

இல்லை மக்கா. வயித்துல இருந்து ஆர்வக்கோளாறில ‘ம்’ போட்டுருவான் அபிமன்யூ. இதைக்கேட்ட கிட்டிணன் ‘சுபத்ரா கொஞ்சம் ஐஸ்வாட்டர்’ கொண்டாம்மான்னு சொல்லிருவாரு. அந்தம்மா ஃபிரிட்ஜ தொறந்து பாட்டில எடுத்துட்டு வர்றதுக்குள்ள கிருட்டிணன் தாயளி பாக்கி எல்லாத்தையும் சொல்லி முடிச்சுருவான். :)