Monday, October 4, 2010

வசந்தபாலனின் ஆல்பம்

கார்த்திக் ராஜா பெரிதாக வராமல் போனதற்கு காரணம் நல்ல இயக்குனர்கள் கையில் அவர் சிக்கவேயில்லை.ரவிசங்கர்ஜி இதை ஒட்டி ஒரு பதிவு எழுதினால் தன்யாமாவேன். உல்லாசம் படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான் என்று தான் ரொம்ப வருடங்கள் நினைத்து கொண்டிருந்தேன்.அது கார்த்திக் ராஜா என்று தெரிந்ததும் ஏதோ ஒரு அறியாத ஈர்ப்பு. அந்த சமயத்தில் ஆல்பம் படத்தின் இசை வெளியாகியிருந்தது.

என் செல்லம்
என் சிணுக்கு
என் அம்முக்குட்டி
என் மொம்முக்குட்டி
என் பூஜ்ஜூக்குட்டி
என் பூனைக்குட்டி

செல்லமாய் செல்லமாய் நின்றாயடி
அத்தான் என்று சொன்னாயடி
யாதுமாகி என் உள் நின்றாயடி
உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
நீ ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம் தாலி கட்டிக் கொள்வோம்

என்று வரி வரியாக இன்னமும் ஞாபகமிருக்கும் படம்.எதனால் ஞாபகமிருக்கிறது என்று இதிலாவது சொல்லாமல் விடுகிறேனே.இப்படி சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள்.அ ஆ படம் வெளியான புதிது. இந்த பாட்டு எந்த படத்தில் வருகிறது யார் மியூசிக் என்று கேட்டு வைத்து விட்டேன்.நண்பன் முறைத்த முறைப்பில் அவனிடம் கேள்வியே கேட்பதில்லை.இந்த பாட்டு மட்டும் ஏன் வரிக்கு வரி ஞாபகமிருக்கிறது என்று அவனிடம் கேட்டால் உனக்கு அதற்கு பதில் தெரியாதா என்று திட்டுவான். அந்த பாட்டில் ஆர்யன் ராஜேஷூம்,ஸ்ருதிகாவும் வீடு முழுவதும் விஜீவா என்று மாற்றி மாற்றி எழுதுவார்கள்.அது மாதிரீ ஒரு வீடு வாங்கி வீடு முழுக்க எழுத வேண்டும் என்று அமர் அடிக்கடி சொல்வான்.இந்த படத்தின் தாக்கமாக தானிருக்கும்.இந்த கேசட் மட்டும் விடிய விடிய வாக்மேனில் ஓடும்.

படித்து கொண்டிருக்கும் போதே கோபத்தினால் எல்லாமுமாக தொலைத்து போயிருந்தது.ஐந்து வருட நட்பு எல்லாம் ஒரே நாளில் கிழிந்து தொங்கியிருந்தது.

காலைச்சூரியன் குடைபிடிக்க
கோள்கள் எல்லாம் வடம் பிடிக்க
அன்பே உன்னை கைப்பிடிப்பேன்
நட்சத்திரங்கள் எல்லாமே அட்சதை
தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்
நீ என்பதும் நான் என்பதும்
இன்று வேறாகி போகும் நேரம்

அதன் பிறகு ஆல்பத்தை மறந்திருந்தேன்.வசந்தபாலனும் நினைவில்லை.என்னையே எனக்கு தெரியவில்லை.படத்தோடு நானும் பப்படமாகியிருந்தேன்.எட்டு வருடங்களுக்கு முன்னால் வந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை என்பது ஆச்சர்யமே.வசந்தபாலனோடு நானும் காணாமல் போயிருந்தேன். வசந்தபாலன் பற்றி பேசினால் வருங்காலத்தில் கிடைக்கவிருக்கும் உதவி இயக்குனர் என்று அந்தஸ்து காணாமல் போய் விடும் என்பதால் சுருக்கமாக வெயில் படத்தில் பசுபதி தண்ணியடித்து விட்டு பரத்திடம் சொல்வார். "அண்ணி எல்லாம் இருக்காங்களாடா.." என்று கேள்விக்கு "அண்ணன் தோத்துட்டேன்டா.." என்று சேரில் இருந்து விழுவார்.விழுந்தது வசந்தபாலனாக தெரிந்தது. ஏதோ ஒரு சனிக்கிழமையில் அந்த படத்தை நல்ல வெளிச்சத்தில் கண் கலங்கினால் பார்த்து விடுவார்களே என்ற கூச்சத்தில் எத்தனை காட்சியில் முகத்தைத் திருப்பினேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் ஒரு அளவிற்கு மேலே வந்திருந்தேன். வசந்தபாலன் படத்தின் நாயகிகளின் கண்களும் அந்த பெண்களும் என்னை இந்த அளவிற்கு கவருகிறார்கள் என்று தெரியவில்லை.அங்காடி தெரு வெளி வரப் போராடிக் கொண்டிருந்த நேரம் நானும் அடுத்த கட்டத்திற்கு போக திணறிக் கொண்டிருந்தேன்.படம் வெற்றி.நானும் நகர்ந்திருந்தேன்.நல்ல வேளை என்னுடைய அங்காடி தெரு விமர்சனத்தை யாரும் படிக்கவில்லை.

அடுத்து அரவான் படம் வருகிறது.நான் எந்த நிலைமையில் இருப்பேன் என்று ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்.ஆனால் அரவான் படத்தின் கதாநாயகியை எனக்கு பிடித்திருக்கிறது.குறிப்பாக தன்ஷிகாவின் கண்கள்.

சந்திரத் தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னை தூங்க வைப்பேன்
உதட்டால் உதட்டைத் துடைத்திடுவேன்
நட்சித்திரங்கள் வழியாக உன்னுடன்
நானும் பேசிடுவேன்
உயிரால் உயிரை அணைத்திடுவேன்
நீ என்பதும் அடி நான் என்பதும்
நாமாகி போகின்ற நேரம்

இப்படி யார் பெயரையாவது அமர் ஆசைப்பட்டது போல் வீடு முழுக்க மாற்றி மாற்றி எழுதி இந்த பாடலை ஒலிக்க விடலாம்.காதலுடன்.

2 comments:

நீ தொடு வானம் said...

அங்காடி தெரு விமர்சனத்தில் மாற்றம் உண்டா

இரும்புத்திரை said...

இருக்கு ஆனா இல்ல

இல்ல ஆனா இருக்கு