Wednesday, October 6, 2010

இயந்திர வாழைப்பழம் - உள்குத்து

வாழைப் பழம் சாப்பிடுவது எனக்கு பிடித்தமான ஒன்று.இன்று என்னுடைய (மன நல) மருத்துவர் பழம் சாப்பிடக் கூடாது(குறிப்பாக வாழைப்பழம்) என்று என்னைத் தடுத்து(தடை செய்து) விட்டார்.வெளியே போகும் போது யாராவது வாழைப்பழத்தை ரசித்து சாப்பிடுவதைப் பார்த்தால் கோபம் வந்து தொலைக்கிறது.மீறி புகழ்ந்து பேசினால் அவன் தொலைந்தான்.அப்படி என்ன இருக்கிறது இந்த வாழைப்பழத்தில்.ஆனாலும் புது வாழைப்பழம் வரும் போதெல்லாம் முதல் ஆளாக சென்று பழத்தை சாப்பிட்டு விட்டு விமர்சனம் செய்கிறேன்.முடிந்தால் அடுத்தவன் சாப்பிடாமல் தட்டி விடுகிறேன்.

வாழைப்பழம் சாப்பிடும் போதெல்லாம் எனக்கு வரும் சந்தேகம்..

அது பச்சை வாழைப்பழமாக இருந்தால் - அது அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சொந்தமானதா..

அது மஞ்சள் வாழைப்பழமாக இருந்தால் - அது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சொந்தமானதா..

இந்த தொல்லை எல்லாம் வேண்டாம் என்று கண்ணை மூடிக் கொண்டு உரித்து சாப்பிடலாம் என்று பார்த்தால் சித்ரவதைக் கூடத்தில் நிர்வாணமாக நிற்பது போல் இருக்கிறது.

அடி கறுத்து இருக்கும் பழத்தைப் பார்த்தால் அன்று இரவு கருப்பாக பயங்கரக் கனவு வருகிறது பயத்தில் விழித்தால் பயங்கரக் கருப்பாகத் தெரிகிறது.

வளைந்து இருக்கும் பழத்தைப் பார்த்தால் கண் அடிக்கடி "கீழே" பார்க்கிறது.தரையைப் பாருடா என்று மனது கட்டளையிடுகிறது.

இரட்டை வாழைப்பழத்தை பார்த்தால் சின்ன வயதில் அது போன்ற பழத்தைப் பிடுங்கிய பாட்டி நினைவுக்கு வருகிறாள் இடுங்கிய கண்களோடு.

லேசாக நசுங்கியப் பழத்தைப் பார்த்தால் கூட்டத்தில் அத்துமீறிய ஒருத்தனை மிதித்த ஞாபகம் வருகிறது.அசூகையில் உண்ண முடியவில்லை.

பிய்த்து தந்தால் கோவம் வருகிறது..

பஞ்சாமிர்தமாக தந்தால் அது தயாரிக்கும் முறை ஞாபகத்தில் வருகிறது..

பழச்சாறாக அருந்தலாம் என்று நினைத்தால் சுத்தம் தடுக்கிறது..எனக்கும் தயாரிக்க முடியவில்லை..முடிந்தால் அந்த ருசி வருவதில்லை..

சிப்ஸ் சாப்பிடலாம் என்றால் எண்ணை வாடை அடிக்கிறது...

மனம் செவ்வாழை பழத்தையும் மஞ்சள் வாழைப் பழத்தையும் ஒப்பிடுகிறது..அந்த சுவை இதில் இல்லை என்று விவாதம் நடத்துகிறேன்.அப்போ அதையே சாப்பிட வேண்டியது தானே என்று யாராவது மடக்கினால் அது பழசு..இது புதுசு.. என்று சப்பைக் கட்டு கட்டுகிறேன்.

பழத்தில் தான் எத்தனை வகை..நாட்டுப் பழம்,செவ்வாழை,கற்பூரவள்ளி,கசலி,கோழிக்கூடு,பச்சைப் பழம்..

இந்த விவாதம் வாழைப்பழத்திற்கு மட்டும் தான் நடத்துகிறேன்..மற்ற பழங்களுக்கு வாயை மூடிக் கொண்டு சப்புக் கொட்டி சாப்பிடுகிறேன்.யாருக்கும் தெரியாமல் ஏப்பமும் விடுகிறேன்..

ஆனால் வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டும் நானும் சாப்பிட்டு விட்டேன்..அது ஜாதியில் ஆரம்பித்து ரசம்(வாழைப்பழ ரசம்) செய்து இசத்தில் முடிக்கிறேன்..அதோடு முடிக்காமல் வாழைப்பழ உற்பத்தியில் ஈடுப்பட்ட விவசாயிகளைத் திட்டுகிறேன்..குறிப்பாக யூரியா தெளித்தவனைத் துவைத்து எடுக்கிறேன்..ஆனால் விவசாயி விளைச்சலை விற்று விட்டு அடுத்த விளைச்சலுக்கான விவாதத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

அது வரைக்கும் எனக்கு பொழுது போக வேண்டுமே - சக நண்பர்களிடம்(வாழைப்பழத்தை ஆதரிப்பவர்களை) வம்புக்கு இழுத்து வருகிறேன்.

அந்த விவசாயி எப்போ அடுத்த வாழைப்பழத்தைப் பயிரிடுவார்..அறுவடை செய்வார் என்று காத்து கிடந்து சாப்பிட்டு விட்டு அதை நொட்டை சொல்ல தயாராக வேண்டும்.

நீதி :

பழத்தைச் சாப்பிட்டு விட்டு தோலைக் குப்பைத் தொட்டியில் போடவும்..கண்ட இடத்தில் போட்டால் வழுக்கி விழ வாய்ப்பு அதிகம்..பத்தாம் நம்பர் செருப்பாக இருந்தாலும் வழுக்கும்..

இப்படிக்கு வாழைப்பழத்தை வெறுப்பவன் ஆனால் நன்றாக அமுக்குபவன்.

இது புரிந்தவர்களுக்கு வெளிக்குத்து..புரியாதவர்களுக்கு உள்குத்து..

9 comments:

ஆர்வா said...

//அது பச்சை வாழைப்பழமாக இருந்தால் - அது அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சொந்தமானதா..

அது மஞ்சள் வாழைப்பழமாக இருந்தால் - அது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சொந்தமானதா..//


அடடே.. இப்படியும் ஒரு உள்குத்தா?

இரும்புத்திரை said...

இந்த பழம் தி.மு.கவிற்கு சொந்தமானது தான்.போலிகளுக்கு கறுப்பு சாயம் கலந்து தான் வாழைப்பழம் தயாரிக்கணும்.

யோகி said...

புரியுது... புரியுது...

அபி அப்பா said...

எனக்கு சுத்தமா புரியலை:-))

அமர பாரதி said...

//புரியுது... புரியுது...// என்னது? புரியுதா? ஒனக்கு என்னமோ பிரச்சினை இருக்கு மேல் மாடில. இந்த மாதிரி பதிவெல்லாம் புரிஞ்சுடுச்சுன்னா அது ரொம்ப தப்பு. எனக்கு புரியல.

Unknown said...

நாங்க சொல்றத கேக்க மாட்டன்னு அடம்புடிக்கிரீக ... வெளிய வாங்கப்பு ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது கோணப்பழமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யூ மீன் இன்டெலிஜென் ப்ரூட்? அதான் ஞானப்பழம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இரும்புத்திரை said...
இந்த பழம் தி.மு.கவிற்கு சொந்தமானது தான்.போலிகளுக்கு கறுப்பு சாயம் கலந்து தான் வாழைப்பழம் தயாரிக்கணும்.///

அப்பிடின்னா அது கேணப்பழம்!