Tuesday, October 19, 2010

சல்லிய புக்கனன்

அது என்ன சல்லிய புக்கனன் என்று ஒரு தலைப்பு.ஆஸ்திரேலியாவின் முன்னாள் கோச் ஜான் புக்கனனை சல்லிப்பயல் என்று திட்டி விட்டேன் என்று டிவிட்டரில் யாரும் போட்டுக் கொடுத்து விட வேண்டாம். நான் வேறு அந்த ஊருக்கு தான் போக போகிறேன். ஆஸ்திரேலிய இங்கிலாந்து கிரிக்கெட் யுத்தமான ஆஷஸ் தொடரையும் மகாபாரதம் இதிகாசத்தையும் ஏதாவது ஒரு புள்ளியில் நிறுத்தி விட முடியும் என்பதன் முயற்சி தான்.

சல்லியன் - யார் இந்த சல்லியன்.நகுல,சகாதேவனின் தாய்மாமா.மாத்ரியின் அண்ணன்.போர் தொடங்க போகிறது.பெரும்படையைத் திரட்டிக் கொண்டு சல்லியன் தர்மனின் சேனையில் சேர புறப்பட்டு வருகிறான். வழியில் உணவு மற்றும் தண்ணீர் பந்தலமைத்து துரியோதனன் மூளை காத்திருக்கிறது. நிறைய இடத்தில் கிடைத்த கவனிப்பால் "உன் மன்னனிடம் சொல்.அவன் தலைமையின் கீழ் என் படை வீரர்கள் போர் புரிவார்கள் என்று சொல்." என்று உற்சாக மிகுதியில் வாக்குத்தர சரி மன்னர் துரியோதனிடம் சொல்கிறேன் என்று அந்த வீரன் பதில் சொல்லும் போது தான் தெரிகிறது. அது துரியோதனன் செய்த ஏற்பாடு என்று.தர்மரிடம் போய் வருத்தப்பட்டு நின்றால் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வரும்.அதில் நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கிறான். முதல் பத்து நாள் பீஷ்மர் தலைமையிலும் அடுத்த ஐந்து நாள் துரோணர் தலைமையிலும் கௌரவர்கள் சண்டையிடுகிறார்கள். தில்லுமுல்லு இரண்டு பக்கமும் செய்கிறார்கள்.பாண்டவர்கள் பீஷ்மரையும், துரோணரையும் சாய்த்தால் அந்த பக்கமிருந்து அபிமன்யு மற்றும் கடோத்கஜனை சாய்க்கிறார்கள். பதினாறாவது நாள் கௌரவ சேனைக்கு கர்ணன் தலைமை தாங்க கிருஷ்ணர் அளவிற்கு தேரோட்டும் திறமை சல்லியனுக்கு மட்டும் தான் உண்டு.அவர் தேரோட்டினால் அர்ஜூனனை வெல்ல வாய்ப்பு உண்டு என்று கர்ணன் விதியோடு கட்டிப்பிடித்து உருள்கிறான்.தர்மனின் வேண்டுகோளின்படி கர்ணனின் முடிவிற்கு மாற்றுக்கருத்துகள் சொல்ல ஆரம்பிக்கிறான்.நாகாஸ்திரத்தை அர்ஜூனன் கழுத்திற்கு கர்ணன் குறி வைத்தால் சல்லியன் மார்பிற்கு குறி வைக்க சொல்கிறார்.கர்ணன் கேட்காமல் அம்பை விட கிருஷ்ணரின் பாத அழுத்தத்தால் அது கிரீடத்தைப் பெயர்த்து எடுக்கிறது.சல்லியன் மார்பிற்கு குறி வைத்திருந்தால் இப்படி நடக்குமா என்று கேட்க வாக்குவாதம் முற்றி தேர் ஓட்டும் வேலையை மட்டும் பாருங்கள் என்று கர்ணன் சொல்ல நான் ஒன்றும் தேரோட்டியும் அல்ல தேரோட்டி மகனும் அல்ல மன்னன் என்று சேற்றில் தேரை இறக்கி விட்டு விட்டு சல்லியன் சென்று விட கர்ணன் தேரை வெளியே எடுக்க முயற்சிக்கும் போது அர்ஜூனனால் கொல்லப்படுகிறான்.பதினெட்டாவது நாள் சல்லியன் தலைமையில் கௌரவப்படைகள் களமிறங்க தர்மன் சல்லியனை ஈட்டியால் துளைத்தெடுக்கிறான்.

அதே பாணியில் ஆஷஸ் தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தர்மர் வேஷத்தில் ரிக்கி பாண்டிங்.போரில் தோற்றால் நாடு கிடைக்காது அதே மாதிரி இந்த முறையும் ஆஷஸ் தொடரை இழந்தால் கேப்டன் பதவியைப் பறித்து விடுவார்கள். சல்லியனான புக்கனன் இந்த முறை இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இருக்கிறார்.தென் ஆப்பிரிக்க வீரர்களான ஜோனதன் டிராட்,கெவின் பீட்டர்சன் போன்ற வெளி நாட்டு வீரர்களை வைத்தே தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஷஸ் தொடரில் இரண்டு முறை ஆஸ்திரேலியாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருக்கிறார்கள்.ஏற்கனவே இந்தியாவில் முதுகெலும்பை உடைத்து விட்டார்கள்.இதிலும் தோற்றால் மூன்றாவது ஆஷஸ் தொடரை இழந்த கேப்டன் என்ற பெயர் ரிக்கி பாண்டிங்கிற்கு வந்து சேரும். அதனால் அவர்கள் குறியே டிவிட்டர் புகழ் கெவின் பீட்டர்சன் தான்.கெவின் பீட்டர்சன் தான் இங்கிலாந்து அணியின் பலவீனம் என்று மாப்பிள்ளை பாண்டிங்கும்,இங்கிலாந்து அணியின் பக்கமிருக்கும் மாமா புக்கனனும் சொல்கிறார்கள். பாண்டிங் மேலும் காலிங்வுட்,அலிஸ்டர் குக் பேட்டிங் சரியில்லை என்று அடித்து ஆடுகிறார்.இது எல்லா தொடருக்கும் முன்னால் ஆஸ்திரேலியா செய்யும் உத்தி.இந்தியாவுடனும் அதை செய்திருப்பார்கள். இப்போது இந்தியாவில் சேவக்,ஹர்பஜன் என்று ஆஸ்திரேலியாவை விட ஐந்து மடங்கு அதிகம் பேசுவார்கள்.அதனால் அதை கையாளவில்லை.புக்கனன் ஏறுக்குமாறாக யோசனை சொல்லி பாதி தொடரில் அத்துக்கொண்டு போகாமலிருந்தால் அதுவே இங்கிலாந்திற்கு பாதி வெற்றி தான்.இங்கிலாந்து வென்றால் மைக் கேட்டிங்கிற்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் ஜெயித்த பெருமை இந்த அணிக்கு கிடைக்கும்.ஆஸ்திரேலிய அணியில் போன முறை இருந்த மெக்ராத்,வார்னே இருவரும் இல்லை. ஏற்கனவே டிவிட்டரில் கிடைத்த உதைகளுக்கு வார்னே மருந்திட இந்த தொடருக்குத்தான் காத்திருக்கிறார்.இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுக்கு காயம்.புக்கனன் ஒரு உள் காயம். காத்திருக்கிறேன் இன்னொரு பதினெட்டு நாள் யுத்த முடிவிற்கு.

தர்ம சேனை என்று ஆஸ்திரேலியாவை சொன்னது நியாயமில்லை என்று யாருக்காவது தோன்றினாலும் அப்படித்தான் சொல்ல வேண்டியுள்ளது.காரணம் இனி ஆஸ்திரேலியா என் தாய் நாடுகளில் ஒன்று. இங்கிலாந்து போனால் இங்கிலாந்து என் தாய் நாடு என்று சொல்ல வேண்டியது தான்.

12 comments:

வேதாளன் said...

அவ்வ்வ்... ஏன் இப்படி எல்லாம்?

தலைப்பு அருமை. :-)

Unknown said...

இனி நீ என் எதிரி. நமக்குக்குள்ள பேச்சு வார்த்தை கிடையாது. நாம ரெண்டு பெரும் இனி அன்னந்தண்ணி புழங்கக் கூடாது

இரும்புத்திரை said...

சமர்ப்பணம் டூ மிஸ்டர் தினேஷ் குமார்.அடுத்த பார்ட் பாருங்க.இது ஒரு வித்தியாசமான சீரிஸ்.

இரும்புத்திரை said...

நான் முன்னாடியே கேட்டேன் கிரிக்கெட் பிதற்றல்களில் எழுதவான்னு நீங்க பதில் சொல்லவில்லை.இனி என் பதிவுல மட்டும் தான் கிரிக்கெட் பற்றி எழுதுவேன்.

மதார் said...

@DINESH, Neengale ippadi sollita eppadi ? Naattamai theerpai mathi sollunga . Onna ukkanthu briyani sapdalam . I mean ore time

Unknown said...

Eppo ketta? Thaaraalamaa eluthu. Ippovae invite anuppuren.

சங்கர் said...

ஆஸ்திரேலியாவுலே இருந்திடு, முடிஞ்சா அண்டார்டிக்கா ஓடிடு, இந்தப் பக்கம் வந்தா பலி போட்டுருவேன் :)

இனியா said...

thalaippu arumai...

மார்கண்டேயன் said...

செம கனெக்சன் . . . கிரேடுங்க . . . வாழ்த்துகள்

மார்கண்டேயன் said...

(கிரி)மகாகெட்(பாரதம்)

எல் கே said...

யோவ் தர்மர் எங்க பாண்டிங் எங்க... என் இந்த கொலை வெறி

மரா said...

உண்மையிலே மூளைக்காரன்யா நீர்!!