Thursday, July 16, 2009

காட்ஃபாதர் படத்தை உருவிய கோடம்பாக்கம்

நாயகன் படம் (கமல் நடித்தது) டைம்ஸ் நாளிதழளால் சிறந்த நூறு படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாம் ஆங்கில படங்களை விட முப்பது வருடம் பின் தங்கி உள்ளோம் என்பதற்க்கு மிகச் சிறந்த உதாரணம் காட்ஃபாதர் படத்தில் இருந்து கோடம்பாக்கம் உருவிய காட்சிகளே பேசும் .

ரவிவர்மன் ஒரு படத்தை ஒளிப்பதிவு செய்து விட்டு தனக்குத்தனே மிக பெருமை அடைந்து கொண்டார். 1976லில் வெளியகிய ஒரு ஆங்கில படத்தை பார்த்து அவர் மிரண்டு விட்டார்.காரணம் அவர் ஒளிப்பதிவை விட அந்த படத்தில் மிக பிரமாதமாக இருந்ததாம்.

அப்போ கதை அதுவும் தான்.

இன்னும் அப்பாவை கொன்றவனைப் பழி வாங்கும் கதையை நாம் எடுத்து கொண்டு இருக்கிறோம்। ஒரு நடிகர் தன் அப்பா கொல்லப் படும் போதெல்லாம் தலையில் தண்ணீர் தெளித்து கொண்டு வில்லனைப் பழிக்குப்பழி வாங்குவார்। ஆனால் நிஜத்தில் அவர் அப்பா கொல்லப்பட்ட பொழுது அமைதியாக இருந்தார்।

அப்போ படம் பர்க்கும் நாம் எல்லாம் கேனையர்கள்.

அமீர் கானிடம் ஆஸ்கர் நமக்கு கிடைக்காதா ? என்று கேட்ட பொழுது அவர் சொன்ன பதில் " அவர்கள் எடுத்த படத்தையே நாம் திரும்ப எடுத்து அவர்களிடம் காட்டினால் நமக்கு ஆஸ்கர் எப்படி கிடைக்கும்..."

ஆஸ்கர் மட்டும் அல்ல நமக்கு மரியாதை கூடக் கிடைக்காது.

அமீர் கான் சொன்ன வார்த்தைகள் நூறு சதவீதம் பொருந்த கூடிய படம் தான் காட்ஃபாதர்.

மனிரத்னத்தின் கூர்மையான புத்திசாலித்தனத்தை நாம் எல்லாம் மெச்ச வேண்டும் .

காட்ஃபாதர் 1 மற்றும் 2ம் பாகத்தில் இருந்து உருவிய காட்சிகளைக் கொண்டு நாயகன் திரைப்படத்தை எடுத்தார்.

கமலின் சின்ன வயது கொலை மற்றும் அவரது அப்பாவின் மரணம், குடும்பத்தின் மீது தாக்குதல் (மகன் காட்ஃபாதர் ஆன பிறகு தாக்குதல் நடக்கும்) எல்லாம் 2ம் பாகத்தில் இருந்து சுடப்பட்டது.

சரண்யா இறந்த பிறகு ஒட்டுமொத்தமாக எதிரிகளை கொல்வது, மூத்த மகன் இறப்பது முதல் பாகத்தில் இருந்து சுடப்பட்டது.

ஒட்டுமொத்தமாக எதிரிகளை கொல்லும் காட்சி 2006லில் வெளி வந்த புதுப்பேட்டை மற்றும் தலைநகரம் படத்தில் இடம் பெற்று இருக்கும்.

மருத்துவமனையில் இருந்து அப்பாவை வேறு இடத்திற்கு மாற்றும் காட்சி அக்னி நட்சத்திரம் படத்தில் இடம் பெற்ற க்ளைமாக்ஸ் காட்சியாகும்.

தங்கையை அடித்த வீட்டுக்காரனை அண்ணன் துரத்தி துரத்தி அடிக்கும் காட்சி அண்ணாமலையில் வைத்தார்கள். தங்கையை திரும்ப அடித்த தேடிச் செல்லும் காட்சியும் இடம் பெறும்.

அமரன் படத்தில் பர்ஸ்ட் எய்ட் பெட்டியில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து இரண்டு பேரை கொல்வார். இதுவும் காட்ஃபாதர் படத்தில் இருந்து எடுத்தது .

நான் தமிழ் சினிமாவேப் பார்க்க மாட்டேன் ஆங்கிலப்படம் மற்றுமே பார்ப்பேன் என்று சொன்ன நண்பனிடம் சண்டைப் போட்டு இருக்கிறேன்.

காட்ஃபாதர் மற்றும் சைக்கோ (பாலு மகேந்திரா இயக்கிய மூடுபனி படம் இந்த படத்தின் அப்பட்டமான திருப்பி போடப்பட்ட தீந்து போன தோசை) பார்த்த பிறகு அவன் கருத்தை ஒப்புக்கொண்டேன்.

இப்பொழுது எல்லாம் நான் செய்வது தமிழ் படம் மட்டும் தான் பார்க்கிறேன் (எப்படி பார்த்தாலும் உலக சினிமா தமிழில் வந்து விடும் பைசைக்கிள் தீவ்ஸ் பொல்லாதவனாக மாறியது போல)

நாம் இதை எல்லாம் கேட்டால் இது ஈ அடிச்சான் காப்பி இல்லை இன்ஸ்பிரேஷன் என்று சொல்வார்கள் இந்த டகால்டிகள்.

18 comments:

Nathanjagk said...

ஆஹா, ​ரொம்ப தீவிரமா சிந்திக்கறா​ரே அர்விந்து?? இந்த தழுவல்கள் தவிர்க்கப்பட ​வேண்டும் என்று ​சொல்லமாட்டேன். பாருங்க, நல்லா ரசிங்க, அதை அப்படியே தழுவுங்க, வன்கலவி பண்ணுங்க, இல்ல ​தோசைய திருப்பி ​போடுங்க... ஆனா... வாயப் பொளந்து அண்ணாந்து பார்க்கிற எங்கள மாதிரி ஏழ ரசிகனுங்களுக்கு அந்த​தோசை​யோட மாவு எந்த கிரைண்டரிலிருந்து வழிக்கப்பட்டதுன்னு ​சொன்னீங்கன்னா புண்ணியமா ​போகும். அந்த அறிமுகத்தை வச்சிதான் ஏழ ரசிகனுங்க உலக சினிமாவ எட்டிப் பாக்கமுடியும். இந்த மாதிரி அறிமுகப்படுத்தலுக்கு ஏன் ஒரு சின்ன இடம் ஒதுக்கக் கூடாது உங்க ​டைட்டில் கார்டுல?

இரும்புத்திரை said...

thanks boss adikadi vanga

Karna said...

மன்னிக்கவும், பைசைகில் theives பொல்லாதவனொடு ஒப்பிட்டது கொஞ்சம் ஒவர்... நான் இந்த படங்கலின் தரத்தை வைத்து சொல்லவில்லை.. simply these two are not equals and uncomparable..

இரும்புத்திரை said...

anbin karna,

itharku etharku manippu

ungal karuththai nichchayam en blogkil pathivu seiyalam

irandin kathaikaru ondruthan
athai vetrimaran arumaiyaka matri irunthar

மு.இரா said...

எல்லாமெ சுட்டதுதான் தலைவா, என்ன பண்ணறது? இங்க என்ன கலைய வளக்கவா படம் எடுக்குறாங்க... பிழைப்புக்கு படம் எடுக்குறாங்க... அதுலயும் ஏகப்பட்ட பிரச்சனை, ஈகோ, இன்னும் எல்லா கருமாந்தரமும் இருக்கு.
இங்க எந்த இயக்குநர் ஷாலிவுட் அளவுக்கு எடுக்க முடியலைனாலும், அந்த அளவுக்கு சிந்தனை கூட கிடையாது.
எப்படி இருந்தாலும் `காக்கைக்கு தன்குஞ்சும் பொன்குஞ்சு`-க்கும்னு நினைச்சிக்க வேண்டியதுதான்.

இரும்புத்திரை said...

thamks mu.eraa

Ashok D said...

:)

இரும்புத்திரை said...

thanka ashok for your visit amd comment

ஜோ/Joe said...

// ஒரு நடிகர் தன் அப்பா கொல்லப் படும் போதெல்லாம் தலையில் தண்ணீர் தெளித்து கொண்டு வில்லனைப் பழிக்குப்பழி வாங்குவார். ஆனல் நிஜத்தில் அவர் அப்பா கொல்லப்பட்ட பொழுது
அமைதியாக இருந்தார்.//

அப்போ ஹாலிவுட் நடிகர்களெல்லாம் சினிமாவில் பண்ணும் சாகசங்களையெல்லாம் நிஜ வாழ்க்கையிலும் பண்ணுகிறார்களா என்ன? என்னைய்யா வாதம் இது :)

இரும்புத்திரை said...

dear joe

romba naal kalichi vanthu irukeenga

innum naama paatiya konna kathai,parambaraiyai aliththa kathai endru eduththu kondu irukirom athanaal than naan appadi eluthenen

thanks for your comment

ஜோ/Joe said...

//இப்பொழுது எல்லாம் நான் செய்வது தமிழ் படம் மட்டும் தான் பார்க்கிறேன் (எப்படி பார்த்தாலும் உலக சினிமா தமிழில் வந்து விடும் பைசைக்கிள் தீவ்ஸ் பொல்லாதவனாக மாறியது போல)

நாம் இதை எல்லாம் கேட்டால் இது ஈ அடிச்சான் காப்பி இல்லை இன்ஸ்பிரேஷன் என்று சொல்வார்கள் இந்த டகால்டிகள்//

ஆமா சார் ..ஏன் சார் ரொம்ப சிரமப்பட்டு தமிழ் படமெல்லாம் பாக்குறீங்க ..இன்னொரு நாலஞ்சு ஆங்கிலப்படம் பார்த்து 'உலக சினிமா என் பார்வை' -ன்னு ஒரு புத்தகம் எழுதுங்க சார்.

இரும்புத்திரை said...

dear joe,

oru padathukke tension aakatheenka

innum sutta list kuduththa naama ellorum tamil padame parkka mottom

neenga aatharu koduththa nichchyam intha sutta padangalin varisai thodarum

Prasanna Rajan said...

இன்னும் எத்தனை நாளைக்கு சுட்டுட்டார், சுட்டுட்டார்னு சொல்லப் போறீங்க. அது தான் ‘டைம்’ நாளிதழ் சென்ற நூற்றாண்டின் நூறு சிறந்த படங்களின் பட்டியலில், ஒரு சிறந்த படமாக அங்கீகரித்து இருக்கிறதே. வேணும்னா இந்த லிங்குக்கு போய் பாருங்களேன்:
http://www.time.com/time/2005/100movies/the_complete_list.html

இரும்புத்திரை said...

thanks prasanna

இரும்புத்திரை said...

dear prasanna

intha pathivin mudhal variyai paarungal

Unknown said...

Hello brother, neenga sonnathellam sariyave irukkalaam!
but balumahendra sir pathi sonnathu thappu.
moodu pani padatha mulusaa pathutu eluthunga brother!
oru periya director.a vimarsanam pandrathu munnadi konjam theliva yosichi eluthunga.
(balu sir pathi sonnathala than intha pinnottam)

இரும்புத்திரை said...

டைரக்டர் அண்ணா

இதை படித்து விட்டு என்னை திட்டவும்

Unknown said...

@the Editor of the Post

The Godfather is a 1972 American thriller film based on the 1969 novel of the same name by Mario Puzo and directed by Francis Ford Coppola from a screenplay by Puzo, Coppola, and Robert Towne...

Godfather padam credits koduthiduchu original novelku..But Nayagan kodukkala..Rendukku onnum romba periya difference illa...Rendumey inspired thaan :P

Inspiration is very common in Film industry.English padangaley neraya originals kedayaadhu..Mostly from novels and other language movies..Neenga ulagathila irukkira ellaa mozhi padangalayum paartheenganna maybe you know endha endha padam endhendha padathila irundhu inspirednu...

Inga yaarumey suyambu illa.We are all human.Neenga payanpaduthra tamizh sorkal ungalukku yaaro kathu koduthadhu(basics)...Cinema makingnu varum podhu godfather maadhiri padangelellam thaan basics...Cinemavum oru language thaan sir..

In my opinion, Nalla padangalla irundhu inspire aagi oru sirandha padam edukkiradhungradhu varaverka pada vendiya vishayam...