Thursday, July 16, 2009

நாடோடிகள் என் ஒரப்பார்வையில்

இருபது வருடங்களுக்கு முன் என்னுடைய சித்தி ஒரு டி.ராஜேந்தரின் தீவிர ரசிகை. அப்பொழுது வந்து வெற்றிகரமாக ஓடி தொலைத்த படம் என் தங்கை கல்யாணி. ஆறு மாதத்திற்கு முன்னால் வரை இப்படி ஒரு படம் இருப்பதே தெரியாமல் சந்தோசமாக இருந்த நான், அன்று ஒரு நண்பர் அறைக்கு சென்றதால் என்னுடைய மகிழ்ச்சி காணாமல் போக போவது தெரியாமல் அந்த படத்தை பார்த்து தொலைத்து விட்டேன். காரணம் என் சித்தி சிலாகித்து சொன்ன படம் அல்லவா.

படம் முடிந்த பிறகு ஒற்றை தலைவலியும் சித்தியின் மீது கொலைவெறியும் மாறி மாறி வந்து போனது .

இப்படி ஒரு நிலைமை நாடோடிகள் படத்தை பார்த்த பிறகு என் குழந்தைகோ அல்லது என் தம்பி குழந்தைகோ வரக் கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கிறேன் என்று சொன்னால் அது மிகையாகாது.

காரணம் நான் இன்று நாடோடிகள் படத்தை நான் சிலாகித்து சொன்னால் இருபது வருடங்களுக்கு பிறகு எங்கள் பிள்ளைகளுக்கு நிச்சயம் என் மீது
கொலைவெறியோடு அலைவார்கள்.

அபத்தங்களின் உச்சம் தான் நாடோடிகள்.

இதை சொல்வதற்கு ஒரே ஒரு காரணம் படத்தின் முடிவு தான்.

தங்களை ஏமாற்றிய அந்த காதலர்களை தூக்கி வந்து அடித்து துன்புறுத்திய பிறகு டீக்கடையில் இன்னொரு காதலுக்கு நாங்களும் வருகிறோம் என்று சொல்வார்கள் .

அப்படி அந்த காதலிலும் ஏதாவது இழந்து அந்த காதலர்களும் பிரிந்து அவர்களையும் அடித்து விட்டு இன்னொரு டீக்கடையில் இன்னொரு காதலுக்கு நாங்களும் வருகிறோம் என்று சொல்வார்களா ?

கஞ்சா கருப்பு கேட்பது போல அவர்களுக்காக ஏப்பொழுது வாழ்வார்கள் ?

இன்னொரு காரணம் விஜய் காலில் அடிப்பட்டு கிடக்கும் பொழுது அவரை காப்பாற்ற முயர்சி செய்யாமல் வண்டியில் ஏறும் அந்த சுயநல நண்பனுக்கு இப்படி ஒரு உதவி செய்து அன்பான பாட்டியை இழக்க வேண்டுமா?

இனி படத்தில் எனக்கு பிடித்த காட்சிகள்

1। முதல் கடத்தலின் பொழுது சிறு காயம் கூட இல்லாமல் காதலர்களை அழைத்து வரும் சசிகுமார் & கோ இரண்டாவது கடத்தலின் பொழுது அடித்தே இழுத்து வருவது ( சுவராக இருக்கும் ஆஸ்பெடாஸ் கூரையை நண்பனை கொண்டே உடைப்பது இரண்டாவது சம்போ பாட்டில் முதல் தடவை வரும் அளவிற்கு உயிர் இல்லை)

2. கோபம் வந்தவுடன் பரணி அந்த வண்டி ஒடும் பொழுது பின்னால் அந்த பெண்ணை சென்று அடித்து விட்டு வருவது .

3. காது கேட்காமல் வரும் பரணி பார்க்கும் காட்சியில் திரையில் சத்தம் இல்லாமல் இருப்பது கேமரா பரணியை பார்க்கும் காட்சியில்
பலத்த சத்தம் கேட்பது.

4. "நீ வலிச்சாலும் வலிக்காத மாதிரியே இருப்ப..." என்று பரணி சொல்வது படத்தின் முதலில் இருந்தே வரும் வசனம்.
(உ.தா "நீ பார்த்தாலும் பார்க்காத மாதிரியே இருப்ப..." என்று சசியின் தங்கை விஜக்கு முத்தம் குடுத்த பிறகு பரணி சொல்வது)

படத்தொகுப்பாளர் மிகவும் வேலை செய்து இருக்கிறார் । சசி லாரி மீது ஆடும் பொழுது சட்டை விதவிதமாக வேர்வையில் நனைந்து இருப்பது (ரிகர்சல் அதிகமோ?) சசி அடுத்த தடவை ஆடும் பொழுது தயவு செய்து சட்டையை கழற்றி விட்டு ஆடுங்கள் அல்லது ஆடாதீர்கள்.

2 comments:

ஆபிரகாம் said...

சில அபத்தங்கள் இருந்தாலும் ரசிக்கும் படியான சமாச்சாரங்கள் நிறையவே இருக்கின்றன... ஒரு இயல்பான கதை அவ்வளவே!

இரும்புத்திரை said...

thanks abarakam