கிராமத்த மையமா எடுத்தப் படம் வெற்றி அடைந்தால் எல்லாரும் கிராமத்துக்கு போய் ஒரு பாட்டுக்காவது கும்மி அடிச்சிட்டு வர்றீங்க. மதுரைய மையமா ஒரு படம் ஓடுச்சுனா உடனே அங்க போய் முகாம் அடிகிறீங்க.அதுவே ஒரு பெரிய பட்ஜெட் படம் ப்ளாப் ஆனா ராசி இல்லாத ஊருன்னு முத்திரை குத்துறீங்க.
ஹீரோவுக்கு ஒரு தங்கை இருப்பாள்.வில்லனுக்குக் கோபம் வந்தால் அந்த பெண்ணைக் கெடுத்து விடுவான். உடனே தேடிப் பிடிச்சி அவனுக்கே கட்டி வைக்கிறது. அதுவே ஒரு நாயகியைத் தப்பி தவறி கெடுத்து விட்டால் உடனே அவனுக்கு கட்டி வைக்காம வாழ்வு கொடுக்கிறேன் சொல்றது.அதுவும் தங்கை மாதிரி இருக்கிற பெண்ணைக் கெடுக்கும் போது அவளைத் தேடி சம்பந்தமே இல்லாத இடத்துல சுத்துறது,எல்லாம் முடிஞ்சதும் வர்றது,அதுவே நாயகினா உடனே வந்து குதிக்கிறது,முத்தம் கொடுக்க முயலும் போது ஷூவ சரியா உள்ள விடுறது.
வேலைத் தேடி போகும் போது நீங்க நல்லா பதில் சொன்னீங்க,ஆப்பாயின்மென்ட் லெட்டர் குடுக்கப் போறப்போ சரியா ஒரு போன் வந்து தொலைக்கும். வேலை கிடைக்காம போயிரும்.(ஐ.டி வேலைகள் நிறைய வந்த பிறகு இந்த கொடுமைகள் நின்று போனது)
தெலுங்கு படம் நல்லா இருந்தா அவன்கிட்ட காசுக் கொடுத்து படத்த வாங்கி ரீமேக் பண்றது, இதுவே கொரியன் படமோ,ஆங்கிலப் படமா இருந்தா சத்தமே இல்லாம உருவுறது.(இன்றைய நிலவரப்படி கடைசி உருவல் - பொக்கிஷம் கிளாசிக் என்ற கொரியன் படத்தில் இருந்து)
ஒரு நடிகைத் தெரியாத்தனமா கவர்ச்சியா நடிச்சிட்டா போதும்.அதே மாதிரி எல்லாப் படத்திலையும் கொடுத்துப் படம் பாக்குற எல்லோரையும் கொடுமைப்படுத்துறது.இதுவே பிரியங்கா சோப்ரா,பிபாஷா பாசு,அமீஷா பட்டேல் நடிச்சா அவங்களைக் கவர்ச்சியா காட்டுறதே இல்லை (முதல்ல ஹிந்திப் படம் பாருங்க)
இப்படி ஒரு படம் தமிழ்ல வந்ததே இல்லனு பீலா உடுறது,போய் பார்த்தா பாக்குறவன் எல்லாம் இப்படி ஒரு படம் வராமலே இருந்துருக்கலாம் என்று நினைச்சிகிட்டே போறாங்க. படம் ரீலிஸ் ஆகும் முன்னாடியே வெள்ளிவிழா போஸ்டர் அடிச்சு அந்த செலவையும் தயாரிப்புத் தலையிலே கட்டுறது.
ஹீரோவப் பிடிச்சி வைச்சு இருவது நிமிஷம் சாகடிக்காமப் பேசியே மொக்கைப் போடுறது,அந்த கேப்ல ஹீரோ வில்லனைக் கொலை செய்து விடுவார்.(டேய் வில்லனுகளா நான் உங்கள கேட்குறேன் நீங்க தமிழ் படம் பாப்பீங்களா இல்லையா)
நைட்ல தனியா ஒன்னுக்குப் போகவே பயப்படுற ஹீரோ (நிஜத்தில்) சினிமாவில் லோக்கல் ரவுடி முதல் அமைச்சர் வரைக்கும் ரவுண்டு கட்டி அடிச்சி நீங்களும் அரசியல் ஆசையோட திரியிறீங்களே இது நியாயமா ?
டிஸ்கி : உனக்கு வேலையே இல்லையா அப்படி யாரும் கேட்காதீங்க. உண்மை சுடுது.
Friday, August 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
உனக்கு வேலையே இல்லையா ?
உண்மை சுடட்டும்
வேலைத் தேடி போகும் போது நீங்க நல்லா பதில் சொன்னீங்க,ஆப்பாயின்மென்ட் லெட்டர் குடுக்கப் போறப்போ சரியா ஒரு போன் வந்து தொலைக்கும். வேலை கிடைக்காம போயிரும்.(ஐ.டி வேலைகள் நிறைய வந்த பிறகு இந்த கொடுமைகள் நின்று போனது)
good one
i like the post
//நாயகினா உடனே வந்து குதிக்கிறது,முத்தம் கொடுக்க முயலும் போது ஷூவ சரியா உள்ள விடுறது// ஆமாப்பா... இவனும் தெளிவா முத்தம் கொடுக்கமாட்டான்.. கொடுக்க வர்றவனையும் விட மாட்டான்...
//இப்படி ஒரு படம் தமிழ்ல வந்ததே இல்லனு பீலா உடுறது,போய் பார்த்தா பாக்குறவன் எல்லாம் இப்படி ஒரு படம் வராமலே இருந்துருக்கலாம் என்று நினைச்சிகிட்டே போறாங்க//
ஏ... நீ இந்த மாதிரி பேசி நான் பாத்ததேயில்லப்பு!
//தெலுங்கு படம் நல்லா இருந்தா அவன்கிட்ட காசுக் கொடுத்து படத்த வாங்கி ரீமேக் பண்றது, இதுவே கொரியன் படமோ,ஆங்கிலப் படமா இருந்தா சத்தமே இல்லாம உருவுறது//
ஆணி
அந்த டாக்டர்ஸெல்லாம், கண்ணாடிய கழட்டிட்டு பேசுற டயலாக்ஸ மறந்துட்டீங்களே பாஸு.
கலக்கல் பதிவு.
அவங்க நிறுத்தற வரை நீங்களும் நிறுத்தாதீங்க.அடிச்சு ஆடுங்க.
//நைட்ல தனியா ஒன்னுக்குப் போகவே பயப்படுற ஹீரோ (நிஜத்தில்) சினிமாவில் லோக்கல் ரவுடி முதல் அமைச்சர் வரைக்கும் ரவுண்டு கட்டி அடிச்சி நீங்களும் அரசியல் ஆசையோட திரியிறீங்களே இது நியாயமா ?//
:)) .ரசிக்க வைத்த உண்மை.
//அந்த டாக்டர்ஸெல்லாம், கண்ணாடிய கழட்டிட்டு பேசுற டயலாக்ஸ மறந்துட்டீங்களே பாஸு.//
இந்த மாதிரி நிறைய இருக்குது... :)))
ஏதோ அவங்களால முடிஞ்சத செய்யுறாக... பிரியா உடுங்க அரவிந்தா
nandri cibi
nandri karthikeyan
nandri thala
nadri duglas
nandri dubai raja
nandri oorsutri
nandri jk
/*nandri cibi
nandri karthikeyan
nandri thala
nadri duglas
nandri dubai raja
nandri oorsutri
nandri jk*/
டக்ளஸ் மேலே உங்களுக்கு என்ன கோபம்?
இப்படி திட்டி வச்சிருக்கீங்க....
ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நைனா, உடனே மேடையை விட்டு கீழே இறங்கவும்.
nandri naina & duglas
Post a Comment