கே.பாலசந்தர் மரோச்சரித்ரா படம் எடுக்கும் போது அவருக்கு வயது 48. இந்த வயதில் ஒரு இவ்வளவு இளமையான படம் எடுக்க இவரால் மட்டுமே முடியும். இன்னொரு உதாரணம் அழகன் படம் வெளியான அவர் அறுபதைத் தாண்டிய இளைஞர். நாடோடிகள் படத்தில் அப்பாவும்,பிள்ளையும் கால் ஆட்டும் காட்சியை ஒப்பீடு செய்துக் காட்டுவது அவர் பள்ளியில் படித்தவர் சமுத்திரக்கனி என்பதை எனக்கு நினைவுப்படுத்தியது .
அப்படி நான் ரசித்த கே.பாலசந்தர் உரிய ஷாட்ஸ் சில
1. அழகன் படத்தில் விடிய விடிய போனில் மம்மூட்டியும்,பானுப்ப்ரியாயும் பேசும் காட்சி, பின்னணியில் ஒலிக்கும் "சங்கீத ஸ்வரங்கள்" என்ற பாடல். விடிய விடிய பேசுகிறார்கள் என்பதை கடிகாரத்தில் காட்டாமல், அணைக்காமல் ஓடும் டி.வியில் காட்டி இருப்பார். (12 மணிக்கு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு பிறகு காலை 7 மணிக்கு அலைவரிசை தொடங்கும்) .நான் கூட இப்படி முயற்சித்து முடியாமல் பாதியிலே அந்தப் பெண்ணைத் திட்டி விட்டேன்.
2. அரங்கேற்றம் கமலின் படிப்பிற்கு அலுவலக மேலாளரிடம் பணம் கேட்டப் போகும் பிரமீளாவைக் டுத்து விடுவார். பின்னணி காட்சியாக பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்து கொண்டு இருக்கும். பிராமணப் பெண்ணாக இருந்து விபச்சாரம் செய்யலாமா என கேட்டு அடிப்பவனை நீ பிராமணாக இருந்து கொண்டு விபச்சாரியிடம் வரலாமா என்று திரும்ப அறையும் காட்சி. பிரமீளாவின் வீட்டின் எதிரே உள்ள சுவரில் இருக்கும் குடும்பக்கட்டுப்பாடு விளம்பரத்தைத் தினம் தினம் பார்த்தும் மகளுக்கு கல்யாணம் நடந்தப் பிறகும் கர்ப்பமாக இருக்கும் அவரின் அம்மா.
3. மரோச்சரித்ராவில் கமலிடம் இருந்து வரும் கடிதத்தை சரிதாவிடம் கொடுக்காமல் எரித்து விடுவார் சரிதாவின் அம்மா. அந்தச் சாம்பலைக் காபியில் கலந்து சரிதா குடிப்பார்.(இந்த காட்சியை ராம.நாராயணன் படத்தில் இரண்டு நாய்களுக்கு மத்தியில் நடக்கும் அது பாலில் கலந்துக் குடிக்கும்). ஊடலைத் தீர்க்க இருவரும் லைட்டைப் போட்டுப் போட்டு அணைக்கும் காட்சி. தமிழில் டப்பிங் செய்யாமலே இந்தப் படம் சென்னையில் 600௦௦ நாட்கள் ஓடியது.
4. தண்ணீர் தண்ணீர் படத்தில் ஊரில் தண்ணீர் கிடைக்க வலி செய்யாத அரசாங்கத்தை எதிர்த்து ஓட்டு போடாமல் இருப்பார்கள். வாக்குச்சாவடியில் ஒருவரும் ஓட்டு போடாமல் இருக்கும் நேரத்தில் உள்ளே போய் அங்கு இருக்கும் தண்ணீரைக் குடித்து விட்டு வந்து விடுவான். அவனிடம் உள்ளே போனதற்குச் சண்டைக்குச் செல்பவர்களிடம் "இப்படித் தான் எப்பவாது நல்ல தண்ணி கிடைக்கும்" என்று சொல்வான்.
5. அக்னிசாட்சி படத்தில் சரிதாவிற்கு கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கும். ஏதோ கோபத்தில் சிவக்குமாரின் படத்தைக் கிழித்து விடுவார். பிறகு ஊசி நூலால் அந்தப் படத்தை தைத்து இருப்பார். (சமீபத்தில் கூட காபி வித் அனுவில் கூட அந்த புகைப்படம் காட்டப்பட்டது).
6. இருகோடுகள் படத்தில் ஏமாற்றி விட்டு சென்ற ஜெமினியை அவர் மேலதிகாரியாக வந்து "file" ,"life" என்று மாற்றி மாற்றி பேசியேக் கொல்லும் சௌகார் ஜானகி. பெரியக்கோடை அழிக்காமலே சின்னக்கோட்டைப் பெரிதாக்கி விடுவது.
7. எதிர்நீச்சல் இந்த படமே ஒரு பாலச்சந்தர் ஷாட் தான். நாடக மேடையிலே இதற்கு மாடிச்செட் போட்டு பார்வையாளர்களை மிரட்டியவர்.
8. ஒரு வீடு இரு வாசல் படத்தில் இரண்டு கதை முடிவில் இரண்டும் ஒன்று சேரும்.இந்த கதையின் சாயலைப் போல உள்ள தமிழ் படங்களே இல்லை என்று சொல்லலாம். முதல் கதை துணை நடிகர்களைப் பற்றியது. நான் எந்த படத்திலும் இவர்களைத் தான் அதிகம் பார்ப்பேன்.
9. சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் அக்கா தங்கைகள் மூவரும் சிவக்குமாரை விரும்புவார்கள். சிவக்குமார் கடைசிப் பெண்ணை விரும்புவார். ஒருவருடைய ஆசைக் கூட நிறைவேறாது. (வட போச்சு அதற்கு இந்த படம் பெரிய உதாரணம்)
10. அவர்கள் படத்தில் ஜுனியர் என்னும் பொம்மையின் மூலம் கமல் சுஜாதாவிடம் தன காதலைத் தெரிவிப்பார். கிளைமாக்ஸில் தான் தன் சொந்த குரலில் காதலைத் தெரிவிப்பார். தெலுங்குப் பதிப்பிலும் இவர் ஜெயசுதவிடம் சொல்வார்.
டிஸ்கி : கே.பாலசந்தர் நிகர் அவர் தான். அவர் ஆலமரம். அவர் சிஷ்யர்கள் என்று சொல்லிக் கொல்லும் படி இருக்கும் இயக்குனர்கள் குறைவே. அவர் செய்த தவறுகள் இன்னொருப் பதிவில்.
இன்னும் நிறையப் படங்கள் விடுபட்டு இருக்கலாம் (சிந்து பைரவி,அவள் ஒரு தொடர்கதை, புது புது அர்த்தங்கள்) பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.
இது போல கேபிள்சங்கரும் ,தண்டோராவும் (உங்க குறும்படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது) படம் எடுக்க வேண்டும் என்பதே என் ஆசை.
Saturday, August 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
interesting post.
waiting for the next one.
try to avoid spell mistake.
நல்லதொரு பதிவு.
பதினாறு ஆண்டுகள் முன்னே தொலக்காட்சியில் 'ரயில் சிநேகங்கள்' தொடரை ரசிக்கும்படி தந்தார். இப்போது தொல்லைக்காட்சி தொடர்கள் தான் அதிகம்.
அதுபோல அபூர்வ ராகங்கள் படத்தில் ஒவ்வொரு காட்சிகூம் ஒவ்வொரு ராகத்தின் பெயரை வைத்திருப்பார். நான் நினைக்கின்றேன் ரஜினி வரும்போது சரபேதம் / அபஸ்வரம் என்றூ வரும் என்று
//ரஜினி வரும்போது சரபேதம் / அபஸ்வரம் என்றூ வரும் என்று//
ரஜினி வரும் போது ஸ்ருதிபேதம் என்று வரும் அருண்மொழி.
==========
நன்றாக கவனித்து ரசித்திருக்கிறீர்கள் , நல்ல பதிவு...
நீங்கள் ரசித்தவற்றை நன்றாக தொகுத்திருக்கிறீர்கள்.
மிக அருமையான திரட்டு! ரசித்ததை சிரத்தையாக குறிப்பிட்டுள்ளது பாராட்டத்தக்கது!! வாழ்த்துக்கள்!
:)
பகிர்விற்கு நன்றி!
நல்ல ரசனை.. உங்களுக்கு..
பாலசந்தர் நிறைய குறிப்பிடும் படியான காட்சி அமைப்பு செய்துள்ளார். உடன் ஞாபகம் வருவது
சிந்து பைரவியில்...ஜேகேபி, சிந்துவிடம் "என் மனைவிக்கு சங்கீதமென்றால்" எனக்கூற அடுத்த காட்சி
அவர் சந்தையில் "கிலோ என்ன? விலை" என கத்தரிக்காயை கையில் வைத்திருப்பார்.
மிக ரசித்தேன்.
அவரது பொய் என்னை மிக ஏமாற்றிய படம்.
இத்தனை பேருக்கு பெயர் கிடைக்க வைத்தவர் நடிப்பு இவ்வளவு தானா? என ஆச்சரியப்பட்டேன்.
நன்றி நாடோடி இலக்கியன்
நன்றி துபாய் ராஜா
நன்றி அருண்மொழிவர்மன்
நன்றி kavi
நன்றி சரவணகுமரன்
நன்றி ஜெகநாதன்
நன்றி சென்ஷி
நன்றி Cable Sankar
நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris)
Post a Comment