அன்புள்ள சேரனுக்கு,
சேரன் தயவு செய்து படம் எடுப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.நிறுத்த முடியாது என்று நீங்கள் நினைத்தால் நடித்து மக்களுக்குத் தொல்லைக் கொடுப்பதை நிறுத்தி விடுங்கள்.எங்களை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்குது. மாயக்கண்ணாடி ஓடவில்லை என்றதும் மக்களின் ரசனையைக் குறைக் கூறினீர்கள்.இப்போ என்ன சொல்ல போறீங்க என்று ஆவலோடு அவலை மெல்லக் காத்திருக்கிறோம்.
சனிக்கிழமை அன்று கலைஞர் தொலைகாட்சியில் உங்கள் பேட்டியைப் பார்த்தேன்.படம் பார்த்து விட்டு மக்கள் கனத்தோடு போனார்கள் என்று நீங்கள் சொன்னதும் அது கணம் அல்ல ரணம் என்று புரிந்து விட்டது. ஒருவர் தொலைபேசியில் உங்களிடம் அழுதார்.மூன்று முறை படம் பார்த்து விட்டதாக சொன்னார்.எனக்கு ஒரு சந்தேகம் அவர் உங்களுடைய ஏதோ ஒருப் படத்தின் தயாரிப்பாளரா?.பேசிய அனைவரும் ஒரே ஒருப் படத்தை குறிப்பிட்டார்கள் அது உங்களின் ஆட்டோகிராப்.
நீங்கள் ஒரு ஆணியவாதி.ஆட்டோகிராப் படத்தில் உங்களைக் காதலித்த கோபிகாவை மறுபடியும் சந்திக்கும் பொது அவர் ஒரு விதவை என்று காட்டி இருப்பீர்கள்.அப்போது தானே குலுங்கி குலுங்கி அழ முடியும்.இந்த படத்தில் உங்களைக் காதலித்த பத்மபிரியா திருமணம் செய்யாமல் இருப்பதுப் போல இருக்கிறது.ஆனால் நீங்க கல்யாணம் செய்து குழந்தைக் குட்டியோடு இருப்பீர்கள்.(என்ன கொடுமை சேரன்,நேமி'சந்த்' ஜெபக்(இப்ப எந்த சந்துல நிக்கிறாரோ தெரியல) சார் இது).நீங்க செய்த ஒரே நல்ல காரியம் உங்கள் மகன் கதாபத்திரத்தில் நீங்கள் நடிக்காமல் இருந்தது தான்.
இனி மேல் ரெட்டை குதிரை மேல் செய்து தயாரிப்பைச் சில்லரை வார வைக்காதீர்கள்.
மொத்ததில் மாயக்கண்ணாடி - ஒருத் துளி விஷம்
பொக்கிஷம் - ஒருப் புட்டி விஷம்
பொக்கிஷம் பார்ப்பதற்கு மாயகண்ணாடியை இன்னும் சிலத் தடவைப் பார்ப்பேன்.
பொக்கிஷத்தில் கிடைத்த நீதி - தெரியாத தேவதையை(பொக்கிஷத்தை) விடத் தெரிந்த பேயே (மாயக்கண்ணாடியே) மேல்.
இப்படிக்கு
உங்கள் சுயசரிதை படித்து விட்டு பாபர் சுயசரிதைக்கு பிறகு சிறந்த சுயசரிதை சேரனுடையது என்று ஒருகாலத்தில் சொல்லிக் கொண்டுத் திரிந் வாண்டு.
***************
அடுத்தச் சர்ச்சை - கந்தசாமிக்கும் மாஸ்க் ஆப் ஜாரோவிற்கும் ஏதோ ஒற்றுமை உள்ளது.
பழைய ஜாரோ - கிருஷ்ணா(மகேஷ் பாபுவின் தந்தை)
பழைய ஜாரோவின் மகள் - ஷ்ரையா
புது ஜாரோ - விக்ரம்
கந்தசாமி பார்த்து விட்டு நொந்தசாமியாக மாறுங்கள்.
***************
ஒரு சந்தோசம்
நான் கிளப்பி விட்ட வதந்தி சாரு வரை போயுள்ளது. அது உண்மையாக வேண்டுகிறேன்.
சாருவின் தளத்தில்
என் பதிவு
Monday, August 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
irukku irukku unakku
I totally agree with you. Even I too written 2 years back about Maayakkanadi in webdunia or galaata .com asking Cheran not to act/director films.
He should live with his bank balance happily.
Similarly SJ Surya also to stop act/direct films.
These people are literally pulling back the tamil cinema and cinema watching interest.
நடத்துங்க, நடத்துங்க, என்னமோ முடிவு பண்ணிட்டீங்க,
enna ithellaam...???
பொக்கிஷம் பார்க்கவில்லை அதனால் நோகமெண்ட்ஸ்..!
மாஸ்க் இருந்தா, மாஸ்க் ஆஃப் ஜாரோவா..?
என்ன கொடுமை தாணு ஸார் இது..?
என்னாது சாருவா..?
அப்போ "கருட புராணமும்" இருக்கா..?
தலைப்புல, சாருவ சொல்லியிருந்தீங்கனா, கூட்டம் அம்மோ அம்மோன்னு அம்முயிருக்கும்.
மிஸ் பண்ணிட்டயே தலைவா..!
:)
Hi dont blame every one its his story or thoughts thats all.It is film that only seen entertainment not to other thing.so its my openion
சேரனுக்கு இயக்குனர் வேலை மட்டும் போதும்.... அவரிடம் எனக்கு பிடித்ததே அந்த அழுகை காட்சிகள் தான்.... யாரும் (மக்கள் உட்பட)பார்த்துவிட கூடாது என முகத்தை மூடி கண்டமேனிக்கு அழுவாப்ல... பின், ஒரு மாதிரி மெருமிதமா சிரிக்குறது... நாயகியை" இல்லடா.. வேணாண்டா.. என கூறுவது நமக்கு லேசா குமட்டும்.....
மக்கள் ரசனையை அறிந்து காலத்திற்கேற்ற படைப்புகளை கொடுப்பவரே சிறந்த படைப்பாளி. தனது ரசனையை மக்கள் மீது திணித்தால் என்ன நடக்கும் என்பதற்கு சேரனின் மாயக்கண்ணாடியும், பொக்கிஷமும் நல்ல உதாரணங்கள்.
அவரது தவறுக்கு மக்களையும், மற்றவர்களையும் குறை கூறுவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
nandri cibi
nandri ramji
nandri kavi
nandri nainaa
nandri duglas
nandri smart plan
nandri jk
nandri dubai raja
I agree with Cheran when he castigates the present movie goer in his interview in the TV channel. There is a saying 'you wil get what you deserve'. That is, the present movies in the tamil movie industry reflects the desires, expectations and mind set of the movie goers of today; so you get the types of movies today as to what we (the majority movie goers) are. When a movie is touted as a great movie, it is the reflection of the present movie going individual's mind set (who is often a representation of the present movie goer). If there is enough 'masaalaa' and item songs in a movie then it is touted as being a very good movie. Cheran has done a good job of trying to make a change in the mindset of the movie goer of today. But looking at the comments in this page I can see that he has not made any significant impact and has a long way to go. He is a director well ahead his times. May be in another ten years or so, that is, after the movie going mind set has changed from the massala packaged movie industry's offerings you see today to a more mature mind appealing one, may be, just, may be, he may be appreciated. Till such a time comes he has to lie low, persevere to take such movies, which of course will fall on deaf ears. One hopes he will financially survive till such a time arrives. My wishes to him to withstand this onslaught. But remember, times are changing and the present movie goer mentality is also changing. My guess is, it will happen sooner than later. Hey guys, this is a wake up call.
Post a Comment