Tuesday, August 25, 2009

500வது பதிவு நண்பர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்..

சின்ன வயதில் இருந்தே நான் ஒரு தலைவனாக இருக்கவே ஆசை. எனக்கு ஒத்து வராத(என்னை தலைவனாக ஏற்று கொள்ளாத) கும்பலிடம் நான் தள்ளியே இருப்பேன். அதனால் என்னை விட சின்ன வயது பசங்க தான் கிராமத்தில் எனக்கு நண்பர்கள்.ஒரு விஷயத்தில் இறங்கினால் அது முடியும் வரை ஓய்வதில்லை. ப்ளான் பண்ணாம எதையும் பண்ண கூடாது - இது வடிவேலு சொன்னதாக இருந்தாலும் எனக்குப் பொருந்தும். வேலையாக இருந்தாலும் சரி,ஆப்பு வைப்பதாக இருந்தாலும் சரி யாரும் யோசிக்காத கோணத்தில் தான் நான் யோசிப்பேன்.

அப்படி ப்ளான் பண்ணி செய்தத் தவறுகள் இந்த பதிவில்.

சின்ன வயதில் இருந்தே எனக்கு நாணயங்கள் சேகரிப்பதில் ஈடுபாடு உண்டு. யாராவது அறிய வகை காசு வைத்து இருந்தால் என்னால் வாங்க கூடிய விலையில் இருந்தால் வங்கி விடுவேன். நான் எட்டாவது படிக்கும் போது அறிய வகை காசு கண்காட்சி நடத்தினார்கள். என்னிடம் இல்லாத காசான பத்து ரூபாய் காயினும், இரண்டு வகை இருபது காசும் என் வகுப்பில் ஒருவன் வைத்திருந்தான்.இருபது காசு மட்டும் பத்து வைத்திருந்தான்.நான் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் கொடுக்காததால் அடித்து விட முடிவு செய்தேன். என்னால் அவனை நெருங்க கூட முடியவில்லை. கண்காட்சி நடக்கும் போது பார்க்க வந்த சின்ன பசங்களின் பையில் காசுகளை அள்ளிப் போட்டு விட்டார்கள் அவனுடைய எதிரிகள்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த இரண்டு இருபது காசுகளை நான் அடித்து விட்டேன். இப்பொழுதும் அந்த செப்புக் காசுகளைப் பார்க்கும் போது அவனும்,அந்த திகில் நிமிடமும் வந்து போகும்.அவனிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒருக் கடிகார வழிப்பறியை நடத்தி இருந்தோம்.அவசரமாக காசு கேட்ட நண்பனிடம் "ஒரு வழி இருக்கு ஆனா நீ செய்ய மாட்ட.." என்று பீடிகையோடு ஆரம்பித்தேன்."என்ன.." என்றவனிடம் காலையில் நடந்த அந்த சம்பத்தை நினைவுப்படுத்தினேன்.காலையில் கீழே கிடந்த கடிகாரம் மற்றும் அதை எடுத்தவனைப் பற்றியும் சொன்னேன்."காசு வேணுன்னா அவன் கிட்ட பொய் வாட்ச வாங்கு.." என்று சொன்னேன்.அவன் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையில்.கொஞ்ச நேரத்தில் வாட்சைப் பிடுங்கி இருந்தார்கள் எனக்கு தெரியாமல்.கூட இருந்தவனே அந்த வாட்ச்சை அடித்து விட்டான்.காலையில் அந்த பையன் அவன் அம்மாவோடு வந்து பிரச்சனை செய்ய..ஒருநாள் டைம் கேட்டு பாண்டிபஜார் முழுவதும் திரிந்தோம் அந்த வாட்ச்சைப் போல வாங்க.(வினாடி முள்ளுக்குப் பதில் ஒரு சிலந்தி சுற்றி வரும்).கிடைக்காததால் நானூறு ரூபாய் அவன் கொடுத்தான் என்னை வேறு காட்டிக் கொடுக்கவில்லை.அதற்கு கைமாறாக இறுதித் தேர்வின் போது இரண்டு மணி நேரம் தான் தேர்வு எழுதுவேன் மீதி முப்பது நிமிடம் அவனுக்குப் பிட் பாஸ் பண்ணுவேன். கடைசி தேர்வின் போது சரியாக கொடுக்க முடியவில்லை. அவன் அந்த பாடத்தில் தேர்வு ஆகவில்லை..அவனிடம் மன்னிப்பு கேட்கிறேன்(சரியாக பிட்டை பாஸ் பண்ணாதக் காரணத்திற்கு).

கூட இருந்து திருடியவனின் இன்னொரு கதையை படிக்க இங்கே போகவும்

முதல் முறையாக + டூ படிக்கும் போது திருட்டுக் கையெழுத்துப் போட்டேன்.என் அம்மாவின் கையெழுத்தை மிகவும் சிரமப்பட்டுப் போட்டேன். மனது கேட்காமல் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு வந்தேன். எங்கே படிக்காமல் போய் விடுவார்களோ என்று பயந்து ஒரு நண்பனை விட்டு அம்மாவுக்குப் போன் செய்து சொன்னேன். என் வீட்டில் ஒன்றுமே கேட்கவில்லை. இந்த சாதனையை என் மாமா பெண் ஏழு வயதில் (மூன்றவதுப் படிக்கும் போது) என் அம்மாவின் கையெழுத்தைப் போட்டு முறியடித்து விட்டாள். அன்று போன் செய்யச் சொல்லித் நான் தொல்லைப்படுத்திய நண்பனிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இரண்டு வருடம் ஜூனியர் அந்த பையன்.ஒருநாள் ஒரு சிடி கொடுத்து பார்க்கச் சொன்னான்.மறுநாள் அவனிடம் கொடுத்தப் பிறகு அது கல்லூரியில் மாட்டிக் கொண்டது.வாலைப் பிடித்து விசாரித்தப் போது ஒரு கூட்டமே மாட்டிக் கொண்டது.அவனிடம் போய் "என்னைக் காட்டி கொடுத்து விடாதே.." என்று நான் மிரட்டியப் போது அவன் சொன்ன வார்த்தைகள் இன்னும் நினைவில் இருக்கிறது."நீங்க தான் எனக்கு ஹீரோ தெரியுமா..உங்களப் போய் நான் காட்டி குடுப்பேனா..நீங்க இப்படிக் கேட்டது தான் எனக்கு ஒரு மாதிரி இருக்கு.." நண்பர்கள் பயமுறுத்தியதால் அவனிடம் சொல்ல வேண்டிய சூழ்நிலை.அப்படி கேட்டதற்கு அவனிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

இதெல்லாம் நான் அன்று கேட்கவில்லை.காரணம் தயக்கம்,பயம் மற்றும் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்ச்சி..இன்று கேட்கிறேன்.. என்னை மன்னித்து விடுங்கள்".

டிஸ்கி : இது என்னுடைய 50வது பதிவு.

24 comments:

இரும்புத்திரை said...

தலைப்பில் 500௦௦வது பதிவு என்ப போட்டதற்கு ஒரு பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்

லோகு said...

ரொம்ப மோசமான பதிவு...

லோகு said...

போன பின்னூட்டத்தில் பொய் சொன்னதற்கு பகிரங்க மன்னிப்பு கேக்கிறேன்..

லோகு said...

உண்மையில் மிக நெகிழ்ச்சி ஆன பதிவு... மன்னிப்பு கேக்க தெரிஞ்சவன் தான் மனுஷன் ன்னு விருமாண்டி சொல்லி இருக்கார்..

Thamira said...

அர்விந்த், ஒரு சீரியஸ் பின்னூட்டம்.

உங்கள் எழுத்தில் ஒரு நல்ல ஃபுளோ இருக்கிறது. ஆனால் நீங்கள் நல்ல விஷயங்களைப் பகிரப்போகிற ஒரு நல்ல பதிவரா? அல்லது மொக்கைப் பதிவரா என்று முடிவுக்கே வரமுடியவில்லை. மேலும் இத்தனைப்பதிவுகள் எழுதிக்குவித்தீர்கள் எனில் உங்கள் நோக்கத்தை பின் தொடர்வதும் கடினம். முடிவு உங்கள் கைகளில்..

அவ்வப்போது கண்ட சில பதிவுகளை வைத்தே இந்த பின்னூட்டம். தவறெனில் மறந்திடுக.

இந்தப்பதிவும் சீரியஸும் இல்லாமல், அல்லது வேறெதுவும் இல்லாமல் இருக்கிறது. நோ கமெண்ட்ஸ்.!

கோவி.கண்ணன் said...

//இதெல்லாம் நான் அன்று கேட்கவில்லை.காரணம் தயக்கம்,பயம் மற்றும் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்ச்சி..இன்று கேட்கிறேன்.. என்னை மன்னித்து விடுங்கள்".

டிஸ்கி : இது என்னுடைய 50வது பதிவு. //

:)

எவ்வளவோ பார்த்தாச்சு இதைப் பார்க்க மாட்டோமா ?

மன்னிப்பா அகராதியில் இருந்து எடுத்துவிடுங்கள்.

வால்பையன் said...

இங்க மன்னிச்சிரலாம்!
ஆனா கருடபுராணத்தின் படி இதுக்கு என்ன தண்டணைன்னு சாருகிட்ட கேக்கணூமே!?

Raju said...

இதுக்கு ஒரு ஸ்மைலி போடலாம்ணு முடிவு பண்ணி, ஆதிமூலகிருஷ்ணனின் பின்னூட்டட்த்தைப் படித்ததால்,
"ரைட்டு" எனப் போடலாமென உறுதி செய்து. இங்கே "ரைட்டு" என போடுகின்றேன்.

Raju said...

பதிவுலக மரபை கெடுத்த, அரவிந்த் ஒழிக.
இந்த மாதிரி ரவுண்ட் நம்பர் வர்ற பதிவுல எல்லாம் (50,100,150,200) ஒன்னு நன்றி சொல்லனும் இல்லைன்னா பெயர்க்காரணம் சொல்லனும்.. இப்பிடி மன்னிப்பெல்லாம் கேட்க்கப்புடாது.

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் அரவிந்த்

இரும்புத்திரை said...

நன்றி லோகு நீங்க போட்ட முதல் பின்னூட்டம் நல்ல இருக்கு

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

//உங்கள் எழுத்தில் ஒரு நல்ல ஃபுளோ இருக்கிறது. //

என்னை வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே

நன்றி கோவி.கண்ணன்

நன்றி வால்பையன் திரும்பவும் சாருவா

நன்றி டக்ளஸ் இப்படி எழுத சொன்னதே நீங்க தானே

நன்றி கதிர்

நர்சிம் said...

ம்.நடக்கட்டும்

நாடோடி இலக்கியன் said...

திறமை இருக்கிறது, சரியாக பயன்படுத்தினால் தான் முழுமை.

வேற ஒன்றும் சொல்வதற்கில்லை.

நாஞ்சில் நாதம் said...

50வது பதிவுக்கு வாழ்த்துகள் அரவிந்த்

இரும்புத்திரை said...

நன்றி நர்சிம்

நன்றி நாடோடி இலக்கியன்

நன்றி நாஞ்சில் நாதம்

துபாய் ராஜா said...

சீக்கிரம் செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்.

வாழ்க்கைல எப்பவும் நாம நல்லவனா, கெட்டவனான்னு குழம்பக்கூடாது. எல்லாம் அவன் செயல்ன்னு போய்கிட்டே இருக்கனும். அந்தந்த நேரத்தில் பெருசா தெரியுற விஷ்யமெல்லாம் அப்புறம் யோசிச்சு பார்த்தா ஒண்ணுமே இல்லைங்கற மாதிரி தெரியும்.

எப்படியோ உங்க பகிரங்க மன்னிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

மணிஜி said...

”திருட்டுபயலே” படம் சூப்பர்ஹிட்..

இரும்புத்திரை said...

நன்றி துபாய் ராஜா

நன்றி தண்டோரா ஆனா கந்தசாமி.....

தினேஷ் said...

அப்படி ப்ளான் பண்ணி செய்தத் தவறுகள் ?????

பிளான் பண்ணத சரியாதானே பண்ணியிருக்கிய அப்புறம் என்ன ..

கேப்டனுக்கு இந்த பதிவு போகாம பார்த்துக்குங்க .. ஒரு மன்னிப்புக்கே கொல பண்ணிடுவார் நீங்க இத்தனை மன்னிப்பு கேட்டுருக்கீங்களே?

இரும்புத்திரை said...

நன்றி சூரியன்

துளசி கோபால் said...

ஐநூறுக்கு வாழ்த்தலாமுன்னு வந்தா..இப்படிப் பத்தால் வகுக்க வச்சுட்டீங்க. ஏகப்பட்ட எழுத்துப்பிழை.

கூட்டிக் கழிச்சுப் பார்த்தால்......

மன்னிச்சு விட்டுட்டேன்.

அடுத்த அம்பது எப்படி இருக்குன்னு பார்க்கத்தானே போறோம்;-))))

இரும்புத்திரை said...

நன்றி துளசி கோபால் இனிமே ஒழுங்கா எழுதுறேன்

Nathanjagk said...

வாழ்த்துக்கள் அரவிந்த்!! இனிமேலாவது ஒழுங்கா நடந்துக்க அந்த நாகூர் விநாயகனை, திருப்பதி ஏசுநாதனை, பழனி அல்லாவை ​​வேண்டிக்கிறேன்!

இரும்புத்திரை said...

நன்றி ஜெகநாதன்