Friday, August 28, 2009

கௌதம் மேனனின் எடுத்த ஒரே ஒரு லாஜிக்கான படம்

காக்க காக்க - கௌதம் மேனனின் எடுத்த ஒரே ஒரு லாஜிக் உள்ள படம்.வித்தியாசமான(வேகமான) படத்தொகுப்பு,ஒளிப்பதிவு,கலை இயக்குனரின் செட் வீடு (இலங்கையில் போடப்பட்ட செட்) படத்திற்கு பலம் சேர்த்தது.அதில் லாஜிக்கை மீறாத யதார்த்தமும் இருந்தது. ஜோடிப் பொருத்தமும் (கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ்,பயாலஜி எல்லாம் சேர்ந்து) படத்தின் ஸ்கோரை ஏற்ற முடிந்தது.

படத்தில் நான் ரசித்த லாஜிக்

சூர்யா ஜீவனால் சுடப்பட்டு "மாயா.." என்று கத்திக் கொண்டே தண்ணீரில் விழுவார்.அழத்தில் அமிழ்ந்து கிடக்கும் சூர்யாவை கேமிரா மேலிருந்து காட்டும். உடனே ஜோதிகா வருவார்."உயிரின் உயிரே.." என்ற அசத்தலான பாடல்.பாடல் ஐந்து நிமிடம் வரும்.பாட்டு முடிந்ததும் திரும்பவும் கேமிரா சூர்யாவை மேலிருந்து காட்டும்.இப்படி இரண்டு முறை காட்டும் போதும் நான் கவனித்தது சூர்யாவின் கையில் ஓடிக் கொண்டிருந்த வாட்ச்சை.பாட்டு ஆரம்பிக்கும் பொழுது வினாடி முள் 1 வினாடி காட்டும்.பாட்டு முடியும் சமயம் வினாடி முள் அறுபது என்று காட்டும்.ஒரு நிமிடம் தான் சூர்யா மயக்கமாக இருப்பார்.

மேலும் துப்பாக்கி குண்டுத் துளைத்தப் பிறகு தண்ணீரில் விழுந்தால் அது ரவையின் வீரியத்தைக் குறைக்கும். அப்படி ஒரு பிரபல ரவுடி இரண்டு முறை சுட்டப் போதும் காயத்தோடு தண்ணீரில் விழுந்து தப்பி விட்டார். மூன்றாவது முறை தண்ணீரில் குதிக்கும் முன் அந்த ரவுடியைக் கொன்று விட்டார்கள்.
அப்படி ஒரு சிறுகதையை சமீபத்தில் படித்தேன்.அது நர்சிமின் வக்கிரம் கதை.நான்கே வினாடியில் கதை முடிந்து விடும்.அந்த கதைப் படிக்கவே எனக்கு மூன்று நிமிடங்கள் ஆனது.தொடக்கத்தில் நிகழ்காலத்தில் ஆரம்பித்து இரண்டு நாட்கள் பின்னே போய் மறுபடியும் நிகழ்காலத்திற்கு வரும். காக்க காக்க படத்தில் கடிகாரம் என்றால் இதில் டெலிபோன்.

வெள்ளிக்கிழமை அன்று நாடகத்தில் ஒரு திருப்பம் வைத்து தொடரும் போட்டது போல ஒரு முடிவு.

பரிசு கிடைக்கும் என்று நான் நினைத்த கதை.

பரிசு கிடைக்கும் என்று நான் நினைத்த மற்ற கதைகள்

அதிஷா - யாக்கை.(ஒரு அருமையான குறுநாவலின் கருவை சிறுகதையாக எழுதி வீணடித்து விட்டார்)

நாடோடி இலக்கியன் - சின்னு

கும்க்கி - தலைப்பில்லாத ஒரு கதை.(லூப் வகை கதை).

நான் ரசித்த இன்னொரு கௌதம் மேனனின் படம் - மின்னலே.

டிஸ்கி :

இந்த கதைகளைத் தேர்வு செய்யாத நடுவர்களுக்கு ஒரு தண்டனை தரப்பட்டது. அதுதான் என்னுடைய சிறுகதையை வாசித்தார்களே.

8 comments:

லோகு said...

அட.. இப்படியெல்லாம் கூட படம் பாப்பாங்களா.. கலக்கறீங்க..

துபாய் ராஜா said...

உங்க வித்தியாசமான கோணப்பார்வை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. :))

இரும்புத்திரை said...

நன்றி லோகு. அதே ஹீரோ பார்த்து என்ன செய்யா போகிறோம்.

துணை நடிகர்கள் பாருங்கள். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்

இரும்புத்திரை said...

நன்றி துபாய் ராஜா விருதுக்கு நன்றி

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

இரும்புத்திரை said...

நன்றி க. தங்கமணி பிரபு

Thamira said...

ஏதோ சினிமா பதிவென எண்ணினால் நம்ப கதைக்கு கொண்டுவந்து முடிச்சிட்டீங்க.. :))

இரும்புத்திரை said...

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்