முதல்ல எலி மேல (அதான் மவுஸ் மேல) கைய வைச்சி சத்தியப் பிரமாணம் எடுத்துக்கணும் (யாரது இடது கைய வைக்கிறது).நான் போடுறதெல்லாம் மொக்கையே மொக்கையை தவிர வேறு எதுவுமில்லை.
10. நீங்க இதுவரைக்கும் விமர்சனம் எழுதாம இருந்தா ஏதாவது ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதுங்க.அது வெளிவராத புதுப்படமா இருந்தா ஹிட்ஸ் நிச்சயம்.சரி நானே உதாரணம் சொல்லித் தர்றேன்.உன்னைப் போல ஒருவன் படத்துக்கு விமர்சனம் எழுதலாம்(எ வெட்நெஸ்டே பட விமர்சனத்துல நடிகர்கள் பெயர மட்டும் மாத்திப் போடுங்க.)விமர்சனம் நம்ம அண்ணன் கேபிள் சங்கர் பதிவுலப் போய் சுடுங்க)
9. கோக்குமாக்கா தலைப்பு வைக்கணும் எப்படின்னா இதுக்கும் நானே உதாரணம் தர்றேன் (பிட்டு படம் எடுப்பது எப்படி ?) இப்படி தலைப்பு வைக்கணும்.ஆனா உள்ளுக்குள்ள மேட்டர் ஒண்ணுமே இருக்கக்கூடாது.இந்தப் பதிவுக்கு எனக்கு தமிளிஸ்ல நிறைய ஓட்டு கிடைச்சது.
8. பதிவுப் போட எதுவுமே இல்லனா கூடக் கவலையே படக்கூடாது. யாராவது ஒரு பதிவர் கிட்ட ஓரண்டை இழுக்கணும்.நிஜமா சண்டை போடணும் ஆனா போடக் கூடாது. எதிர்கவுஜ,எதிர்வினை,சைட்வினை எல்லாம் இதுல வரும்.
7. இப்படி அதிக ஹிட்ஸ் கிடைக்க வலி சொல்லி தர்றேன்னு சொல்லிட்டு பாதிய மாட்டும் தான் சொல்லணும்.மீதி பாதி அடுத்தப் பதிவுல வரும் ஒரு டிஸ்கிய போட்டு விடனும்.ஆறு மாசம் கழிச்சு இதே பதிவ மீள்பதிவா போட்டா அப்பவும் கூட்டம் அம்மும்.
6.வடை பெறுகிறேன்,கடை அடைக்கிறேன் அப்படி ஏதாவது ஷாக் கொடுக்கணும் (உங்களுக்கே கொடுத்துக்கனும்).அப்படி சொல்லும் போது யாருமே கவனிக்கலைனா ரொம்ப ஷாக்கா இருக்கும். அப்பவும் யாருமே தடுக்கலைன்னா அந்தப் பதிவ தூக்கிட்டு வழக்கம் போல கும்மி அடிக்க வரணும்.(யாராவது வந்து நம்மள கூப்பிடுவாங்கன்னு காத்துக் கிடந்தா நம்ம கடை நிரந்தரமா அடச்சே கிடக்கும்)
5. நமக்கு அது வராதோ இது வராதோ அப்படி எல்லாம் யோசிக்கவே கூடாது(அப்புறம் எதுவுமே வராது).எல்லாத் துறையிலும் அடிச்சி ஆடனும்.அப்புறம் எதுக்கு நமக்கு ஆதரவு கிடைக்குதோ அதுல நின்னு நிதானமா ஆடனும்.
4. மீ த பர்ஸ்ட்டு ,ஸ்மைலி அப்படி சாதாரணமா பின்னுட்டம் போடாம பதிவு போட்டவரையோ,இல்ல கமென்ட் போட்டவரையோ வைச்சி கும்மி அடிச்சிங்கனா நிறைய ஹிட்ஸ் கிடைக்குதோ இல்லையோ நிறைய திட்ஸ் கிடைக்கும்.அத எல்லாம் கண்டுக்காம திரும்ப அடுத்த பதிவுலப் போய் கும்மிய தொடரனும்.
3. பின்னுட்டம் போடுறவங்களுக்கு மட்டும் தான் மெயில மிச்ச இருக்கிற வழிய சொல்லுவேன்னு பிளாக் மெயில் பண்ணலாம். அப்படி பண்ணும் பொது கிடைக்கிற ஒன்னு ரெண்டு கமெண்டும் வரலைனா கம்பெனி பொறுப்பல்ல.
2. உங்க பதிவ மணிக்கு ஆறுபது தடவ நீங்களே திறந்து பார்த்துக்கலாம்.(24 * 60 = 1200௦) இத்தன ஹிட்ஸ் நிச்சயம்.கணக்கு தப்புன்னு பின்னுட்டம் வரலாம்.அத வரவு கணக்குல எடுத்துக்கலாம்.
1. கிசுகிசு நிறைய எழுதனும் அதுதான் நமக்கு ரொம்பப் பிடிக்கும்.இருக்கிற வேலை எல்லாம் விட்டுட்டு யாராவது பின்னுட்டம் போட்டா பாக்கலாம்னு அடிக்கடி வருவாங்க.
0. எல்லாத்தையும் நானே சொன்னா நல்லா இருக்காது.அது என் பதிவுலே இருக்கு.கண்டுபிடிச்சி பின்னுட்டத்துலப் போடுங்க.
ஆக மொத்தம் 11 வழிகள்.
Monday, August 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
அப்படி இப்படின்னு அதிக ஹிட்ஸ் கிடைக்க செய்துவிட்டீர்கள்....வாழ்த்துகள்
சங்கத்து உண்மைய இப்படியா சந்தியில விடுறது? இன்னும் எத்தனை பேரு கிளம்பப் போறாங்களோ??
//அப்படி சொல்லும் போது யாருமே கவனிக்கலைனா ரொம்ப ஷாக்கா இருக்கும்// இதுக்கு பேரு ஷாக் இல்ல... ஹார்ட் அட்டாக்!
நல்லா இருக்கு அப்பு... உங்களுக்கு நல்லா ஹிட்ஸ் கிடைக்க வாழ்த்துகள்.
யோவ்..ஏன்யா இப்பிடி தேர இழுத்து தெருவுல விடுறீரு.
அனைத்தும் டாப்பு !
நானும் "கடை" பிடிக்க முயற்சிக்கிறேன் !
:)
பதினோரு வழி சொல்லி இருக்கீங்க.... ஆனா எந்த வழியிலேயும், பாதி வழியிலே இறங்கி... டீ, காபி, பஜ்ஜி, போண்டா... சாப்பிடவோ, சிறுநீர் கழிக்கவோ வசதி இல்லே அதனாலே நான் அந்த வழிலே போக மாட்டேன்.
//எல்லாத்தையும் நானே சொன்னா நல்லா இருக்காது.அது என் பதிவுலே இருக்கு.கண்டுபிடிச்சி பின்னுட்டத்துலப் போடுங்க.//
அதுவும் சரிதான்
//5. நமக்கு அது வராதோ இது வராதோ அப்படி எல்லாம் யோசிக்கவே கூடாது(அப்புறம் எதுவுமே வராது).எல்லாத் துறையிலும் அடிச்சி ஆடனும்.அப்புறம் எதுக்கு நமக்கு ஆதரவு கிடைக்குதோ அதுல நின்னு நிதானமா ஆடனும்.//
சும்மா கலாய்க்கிறதுக்காக எழுதியிருக்கேங்கன்னு நினைச்சி வந்தேன். இந்த ஐடியா ஒண்ணுக்காக இந்தப் பதிவுக்கு ஐந்நூறு ஹிட்ஸ்(அதிகமா) கிடைக்கக் கடவது என்று வாழ்த்துகிறேன்...
http://kgjawarlal.wordpress.com
ரொம்ப நன்றிங்ணா. புதுசா எழுத ஆரம்பிச்ச எனக்கு ஒங்க யோசனைகள் யூஸ் ஆகும் போல இருக்குதுங்ணா.
கலக்கி இருக்கீங்க தல..டக்ளஸ் கமெண்ட்டு டாப்பு..
பின்னி பெடல் எடுத்துட்டீங்க.
"உங்க பதிவ மணிக்கு ஆறுபது தடவ நீங்களே திறந்து பார்த்துக்கலாம்.(24 * 60 = 1200௦) இத்தன ஹிட்ஸ் நிச்சயம்.கணக்கு தப்புன்னு பின்னுட்டம் வரலாம்.அத வரவு கணக்குல எடுத்துக்கலாம்."
சான்ஸே இல்லை.
கலக்கிட்டேள் போங்கோ. :))
ஒக்கே
;-)
:))
கம்பெனி சீக்ரெட்டை வெளிய சொல்லப்படாது ....
வலையுலக ஐடியாமணி வாழ்க!
//வழிகள் - 8,4,2
’நாதரித்தனம் பண்ணாலும் நாசுக்கா இருக்கணும்’-னு, வடிவேலு இதைத்தான் சொன்னாரோ..
மொக்கை பதிவல்ல, சக்கை(செம) பதிவு.. :))
காரணம் ஆயிரம்™
நல்லா கும்மியடிக்குறிங்க
nandri kirukkan
nandri thala
marupadiyum oru nandri thala
nandri raghavan anna
nandri duglas
nandri kovi.kannan
nandri nainaa
nandri gnanasekaran
nandri jawarlal
nandri niranjan
nandri narsim thala
nandri dubai raja
nandri yaasavi
nandri naanjil naatham
nandri valpaiyan
nandri kaaranam aayiram
nandri nila
ellorum adikkadi vanga vanthu ennai nalla kummunga
Post a Comment