Friday, June 4, 2010

வினவு போடும் ரெட்டை வேடம்

வினவு இன்றைய பதிவில் சொன்னது இது - சந்தனமுல்லை விவகாரம் எழும்புவதற்கு முன் நர்சிம் என்பவர் யார் என்றே எங்களுக்குத் தெரியாது என்பதே உண்மை.நன்றாக கவனிக்க வேண்டும் "எங்களுக்குத் தெரியாது" என்று சொல்லியிருக்கிறார்.

அது எந்தளவு உண்மை என்று பார்ப்போம்.அவருடைய விண்ணைத் தாண்டி வருவாயா பதிவில் ரியல் என்கவுண்டர் என்ன  சொல்கிறார் என்று பார்த்தால் - " ரியல் என்கவுண்டர் says: March 1, 2010 at 4:02 pm //நளினி ஸ்ரீராம்…இந்தப் படத்தைப் பொறுத்தவரை இவரின் பங்கு மிக முக்கியமானது. உடைகள் வடிவமைப்பு இவர்தான். த்ரிஷாவையும் சிம்புவையும் இதைவிடச் சிறப்பாகவும் அதி முக்கியமாக சிம்ப்பிளாகவும் காட்டியதால் தான் இந்தப் படம் சொல்ல வந்த காதல் மனதோடு ஒன்ற வைத்தது.// பதிவர் நர்சிம் தனது பதிவில் தெரிவித்த முத்துக்கள் இவை. ஆக காதலிக்கணும்னா ஒரு நல்ல டிசைனரைப் பாத்து டிரெஸ்ஸுகளை செலக்ட் பண்ணிக்கணும், முருகா…………முருகா…………….!!!!!!!!!!!!!!!!!.."

சாரு - நித்யானந்தா பற்றிய பதிவில் அதே ரியல் என்கவுண்டர் என்ன சொல்கிறார் என்றால் "நித்தியானந்தாவின் பரம பக்தன் சாருவின் சிஷ்ய கோடிகள் லக்கி லுக், அதிஷா, நர்சிம், கேபிள் சங்கள் இத்யாதிகள் சாருவை கடவுளாக தூக்கிப்பிடித்து பதிவுலகில் டான்ஸ் போட்டார்கள். அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பது சரியா, இல்லை சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பது சரியா, இல்லை உதைப்பது சரியா? ஒரு நல்ல பதிலைச் சொல்லுங்கள்..."

இந்த ரியல் என்கவுண்டர் யார் என்றால் நிச்சயம் வினவின் தோழர் தான்.இல்லை என்று மறுக்கவே முடியாது.மறுக்க சொல்லுங்கள் பார்ப்போம்.கேபிள் சங்கர்,வெற்றி,விக்னேஷ்வரி என்று அவர் தாக்கிய பதிவர்கள் ஏராளம்.

அதற்கு என்னுடைய எதிர்வினை இங்கு படிக்கலாம்.

அடுத்து பெண்களுக்கு எதிராக வன்முறை நடக்கும் போது தெருவில் போகும் யாரும் தட்டிக் கேட்பார்கள் என்று முகிலிடம் சொன்னாலும் லீனா மணிமேகலை என்பவரை பூக்காரி என்று எழுதிதையே அசிங்கம் என்று சொல்லும் வினவுத் தோழர்கள் அதை விட பத்து மடங்கு திட்டினார்களே.அப்போது யாரும் வினவிற்கு வார்த்தைக்கு வார்த்தை பொறுக்கி பட்டம் தரவில்லையே.

வினவுத் தோழர்கள் எந்த அளவிற்கு தரமிறங்கி போவார்கள் என்பதற்கு என் பதிவில் வந்த பின்னூட்டமே சாட்சி.

சொல்லியது யார் என்று பார்த்தால் - வானமே எல்லை என்று பெயர் வைத்திருக்கும் குறுகிய சிந்தனை உள்ளவர்.அந்த பின்னூட்டம் இதோ.

"பன்னடை, பர்தெசி, லூசுப்பய, கேனப்.......பயல், என்னமா எழுதி இருக்கான், மானிடகுல சீர்கேடு, தமிழ்பதிர்வகளின் தற்குறி, குலநாச சண்டாளன், இழி பிறப்பின் அளவுகோள், பொது அறிவிலி, மலம் கொண்டு சாலை அமைப்பவன், கேவலன், காமுகன், புழு, வைரஸ், ஆட்கொள்ளி, அடியாள், பாதில போறவன்,"

இவ்வளவு நடந்தப் பின்னும் நான் வினவுத் தோழர்கள் என்று இன்னும் மரியாதையோடு விளிக்கிறேன். நான் அவரை பற்றிய சுயபிராதம் என்று தான் இதுவரை நினைத்துள்ளேன்.இன்னும் நினைக்கிறேன்.

யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன் என்று சொல்லும் வினவு - தீபா எழுதிய அவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது பதிவில் ஒரு அனானி போட்ட பின்னூட்டத்தைப் பார்ப்போம். "ஐயா வினவு நிஜமாக பெண்ணுரிமை என்று வஸ்து அல்லது ஜந்து உயிரோடு இருக்கிறதா.நீங்கள் சொல்லுங்கள்.பெண்கள் வாரமல்லவா.இதை படித்து விட்டு சொல்லுங்கள்.சொல்ல முடியவில்லை என்றால் நான் பின்னூட்டம் போட்ட பெயருக்கு மாறி விடவும். அதற்கு வினவுத் தோழர்கள் மணி மற்றும் அரடிக்கெட்டின் பதிலைப் பார்ப்போம். # March 11, 2010 at 9:04 pm உரிமை என்பது வஸ்துவா/ஜந்துவா .. எப்படி என புரியவில்லை அம்மா கொஞ்சம் விளக்க முடியுமா .. Reply # 11.2 அர டிக்கெட்டு! says: March 11, 2010 at 11:08 pm மதார், உங்க பதிவ விளம்பரப்படுத்த வினவ பயன்படுத்தறீங்க சரி. உங்க பதிவு கள்ள ஓட்டு குழுக்களை பற்றிய பதிவு.  அந்த முதுகு சொறியும் கழிசடை பரஸ்பர ஓட்டு கும்பலை நீங்கள் பெயர் சொல்லி அம்பலப்படுத்தியிருந்தாலாவது மெச்சியிருக்கலாம்,நீங்களோ பொதுவாக நீதி சொல்வது போல பதிவு எழுதி சொதப்பி விட்டீர்கள். சரி போகட்டும். உங்களோட இந்த பதிவுக்கும் பெண்ணுரிமைக்கும் என்ன சம்பந்தம்? அது என்ன பெண்ணுரிமையை வஸ்து, ஜந்து என்ற கிண்டல்? ஏன் வினவு ஏன் பேர வினாவதேன்னு மாத்தனும்?  நீங்க பெண்ணுரிமையை ஜந்து பொந்துன்னு எழுதறத பாத்தா நீங்க ஆணாதிக்க கருத்து கொண்ட பதிவர் மாதிரி தெரியுதே!!!!!!!!!!

கள்ளவோட்டு கும்பலின் பெயரை சொல்லுங்கள் என்று அன்று சொன்ன வினவுத் தோழர்கள் இன்று என்ன சொல்கிறார் என்று பார்த்தால் கேள்விக்குறி என்ற தோழர் -  "இதுவரை மைனஸ் ஓட்டு குத்திய புண்ணியவான்கள் ramjiyahoo ,  cnu77(சீனு நல்ல பேரு)..".ஓட்டு யார் போடுவது என்று பார்ப்பது தான் வேலை.

வினவு சொல்கிறார் - "இன்று, “பூக்காரிகளுக்கும் சுய மரியாதை உண்டு“ என்ற முல்லையின் பதிவுக்கு தமிழ்மணத்தில் மைனஸ் ஓட்டு குத்தித் தள்ளுகிறார்கள் சில ஐந்தாம்படைப் பேர்வழிகள். இவர்கள் சிறுபான்மை என்றாலும் இதுவும் பதிவுலக நாகரிகத்தின் இலட்சணம்தான்." எனக்கு மைனஸ் குத்தியவர்களை கூட நான் இப்படி திட்டியது இல்லை.புரிகிறதோ வினவுத் தோழர்களின் யோக்கியதை.இவர்களுக்கு குத்திவே கூடாது என்றால் ஐயா நீங்கள் தமிழ் மணம் பட்டையை சேர்க்க கூடாது.

வினவுத் தோழர்களின் ஓட்டு விவகாரத்தை கிழித்தெறிந்த தோழர் உடன் பிறப்பின் பதிவு இங்கே.

அது பொறுக்க முடியாமல் திரும்ப மோதி இன்னும் முகத்திரையை கிழித்து கொண்ட தோழர் உடன் பிறப்பின் பதிவு இங்கே.

வினவு எப்படி ஓட்டு வாங்குகிறார்கள் என்று இப்போது தெரிகிறதா.

சந்தனமுல்லை சொன்னது இங்கே - ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் பெண் பதிவர்கள் பதிவுலைகை விட்டு துரத்தப் படுகிறார்கள்.நிச்சயம் கிடையாது.அது ஆறு மாதத்திற்கு ஒரு முறை கிடையாது.மாதம் ஒருமுறை.அப்படி என்றால் மே மாதம் வெளியே சென்ற பெண் பதிவர் யார் என்று பார்த்தால் - கிருபாநந்தினி.போவதற்கு யார் பெயரை சொல்லியிருக்கிறார் என்று பார்த்தால் நீங்களே பாருங்களேன்.

அந்த தோழி உடல் நலன் பெற என் வேண்டுதல்கள் நிச்சயம் உண்டு.அப்போது ஏன் வினவு கேட்கவில்லை.கேட்க மாட்டார்களே.அதிலும் ஜாதி இருக்கிமோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.நீயே இப்படி சொன்னால் என்று கேட்டு அதிர்ச்சி அடைய கூடாது.எல்லாம் வினவு கற்றுத் தந்த பாடம் தான்.

வினவு எல்லோருக்குமாக போராடுங்கள்.பாரபட்சம் காட்டுவது,ஜாதியை சொல்வது,நாங்கள் தான் எழுதினோம் என்று சத்தியம் செய்வது எல்லாம் வேண்டாம்.

கடைசியாக குழலி கிழித்தெறிந்த மிச்ச மீதி முகத்திரை இங்கே.

நான் ஏற்கனவே சொல்லி விட்டேன்.உங்களுக்கு நாட்டாமை வேடம் பொருந்தாது என்று.காரணம் நீங்கள் ஒரு சார்பு உடையவர்கள்.உங்களை நம்பி வலையுலகம் உங்கள் பின் வந்தால் குரங்கு அப்பம் பங்கு வைத்த கதையாகி விடும்.அப்பம் பங்கு வைத்த கதையை நர்சிம் விவகாரத்தில் இருந்து ஆரம்பிக்க நினைத்தீர்கள்.குழலி வேட்டு வைத்து விட்டார்.போய் மக்களுக்காக போராடுங்கள்.

பதிவர்களே வினவு பின்னால் போனால் நாளை உங்களுக்கும் மங்களூர் சிவா நிலை தான் வரும்.

இன்னும் இருக்கிறது.வேண்டும் என்றால் தருகிறேன்.

16 comments:

இரும்புத்திரை said...

உயிர் நண்பன் வெண்ணிற இரவுகள் கார்த்தி நீ பதில் சொல்."பன்னடை, பர்தெசி, லூசுப்பய, கேனப்.......பயல், என்னமா எழுதி இருக்கான், மானிடகுல சீர்கேடு, தமிழ்பதிர்வகளின் தற்குறி, குலநாச சண்டாளன், இழி பிறப்பின் அளவுகோள், பொது அறிவிலி, மலம் கொண்டு சாலை அமைப்பவன், கேவலன், காமுகன், புழு, வைரஸ், ஆட்கொள்ளி, அடியாள், பாதில போறவன்," - இந்த வசைகள் சரி என்று நீ சொன்னால் வினவுக்கு நானும் வினவு பாஷையில் சொன்னால் வெட்கம்,சுரணை இல்லாமல் இருக்கும் சாருவின் அபிமானி என்ற பட்டத்தை துறந்து "நியாயமாக அல்ல மிக நியாயமாக எல்லோருக்கும் இல்லாமல் மிக சிலருக்காக போராடும்" வினவிற்கு தோழனாக மாறுகிறேன்.

இரும்புத்திரை said...

இதுக்கு பெயர் தான் லிங்க்டு லிஸ்ட்.

உடன்பிறப்பு said...

நல்ல தொகுப்பு, வினவு ஆதரவு தளங்கள் எல்லாமே ஒரே கும்பல் தான் நடத்துகிறது என்ற சந்தேகம் வலுத்து வருகிறது

smart said...

மிகவும் தெளிவாக சொல்லிவிட்டீர்கள். வினவு கும்பலை எதிர்ப்பவர்களுக்கு வரும் எதிர்வினையைக் கடந்த உங்கள் பார்வைக்கு எனது வாழ்த்துக்கள்.

மதார் said...

குழு வோட் இருக்குன்னு 4 மாசத்துக்கு முன்னம்தான் எழுதினேன் . குழு என்று ஒன்று இல்லவே இல்ல என்று அடிச்சு பேசினாங்க . இப்போ அவங்கவங்க வாயாலேயே நாங்கள் ஒரு குழு என்று ஒத்துகிட்டாங்க . பதில் லேட்டா கிடைச்சாலும் , நான் தப்பா ஏதும் அப்போ எழுதவில்லை என்ற திருப்தி வந்திடுச்சு .

லிங்க் போஸ்ட் நல்லாத்தான் இருக்கு . இன்னும் நிறைய உண்மைகள் வெளிவரணும் .

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப பிடிச்சு இருக்கு

Raghu said...

இவ்ளோ சொல்லியிருக்கீங்க‌ளே, இதுக்குலாம் ப‌தில் அவ‌ங்க‌கிட்ட‌யிருந்து வ‌ரும்னா நினைக்க‌றீங்க‌?

இனியா said...

அந்தப் புனைவை "ஒரு வருடத்திற்கு முன்பு நீங்கள் எனக்கு இந்தக் கதையை
சொல்லி இருக்கின்றீர்கள்" என்று சொல்லி இருக்கின்றீர்களே? நர்சிமை காப்பாற்றும் முயற்சியா?

வானமே எல்லை said...

hi

My comments are all about Narsim and his writing on Sandanamullai. I have nothing to do with Vinavu

இரும்புத்திரை said...

இனியா,

அது கும்மியடிக்க போட்டது.பதிவின் விரியத்தை குறைக்க நான் நிறையவே அங்கு கும்மி அடித்தேனே

இரும்புத்திரை said...

வானமே எல்லை நீங்கள் சொல்லுங்கள் கலகலபிரியாவை சொன்னவர்களுக்கும் இந்த வார்த்தை பொருந்துமா

இனியா இதை கேட்க கூட முகம் மறைத்து தான் வருவீர்களா.இந்த விஷயத்தில் நீங்கள் வினவை ஆதரித்து கொண்டு இருக்கீர்கள்.லீனாவுக்காவும்,கலகலபிரியாவிற்காகவும் கொஞ்சம் பேசுங்களேன்.

அது சரி(18185106603874041862) said...

சரியான நேரத்தில் சரியான வகையில் கிழித்திருக்கிறீர்கள்...

உண்மைத்தமிழன் said...

வினவு கூட்டத்தின் முகமூடியை கிழித்திருக்கும் தம்பி அரவிந்துக்கு எனது நன்றி..!

அத்திரி said...

நல்லா அடிச்சு ஆடியிருக்கிற.....................

வினோத் கெளதம் said...

வினவு = பொ..பசங்க..I meant பொல்லாத பசங்க..

Nathanjagk said...

அன்புத்தம்பி அரவிந்த்,
விஷயத்தைப் புரிந்து​கொள்ள கடினமான பலதள வாசிப்பு வேண்டும் போல. அது எனக்கு இப்போ சாத்தியமில்லே. உங்களுக்கு என் அன்பும் ஆறுதலும் எப்பவும் சாத்தியம்.