Thursday, June 3, 2010

ஒண்டிப்புலியும் ஒண்டரை அணா இலக்கியமும்

இந்த கதையோட நாயகனே ஒ.மா.ஒ.ச ஒண்டிப்புலி தான்.பெயரைப் பார்த்து அவர் ஒண்டியா புலி பிடிக்க போவாரா என்று கேட்டால் உங்களை பார்த்து சிரிப்பதை தவிர வேறு வழியேயில்லை.அது சரி அது என்ன ஒ.மா.ஒ.சன்னு பாத்தா ஒரு மாசத்துக்கு ஒரு சண்டை தான் நம்ம ஒண்டிப்புலி இழுப்பார்.

ஒண்டிப்புலிக்கு முதல் ஜென்மம் எடுத்தவுடனே தெரிஞ்சிப் போச்சி.அவரோட ஏழாவது ஜென்மத்தில் ஏழாவது அறிவை கொண்டு (அதென்ன ஏழாவது அறிவு ஒவ்வொரு ஜென்மத்துக்கும் அறிவு தனித்தானே.எனக்கு இப்படித்தான் சொல்ல வரும்.நோ மோர் கிராஸ் குவெஸ்டீன்ஸ். அப்புறம் எனக்கு கதை கோர்வையா சொல்ல வராது) அவர் பெரிய எளுத்தாளர்,இலக்கியவியாதியா வருவார்னு புரிஞ்சிப் போச்சி.யாருக்கு அவருக்கு தான்.

இலக்கியத்தைப் பற்றி கேளுங்கள்.ஒண்டிப்புலி சொல்வார்.இலக்கியமாக பே.கிறோம்,இலக்கியமாக நடக்கிறோம்,இலக்கியமாக இன்னும் றோம்,ம் என்று தொடர்ந்து கொண்டே போனால் அது ரோம் வரை நீண்டு விடும்.

அவர் கவிதையே கொஞ்சமென்ன நிறைய வித்தியாசமாக இருக்கும்.

குவாட்டர் அடி
குப்புறப் படு
வாந்தி எடு
வாயைத் துடை

இப்படி ஒரே வரியில் எழுத வேண்டியதை நாலு வரியில் எழுதலாம் என்று முதல் ஜென்மத்தில் தெரிந்தோ இல்லை இரண்டாம் ஜென்மத்தில் தெரிந்ததோ அது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத இரகசியம்.

எப்பவுமே இப்படி மொக்கையாகத் தான் எழுதுவாரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் என்றாவது நன்றாக எழுதுவார் என்று இந்த உலகமே வாய் பிளந்து அவர் இருக்கும் திசையில் பார்த்துக் கொண்டு நிற்கிறது.அது மண்டபத்தில் காலாற நடக்கும் போது கிடைக்கும் காவியமா என்றால் அதுவும் பரம இரகசியம்.

தன்னால் மட்டுமே உலக அளவில் யாருமே எழுத முடியாத காவியத்தை எழுதி உலகமே கொண்டாடும் என்று அவர் நம்பிக் கொண்டிருந்த காலக்கட்டம்.அட விடுங்க இப்பவும் அவர் அப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்.

அவர் யு.எஸ் போனா ஒபாமா வீட்டுல தான் தங்குவேன்.ஆப்கன் போனா ஒசாமா வீட்டில் தான் தங்குவேன் என்று அடித்து விடுவார்.விசாரித்து பார்த்தால் யு.எஸ்னா அது உளுந்தூர்பேட்டை சந்தாம்.அப்ப ஒபாமா யார்னு ஒரத்தநாடு பாண்டி மாக்கானாம்.இன்னும் ஆப்கன் மேட்டரும் ஒசாமா மேட்டரும் தான் தெரியவில்லை.சக இலக்கியவாதிகள் தமிழ்நாடு முழுவதும் இலக்கில்லாமல் பயணித்தும் கண்டுப்பிடிக்க முடியவில்லையாம்.

யாராவது அவருக்கு முன்னால் புத்தகம் இல்ல துண்டுப் பேப்பர்ல எழுதினாலும் புத்தகம் வாங்கியவர்கள் இந்த விமர்சனத்தை  கேட்டால் தண்ணியில்லாத காலத்தில் துடைத்து வீசும் அளவிற்கு விமர்சனம் செய்வார்.யார்கிட்ட எல்லாம் ஒரத்தநாடு பாண்டி மாக்கான் கிட்டதான்.கேக்கலைன்னா விடவா போறார்னு பாண்டியும் கண்ணத் தொறந்து வச்சிக்கிட்டே தூங்குவாராம்.

இனி அவருக்கு முன்னாடி யாரும் புக் கிக்கு எழுதிடக் கூடாதுன்னு தெளிவா இருக்காராம்.அதுக்கு என்ன பண்ணப் போறார்னு பாத்தா இனி புத்தகம் எழுதப் போவது யார்னு பாத்து அவங்க கிட்ட வம்பு இழுக்க போறாராம்.ஒரே வருஷத்தில் பனிரெண்டுக்கு பேருக்கு மேல புத்தகம் விட்டா வம்பு இழுக்க முடியாதுன்னு சோகத்தில் இருக்கிறாராம் ஒரு மாசத்துக்கு ஒரு சண்டை ஒண்டிப்புலி.பெயரை மாத்தலாமான்னு யோசிக்கிறாராம்.எதுக்கா வம்பிழுக்கத்தான்.

இப்போ அவரை தெரிஞ்சவங்க எல்லாம் வேற வழியால சிரிக்கிறாங்களாம்.எதுக்குன்னா ஒசாமாவோட பாதுகாவலர் எழுதின புத்தகத்தை இவர் விமர்சனம் செய்தால் யாரும் வாங்க மாட்டார்கள் என்று ஒசாமா சொன்னார் என்று சொல்லிக் கொண்டு திரிகிறாராம்.அதே நேரம் ஒபாமா பத்தி வர்ற பதினைஞ்சாம் தேதி ஒரு படம் வருதாம்.அதுக்கும் இவர் தான் விமர்சனம் எழுதணும்னு வெள்ளை மாளிகை அடம் பிடிக்குதாம்.

எங்கப் போறது தெரியாம ஒண்டிப்புலி கூண்டுல மாட்டிக்கிட்டு முழிக்குதாம்.ஆனா விசாரித்து பாத்தா பாஸ்போர்ட் இல்லையாம்.பின்ன இதுக்கு முன்னாடி எப்படி ஒசாமாவையும் ஒபாமாவையும் பாக்க போனீங்கன்னு யாராவது கேட்டா கப்பல் போனதா சொல்லப் போறேன்னு சொல்றாராம்.

நல்லவேளை கண்டம் எல்லாம் பிரிஞ்சிக் கிடக்கு.சேர்ந்து இருக்கா நடந்தே போயிருப்பாரேன்னு பாண்டி மாக்கான் நினைச்சு மயக்கத்தில விழுந்தவர் தான் இன்னும் எந்திரிக்கல.

யாராவது சொல்லுங்களேன்.இந்த இலக்கிய தாகத்தை எப்படி தீர்க்கிறதுன்னு. பாண்டி மாக்கான் பொழச்சுப் போகட்டும்.

4 comments:

இரும்புத்திரை said...

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் கற்பனையே.உண்மை என்று நம்பினால் உங்களுக்கு கற்பனைத் திறன் இருக்கிறது என்று சந்தோஷப்படுவேன்.

கவி அழகன் said...

குவாட்டர் அடி
குப்புறப் படு
வாந்தி எடு
வாயைத் துடை

நீ தொடு வானம் said...

நீங்க யாரையோ சொல்ற மாதிரி இருக்கு.

Unknown said...

Yaara irukkum intha kathai nayakarkal ?