Wednesday, June 2, 2010

வாழ்க்கை ஒரு வட்டம் - அது நர்சிம் மட்டுமல்ல வினவுக்கும் பொருந்தும்

வினவு,

உங்கள் பதிவைப் படித்து விட்டு மிகவும் பெருமையாக உணர்ந்தேன்.ஆனால் என்ன நாட்டாமை வேடம் தான் பொருந்த மாட்டேன் என்கிறது.இன்னைக்கு நர்சிம் தவறு செய்து  விட்டார் என்று அடிக்க ஒங்கும் கைகள் தான் நாளைக்கே நீங்கள் சிக்கிக் கொண்டாலும் அடிக்க வரும்.எதிலும் சிக்கி விடாதீர்கள்.

பிளாச்சிமடா வழக்கு என்ன ஆனது

குமுததிற்கு எதிரான போராட்டம் என்ன ஆனது

இதிலும் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்தலாம் என்று நினைக்கிறேன்.

சாதியைப் பார்க்கும் கண்ணாடியை போட்டுக் கொண்டு பார்க்காதீர்கள்.எல்லாமே ஜாதியாகவே தெரியும்.

உண்மைத்தமிழன் பதிவில் எனக்கு நர்சிம் அவர்களை  எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று தெரியும் என 
செந்தழல் ரவி சொல்லியிருக்கிறார்.அவர் எதாவது ஏடாகூடமாக செய்து விட்டால் (ரொம்ப யோசிக்காதீங்க உங்களுக்கு முன் போய் அவர் வீட்டில்,பணியிடத்தில் போராட்டம்) நீங்கள் செந்தழல் ரவிக்கு எதிராக பதிவு எழுதினாலும் எனக்கு ஆச்சர்யமில்லை.

அப்புறம் உங்களுக்கு நடுநிலைவாதி வேடம் சரி வர ஒத்து வரவில்லை என்று நினைக்கிறேன்.நீங்கள் நடு நிலைவாதியாக இருந்தால் கலகலபிரியாவிற்கு ஆதரவாக நாளை பதிவு எழுத வேண்டும்.


செந்தழல் ரவி - உங்களுக்கு வளர்மதி பற்றிய புரிதல் ஒரு வருடம் கழித்து வரும் போது அதே புரிதலை நர்சிம் புரிந்து கொள்ள அவகாசம் கொடுக்காமல் அடிப்பது ஏன்.

விஜி பதிவை அன்றே எடுத்திருந்தால் இது நடந்திருக்குமா என்று கேட்க நான் என்ன முட்டாளா.

முட்களும்,கற்களும் அதன் வழியில் தான் இருக்கிறது.நாம் தான் அங்கு போகிறோம்.

வளர்மதி சார் - எதிர்வினை நடக்கும் இடத்தில் நர்சிம் பணம் பற்றி பேசுவார் என்று சொல்வது சரிதானா.

வரலாறு புதிப்பிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.அதில் தோழர்களும் சிக்கலாம்.நானும் சிக்கலாம்.

10 comments:

இரும்புத்திரை said...

பின்னூட்டம் இன்று முதல் தணிக்கை செய்யப்படுகிறது

நீ தொடு வானம் said...

:-))

bandhu said...

மொத்தமாக பதிவுலகில் ஒரு 100+ தமிழ் பதிவர்கள் இருப்பீர்களா? ஏன் இப்படி அடித்துக்கொண்டு சாகிறீர்கள்? இது தான் தமிழனின் தனிப்பட்ட குணம் என்று நினைக்கிறேன். நம்மால் என்றுமே ஒரு community -ஆக சேர்ந்து வாழவே முடியாது.
--thank God, i am just a reader!

அக்னி பார்வை said...

இரும்புதிரை வட்டம், சதுரமெல்லாம் இருகட்டும் , ஒன்ரு மட்டும் சொல்லுங்கள் அந்த புனைவை பற்றி உங்கள் கருத்தை மட்டும் சொல்லுங்கள். யாருக்கு ஆதரவு யாருக்கு எதிர்பெல்லாம் இரண்டாம் பட்சம்.

இரும்புத்திரை said...

அக்னி,

தலைவரே பதிவு தவறு என்று சொல்லி அவரே தூக்கி விட்டாரே..தவறு என்பது என் கருத்து.

அவர் ஆரம்பித்தாரா என்பதையும் நீங்கள் சொல்ல வேண்டும்..

அப்படி சொல்லியிருக்க வேண்டியதில்லை..அவரை சொல்ல வைத்தது யார்..

இதில் ஜாதி எப்படி வந்தது..

இந்த கேள்விக்கும் உங்கள் தரப்பில் இருந்து யாராவது பதில் சொன்னால் பரவாயில்லை

அக்னி பார்வை said...

இரும்புதிரை, வினவை விடுங்கள்.
நம் வீட்டில் இருக்கும் அக்கா த்ங்கையை பற்றி ஒருவன் தரக்குறைவாக எழுதி ஊர் முழுவதும் நோட்டிஸ் விநியோகித்து விடுகிறான், கேட்டால் மிச்சம் இருக்கும் நாலு நோட்டிஸை மட்டும் நம் முன் கிழித்து போட்டுவிட்டு விட்டுவிடுங்கள் என்கிறான். அவனை நீங்கள் என்ன செய்வீர்கள்?

மீண்டும் வினவு, ஜாதியெல்லாம் வேண்டாம் கேள்விக்கு மட்டும் மனசாட்சிப்படி பதில் சொல்லுங்கள்.

இரும்புத்திரை said...

அக்னி

நான் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் வரவில்லையே

என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்.கொலை,அடிதடி தான் தீர்வா.நரசிம் ஆரம்பித்தாரா சொல்லுங்கள்.

எனக்கு வழிவது மட்டும் தான் இரத்தம் என்று சொன்னால் என்ன செய்ய

நீங்கள் எடுத்து வைக்கும் வாதத்தில் நர்சிம் மீதே தவறு இருக்கிறது. ரவிக்கு யோசிக்க ஒரு வருடம் தேவைப்பட்டது என்றால் நர்சிமிற்கு மூன்று நாலாவது கொடுங்களேன் .நர்சிம் செய்தது தவறு என்று நான் சொல்கிறேன் நீங்கள் அது மாதிரி வினவு மற்றும் ஆரம்பித்தவர்களின் தவறை ஒத்துக் கொள்ளுங்கள்

இதற்கு மேல் செய்ய வேண்டியததை நான் என்ன சொல்ல முடியும்

அக்னி பார்வை said...

இது தான் வேண்டாங்கிறாது. உங்கள் அக்கா த்ங்கைக்கு இந்த மாதிரி நடந்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள், நான் கொலை ரத்தம் அடி தடி என்று எதையும் சொல்லவில்லை.. நீங்கள் என்ன செய்திருபீர்கள் அவ்வளாவு தான் தேவை..
இதை சொல்லுங்கள் அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறேன்.. மீண்டும் கேளவியை திசையெல்லாம் திருப்பக்கூடாது. நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை பதிவு செய்யுங்கள்..நேர்மையாக ப்தில் சொல்லுங்கள்.. நான் சொல்லாதவ்ற்றையெல்லாம் நீங்களே சொல்லக்கூடாது

இரும்புத்திரை said...

நேர்மையாக சொல்லட்டுமா அவர் மன்னிப்பு கோரியிருந்தால் அதை விட தான் செய்வேன்.அவர் மன்னிப்பு கேட்டு விட்டார்.இப்போது நீங்கள் சொல்லுங்கள்

http://nilavakan.blogspot.com/2010/06/blog-post.html

இதையும் படித்து பாருங்கள்.வீசிய கத்தி கழுத்துக்கு வருகிறது

அக்னி பார்வை said...

அவசரமான அலுவலக வேலை ஒரு 3 மணி நேரம் கழித்து உங்களை தொடர்பு கொள்கிறேன்.. மன்னிக்கவும்..