Saturday, August 29, 2009

தண்டோரா கவிதையும்,மகாபாரத துரோகங்களும்

தண்டோரோ அண்ணன் கவிதையைப் படித்தப் பிறகு சின்ன வயதில் கேட்ட மகாபாரதம் வேறு கோணத்தில் என்னைப் பார்த்து சிரித்தது.

பகவத் கீதாவில் வரும் புகழ் பெற்ற வாசகம்

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,
ஆனால் தர்மம் மறுபடியும் வெல்லும்"

இதில் எனக்கு உடன்பாடே கிடையாது. தர்மம் வென்றது அதற்கு காரணம் கிருஷ்ணன் செய்த துரோகங்களே.

குருஷேத்திரப் போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. முதல் பத்து நாட்கள் பீஷ்மரும்,பத்தில் பாதியான ஐந்து நாட்கள் துரோணரும்,அதில் பாதி இரண்டு நாட்கள் கர்ணனும்,அதிலும் பாதியான கடைசி ஒரு நாள் சல்லியனும் கௌரவ சேனைக்கு தலைவர்களாக இருக்கிறார்கள்.

இதில் பீஷ்மரை சிகண்டியை முன்னிறுத்தி அர்ஜுனன் பின்னால் இருந்து அம்பு மழை பொழிய சாய்க்கப்படுகிறார்.

அடுத்து துரோணர் - அவருக்கு இருக்கும் ஒரே பலவீனம் அவரது மகன் அசுவாத்தாமன். பீமன் "அசுவாத்தாமன்" என்று யானையைக் கொன்று விடுகிறான். அசுவத்தாமன் இறந்தான் என்று எல்லோரும் கத்துகிறார்கள்.குழப்பமடைந்த துரோணர் தர்மனிடம் கேட்கிறார். தர்மன் சுற்றி வளைத்து காதைத் தொடுகிறார்.

தர்மனின் பதில் - "பீமன் கொன்றது அசுவாத்தாமன் என்ற யானையை". "என்ற யானையை" - இது துரோணர் காதில் விழாதவாறு மெதுவாக சொல்கிறார்.கேட்டு விடும் என்ற பயத்தில் அந்த வார்த்தைகளின் உச்சரிப்பின் போது கிருஷ்ணன் வெற்றிச்சங்கை ஊதுகிறார். ஆயுதத்தை கீழே எறிந்த துரோணர் தியானத்தில் அமர்கிறார்.துருபதன் பெற்ற கொள்ளி துரோணரின் தலையை வெட்டுகிறான்.

அதுவரை தரையைத் தொடாமல் ஓடிக் கொண்டிருந்த தர்மனின் தேர் மண்ணைத் தொடுகிறது.இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததால் நரகத்தை ஒருமுறை சுற்றிக் காட்டி தர்மனை பயமுறுத்துகிறார்கள்.

அடுத்து கர்ணன் - இவனை குழப்புவதற்காகவே சல்லியனைத் தேரோட்டியாக அனுப்புகிறார்கள்.கவசக் குண்டலத்தைப் பறிக்கிறார்கள்.உயிர் போக அவன் செய்த தர்மத்தின் பலனைக் கூட விட்டு வைக்காமல் அவனிடம் பிச்சை போல யாசித்து பெறுகிறார்கள்.

கடைசி நாள் போரின் போது யுத்த தர்மத்தை மீறி துரியோதனன் தொடையில் அடித்து கொள்கிறான் பீமன். இடுப்புக்கு மேல் தான் அடிக்க வேண்டும்.அதை மீறச் சொல்லி குடுக்கிறார் கிருஷ்ணன்.

அசுவாத்தாமன் தலைமை ஏற்கிறான்.உத்திரையின் வாரிசை கருவறுக்கப் புறப்படுகிறான். அதை கிருஷ்னான் தடுக்கிறார். அசுவாத்தாமன் குடுமிகள் இருக்கும் மணியோடு சேர்த்து குடுமியும் அறுக்கப்படுகிறது.அறுத்தவன் பீமன்.

இப்படி துரோகங்கள் செய்தே போரில் வென்று விட்டு தர்மம் வெல்லும் என்று உபதேசம் செய்யக் கூடாது.

தர்மம் வெல்லும் எப்படி என்றால் முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி.

கிருஷ்ணரின் படையை விட்டு விட்டு போர் புரியாத கிருஷ்ணரை எடுக்கிறார்கள் பாண்டவர்கள். காரணம் கிருஷ்ணன் - நூறு சகுனிகளுக்கு நிகர்.

தண்டோரா அண்ணனின் கவிதை

நாம் வசிக்குமிடம் எங்கும்
அது காத்துக் கொண்டிருக்கிறது
ஒரு தருணத்திற்காக..

தெரியாமல்
அதற்கு பலியாகிறோம்
தெரிந்து அடுத்தவனை பலியாக்குகிறோம்..

ஒத்த பெயருடைய இருவரில்
ஒருவனை சாய்த்து இட்ட கூக்குரல்
குருவையே வீழ்த்தியது

’குருஷேத்திரம்’ தொடங்கி
’சுப்ரமண்யபுரம்’ சித்திரம் வரை
எல்லா துரோகங்களின் முடிவிலும்
கேட்கப்படும்
”நீயா’ என்ற கேள்விக்கு
நாமாகவும் இருந்தோம்
என்பது வேதனையின்
வெளிப்பாடாகவே..

இன்று கௌரவப் படையில் சேர்ந்து பாண்டவர்களை அழித்த கலியுக கிருஷ்ணன் - இந்தியா.

ஆதாரம் இந்த சுட்டியைப் பார்க்க

Friday, August 28, 2009

கௌதம் மேனனின் எடுத்த ஒரே ஒரு லாஜிக்கான படம்

காக்க காக்க - கௌதம் மேனனின் எடுத்த ஒரே ஒரு லாஜிக் உள்ள படம்.வித்தியாசமான(வேகமான) படத்தொகுப்பு,ஒளிப்பதிவு,கலை இயக்குனரின் செட் வீடு (இலங்கையில் போடப்பட்ட செட்) படத்திற்கு பலம் சேர்த்தது.அதில் லாஜிக்கை மீறாத யதார்த்தமும் இருந்தது. ஜோடிப் பொருத்தமும் (கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ்,பயாலஜி எல்லாம் சேர்ந்து) படத்தின் ஸ்கோரை ஏற்ற முடிந்தது.

படத்தில் நான் ரசித்த லாஜிக்

சூர்யா ஜீவனால் சுடப்பட்டு "மாயா.." என்று கத்திக் கொண்டே தண்ணீரில் விழுவார்.அழத்தில் அமிழ்ந்து கிடக்கும் சூர்யாவை கேமிரா மேலிருந்து காட்டும். உடனே ஜோதிகா வருவார்."உயிரின் உயிரே.." என்ற அசத்தலான பாடல்.பாடல் ஐந்து நிமிடம் வரும்.பாட்டு முடிந்ததும் திரும்பவும் கேமிரா சூர்யாவை மேலிருந்து காட்டும்.இப்படி இரண்டு முறை காட்டும் போதும் நான் கவனித்தது சூர்யாவின் கையில் ஓடிக் கொண்டிருந்த வாட்ச்சை.பாட்டு ஆரம்பிக்கும் பொழுது வினாடி முள் 1 வினாடி காட்டும்.பாட்டு முடியும் சமயம் வினாடி முள் அறுபது என்று காட்டும்.ஒரு நிமிடம் தான் சூர்யா மயக்கமாக இருப்பார்.

மேலும் துப்பாக்கி குண்டுத் துளைத்தப் பிறகு தண்ணீரில் விழுந்தால் அது ரவையின் வீரியத்தைக் குறைக்கும். அப்படி ஒரு பிரபல ரவுடி இரண்டு முறை சுட்டப் போதும் காயத்தோடு தண்ணீரில் விழுந்து தப்பி விட்டார். மூன்றாவது முறை தண்ணீரில் குதிக்கும் முன் அந்த ரவுடியைக் கொன்று விட்டார்கள்.
அப்படி ஒரு சிறுகதையை சமீபத்தில் படித்தேன்.அது நர்சிமின் வக்கிரம் கதை.நான்கே வினாடியில் கதை முடிந்து விடும்.அந்த கதைப் படிக்கவே எனக்கு மூன்று நிமிடங்கள் ஆனது.தொடக்கத்தில் நிகழ்காலத்தில் ஆரம்பித்து இரண்டு நாட்கள் பின்னே போய் மறுபடியும் நிகழ்காலத்திற்கு வரும். காக்க காக்க படத்தில் கடிகாரம் என்றால் இதில் டெலிபோன்.

வெள்ளிக்கிழமை அன்று நாடகத்தில் ஒரு திருப்பம் வைத்து தொடரும் போட்டது போல ஒரு முடிவு.

பரிசு கிடைக்கும் என்று நான் நினைத்த கதை.

பரிசு கிடைக்கும் என்று நான் நினைத்த மற்ற கதைகள்

அதிஷா - யாக்கை.(ஒரு அருமையான குறுநாவலின் கருவை சிறுகதையாக எழுதி வீணடித்து விட்டார்)

நாடோடி இலக்கியன் - சின்னு

கும்க்கி - தலைப்பில்லாத ஒரு கதை.(லூப் வகை கதை).

நான் ரசித்த இன்னொரு கௌதம் மேனனின் படம் - மின்னலே.

டிஸ்கி :

இந்த கதைகளைத் தேர்வு செய்யாத நடுவர்களுக்கு ஒரு தண்டனை தரப்பட்டது. அதுதான் என்னுடைய சிறுகதையை வாசித்தார்களே.

Thursday, August 27, 2009

தமிழ்மொழி கூட எனக்கு செய்யும் துரோகம்

அண்ணன் என்ற வார்த்தைகளை அகராதிகள் இருந்து ஒழிக்க வேண்டும்.அப்படி செய்தால் என் கோபம் கொஞ்சமாவது அடங்கும். புராணத்தில் துவங்கி சரித்திரம் தொட்டு சினிமா வரை அண்ணன்களின் பாடு திண்டாட்டம் தான்.பிரிவு,முறிவு எல்லாம் முதலில் அண்ணன்களைத் தான் பாதிக்கிறது.

இராமாயணத்தில் அண்ணனாக இருந்ததால் தான் இராமன் காட்டுக்கு அனுப்பப்பட்டான். லஷ்மணனும் கூட சென்றான் என்று விதண்டாவதாம் செய்யக் கூடாது. அவனும் ஒரு அண்ணன் தான் மற்ற இருவருக்கும்.

மகாபாரதத்தில் கர்ணன் அண்ணனாக இருந்ததால் தான் யாருக்கும் தெரியாமல் தண்ணீரில் அனுப்பபட்டான். தர்மன் துரியோதனனை விட மூத்தவன் என்பதால் காட்டுக்கு அனுப்பப்பட்டான்.


சோழ வரலாற்றில் ஆதித்ய கரிகாலன் கொல்லப்பட்டான். காரணம் அவன் பொன்னியின்செல்வன் மற்றும் குந்தவைக்கு அண்ணன் .

முகலாய வரலாற்றில் சலீமின் மூத்த மகன் குஸ்ரூ கொல்லப்பட்டான். குர்ரம் பதவி ஏற்றான் ஷாஜகானாக. வரலாறு பாடம் கற்றுக் கொடுத்தது ஷாஜகானின் மூத்த மகன் தாராவைக் கொன்று விட்டு அரியணைக்கு வந்தான் அவுரங்கசீப்.

சினிமாவில் தெய்வ மகன் படத்தில் தூக்கி ஏறிவார்கள் மூத்த மகனை. வெயில் படத்தில் பசுபதி ஓடி விடுவார்.கடைசியில் இருவருமே தம்பிக்காக உயிரை விடுவார்கள்.

கலைஞர் சொன்ன ஒரு வாக்கியம் "நீ,நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது .நாம் என்று சொன்னால் ஒட்டும்".இதை கேட்டாலே எனக்கு ரொம்ப கோபம் வரும்.காரணம் இந்த வாக்கியத்தைப் போல ஒரு வார்த்தை விளையாட்டால் நானும் பாதிக்கப்பட்டேன்.

"அண்ணன் என்று சொல்லிப் பார்த்தால் உதடுகள் ஒட்டாது.இதுவே தம்பி,அம்மா,அப்பா என்று உச்சரித்துப் பார்த்தால் உதடு என்ன உள்ளமே ஒட்டுகிறது."

மேலே இருப்பதுப் போல நான் என் குடும்பத்தை விட்டுப் பிரிந்தே இருக்கிறேன். இன்று முதல் என்னை "தமையன்" என்று கூப்பிடு அல்லது "பிரதர்" என்று கூப்பிடு - சொல்லவேண்டும் என் தம்பியிடம். இன்று முதல் "பிள்ளாய்" என்று கூப்பிடு அல்லது "மை சன்" என்று கூப்பிடு - சொல்லவேண்டும் என் அம்மாவிடம்.அப்படியாவது உங்களுடன் இருக்க விரும்புகிறேன் உங்கள் அருகில்.

இப்படி சொல்வதற்கு காரணம் என் தம்பி.அவனுடம் இருக்க முடியவில்லை என்ற வருத்தம் தான். அவன் என் ரோல்மாடல்களில் ஒருவன் அல்ல.அவன் தான் என் ரோல் மாடலே. அவனுக்கு நான் தம்பியாகப் பிறக்க வேண்டும். அவனிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேயிருக்கிறேன்.

இது ஒரு மூத்த மகன் மற்றும் ஒரு அண்ணனின் புலம்பல்.

தயவு செய்து அகராதியில் இருந்து அண்ணன் என்ற சொல்லை எடுத்து விடுங்கள்.

காங்கிரஸில் விஜய் - தலைவர்கள் மற்றும் பதிவர்களின் பார்வையில்

காங்கிரஸில் விஜய் சேர்கிறார் என்றவுடன் தமிழகத்தில் ஒரு அலை அடிக்கிறது.அரசியல் தலைவர்கள்,பதிவர்கள் எல்லோரும் கருத்துக் கூறுகிறார்கள்.

கோபாலப்புரத்தில் - ( டெல்லியிடம்) அவர் தனித்தே நிற்கட்டும்.அப்படி நின்றால் தான் விஜயகாந்த் ஓட்டைப் பிரிப்பார்.வரும் தேர்தலை விஜயகாந்த் புறக்கணிப்பார்.

மதுரையில் - எடுத்தவரைக்கும் வேட்டைக்காரன் படத்தை சிடியில் போட்டு எல்லா வீட்டுக்கும் கொடுத்துட்டு வாங்க. இனிமே அரசியலுக்கு யார் வந்தாலும் இப்படி தான் நடக்கும்.

கொடநாட்டில் - அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் தீபாவளிக்கு வரும் வேட்டைக்காரன் படத்தைப் புறக்கணியுங்கள்.

தாயகத்தில் - நாம சொன்ன கேட்கிற மாதிரி தான்

காங்கரஸ் கட்சிகள் - சரி தமிழ்நாட்டுக்கு இன்னொரு தலைவர்.

தைலாபுரத்தில் - (காடுவெட்டி குருவிடம்) குரு, இந்த தடவை வேட்டைக்காரன் பெட்டித் தூக்கு.2002ல பாபா பெட்டியா தூக்கினோம்.2004ல தேர்தல வெற்றி.2009ல இந்த பெட்டிய தூக்குறோம் 2011ல ஆச்சியப் பிடிக்கிறோம்.

விவேக் - ஏல இத காரைக்குடி பக்கம் கேட்டா அவ்வளவு தான்.

தைலாபுரத்தில் - ஆச்சி இல்ல ஆட்சி

விவேக் - ஏல முதல்ல நீ என்ன சொன்னா?

தைலாபுரத்தில் - நாம தோத்தப் பிறகு இந்த காமெடி பீஸு எல்லாம் நக்கல் பண்ணுது.

பா.ஜ.க - அஜீத் கிட்ட பேசி நம்ம கட்சிக்கு கூப்பிடுவோமா?

வேளச்சேரியில் - பேசாம விஜயை வைத்து இன்னொரு படம் எடுக்கட்டுமா?.தரணி சும்மா தான் இருக்காரு.

சிவகங்கையில் - அப்பா நான் அரசியல வரவே முடியாதா?

இவ்வளவு பேர் சொல்லியும் பதிவுலகம் சூடாகாமல் இருக்கிறது.

சாருவிடம் கேட்கிறார்கள்.

சாரு -
திரைத்துறையில் நடந்த திடீர்ப் புரட்சியால் வாரிசுகளாக நுழைந்த நடிகர்களுக்கு வானளாவிய ஊதியம் கிடைக்க ஆரம்பித்தது. கோடி ரூபாய் சம்பளத்தை எட்டுவதற்கு 25 ஆண்டுகள் ஊழியம் செய்த ரஜினி எங்கே இரண்டாவது படத்திலே சம்பளமாகக் ஐந்து கோடி பெறும் வாரிசு எங்கே?

ஒரு நடிகனின் வாழ்வில் 16 ஆண்டுகள் நடிப்புக்கு செலவாகிறது. ஆனால் இந்தக் நடிப்பு அவனுக்கு என்ன கற்றுத் தருகிறது என்று பார்த்தால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. சுயமாக வாழ்வதற்கான எந்தத் தகுதியையும் இந்தக் நடிப்பு அவனுக்குக் கொடுப்பதில்லை. மாறாக, பணம் ஈட்டுவதற்கான ஒரு குறிப்பிட்ட தொழிலாக மட்டுமே கற்றுக் கொண்டு வெளி உலகத்திற்கு வருகிறான் அவன். அந்தத் நடிப்புக்கு மதிப்பு குறையும் போது அவனுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது.

நடிக்கத் தெரியாது; உள்ளூர் சாலைகளில் நடக்கத் தெரியாது ஆனால் வெளிநாடுகளில் ஆடத் தெரியும்; தன் உணவைத் தானே சமைத்துக் கொள்ளத் தெரியாது. அடுத்த நடிகனோடு எப்படி அனுசரணையாக வாழ்வது என்று தெரியாது. ஒரு பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாது. ஏன், சரியாக படம் எடுப்பது எப்படி என்று கூடத் தெரியாது. அதற்காகத் தனியாக ஒரு டிவிடி. தினமும் இரண்டு மணி நேரம் படம் எடுப்பது எப்படி? என்று உலகப் படத்தை கட்டணம் கட்டிக் தரவிறக்கம் செய்து கற்றுக் கொள்கிறான் இன்றைய நடிகன். ஆனால் அரசியல் ஆசை மட்டும் வரும்.

ஒரு நதி எப்படித் தன் பாதையை வகுத்துக் கொள்கிறதோ அதைப் போலவே அமைகிறது 'நடிக்காத' அந்த நடிகர்களின் வாழ்க்கை.

நர்சிம் -

முதலிலேயே ஒன்று..நான் திரைத் துறையைச் சேர்ந்தவன் அல்ல.

உங்களின் கட்டுரை.. “நடிப்பது எப்படி?” மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.ஏனென்றால்... இளைய சமூகத்தின் நடவடிக்கைகளைக் கூர்ந்து அவதனித்து வருபவர் நீங்கள்.தவிர, வேறு கோணம் என்ற பதத்தை எல்லா விசயங்களிலும்,திரைப்பட விமர்சனம் முதற்கொண்டு, பார்ப்பவர் நீங்கள். நீங்களும் இப்படி சாடுவது சரியா?

ஆம்..நடிப்பு முறையில் லேசான மாற்றம் வேண்டும்.அல்லது எளிமைப் படுத்தப் படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

தாலி சென்டிமென்ட்டும்,காயாத தலையுமாக,விருதுக்கும் பாராட்டுக்கும் போரடிக்கொண்டிருந்த/இருக்கும் மொக்கை நடிகர்கள் தங்கள் திருடும் திறமையால் டிவிடி பார்த்து அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றது தவறா?

ஒரு கிழிந்து போன அல்லது கீழிருக்கும் நடிப்பு சூழலை மேலேற்றிய கூட்டம் அது. ‘சைக்கிள் கேப்பில் ’ என்ற வார்த்தையும் அந்த வாக்கியத்தில் ஏதாவ்து ஒரு இடத்தில் பொறுத்திக்கொள்ளலாம்.

அவர்களுக்கு கிடைத்ததெல்லாம், மது அருந்துகிறார்கள், மங்கையர்களோடு காரில் வலம்வருகிறார்கள், டிஸ்கொதே என்று.. பொறுப்பின்றி சுற்றுகிறார்கள் என்பவை மட்டுமே....

பொறுப்பில்லாமல் இருந்திருந்தால்,வெறும் ௦.5 விழுக்காடு மட்டுமே உள்ள அந்த திரைத் துறை கூட்டம் மற்ற பெரும்பான்மையோடு சாதரண வேலைகளில் இருந்திருக்குமே..ஏதோ மற்ற வேலைகளில் இருப்பவர்கள் பீர் பாட்டிலை வாங்கியவுடன் பெருமாள் கோயில் சுவற்றில் அடித்து உடைத்துவிடுவதைப் போல சமூகம் அந்தக் கூட்டத்தை சித்தரித்ததன் எச்சமே...உலக படங்கள் எடுப்பது நின்றவுடன் அக்கூட்டத்தின் மீதான சமூகக் கொக்கரிப்பு.

தன்னை வருத்தி,வெளியே இரவா பகலா மழையா வெயிலா என ஒரு இழவும் தெரியாமல், மந்தைகளாக கற்ற நடிப்பை மடிக்கணிணியிலோ டேபிள்டாப்பிலோ பார்த்து, சப்டைட்டில் இல்லாமல் முட்டி பெயர்ந்த நிலையில் தனக்கான வடிகாலாக குழுக்களின் பால் சென்றது அக்கூட்டம் என்றாலும் தங்களின் கடமையில் இருந்து தவறவில்லை அல்லது அவர்களை தவற விடவில்லை வாரிசுகளின் அப்பாக்கள் .ஏனெனில் நஷ்டம் இயக்கும் தந்தைகளை விட படம் பார்க்கும் மக்களுக்குத் தான் அதிகம் என தெரியுமென்பதால்.

யுவகிருஷ்ணா -

நடிப்பது எப்படி? கட்டுரையை அவர் திரைத்துறைத் தொழிலாளர்களுக்கு எதிரானதாக எப்படி, எந்த வரிகளில் எடுத்துக் கொண்டிருக்கிறார். தங்களுடைய கட்டுரையின் அடிநாதம் இயல்பான வாழ்க்கையை வலியுறுத்துவதாக இருக்கும் நிலையில், ஒரு உதாரணத்துக்காக நடிகர்களை எடுத்துக் கையாண்டிருக்கிறீர்கள். மாதம் 6 கோடி ரூபாய் சம்பாதிக்கும் யாரையும் (தெலுங்கு நடிகனையும்) அந்த உதாரணத்தோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் என்பது ஏன் நர்சிம்முக்கு புரியவில்லை என்பதே எனக்குப் புரியவில்லை.

கட்டுரையில் ஆரம்பத்தில் சில பத்திகள் மட்டுமே இதை மிகவும் லேசான போக்கில் விவாதித்து விட்டு, நம் நடிகனின் நடிப்பு போதாமையை சுட்டிக்காட்ட விரைகிறது.

கட்டுரையின் அடிநாதத்தை கண்டுகொள்ளாமல், ஓரிரு வார்த்தைகளுக்காக நர்சிம் அவசர அவசரமாக எதிர்வினை ஆற்றியிருக்கிறார் என்று கருதுகிறேன். அவரே ஒப்புக்கொள்ளும் வகையில் வெறும் .06 சதவிகிதம் தான் (உண்மையில் .05௦ ௦சதவிகிதம் தான் இருப்பார்கள்) நடிகர்கள் என்று எடுத்துக் கொண்டாலும், அவர்களால் ஏற்பட்டிருக்கும் கலாச்சார எதிர்மறை அதிர்வுகள் சமூகத்தில் எந்த அளவுக்கு ஆழ ஊடுருவியிருக்கிறது என்பதைப் பற்றியும் நர்சிம் எதிர்வினையில் நியாயமாக ஒப்புக் கொண்டிருக்க வேண்டும் என்பதே என் எதிர்ப்பார்ப்பு. இன்று காடுவெட்டி குரு போன்ற சினிமா அடிப்படைவாதிகள் நடிப்புக் காவலர் முகமூடி அணிந்து சமூகத்தில் வெறியாட்டம் ஆடுவதற்கு(பெட்டியைக் கடத்துவதற்கு) நடிகர்களும் ஒரு காரணமாக அமைந்து விட்டார்கள் என்பது நர்சிம் ஒப்புக்கொள்ளா விட்டாலும் உண்மைதானே?

பதிவர்கள் பின்னூட்டத்தில் கும்மி அடிக்கிறார்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகர் - இந்த பதிவர்களின் தொல்லை தாங்க முடியலை.நான் உண்ணாவிரதம் இருக்கப் போறேன். அப்படியே மறக்காம பிரியாணி கொண்டு வாங்க..

அரவிந்த் : எதுக்கு

எஸ்.ஏ.சந்திரசேகர் - உண்ணாவிரதம் முடிந்த பிறகு சாப்பிடத் தான்..

அதிஷா : நர்சிம் பதிவுல வந்த பின்னூட்டத்த விட்டுட்ட.படிக்கலையா ?

விஜய் : நான் அரசியலுக்கு வர மாட்டேன்.

எஸ்.ஏ.சந்திரசேகர் - நீ வரலைனா போ.என் பேரன மட்டும் என்கிட்டே குடுத்திரு நான் அவன பெரியத் தலைவரா ஆக்குறேன்.

எஸ்.ஏ.சந்திரசேகர் அந்தப்புரம் பிரகாஷ்ராஜ் போல அங்கும் இங்கும் அலைகிறார்.

Wednesday, August 26, 2009

விக்ரம் சேது படத்திற்கு முன்

சினிமாவில் அவர் வெற்றி பெற்ற வருடம் டிசம்பர் 98.பதினாறு வருடப் போராட்டம்.நானும் என் நண்பர்களும் உல்லாசம் படத்தில் இருந்து அவரை கூர்ந்துக் கவனித்து வந்தோம்.சேது படத்திற்கு பிறகு அவரின் பழையப் போராட்டங்களைப் புரட்டினோம்.அதிலிருந்து சில.

விக்ரம் 1983 பாட்ச்சில் லயோலா கல்லூரியில் படித்தவர்.அவருடன் படித்தவர்கள் தரணி,கலாநிதி மாறன்.(நானும் ஒரு லயோலா கல்லூரியின் பழைய மானவன்(2001*)).

படிக்கும் போதே சினிமாவின் மேல் ஒரு தீராத காதல்.காரணம் அவரின் அப்பா.நடிகராக ஆசைப்பட்டு தோற்றவர்.பகவதிபுரம் ரெயில்வே கேட் படத்தில் கார்த்திக் - நடத்துனர்.விக்ரமின் அப்பா - ஓட்டுநர்.

ஒரு விபத்தில் கால் எலும்பு உடைந்து நாலு வருடங்கள் படுத்தப் படுக்கையாகவே இருந்திருக்கிறார்.அந்த சமயம் விக்ரமின் மாமா ஒரு பிரபல நடிகர்.1990 முதல் அவரது பையனும் பிரபல நடிகர்.ஒரு காலத்தில் அவரைப் பற்றி பரபரப்பாக செய்தி வரும்.இப்பொழுது எதுவும் கிடைக்கவில்லை என்றால் வரும்.நெருங்கிய சொந்தக்காரர் ஒருவர் "இனிமே சினிமாவில் நொண்டி வேடம் தான் கிடைக்கும்.." என்று சொல்லி இருக்கிறார்.மருத்துவரும் இனி நடக்கவே முடியாது என்று சொல்லி இருக்கிறார்.அதிலிருந்து மீண்டு வந்த காட்சி தான் தில் படத்தில் வைத்தது.(அந்த படத்தின் இயக்குனர் தரணிக்கும் காலில் ஒரு விபத்து). அந்த காயத்தின் மேல் தான் சேது படத்தில் மேக்கப் போட்ட்டார்கள்.(பாண்டிமடத்தில் விக்ரமை அபிதா வந்து பார்க்கும் காட்சி)

சான்ஸ் எதுவும் கிடைக்காமல் மலையாளம்,தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். விக்ரமைக் கட்டிப் போட்டு அடிப்பார்கள்.சுரேஷ் கோபியோ இல்லை மம்மூட்டியோ வந்து காப்பாற்றுவார்கள். இன்று கேரளாவில் டப்பா கந்தசாமி படத்தை மூன்று கோடிக் குடுத்து வாங்கி இருக்கிறார்கள்.

செய்த வேறு வேலைகள். டெலி ப்லிம்மில் நடிப்பது.வாய்ஸ் கொடுப்பது (பிரபுதேவா,அப்பாஸ்).குருதிப்புனல் படத்தில் நாஸருக்கு அடுத்த நிலையில் இருக்கும் வில்லனுக்கு வாய்ஸ் கொடுத்து இருப்பார்.அப்படி செய்ய்யும் போது நிச்சயம் கண்ணீர் விட்டு இருப்பார். குருதிப்புனல் படத்தில் நாஸரை விட விக்ரமின் குரல் நன்றாக இருக்கும்.

கடைசியில் எல்லா முயற்சியும் தோல்வி அடைந்து ஆஸ்திரேலியாவில் ஆப்பிள் தோட்டத்திற்க்கு வேலைக்குப் போக முடிவு செய்துள்ளார்.சேது படம் வந்தவுடன் முடிவை தள்ளிப் போட்டுள்ளார்.எடையைக் குறைக்க பதினெட்டு மைல் நடந்தே போவார்.சாப்பிட மாட்டார்.சேது படத்தை முடிக்க டெலி ப்லிம்மில் நடித்து அந்தப் பணத்தைக் கொடுத்துள்ளார்.

இன்று தேவையே இல்லாமல் பீமா,கந்தசாமி படத்தில் நடித்து நேரத்தையும்,திறமையையும் வீணடிக்கப் பார்க்கிறார்.

இது மாதிரி படத்தில் அவர் இனிமேல் நடிக்க கூடாது என்று நான் கந்தசாமி கோவிலில் சீட்டு கட்டப் போகிறேன்.

டிஸ்கி : இன்னும் நாலு படம் இப்படி எடுத்தா உங்களுக்கு ஆப்பிள் தோட்டம் தான்.

Tuesday, August 25, 2009

500வது பதிவு நண்பர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்..

சின்ன வயதில் இருந்தே நான் ஒரு தலைவனாக இருக்கவே ஆசை. எனக்கு ஒத்து வராத(என்னை தலைவனாக ஏற்று கொள்ளாத) கும்பலிடம் நான் தள்ளியே இருப்பேன். அதனால் என்னை விட சின்ன வயது பசங்க தான் கிராமத்தில் எனக்கு நண்பர்கள்.ஒரு விஷயத்தில் இறங்கினால் அது முடியும் வரை ஓய்வதில்லை. ப்ளான் பண்ணாம எதையும் பண்ண கூடாது - இது வடிவேலு சொன்னதாக இருந்தாலும் எனக்குப் பொருந்தும். வேலையாக இருந்தாலும் சரி,ஆப்பு வைப்பதாக இருந்தாலும் சரி யாரும் யோசிக்காத கோணத்தில் தான் நான் யோசிப்பேன்.

அப்படி ப்ளான் பண்ணி செய்தத் தவறுகள் இந்த பதிவில்.

சின்ன வயதில் இருந்தே எனக்கு நாணயங்கள் சேகரிப்பதில் ஈடுபாடு உண்டு. யாராவது அறிய வகை காசு வைத்து இருந்தால் என்னால் வாங்க கூடிய விலையில் இருந்தால் வங்கி விடுவேன். நான் எட்டாவது படிக்கும் போது அறிய வகை காசு கண்காட்சி நடத்தினார்கள். என்னிடம் இல்லாத காசான பத்து ரூபாய் காயினும், இரண்டு வகை இருபது காசும் என் வகுப்பில் ஒருவன் வைத்திருந்தான்.இருபது காசு மட்டும் பத்து வைத்திருந்தான்.நான் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் கொடுக்காததால் அடித்து விட முடிவு செய்தேன். என்னால் அவனை நெருங்க கூட முடியவில்லை. கண்காட்சி நடக்கும் போது பார்க்க வந்த சின்ன பசங்களின் பையில் காசுகளை அள்ளிப் போட்டு விட்டார்கள் அவனுடைய எதிரிகள்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த இரண்டு இருபது காசுகளை நான் அடித்து விட்டேன். இப்பொழுதும் அந்த செப்புக் காசுகளைப் பார்க்கும் போது அவனும்,அந்த திகில் நிமிடமும் வந்து போகும்.அவனிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒருக் கடிகார வழிப்பறியை நடத்தி இருந்தோம்.அவசரமாக காசு கேட்ட நண்பனிடம் "ஒரு வழி இருக்கு ஆனா நீ செய்ய மாட்ட.." என்று பீடிகையோடு ஆரம்பித்தேன்."என்ன.." என்றவனிடம் காலையில் நடந்த அந்த சம்பத்தை நினைவுப்படுத்தினேன்.காலையில் கீழே கிடந்த கடிகாரம் மற்றும் அதை எடுத்தவனைப் பற்றியும் சொன்னேன்."காசு வேணுன்னா அவன் கிட்ட பொய் வாட்ச வாங்கு.." என்று சொன்னேன்.அவன் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையில்.கொஞ்ச நேரத்தில் வாட்சைப் பிடுங்கி இருந்தார்கள் எனக்கு தெரியாமல்.கூட இருந்தவனே அந்த வாட்ச்சை அடித்து விட்டான்.காலையில் அந்த பையன் அவன் அம்மாவோடு வந்து பிரச்சனை செய்ய..ஒருநாள் டைம் கேட்டு பாண்டிபஜார் முழுவதும் திரிந்தோம் அந்த வாட்ச்சைப் போல வாங்க.(வினாடி முள்ளுக்குப் பதில் ஒரு சிலந்தி சுற்றி வரும்).கிடைக்காததால் நானூறு ரூபாய் அவன் கொடுத்தான் என்னை வேறு காட்டிக் கொடுக்கவில்லை.அதற்கு கைமாறாக இறுதித் தேர்வின் போது இரண்டு மணி நேரம் தான் தேர்வு எழுதுவேன் மீதி முப்பது நிமிடம் அவனுக்குப் பிட் பாஸ் பண்ணுவேன். கடைசி தேர்வின் போது சரியாக கொடுக்க முடியவில்லை. அவன் அந்த பாடத்தில் தேர்வு ஆகவில்லை..அவனிடம் மன்னிப்பு கேட்கிறேன்(சரியாக பிட்டை பாஸ் பண்ணாதக் காரணத்திற்கு).

கூட இருந்து திருடியவனின் இன்னொரு கதையை படிக்க இங்கே போகவும்

முதல் முறையாக + டூ படிக்கும் போது திருட்டுக் கையெழுத்துப் போட்டேன்.என் அம்மாவின் கையெழுத்தை மிகவும் சிரமப்பட்டுப் போட்டேன். மனது கேட்காமல் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு வந்தேன். எங்கே படிக்காமல் போய் விடுவார்களோ என்று பயந்து ஒரு நண்பனை விட்டு அம்மாவுக்குப் போன் செய்து சொன்னேன். என் வீட்டில் ஒன்றுமே கேட்கவில்லை. இந்த சாதனையை என் மாமா பெண் ஏழு வயதில் (மூன்றவதுப் படிக்கும் போது) என் அம்மாவின் கையெழுத்தைப் போட்டு முறியடித்து விட்டாள். அன்று போன் செய்யச் சொல்லித் நான் தொல்லைப்படுத்திய நண்பனிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இரண்டு வருடம் ஜூனியர் அந்த பையன்.ஒருநாள் ஒரு சிடி கொடுத்து பார்க்கச் சொன்னான்.மறுநாள் அவனிடம் கொடுத்தப் பிறகு அது கல்லூரியில் மாட்டிக் கொண்டது.வாலைப் பிடித்து விசாரித்தப் போது ஒரு கூட்டமே மாட்டிக் கொண்டது.அவனிடம் போய் "என்னைக் காட்டி கொடுத்து விடாதே.." என்று நான் மிரட்டியப் போது அவன் சொன்ன வார்த்தைகள் இன்னும் நினைவில் இருக்கிறது."நீங்க தான் எனக்கு ஹீரோ தெரியுமா..உங்களப் போய் நான் காட்டி குடுப்பேனா..நீங்க இப்படிக் கேட்டது தான் எனக்கு ஒரு மாதிரி இருக்கு.." நண்பர்கள் பயமுறுத்தியதால் அவனிடம் சொல்ல வேண்டிய சூழ்நிலை.அப்படி கேட்டதற்கு அவனிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

இதெல்லாம் நான் அன்று கேட்கவில்லை.காரணம் தயக்கம்,பயம் மற்றும் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்ச்சி..இன்று கேட்கிறேன்.. என்னை மன்னித்து விடுங்கள்".

டிஸ்கி : இது என்னுடைய 50வது பதிவு.

கிராமத்தில் புழங்கும் சுவாரஸ்யமான பட்டப்பெயர்கள்.

சமீபத்தில் பட்டப்பெயர்களை பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம். பட்டப்பெயர்களினால் கிராமத்தில் கலவரமே உண்டான கதைகளும் உண்டு. நேரம் போகாத வெட்டி ஆபீசர்கள் ஒருநாள் ஊரில் இருக்கும் எல்லாருடைய பட்டப்பெயர்களையும் எழுதி விளையாடி இருக்கிறார்கள். சங்கம் கலைந்த பிறகு அந்த பேப்பர் பஞ்சாயத்து அறையில் ஓட்டப்பட்டதாம். மறுநாள் காலை ஊரே கொலைவெறியோடு திரிந்து சந்தேகம் வந்தவர்கள்,வாராதவர்கள் மீது விசாரணை கமிஷன் போட்டுள்ளார்கள்.

அப்படி வந்த ஊரில் புழங்கிய சில பட்டப்பெயர்கள்.

காக்காப்பண்ண

அவன் பிறக்கும் போதே அட்டக்கருப்பு.அதனால அவன் பாட்டி ஒரு பண்ண காக்கா சேர்ந்தா தான் இவன் நிறத்துக்கு வரும் என்று சொல்லி இந்த பெயர் வைத்தார்.அவர் உண்மையான பெயர் யாருக்குமே தெரியாது.

கிணத்துமூடி

ஆச்சியிடம் கோவித்துக் கொண்ட ஒரு பெண் "நான் கிணற்றில் விழுந்து சாகப் போகிறேன்.." என்று மிரட்டவும் அவள் ஆச்சி "நீ விழப் போற கிணத்துகெல்லாம் முதல்ல மூடி போடணும்" அதிலிருந்து அவள் பெயர் கிணத்துமூடி.

மங்கி

அந்த பெண்ணின் பெயர் மங்கை. என்னவோ வாங்க என் வீட்டிற்கு வந்திருக்கிறாள்.என் தாத்தா வெளியே இருந்து "மங்கி வந்திருக்குப் பார்.." என்று கத்தவும், என்ன நம்ம ஊர்ல குரங்கா,தாத்தா இங்கீலிசு எல்லாம் பேசுறாரே என்று நினைத்து கொண்டே வெளியே வந்தால் இந்த பெண் திருதிருவென முழித்து கொண்டு நிற்கிறாள்."துரை இங்கீலிசு எல்லாம் பேசுது.." இந்த வசனத்தை கேட்டால் என்னை அறியாமல் சிரிப்பேன்.காரணம் என் தாத்தாவின் செல்லப்பெயர் துரை.

சீலயக்கி..பி

ஒரு மழைநாளில் ஏதோ வீட்டின் முன்னே நின்று கொண்டு கதையடித்துக் கொண்டிருந்தோம். அந்த வீட்டு கிழவி திட்ட, பதிலுக்கு நாங்களும் திட்ட அது சேலையை மடித்து கொண்டு எங்களைத் துரத்த பின்னே உதயமானது தான் இந்த பெயர்.

ரீ என்ட்ரி

ஊரில் திருமணம்,திருவிழா,மஞ்சள் நீராட்டு விழா நடக்கும் போது திரைக் கட்டி படம் போடுவார்கள். எவனாவது அந்த படத்தை ஏற்கனவே பார்த்து இருப்பான்.அவன் பக்கத்தில் மட்டும் உக்கார கூடாது.கதை சொல்லி சாகயடிப்பான். அப்படி ஒருவனிடம் ஒருநாள் மாட்டிக் கொண்டோம். கதையை சொல்லிக் கொண்டே வந்தான்.ஒரு கட்டத்தில் "இப்போ அந்த நபர் ரீ என்ட்ரி கொடுப்பார்.." என்று சொல்லவும் உடனே நான் "டேய் ரீ என்ட்ரி நீ கொஞ்சம் பொத்திக்கிட்டு இரு.." என்று சொன்னேன். அதிலிருந்து அவனை பார்க்கும் போதெல்லாம் "ரீ என்ட்ரி" என்றே அழைப்போம்.

______ ஆச்சி

எங்களுக்கும்,பெரியத் தாத்தா வீட்டிற்கும் ஆகாது.அவர்கள் வீட்டில் ஒரு ஆடு குட்டிப் போட்டு இருந்தது.குட்டியைப் பிடித்து அது ஆணா,பெண்ணா என்று ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருந்தோம் நானும்,என் தம்பியும். அதைப் பார்த்த அந்த ஆச்சி "டேய் ஆட்ட விடுங்க..இல்ல ______ நறுக்கிருவேன்.." என்று ஓடி வந்தார்.

டிஸ்கி :

நானாவது பெயர் தான் வைப்பேன்.நான் பிறப்பதற்கு இருபது வருடங்களுக்கு முன்பே என் பெயருக்குப் பாட்டு எழுதி வைத்திருந்தார்கள். அவன் மட்டும் என் கையிலே கிடச்சான்...............

Monday, August 24, 2009

தரணி,ஜெயம் ராஜாவிடம் கேட்கப்பட்ட ஏடாகூடமான கேள்விகள்

என் தம்பி எம்.சி.சி கல்லூரியில் விஸ்காம் படித்துக் கொண்டிருந்தான். எல்லா வருடமும் அவர்களுக்காக அன்றைய நிலவரப்படி வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர்களை அழைத்து வருவார்கள். முதல் வருடம் தரணியும்,இரண்டாவது வருடம் ஜெயம் ராஜாவும் வந்தார்கள்.கடைசி வருடம் அமீர் வந்தார்.

கில்லி படம் இயக்கிய பிறகு அவரை அழைத்து இருந்தார்கள். கில்லி படம் வெளி வருவதற்கு நாலு நாட்களுக்கு முன்பே திருட்டு வி.சி.டி சென்னையில் கிடைத்தது. (சேஸிங் காட்சிகள் உட்பட முப்பது நிமிடங்கள் அதில் இல்லை). அந்த சேஸிங் காட்சிகள் தான் படத்துக்கு உயிர்.தெலுங்கில் இருந்து கொஞ்சம் கூட மாற்றம் செய்யாமல் எடுத்தார்கள்.

தரணியிடம் கேள்விகள் யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்றவுடன் நான் என் தம்பியிடம் மூன்று கேள்விகள் கேட்க சொன்னேன்.

1. அரையிறுதியில் தோற்ற விஜய் அணி எப்படி இறுதி போட்டிக்கு வந்தது ?

2. விஜய் எறியும் காலி பெப்ஸி பாட்டில் சுவரில் பட்டவுடன் பெப்ஸி வழியும் எப்படி ?

3. தமிழ்நாடு அணியில் விஜய் அணியினர் அனைவரும் இருப்பார்கள் எப்படி ?

விழா முடிந்து வந்தவனிடம் கேள்விகள் கேட்டயா என்று கேட்டேன்.

ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன் என்றவனிடம்,தரணியின் பதிலைக் கேட்க ஆர்வமாக இருந்தேன்.

முதல் கேள்விக்கு தரணியின் பதில்

அரையிறுதி பெஸ்ட் ஆப் தீரி.அதனால் விஜய் அணியினர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்கள்.

இந்த பதிலால் அடுத்த கேள்விகளை மறந்து விட்டேன் என்று சொன்னான்.மேலும் அரையிறுதிக்கு பெஸ்ட் ஆப் தீரி வைத்த ஒரே ஆள் தரணி தான் என்று சிரித்தான்.

இப்படியே தொடர்ந்த அவரின் திரைக்கதை முன்னேற்றம் குருவியில் ஓடும் இரயிலைப் பறந்து பிடித்ததில் முடிந்தது.

அடுத்த வருடம் வந்த ஜெயம் ராஜாவிடம் "ஏன் தொடர்ந்து ரீமேக் செய்கிறீர்கள்" என்று கேட்க சொன்னேன்.

ஏன் தம்பிக்கு முந்தி ஒரு பையன் இந்த கேள்வியைக் கேட்டு விட்டான்.

கேள்வி கேட்ட விதம் "ஏன் ரீமேக்கை கட்டி கொண்டு அழுவுறீங்க"

ஜெயம் ராஜா கோபமாக "புதுசா ஒரு கோடு போடுறது ரொம்ப சுலபம்.ஆனா ஒரு கோடு மேல இன்னொரு கோடு அலுங்காம போடுறது எவ்ளோ கஷ்டம்னு எனக்குத் தான் தெரியும்.." என்று சொன்னாராம்.

பார்த்து சார் புதுசா ஒரு கொடுப் போடுறீங்க யாராவது கைய ஆட்டிறப் போறாங்க. அப்புறம் கோடு கோணலா போயிரும்.

மூன்றாவது வருடம் வந்த அமீரிடம் யாரும் இதுப் போல கேள்விகள் கேட்கவில்லையாம். காரணம் பருத்திவீரன்.

டிஸ்கி :

நான் யாரிடமும் கேள்விகள் கேட்கவில்லை.கா"ரணம்" ஏன் கல்லூரிக்கு வந்தவர்கள் காந்திமதியும் (மண்வாசனை படத்துல வந்த வசனத்த வேறப் பேசிக் காட்டினார். என்ன கொடும சார் இது). எஸ்.வி.சேகர் (இராணிமேரி கல்லூரியை இடிக்கலாம் என்று சொல்லி கொண்டிருந்தார்.முட்டாளிடம் பேசுவதற்கு சும்மாவே இருக்கலாம்)

Saturday, August 22, 2009

ஒரு வரி கதைகள்

நடிகர்கள்

ஏழையாக நடிக்க கேரவனில் தூங்கும் ஆத்மாக்கள்.

காதல்

வெற்றியின் கடைசிப்படி

கல்யாணம்

மருந்தான துளி விஷம்.

காத(லி)லன்

சந்தோஷ தொல்லைகள் தரும் கிச்சுகிச்சு

கணவன் மனைவி

விக்ஸ் சாப்பிட்டாலும் போகாத கிச்சுகிச்சு

கள்ளகாத(லி)லன்

கிச்சுகிச்சு இல்லாத நேரத்தில் சாப்பிடும் இஞ்சிமரப்பா.

மக்கள்

பிச்சை போடாமல் சேர்த்து வைத்த காசை நடிகனிடம் இறைப்பவர்கள்.

குழந்தை

எழுத தொடங்கிய சரித்தரத்தின் முதல் அத்தியாயம்

குப்பைத்தொட்டியில் குழந்தை

யார் வீட்டின் வரலாறோ?

புது கோணம்

கடைசி பக்கத்திலிருந்து வாசிக்கப்படும் நாவல்.

ஹிட்ஸ்,பதிவு,பின்னூட்டம்

தீராத அரிப்பு.

நீ

ஓரெழுத்து ஹைக்கூ.

நான்

இரண்டெழுத்து புதிர்.

அம்மா

மூன்றெழுத்து நாவல்.

Friday, August 21, 2009

கந்தசாமி - விமர்சனம்

நாயகன் நிறைய படங்களில் சின்ன வேடங்களில் நடித்து இந்த நிலைமையை அடைந்து உள்ளார். நாயகி வெளிமாநிலத்து இறக்குமதி.இன்னொரு நாயகியும் சின்ன வேடத்தில் தான் அறிமுகம் ஆனவர். நாயகியின் அப்பா ஒரு முன்னால் கதாநாயகன்.நாயகனுக்கு வேலை செய்யும் இடத்தில் மூன்று தோழர்களும், வீட்டருகே இரண்டு நண்பர்களும் உண்டு.

டைட்டில் பாடல் மிகவும் அருமை.குளிர் பிரதேசத்தில் படம் பிடித்து இருக்கிறார்கள்.
இசையும் ஒளிப்பதிவும் குறை சொல்ல முடியாத அளவுக்கு பிரமாதம்.

வீட்டருகே இருக்கும் இரண்டு நண்பர்களுக்கும் ஆளுக்கொரு காதல்.

ஒருவன் - விளையாட்டில் சாதிக்க துடிக்கிறான்.

இன்னொரு நண்பன் - வளர்ந்து வரும் துடிப்பான வழக்கறிஞர். போராட்டக் குணமுள்ளவன்.

சிறு வயது முதல் ஒன்றாக வளர்ந்து வரும் நாயகிக்கு நாயகன் மீது காதல்.அவனுக்கு அந்த இரண்டாவது நாயகியின் மீது காதல். இரண்டு நாயகிகளும் பள்ளித் தோழிகள்.

ஹீரோ பணம் கட்டாதவர்களின் வண்டியைப் பறிமுதல் செய்பவன். அப்படி செய்யும் அந்த இரண்டாவது நாயகியை சந்திக்க,மோதல் வருகிறது.பிறகு வேலை கிடைக்க உதவ, நடப்பும் பழகுகிறார்கள்.

வண்டியைப் பறிமுதல் செய்யும் போது பெரும்பாலும் உதையும், சில சமயம் வண்டியும் கிடைப்பது நல்ல காமெடி.

ஒருத் தலைக் காதலோடு முதல் நாயகி நாயகனைப் பார்க்கும் போதெல்லாம் கவிதை அருவியாகக் கொட்டுகிறது.

சில கவிதைகள் நல்லா இருக்கு.சில கவிதைகள் செம மொக்கை.

இதோ ஒன்று என் ஞாபகத்தில் இருந்து ஒரு பாதி மட்டும்

நீ
என்னை துறந்தால்
நானும் துறப்பேன்
உன்னை அல்ல
என் உயிரை!

காதலிப்பவர்களுக்கு இது ரொம்பப் பிடிக்கும்.காதலை வெறுப்பவர்களுக்கு இன்னும் பிடிக்கும்.

தனியாக இரண்டாவது நாயகியை அழைத்துச் சென்றுக் காதலைச் சொல்கிறான்.அவள் இவனை அடித்து விடுகிறாள்.

(தொடரும் ...)

டிஸ்கி : இது விஜய் தொலைக்காட்சியில் 7.30 ஒளிப்பப்பாகும் அன்பே வா தொடர்.நடுவே கந்தசாமி விளம்பரம்.அதனால் இந்த நாடகத்துக்கு இப்படி ஒரு விளம்பரம்.

இன்னைக்கு நம்ம கடை ஈ அடிப்பதால் இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல்.

அடுத்த வாரம் குவிக்கன் முருங்கன் பற்றி எழுதிகிறேன். முருகன் குவிக்கா கண் அடிப்பதைச் சொல்லித் தருகிறேன்.

Thursday, August 20, 2009

தண்டோரா இயக்கும் பசங்க ரீமேக்

தண்டோரா பசங்க படத்தை ரீமெக் செய்கிறார்.கதை,திரைகதை,வசனம்,இயக்கம்,இசை சகலமும் அவர் தான்.

நடிகர்கள் தேர்வு நடத்துகிறார்.

ஜீவா,பக்கடா,குட்டிமணியாக நடிக்க மூவர் அணியை அழைக்கிறார் (நைனா,டக்ளஸ்,அரவிந்த்).

அரவிந்த் : அண்ணே எல்லாம் சரி தான்.. டி.ராஜேந்தர் போல நடிக்க மட்டும் செய்யாதீங்க..

நைனா : எனக்கு ஜீவா கேரக்டர்..

அரவிந்த் (டக்ளஸிடம்) : அவரே பண்ணட்டும்.அப்ப தான் அன்புகிட்ட இருந்து அவர் அடி வாங்குவார்..நான் பக்கடா..என்ன சரியா

டக்ளஸ் : இல்ல நாந்தான் பக்கடா..

அரவிந்த் : சரி அப்ப நான் குட்டிமணி..

நைனா : என்ன அவருக்கு விட்டு கொடுத்துட்டீங்க?

அரவிந்த் : ஓட்ட டவுசர் போட்டுகிட்டு நடிக்கனும்..உங்ககிட்ட வேற அடி வாங்கணும் அதான்..

நைனா : அதானே பாத்தேன்..

டக்ளஸ் (மெதுவாக) : நைனா, இந்த குட்டிமணி பயப்பிள்ளைக்கு டயலாக்கே கிடையாது..

தண்டோரா : இப்படி தனித்தனியா ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ஆப்பு வைக்கிறது.ஓண்ணு சேர்ந்தா மத்தவங்களுக்கு ஆப்பு
வைக்கிறது.

டக்ளஸ் : அப்ப பதிவர் ஆப்பு நீங்கதானா..

அரவிந்த் : ம்.. ம்..

தண்டோரா : இன்னைக்கு நானா? சல்லிப்பய சகவாசங்கிறது சரியாத்தான் இருக்கு..

அரவிந்த் : ஏன் செல்வேந்திரன இப்படி திட்டுறீங்க..

தண்டோரா : இப்பத்தான் அவரு என்ன புகழ்ந்து எழுதி இருக்காரு..உனக்கு பொறுக்காதே..

நைனா : அப்ப அன்புக்கரசு ஐ.ஏ.எஸ் யாரு?

தண்டோரா : லோகு தான் அன்பு.இன்னும் அப்பத்தா,புவனேஸ்வரி,புஜ்ஜிம்மா கேரக்டருக்கு தான் ஆள் கிடைக்கல..

காட்சியை மூவரிடமும் விளக்குகிறார் தண்டோரா.

பாலத்தில் அரவிந்த்,நைனா,டக்ளஸ் நிற்கிறார்கள்.

நைனா : லோகு காதல் கவிதை எழுதுவாரா?

டக்ளஸ் : இல்ல இல்ல

நைனா (திரும்பவும்) : லோகு காதல் கவிதை எழுதுவாரா?

அரவிந்த் : எழுதுவாரு. (நைனா முறைக்கிறார்).எழுதி நம்ம எதிர்கவிதைய பார்த்துட்டு குஜராத்துக்கு ஆட்டோ அனுப்புவேன்னு கமென்ட் போடுவாரு..

நைனா : ஹா ஹா

டக்ளஸ் : பயப்புள்ள கொஞ்சம் ஏமாந்தாலும் நான் பேச வேண்டியத இவன் பேசுறான்..

லோகு வரவும் அரவிந்தும்,டக்ளசும் ஓடி விடுகிறார்கள். அப்பத்தா இல்லாததால் அந்த காட்சி முடிக்கப்படுகிறது.

லோகு : அப்பத்தா யாரு..

தண்டோரா : வால்பையன் தான் இதுக்கு சரியா வருவாரு.

டக்ளஸ் : வால்பையன் எதிர்கவித எழுதினா கூடம் எல்லாம் அங்கே தான் போகும்..எப்படியாவது தடுக்கணும்..

வால்பையன் வந்தயுடன்..

அரவிந்த் : தல எங்க குருவே நீங்க..அதனால அப்பத்தா கேரக்டர் உங்களுக்கு வேண்டாம்..

வால்பையன் : ஆமா அதுவும் சரி தான்..

தண்டோரா ஒழித்து வைத்திருந்த சரக்கை எடுத்து குடித்து விட்டு தூங்கி விடுகிறார்.

தண்டோரா : இனிமே அப்பத்தா கேரக்டர் குசும்பன் தான் பண்ணனும்..

நைனா : என்ன வால் போய் கத்தி வருது..

அரவிந்த் : கவலைப்படாதீங்க நாம தான் சரக்கு கவிதை எழுதுவோம்..அவரு வேற மாதிரி எழுதுவாரு..லோகுவ நினைச்சா தான் பாவமா இருக்கு..

நைனா : ஏன் எதுக்கு..

டக்ளஸ் : லோகுவால துபாய்க்கு ஆட்டோ அனுப்ப முடியாது...

அடுத்த காட்சியை விளக்குகிறார் தண்டோரா.

வாட்டர் டாங்கில் அமர்ந்து இருக்கிறார் நைனா.அரவிந்தும்,டக்ளசும் ஓடி வருகிறார்கள்.

அரவிந்த் : ஒரு நல்ல செய்தி..

டக்ளஸ் : ஒரு கெட்ட செய்தி..

நைனா : நல்ல செய்தி என்ன..

அரவிந்த் : லோகு போட்ட கவிதைக்கு எதிர்கவிதை போட்டாச்சு..

நைனா : கெட்ட செய்தி என்ன..

டக்ளஸ் : போட்டது நாமதான் தெரிஞ்சி போச்சி..ஆட்டோ வருதாம்..

நைனா : எப்பவும் வர்றது தானே..

அரவிந்த் : இந்த வாட்டி லோகுவும் வர்றார்..

ஆட்டோ சேசிங் நடக்கிறது .

தண்டோரா : புவனேஸ்வரியா நடிக்க போறது யார் தெரியுமா..

மூவர் அணி : யாரு..யாரு..

தண்டோரா : சென்..

நைனா : ரீமா சென்னா..

டக்ளஸ் : ரியா சென்னா..

அரவிந்த் : சுஷ்மிதா சென்னா..

தண்டோரா : முழுசா சொல்ல விடுங்க..சென்ஷி..

அரவிந்த் : அய்யோ.. அம்மா.. அவரா..

தண்டோரா : பேருலே "ஷி" இருக்கு..

டக்ளஸ் : லாஜிக் நல்ல இருக்குல..

அரவிந்த் : வேணாம் டக்ளஸ்.. அவரு வந்தா இருக்கிற ஒன்னு இரண்டு பேரையும் துரத்திருவாரே..அன்னைக்கு வந்து பிரபலப் பதிவருனு சொன்னாரு..படிச்சிகிட்டு இருந்த இருவது பெரும் ஓடிப் போயிட்டாங்க..

அவர் கவிதைக்கும் எதிர்கவிதப் போடுறது ரொம்ப கஷ்டம்..

வாசலில் ஒரே சத்தம்..

போய் பார்த்தால் கேபிள்,உண்மைத்தமிழன்,அனுஜன்யா..

தண்டோரோ : அப்பா கேரக்டருக்கு ஆள் எடுக்கல.. எடுத்தா சொல்லி விடுறேன்..இரண்டு பேர் தான் வேணும்..

கேபிள்,உண்மைத்தமிழன்,அனுஜன்யா மூவரும் கோவமாக,கோரஸாக : நாங்க வந்தது புஜ்ஜிம்மா கேரக்டர்ல நடிக்க..

தண்டோரோ : புஜ்ஜிம்மா குழந்தையா..அவன விடுங்க.. க..க..க..

தண்டோரா கொஞ்சம் நேரம் கழித்து கண் முழிக்கிறார்.

தண்டோரா : அவங்களே நடிக்கும் போது நான் நடிக்க கூடாதா..நாந்தான் புஜ்ஜிம்மா கேரக்டர் பண்ணப் போறேன்..நானே ஒரு யூத்து தான்..

படித்து கொண்டிருக்கும் அனைவரும் மயக்கம் போடுகிறார்கள்.

அரவிந்த் (தண்ணீர் தெளித்து மயக்கத்தைப் போக்கி) : பின்னூட்டம் போட்டப் பிறகு மயங்கி விழுங்க..

நைனா : அவனவன் பிரச்சனை அவனுக்கு..

டக்ளஸ் : ம் .. ம்..

லோகு அனுப்பிய ஆட்டோவில் குஜராத்துக்குப் புறப்படுகிறார் டக்ளஸ் என்ற நையாண்டி நைனா.

Wednesday, August 19, 2009

குடும்பப்பாடல் - பிள்ளை நிலா

பத்து வருடங்களுக்கு முன் பெப்சி உங்கள் சாய்சில் ஒரு நேயர் உமாவிடம் அவருடையக் குடும்பப்பாட்டை ஒளிப்பரப்பச் சொன்னார். அந்த பாடல் "பொன்மேனி உருகுதே". நண்பர் குழாம் பாட்டு முடியும் வரை நக்கல் செய்து கொண்டிருந்தார்கள்.

அப்படி ஒரு பாடல் "நாளை நமதே - அன்பு மலர்களே" மாதிரி குடும்பப் பாடல் நமக்கும் இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தேன். அது தான் நீங்கள் கேட்டவை படத்தில் வரும் - "பிள்ளை நிலா" பாடல்.

ஐந்து வயதில் என் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படிக்க மாட்டேன் என்று அடம் பிடித்ததால் நான் வள்ளியூரில் உள்ள பள்ளியில் தங்கி படித்தேன்.(விடுதி என்ற சிறையில்).சிரிப்பையே மறந்து விட்டிருந்த காலமது.

இப்படியே இருந்தால் நான் ஒரு குணா கமல் போல மாறி விடுவேன் என்று பயந்து என் அம்மாவும்,தம்பியும் வள்ளியூருக்கே வந்து விட்டார்கள்.

என் அப்பா அந்த சமயம் மும்பையில் இருந்தார். சொந்த ஊரில் இருந்த வீடு,நிலம் எல்லாம் விட்டு விட்டு ஆங்கிலத்தில் கல்வி கற்க விலாசம் இல்லாத நிலையில் இருந்தோம்.

வீடு எதுவும் கிடைக்காதக் காரணத்தால் மின்சார வசதியே இல்லாத வீட்டில் இருந்தோம். பாம்பு வந்து விடும் என்பதால் அம்மா இரவு முழுவதும் தூங்காமல் இருப்பார்.

"பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா" - இந்தப் பாடலைப் பார்க்கும் போதெல்லாம் என் பால்யம் தான் என் ஞாபகத்திற்கு வரும்.

ஒருமுறை நான் படித்த பள்ளி தீப்பற்றி எறிந்தப் போது சின்ன இடைவெளியில் எல்லா மாணவர்களும் உயிர்சேதம் இல்லாமல் தப்பினோம். (கூரையில் வெள்ளை பாஸ்பரஸ் போடப்பட்டது).

வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட போதும் நாங்கள் தப்பிக்க காரணம் படிக்க வைக்க வேண்டும் என்ற என் அம்மாவின் வைராக்கியமும், எங்களிடம் இருந்த வெறியும் தான்.

அப்படி பார்க்கும் போதெல்லாம் அந்த பாடலால் நான் வைராக்கியத்தாலும், வெறியாலும் நான் நிரப்பப்படுகிறேன்.

பாலு மகேந்திராவைப் பிடிக்க இது முதல் காரணம். நிஜவாழ்க்கைக்கு மிக அருகில் அவர் படம் பயணிக்கும். அதனால் தான் நல்ல சீடர்களை உருவாக்க முடிந்தது.(பாலா,வெற்றிமாறன்,நா.முத்துகுமார்,ராம்).

வீடு படத்தில் கடைசி வரை கட்டி முடியவே முடியாது அந்த வீட்டை.அந்த கட்டி முடிக்காத வீட்டை நிறைய நாள் கிரிக்கெட் விளையாடப் போகும் போது நான் பார்த்திருக்கிறேன் (தசரதபுரத்தில்).

ஞானிக்கு நீங்கள் கேட்டவை படம் பிடிக்கவில்லை என்று சமீபத்தில் சொல்லியிருந்தார். என்னை போல எதையுமே போராடி பெறுபவனுக்கு அந்த படம் மிகவும் பிடிக்கும்.

அப்படி ஒரு பாடலை தந்த பாலு மகேந்திராவிற்கு என் நன்றிகள்.

டிஸ்கி :

5,10,15,20௦ -௦ வயதுகளில் விதி என் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறது.

இருபத்தைந்தாவது வயதில் விதி என் ரூபத்தில் மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறது. (நான் எழுதி தொல்லை கொடுக்கிறேன் என்பதால்).

ஆதி,நையாண்டி நைனா,டக்ளஸ் எங்கிருந்தாலும் உடனே வரவும்

இரவைத் தேடும் என் சரக்கு

ஒரு புஸ்வானம் போல
நான் சரக்கு அடிக்கும் போதெல்லாம்
சிதறிக்கொண்டிருக்கிறது
மிக்சர்.

சரக்கின் அழகு அந்த மூடியென்றால்
கிக்கின் அழகு அந்த கடைசி சொட்டு
அதற்குத் தருவதற்காகவும்
இதற்குத் தருவதற்காகவும்
பாட்டிலை
தனித்தனியே சேமித்துவைத்திருக்கிறேன்

என் சரக்கு
ஒரு இரவைப் போல
குறைந்து கொண்டேயிருக்கிறது
நீ
ஒரு காக்காவைப் போல
கல்லைப் போட்டு குடித்துகொண்டுயிருகிறாய்

சரக்கிற்கும்
அந்த ஊறுகாய்க்கும்
தேவையான சில்லறையை
சேகரித்துக்கொண்டேயிருக்கிறேன்

ஒரிஜினல் சரக்கு

இந்த கவிதைகள் நையாண்டி நைனா மற்றும் டக்ளஸிற்கு சமர்ப்பணம்.

டிஸ்கி : ஆதி அண்ணன் என்னை மன்னிச்சுருங்க.

Tuesday, August 18, 2009

சாருவின் இணையத்தளத்தில் என் பதிவு + கடிதம்

தொடர்ந்து இரண்டு நாட்களாக 1000 ஹிட்சைக் கடந்தவுடன் எனக்கு தெரிந்து விட்டது என்னமோ அதிசயம் நடந்து இருக்கிறது என்று.

அந்த அதிசயம் தான் தலைப்பில் சொல்லியது.

டக்ளஸ் போனப் பதிவில் சொல்லி இருந்தார்.நீங்க வடய மிஸ் பண்ணிடீங்கன்னு.அதனால இந்த பதிவு.சாருவுக்கு நிறைய வாசகர்கள் உண்டு என்பது எனக்கு தெரியும். ஆனால் நான் எழுதிய மொக்கைகளையும் அவர்கள் படிக்க நேரும் என்று நான் கனவில் கூட நினைத்தது கிடையாது.

சாருவின் தளத்தில்

இது தான் நான் எழுதிய மொக்கையிலே சின்ன மொக்கை.

டிஸ்கி : ஹி ஹி எல்லாம் ஒரு விளம்பரம் தான்.

Monday, August 17, 2009

அதிக ஹிட்ஸ் கிடைக்க 11 வழிகள்

முதல்ல எலி மேல (அதான் மவுஸ் மேல) கைய வைச்சி சத்தியப் பிரமாணம் எடுத்துக்கணும் (யாரது இடது கைய வைக்கிறது).நான் போடுறதெல்லாம் மொக்கையே மொக்கையை தவிர வேறு எதுவுமில்லை.

10. நீங்க இதுவரைக்கும் விமர்சனம் எழுதாம இருந்தா ஏதாவது ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதுங்க.அது வெளிவராத புதுப்படமா இருந்தா ஹிட்ஸ் நிச்சயம்.சரி நானே உதாரணம் சொல்லித் தர்றேன்.உன்னைப் போல ஒருவன் படத்துக்கு விமர்சனம் எழுதலாம்(எ வெட்நெஸ்டே பட விமர்சனத்துல நடிகர்கள் பெயர மட்டும் மாத்திப் போடுங்க.)விமர்சனம் நம்ம அண்ணன் கேபிள் சங்கர் பதிவுலப் போய் சுடுங்க)

9. கோக்குமாக்கா தலைப்பு வைக்கணும் எப்படின்னா இதுக்கும் நானே உதாரணம் தர்றேன் (பிட்டு படம் எடுப்பது எப்படி ?) இப்படி தலைப்பு வைக்கணும்.ஆனா உள்ளுக்குள்ள மேட்டர் ஒண்ணுமே இருக்கக்கூடாது.இந்தப் பதிவுக்கு எனக்கு தமிளிஸ்ல நிறைய ஓட்டு கிடைச்சது.

8. பதிவுப் போட எதுவுமே இல்லனா கூடக் கவலையே படக்கூடாது. யாராவது ஒரு பதிவர் கிட்ட ஓரண்டை இழுக்கணும்.நிஜமா சண்டை போடணும் ஆனா போடக் கூடாது. எதிர்கவுஜ,எதிர்வினை,சைட்வினை எல்லாம் இதுல வரும்.

7. இப்படி அதிக ஹிட்ஸ் கிடைக்க வலி சொல்லி தர்றேன்னு சொல்லிட்டு பாதிய மாட்டும் தான் சொல்லணும்.மீதி பாதி அடுத்தப் பதிவுல வரும் ஒரு டிஸ்கிய போட்டு விடனும்.ஆறு மாசம் கழிச்சு இதே பதிவ மீள்பதிவா போட்டா அப்பவும் கூட்டம் அம்மும்.

6.வடை பெறுகிறேன்,கடை அடைக்கிறேன் அப்படி ஏதாவது ஷாக் கொடுக்கணும் (உங்களுக்கே கொடுத்துக்கனும்).அப்படி சொல்லும் போது யாருமே கவனிக்கலைனா ரொம்ப ஷாக்கா இருக்கும். அப்பவும் யாருமே தடுக்கலைன்னா அந்தப் பதிவ தூக்கிட்டு வழக்கம் போல கும்மி அடிக்க வரணும்.(யாராவது வந்து நம்மள கூப்பிடுவாங்கன்னு காத்துக் கிடந்தா நம்ம கடை நிரந்தரமா அடச்சே கிடக்கும்)

5. நமக்கு அது வராதோ இது வராதோ அப்படி எல்லாம் யோசிக்கவே கூடாது(அப்புறம் எதுவுமே வராது).எல்லாத் துறையிலும் அடிச்சி ஆடனும்.அப்புறம் எதுக்கு நமக்கு ஆதரவு கிடைக்குதோ அதுல நின்னு நிதானமா ஆடனும்.

4. மீ த பர்ஸ்ட்டு ,ஸ்மைலி அப்படி சாதாரணமா பின்னுட்டம் போடாம பதிவு போட்டவரையோ,இல்ல கமென்ட் போட்டவரையோ வைச்சி கும்மி அடிச்சிங்கனா நிறைய ஹிட்ஸ் கிடைக்குதோ இல்லையோ நிறைய திட்ஸ் கிடைக்கும்.அத எல்லாம் கண்டுக்காம திரும்ப அடுத்த பதிவுலப் போய் கும்மிய தொடரனும்.

3. பின்னுட்டம் போடுறவங்களுக்கு மட்டும் தான் மெயில மிச்ச இருக்கிற வழிய சொல்லுவேன்னு பிளாக் மெயில் பண்ணலாம். அப்படி பண்ணும் பொது கிடைக்கிற ஒன்னு ரெண்டு கமெண்டும் வரலைனா கம்பெனி பொறுப்பல்ல.

2. உங்க பதிவ மணிக்கு ஆறுபது தடவ நீங்களே திறந்து பார்த்துக்கலாம்.(24 * 60 = 1200௦) இத்தன ஹிட்ஸ் நிச்சயம்.கணக்கு தப்புன்னு பின்னுட்டம் வரலாம்.அத வரவு கணக்குல எடுத்துக்கலாம்.

1. கிசுகிசு நிறைய எழுதனும் அதுதான் நமக்கு ரொம்பப் பிடிக்கும்.இருக்கிற வேலை எல்லாம் விட்டுட்டு யாராவது பின்னுட்டம் போட்டா பாக்கலாம்னு அடிக்கடி வருவாங்க.

0. எல்லாத்தையும் நானே சொன்னா நல்லா இருக்காது.அது என் பதிவுலே இருக்கு.கண்டுபிடிச்சி பின்னுட்டத்துலப் போடுங்க.

ஆக மொத்தம் 11 வழிகள்.

சேரன்,பொக்கிஷம்,மாயக்கண்ணாடி,சுயசரிதை,நான்

அன்புள்ள சேரனுக்கு,

சேரன் தயவு செய்து படம் எடுப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.நிறுத்த முடியாது என்று நீங்கள் நினைத்தால் நடித்து மக்களுக்குத் தொல்லைக் கொடுப்பதை நிறுத்தி விடுங்கள்.எங்களை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்குது. மாயக்கண்ணாடி ஓடவில்லை என்றதும் மக்களின் ரசனையைக் குறைக் கூறினீர்கள்.இப்போ என்ன சொல்ல போறீங்க என்று ஆவலோடு அவலை மெல்லக் காத்திருக்கிறோம்.

சனிக்கிழமை அன்று கலைஞர் தொலைகாட்சியில் உங்கள் பேட்டியைப் பார்த்தேன்.படம் பார்த்து விட்டு மக்கள் கனத்தோடு போனார்கள் என்று நீங்கள் சொன்னதும் அது கணம் அல்ல ரணம் என்று புரிந்து விட்டது. ஒருவர் தொலைபேசியில் உங்களிடம் அழுதார்.மூன்று முறை படம் பார்த்து விட்டதாக சொன்னார்.எனக்கு ஒரு சந்தேகம் அவர் உங்களுடைய ஏதோ ஒருப் படத்தின் தயாரிப்பாளரா?.பேசிய அனைவரும் ஒரே ஒருப் படத்தை குறிப்பிட்டார்கள் அது உங்களின் ஆட்டோகிராப்.

நீங்கள் ஒரு ஆணியவாதி.ஆட்டோகிராப் படத்தில் உங்களைக் காதலித்த கோபிகாவை மறுபடியும் சந்திக்கும் பொது அவர் ஒரு விதவை என்று காட்டி இருப்பீர்கள்.அப்போது தானே குலுங்கி குலுங்கி அழ முடியும்.இந்த படத்தில் உங்களைக் காதலித்த பத்மபிரியா திருமணம் செய்யாமல் இருப்பதுப் போல இருக்கிறது.ஆனால் நீங்க கல்யாணம் செய்து குழந்தைக் குட்டியோடு இருப்பீர்கள்.(என்ன கொடுமை சேரன்,நேமி'சந்த்' ஜெபக்(இப்ப எந்த சந்துல நிக்கிறாரோ தெரியல) சார் இது).நீங்க செய்த ஒரே நல்ல காரியம் உங்கள் மகன் கதாபத்திரத்தில் நீங்கள் நடிக்காமல் இருந்தது தான்.

இனி மேல் ரெட்டை குதிரை மேல் செய்து தயாரிப்பைச் சில்லரை வார வைக்காதீர்கள்.

மொத்ததில் மாயக்கண்ணாடி - ஒருத் துளி விஷம்

பொக்கிஷம் - ஒருப் புட்டி விஷம்

பொக்கிஷம் பார்ப்பதற்கு மாயகண்ணாடியை இன்னும் சிலத் தடவைப் பார்ப்பேன்.

பொக்கிஷத்தில் கிடைத்த நீதி - தெரியாத தேவதையை(பொக்கிஷத்தை) விடத் தெரிந்த பேயே (மாயக்கண்ணாடியே) மேல்.

இப்படிக்கு


உங்கள் சுயசரிதை படித்து விட்டு பாபர் சுயசரிதைக்கு பிறகு சிறந்த சுயசரிதை சேரனுடையது என்று ஒருகாலத்தில் சொல்லிக் கொண்டுத் திரிந் வாண்டு.

***************
அடுத்தச் சர்ச்சை - கந்தசாமிக்கும் மாஸ்க் ஆப் ஜாரோவிற்கும் ஏதோ ஒற்றுமை உள்ளது.

பழைய ஜாரோ - கிருஷ்ணா(மகேஷ் பாபுவின் தந்தை)

பழைய ஜாரோவின் மகள் - ஷ்ரையா

புது ஜாரோ - விக்ரம்

கந்தசாமி பார்த்து விட்டு நொந்தசாமியாக மாறுங்கள்.

***************
ஒரு சந்தோசம்

நான் கிளப்பி விட்ட வதந்தி சாரு வரை போயுள்ளது. அது உண்மையாக வேண்டுகிறேன்.

சாருவின் தளத்தில்


என் பதிவு

Saturday, August 15, 2009

சினிமாவில் கலையும் பிம்பங்கள்

உங்களுக்குப் பிடித்த நடிகை யார் என்று கேட்டால் நிறைய பேர் சொல்லும் பெயர்கள் - நதியா,ஷோபா.இந்த பெயர்கள் தான் அதிகம் இடம் பிடிக்கும் கருத்துக்கணிப்புகள் நடத்தினால் கூட. நதியாவை நம்பியே சமீபத்தில் ஒருப் படத்தை ஓட்ட முயற்சி செய்தார்கள்.(பட்டாளம்).இவர்கள் நடித்தப் பழைய படங்களின் பாடல்களை இப்பொழுது போட்டால் கூட மாற்றாமல் பார்க்க ஒரு ரசிகர் கூட்டமே உண்டு.காரணம் அவர்கள் தேர்ந்து எடுத்து படங்கள்.இந்த பிம்பங்கள் என்றுமே கலையாது.

இனி கலைந்தப் பிம்பங்களைப் பார்ப்போம் (எனக்கு,இன்னும் சிலருக்கும் இருக்கலாம்)

1. சேது படத்தில் விக்ரமின் அண்ணியாக வருவார்.விக்ரமை அடித்துப் போட்ட பிறகு அவரைப் பாண்டி மடத்தில் சேர்க்க ஆட்கள் வந்து தூக்கிக் கொண்டுப் போவார்கள்.
அந்த காட்சியில் விக்ரமின் வெட்டி விலகி இருக்கும், அதை சரிப்படுத்துவார். கிராமத்தில் இருக்கும் என் மதினிகள் என் நினைவில் வந்து போனார்கள்.இவர் உருவில் அவர்களைப் பார்த்தேன்.இதற்கு முன் கே.பாலசந்தரின் காசளவு நேசம் நாடகத்திலும் வருவார். பிறகு கோலங்கள் நாடகத்தில் ஆதியின் அம்மாவாக நடிக்கும் போது நான் எழுந்துப் போய் வேறு ஏதாவது வேலைப் பார்ப்பேன். பிறகு சேது படத்தில் இவரைப் பார்க்கும் பொழுது என் கிராமமே மறந்து விட்டது.கூடவே மதினிகளும் மறந்து விட்டார்கள்.இவர் கோலங்கள் நடிக்காமல் இருந்திருந்தால்............

2. ஆட்டோகிராப் படத்தில் கோபிகா வரும் காட்சிகளை மட்டும் நிறைய முறைப் பார்ப்பதுண்டு. நானும் என் கல்லூரி நண்பர்களும் கோபிகா ரசிகர்களாக மாறிய காலங்கள் அது. லத்திகா லத்திகா என்று புலம்பிக நாட்கள் நிறைய. "நினைவுகள் நெஞ்சில் புதைந்தனால்" - இந்த பாடல் மட்டும் விடிய விடிய என் கணினியில் ஓடிக் கொண்டிருக்கும். சேரன் அந்த பெண்ணை மறக்க முடியாமல் சிகரெட் பிடிப்பார். வீட்டில் தெரிந்தவுடம் விசாரித்துக் கொண்டிருப்பார்கள்.சேரனின் சித்தப்பா சொல்வார்."அண்ணே விடுங்க தண்ணியா அடிச்சான்..சிகரெட் தானே..".இதை சொல்லி முடிக்கும் முன் அடுத்தக் காட்சியில் சேரன் தண்ணி அடித்துக் கொண்டிருப்பார். சேரனோடு நாங்களும் புலம்பிய ஓலங்கள் நிறைய. அவளுக்காகத் தண்ணி என்ன விஷத்தையேக் குடிக்கலாம் என்று சொன்ன நாங்கள் கனா கண்டேன் படம் பார்த்த பிறகு அவளைப் பற்றிப் பேசுவதையே நிறுத்தி விட்டோம்.சமீபத்தில் ஒரு நண்பரோடுப் பேசிக் கொண்டிருந்தப் போது அவர் சொன்னது "கோபிகாவைப் பிடிக்காது".காரணம் கனா கண்டேன் படம் தானே என்று நான் கேட்டதும் அவர் கேட்ட கேள்வி "உங்களுக்குமா ?".கோபிகா இந்தப் படத்தை நடிக்காமல் இருந்திருந்தால்............

3.இந்த நடிகை ஒரு பாசக்கார அம்மா,சித்தி,அண்ணி போன்ற வேடங்களில் நடிப்பவர்.கில்லி படத்தில் விஜயின் அப்பாவி அம்மாவாக வருவார். இவர் வந்தக் காட்சிகள் மிக இயல்பாக இருந்தது. எல்லா வீட்டிலும் அம்மாக்கள் இப்படித் தான் பாசமாக இருப்பார்களா என்று நினைத்ததுண்டு.எல்லாம் அயன் படத்தில் இவர் சரக்கடிக்கும் காட்சியைப் பார்க்கும் வரைதான்.இவர் இந்த படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால்............

இவர்கள் மேலிருந்தப் பிம்பங்கள் உடைந்து இருக்காது.

கடைசி இரு பிம்பங்களையும் உடைத்தவர் கே.வி.ஆனந்த்.

இதில் இருந்து நிஜ வாழ்கையில் கல்லூரி நண்பர்களின் பிம்பங்கள் உடைந்தப் போது மிக எளிதாக எடுத்துக் கொள்ளப் பழகி இருந்தேன். நானும் என் பிம்பத்தை முடிந்த வரை காப்பற்ற முயற்சித்து வருகிறேன்.கலையும் பிம்பங்களைக் கண்டுக்கொள்ளாமல் என் பிம்பம் கலந்து விடாமல் பார்த்து கொள்கிறேன்.

Friday, August 14, 2009

திருந்தாத தமிழ் சினிமா

கிராமத்த மையமா எடுத்தப் படம் வெற்றி அடைந்தால் எல்லாரும் கிராமத்துக்கு போய் ஒரு பாட்டுக்காவது கும்மி அடிச்சிட்டு வர்றீங்க. மதுரைய மையமா ஒரு படம் ஓடுச்சுனா உடனே அங்க போய் முகாம் அடிகிறீங்க.அதுவே ஒரு பெரிய பட்ஜெட் படம் ப்ளாப் ஆனா ராசி இல்லாத ஊருன்னு முத்திரை குத்துறீங்க.


ஹீரோவுக்கு ஒரு தங்கை இருப்பாள்.வில்லனுக்குக் கோபம் வந்தால் அந்த பெண்ணைக் கெடுத்து விடுவான். உடனே தேடிப் பிடிச்சி அவனுக்கே கட்டி வைக்கிறது. அதுவே ஒரு நாயகியைத் தப்பி தவறி கெடுத்து விட்டால் உடனே அவனுக்கு கட்டி வைக்காம வாழ்வு கொடுக்கிறேன் சொல்றது.அதுவும் தங்கை மாதிரி இருக்கிற பெண்ணைக் கெடுக்கும் போது அவளைத் தேடி சம்பந்தமே இல்லாத இடத்துல சுத்துறது,எல்லாம் முடிஞ்சதும் வர்றது,அதுவே நாயகினா உடனே வந்து குதிக்கிறது,முத்தம் கொடுக்க முயலும் போது ஷூவ சரியா உள்ள விடுறது.

வேலைத் தேடி போகும் போது நீங்க நல்லா பதில் சொன்னீங்க,ஆப்பாயின்மென்ட் லெட்டர் குடுக்கப் போறப்போ சரியா ஒரு போன் வந்து தொலைக்கும். வேலை கிடைக்காம போயிரும்.(ஐ.டி வேலைகள் நிறைய வந்த பிறகு இந்த கொடுமைகள் நின்று போனது)

தெலுங்கு படம் நல்லா இருந்தா அவன்கிட்ட காசுக் கொடுத்து படத்த வாங்கி ரீமேக் பண்றது, இதுவே கொரியன் படமோ,ஆங்கிலப் படமா இருந்தா சத்தமே இல்லாம உருவுறது.(இன்றைய நிலவரப்படி கடைசி உருவல் - பொக்கிஷம் கிளாசிக் என்ற கொரியன் படத்தில் இருந்து)

ஒரு நடிகைத் தெரியாத்தனமா கவர்ச்சியா நடிச்சிட்டா போதும்.அதே மாதிரி எல்லாப் படத்திலையும் கொடுத்துப் படம் பாக்குற எல்லோரையும் கொடுமைப்படுத்துறது.இதுவே பிரியங்கா சோப்ரா,பிபாஷா பாசு,அமீஷா பட்டேல் நடிச்சா அவங்களைக் கவர்ச்சியா காட்டுறதே இல்லை (முதல்ல ஹிந்திப் படம் பாருங்க)

இப்படி ஒரு படம் தமிழ்ல வந்ததே இல்லனு பீலா உடுறது,போய் பார்த்தா பாக்குறவன் எல்லாம் இப்படி ஒரு படம் வராமலே இருந்துருக்கலாம் என்று நினைச்சிகிட்டே போறாங்க. படம் ரீலிஸ் ஆகும் முன்னாடியே வெள்ளிவிழா போஸ்டர் அடிச்சு அந்த செலவையும் தயாரிப்புத் தலையிலே கட்டுறது.

ஹீரோவப் பிடிச்சி வைச்சு இருவது நிமிஷம் சாகடிக்காமப் பேசியே மொக்கைப் போடுறது,அந்த கேப்ல ஹீரோ வில்லனைக் கொலை செய்து விடுவார்.(டேய் வில்லனுகளா நான் உங்கள கேட்குறேன் நீங்க தமிழ் படம் பாப்பீங்களா இல்லையா)

நைட்ல தனியா ஒன்னுக்குப் போகவே பயப்படுற ஹீரோ (நிஜத்தில்) சினிமாவில் லோக்கல் ரவுடி முதல் அமைச்சர் வரைக்கும் ரவுண்டு கட்டி அடிச்சி நீங்களும் அரசியல் ஆசையோட திரியிறீங்களே இது நியாயமா ?

டிஸ்கி : உனக்கு வேலையே இல்லையா அப்படி யாரும் கேட்காதீங்க. உண்மை சுடுது.

Thursday, August 13, 2009

கே.பாலசந்தர் செய்த தவறுகள் - விடுபட்டவை

போன பதிவில் நான் சரியாக அலசவில்லை,அழுக்குப் போகவில்லை என்று துபாய் ராஜா சொன்னவுடம் நான் சிரித்து விட்டேன்.குறும்பலூர் சரவணனும் இதையே சொன்னார். அவர்களுக்காக மேலும் ஒரு துவைப்பு,அலசல். இப்பவும் அழுக்குப் போகவில்லை என்று சொன்னால் நான் ஒரு பதிவு பார்த்தேன்.அதை உங்களுக்கு தருகிறேன்.அது பாமரன் பக்கங்கள் (துவைத்து சட்டையைக் கிழித்து விட்டார்).

பாலசந்தர் களத்தை,காலத்தை இரண்டாக பிரித்து விடலாம்.

அரங்கேற்றம் எடுப்பதற்கு முன்னால்,எடுத்ததற்கு பின்னால்.

அரங்கேற்றம் எடுப்பதற்கு முன்னால் நகைச்சுவை, குடும்பம்,சஸ்பென்ஸ் படங்களையே எடுத்தார்.

அரங்கேற்றம் படத்திற்கு பிறகு பெண்கள் சார்ந்த படங்களே நிறைய. அப்படி கொஞ்சம் அல்லது நிறைய வித்தியாசம் காட்டிய படங்கள் இங்கு.

நிழல் நிஜமாகிறது - ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் உள்ள ஈகோ பற்றிய கதை.கம்பன் ஏமாந்தான் என்ற அருமையான பாடல் உண்டு .

தப்புத்தாளங்கள் - ரவுடி ஒரு வேசியை திருமணம் செய்வது.

நினைத்தாலே இனிக்கும் - ரஜினி நகைச்சுவையில் கலக்கிய படம்.

தில்லு முல்லு ,47 நாட்கள்(சிவசங்கரி),உன்னால் முடியும் தம்பி(கணேஷ்) இந்த படத்தின் கதைகளை பாலசந்தர் பிறரிடம் எடுத்து அருமையான திரைக்கதை அமைத்தார்.

இது போல அவர் பிறரின் வித்தியாசமான கதைகளுக்குத் திரைக்கதை அமைக்காமல் ஒரு பெங்காலி படத்தின் கதையில் அவரின் வழக்கமான திரைக்கதையை வைத்தார் - பார்த்தாலே பரவசம்.

பெண்களுக்கானப் புரட்சிப் படம் எடுத்த காலத்தில் (1974-1990௦) பெண் சுதந்திரம் மிகக் குறைவாக இருந்தது. மக்களும் படத்தை ரசித்தார்கள். பாலச்சந்தரின் இரு கோடுகள் படத்தில் வரும் சின்னக்கோடு பெரிதாக மாறும். (1974-1990௦) சின்னக்கோடாக இருந்த பெண் சுதந்திரம் இப்பொழுது பெரியக்கோடாக மாறி வருகிறது.அனால் பாலச்சந்தர் மாறவில்லை. இதுவே அவர் செய்த தவறு.

அதைப் போல பார்வையாளர்களின் ரசனை மாறி கொண்டே இருக்கிறது.படைப்பாளிகளின் ரசனை ஒரு எல்லையோடு நிண்டு விடுகிறது.இதுவும் பாலச்சந்தருக்கு நேர்ந்தது.பாக்யராஜுக்கு நேர்ந்தது.பாலா மாறவில்லை என்றல் அவருக்கும் நேரும். பார்வையாளர்களின் ரசனைக் கோடுகள் வளர்கிறது.படைப்பாளிகளின் ரசனைக் கோடுகள் ஆரம்பம் முதல் ஒரே உயரத்தில் இருக்கிறது.

சரவணனின் அடுத்த பாயிண்ட்

நான் பாலாவையோ,பாக்யராஜையோ,சசிகுமரையோ நக்கல் செய்யவில்லை.

பாக்யராஜ் - இவரைப் பார்த்து மற்ற இயக்குனர்கள் நடிகர்கள் ஆனார்கள். (பாண்டியராஜன் ,பார்த்திபன்,டி.ராஜேந்தர் தொடங்கி சேரன்,மிஸ்கின் வரை நடிக்கிறார்கள்.)

பாலா - சேது படத்தில் தொடங்கிய படலம் வெண்ணிலா கபடிக் குழு வரை தொடர்கிறது (இறுதியில் நாயகன் அல்லது நாயகியைக் கொன்று விடுவது).பாலாவின் நான்குப் படத்திலும் இது நடந்தது.

சசிகுமார் - இவர் முதல் படத்தை இவரே தயாரித்ததால் இன்று இவரை எல்லோருக்கும் தெரியும். அப்படி இல்லாதப் பட்சத்தில் இன்னும் இந்த கதையை வைத்து கொண்டு அலைந்திருப்பார். நமக்கு பசங்க,நாடோடிகள் எந்த படமும் கிடைத்து இருக்காது.

கே.எஸ்.ரவிக்குமார் தசாவதாரம் படத்தைத் தவிர மீதி எல்லா படத்துக்கும் அவர் தான் திரைக்கதை.இதில் சரவணனின் மூன்றாவது பாயிண்ட் அடி வாங்குகிறது.

டிஸ்கி : இனி தொடர்ந்து பாரதிராஜா,பாக்யராஜ்,பாலு மகேந்திரா போன்ற இயக்குனர்களின் ஷாட்ஸ் பற்றிய பதிவு வரும்.

Wednesday, August 12, 2009

கவுண்டமணி,செந்தில்,பன்றிக்காய்ச்சல்

கவுண்டமணி ஆல் இன் ஆல் அழகுராஜா க்ளினிக்கில் டாக்டராக வேலை பார்க்கிறார்.செந்தில் ஓடி வருகிறார்.

கவுண்டமணி : ஏன் இந்த பன்னி நாலுக் கால்ல உருண்டு வருதுன்னு தெரியலையே.

செந்தில் : அண்ணே..அண்ணே.. பன்னிக்காய்ச்சல் அப்படினா என்ன?

கவுண்டமணி : அது உனக்கு வராது..மனுஷங்களுக்கு மட்டும் தான் வரும்..

செந்தில் : அப்ப உங்களுக்கும் வராதுண்ணே..ஹி ஹி (சிரிக்கிறார்)

கவுண்டமணி : சரி சொல்றேன் கேட்டுக்கோ அது பன்னிக்கிட்ட இருந்து மனுசனுக்கு வருது..இனிமே உங்க க்ரூப் டெலிவரி ஆகுற இடத்துக்கு அடிக்கடிப் போகதே..

செந்தில் : விளக்கமா சொல்லுங்க அண்ணே..

கவுண்டமணி : அது ஒரு வைரஸ்..

செந்தில் : வைரஸ்னா..

கவுண்டமணி : அது ஒரு கண்ணுக்குத் தெரியாத மிருகம்..தும்மல்..ஜலதோஷம் மூலமா பரவும்..ஹச்..ஹச்..(தும்முகிறார்)

செந்தில் : அண்ணே உங்கள அந்த கண்ணுக்குத் தெரியாத மிருகம் கடிச்சிருச்சு..

செந்தில் கட்டையை எடுத்து கவுண்டமணி மூக்கில் அடிக்க வருகிறார்.கவுண்டமணி சரியான நேரத்தில் கட்டையைப் பிடித்துக் கொள்கிறார்.

கவுண்டமணி : டேய் நீ யாரு எப்படினு எனக்குத் தெரியும்..என்னப் பத்தி உனக்குத் தெரியும்..ஏற்கனவே காலரா ஒரு கண்ணுக்குத் தெரியாத மிருகம்னு சொன்னதுக்கு என் காலை உடச்சவன் நீ..இந்த தடவை நீ நினைக்கிறது நடக்காது..எல்லாத்தையும் செஞ்சுட்டு மூழிக்கறதப் பாரு பச்சப்புள்ள மாதிரி..

ஒரு நோயாளி வர அவருக்கு கவுண்டமணி ஊசிப் போடுகிறார்.

செந்தில் : ஊரு ரொம்ப கெட்டுப் போச்சுண்ணே..

கவுண்டமணி : எப்படிடா?

செந்தில் : ஊசிப் போடுறவன் எல்லாம் டாக்டர்னு சொல்றான்.

கவுண்டமணி பேப்பர் வெயிட்டை துக்கிப் செந்தில் மீது எறிகிறார்.அது சரியாகக் குறித் தவறி நர்ஸ் மேல் விழுகிறது.

கவுண்டமணி : நான் வேணா ஊசிப் போடவா..

நர்ஸ் : டாக்டர்.. மேடம்..

கவுண்டமணி : அவங்களையும் வரச் சொல்லு..ஊசிப் போடுறேன்.

கவுண்டமணி மனைவி வந்து அவர் கையை மடக்கி நாலு அடி அடிக்கிறார்.

செந்தில் : ஹி..ஹி.. (ஆங்கில செய்திதாளுடன் வருகிறார்)

கவுண்டமணி : என்னடா இது..

செந்தில் : நீங்க ஒன்னும் சொல்லித் தர வேண்டாம்..நானே படிச்சித் தெரின்சுகுவேன்.

கவுண்டமணி : உனக்கு படிக்கத் தெரியுமா? பத்து வருசம் நேபாள்ல டாக்டருக்குப் படிச்ச நானே இத வாங்குறதில்ல..நீ வாங்குர.. நீ ஐந்து,பத்துப் பிச்சைக்கு இதெல்லாம் தேவையா ?

செந்தில் : prevention is better than cure..

கவுண்டமணி : இங்கிலீஸு..ஏழாவதுப் படிச்சிட்டு லொள்ளப் பாரு..

செந்தில் : நான் ஏழாவதுப் பாஸு..நீங்க டாக்டர் படிச்சுப் பெயில்.. பாஸ் பெரிசா.. பெயில் பெரிசா

கவுண்டமணி : டேய் வெளிய சொல்லாத..இந்தாடா 1000 ரூபா..

கவுண்டமணி செந்திலை மாட்டி விடத் திட்டம் போடுகிறார்.

கவுண்டமணி : நாம் ஊரு நாட்டாமைக்கு பன்னிக்காய்ச்சல்..நீ போய் எதாவதுப் புத்திசாலித்தனமாப் பேசு..அப்படியே இந்த மருந்தப் போடு..

பத்து நிமிடம் கழித்து செந்திலை எல்லோரும் அடித்து இழுத்து வருகிறார்கள்.

நாட்டாமை : நானே பயத்துல மாஸ்க் போட்டுகிட்டு இருந்தா..நீங்க தீவிரவாதியான்னு கேட்குறான்..இவன இனிமே இங்க பார்த்தேன் உன் ஆஸ்பத்திரில ஒரு செங்கல் கூட இருக்காது..

கவுண்டமணி : என்னடா சொன்ன ?

செந்தில் : நாட்டாமைக்கு வாயுத் தொல்லை..கேஸ் உட்டாரு..நான் இது மூலமாவும் பன்னிக்காய்ச்சல் பரவுமானு கேட்டேன்..

கவுண்டமணி : வேற என்ன சொன்ன..

செந்தில் : நாம இப்படி மாஸ்க் போடுறதுக்கு பதிலா ஜலதோஷம் இருக்கிற பன்னிங்களுக்கு போட்டிருந்தா நமக்கு வரவே வராதுல்ல..இது கூட தெரியல நீயெல்லாம் ஒரு நாட்டாமையான்னு கேட்டேன்..

கவுண்டமணி : அதுவாடா மருந்து போடுற பையனுக்கு இவ்வளவு அறிவானு உன் மேல அந்த பயலுகளுக்கு பொறாமை..

செந்தில் : அக்காண்ண..

கவுண்டமணி : இத நீ கல்வெட்டுல பொறிச்சு வைச்சிட்டுப் பக்கத்திலே இரு..உனக்கு பின்னாடி வர்ற சந்ததியர் அதப் பார்த்துப் படிச்சு உஷாரா இருப்பாங்க..

ஆஸ்பத்திரிக்கு வெளியே வந்தவுடன் செந்திலுக்கு எட்டி ஒரு உதை விடுகிறார்.

கவுண்டமணி : என்ன ஒரு தொழில கூட செய்ய விடவே மாட்டியா..இனிமே இங்க வந்த உன் நாக்க புடுங்கிடுவேன்.

செந்தில் : பாஸ் பெரிசா..பெயில் பெரிசா.. என்று கவுண்டமணியின் ரகசியத்தை ஊர் முழுக்கப் பரப்ப ஓடுகிறார்.

கவுண்டமணி செந்திலைத் தடுக்கத் துரத்திக் கொண்டு ஓடுகிறார்.

Tuesday, August 11, 2009

கே.பாலசந்தர் செய்த தவறுகள்

தமிழர்கள் சாப்பிடும் உணவுகளிலே வித்தியாசம் காட்டுபவர்கள். அவிச்சா இட்லி,மாவை ஊத்தித் திருப்பினா தோசை,திருப்பலைனா ஊத்தப்பம், பிழிந்து அவிச்சா இடியாப்பம்.இப்படி சாப்பிட்டவர்கள் இப்போ பீஸா,பர்கர்னு மாறிடாங்க.இன்னும் மாறாம ஒரே மாதிரி படத்தக் குடுத்தால் பிறகு ஓய்வு எடுக்க வேண்டியது தான்.

கே.பாலசந்தர் செய்த தவறும் இது தான்.அவர் ஒரு ட்ரெண்ட் செட்டர். புராணப் படங்களும்,சமூக படங்களும் ஆண்களை முன்னிறுத்தி வந்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் பெண்களை மையமாக வைத்து படம் எடுத்தவர். அதையே அவர் கடைசி வரை செய்தது தான் தவறுகளின் உச்சம்.

அப்படி அவரை ட்ரெண்ட் செட்டராக மாற்றிய படங்கள் - அவள் ஒரு தொடர்கதை,அபூர்வ ராகங்கள்,அவர்கள்

இந்த படங்கள் தான் இன்றைய மெகாத்தொடர்களின் தொடக்கம்.

தொலைக்காட்சி வந்தப் பிறகும் அதே பாணியில் அவர் எடுத்தப் படங்கள் - கல்கி,பார்த்தாலே பரவசம்,பொய்.

தமிழ் சினிமாவின் பிற ட்ரெண்ட் செட்டர்கள்.

பாரதிராஜா - சினிமாவை ஸ்டியோவில் இருந்து அவுட்டோருக்குக் கொண்டு சென்றவர்.

பாக்யராஜ் - நல்ல கதை இருந்தால் யார் நடித்தாலும் ஓடும் என்று நிருபித்தவர்.

மணிரத்னம் - ஒளிப்பதிவாளர்களுக்கு மக்கள் கைத் தட்ட தொடங்கியது இவர் மூலம் தான்.

பாலா - மனதில் படம் நிற்க இறுதியில் யாரையாவது சாகடிப்பது இவர் சேது மூலம் தொடங்கியது.

செல்வராகவன் - ரெயின்போ காலனிக்குப் பிறகு படுக்கையறைக் காட்சிகளோடு வந்த படங்கள் நிறைய.

சசிகுமார் - முதல் பட்த்திலேத் தயாரிப்பாளராக மாறியவர்.

கே.பாலசந்தரின் படத்தின் கதையின் மையக்கரு ஒன்றுப் போலவே இருக்கும்.உதாரணம் 1 ஆண் : 3 பெண், 3ஆண் : 1 பெண். நாயகனையோ, நாயகியையோ இரண்டு முதல் மூன்று நபர்கள் அவர்களை விரும்புவார்கள்.

1 ஆண் : 3 பெண் (சொல்லத்தான் நினைக்கிறேன், அழகன்,கல்கி,பார்த்தாலே பரவசம்)

3 ஆண் : 1 பெண் (மூன்று மூடிச்சு, அவர்கள்,டூயட்)

2 ஆண் : 1 பெண் (மனதில் உறுதி வேண்டும், அபூர்வ ராகங்கள்)

1 ஆண் : 2 பெண் (புது புது அர்த்தங்கள்,புன்னகை மன்னன்,இரு கோடுகள்,சிந்து பைரவி)

இப்படி கதைகளில் கோட்டை விட்டு விட்டு கதாப்பாத்திரத்தில் கொடியை நாடியவர். கோட்டை இல்லாமல் கொடியை வைத்து என்ன செய்ய முடியும்?

மேலும் அவரின் பெரும்பாலான படத்தில் ஏதாவது முக்கிய கதாப்பாத்திரம் தனியாக நிற்கும்.அவருடைய சிஷ்யர்கள் (வசந்த்,சரண்) இது போன்ற கதைகளைத் துவைத்துக் காயப் போட்டதும் அவருக்கு ஒரு மைனஸ்.

அதை விட கொடுமை சிந்து பைரவி படத்தின் இரண்டாம் பாகத்தைச் சஹானா என்று ஒரு தொடராக எடுத்து மக்களை ராவு ராவு என ராவியது. இப்படி கொடுமைப்படுத்துவதற்கு முன் தான் கையளவு மனசு,காசளவு நேசம்,ஜன்னல் போல நல்லத் தொடர்களைக் கொடுத்தார்.

இன்னொருக் குறை முப்பது வருடங்களுக்கு பிறகு வந்து வெற்றி பெற்ற "நான் அவனில்லை" மக்கள் புரிந்து கொள்ளாத 1974ம் ஆண்டு எடுத்தது.

இப்படி எடுத்தக் கதையையே எடுத்து பாலசந்தருடன் இணைந்தவர்கள் பாக்யராஜ்,பாலு மகேந்திரா, மகேந்திரன், பாண்டியராஜன்,கங்கை அமரன்,உதய குமார்,விக்ரமன்.

இணைய இருப்பவர்கள் - பாலா,ஷங்கர்,சேரன்,மிஷ்கின்,பாலாஜி சக்திவேல்,செல்வராகவன்.

இணையாமல் இருக்க பாரதிராஜா, மணிரத்னம்,கே.எஸ்.ரவிக்குமார் போல அடுத்தவர்களிடம் கதையை வாங்கி திரைக்கதையில் விளையாட வேண்டும்.

Monday, August 10, 2009

உரையாடல் போட்டியின் வெற்றிக்குப் பிறகு அடுத்தப் போட்டியைப் பற்றிய அறிவிப்பு - 2

முன் குறிப்பு : புதுப் போட்டியை அறிவிக்கிறார்கள். விதிமுறைகளில் அரவிந்த்தும்,அதிஷாவும் பிரச்சினை செய்கிறார்கள் . விதிமுறை தளர்த்தப்படுகிறது.அரவிந்திடம் புதுப் பெயரை வால்பையன் கேட்க...பிறகு....

விளக்கம் : இந்த போட்டி ஆங்கில அகரவரிசைப்படி நடத்தப்படுகிறது.(அதிஷா டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி)

முதல் பாகம் படிக்க

அரவிந்த் : ஜிங்காரோ.எப்படி இருக்கு?

அதிஷா : இந்த பெயர்ல ஒரு பதிவர் இருக்கிறார்.

அரவிந்த் : அது நீங்க தானே. நான் இசட்ல ஆரம்பிக்கிற பேர் தான் வைப்பேன்.அப்பத்தான் நான் போகும் சிங்கம் என்னை கடிக்காது. தூங்கி இருக்கும்.

ஒவ்வொரு பெயராக சொல்ல சொல்ல அது சைனீஸ், அது இது என நிராகரிக்கப்படுகிறது.

அரவிந்த் : நான் முடிவு பண்ணிட்டேன். ஜீப்ரா நல்ல இருக்கா ?

தண்டோரா : என்ன ப்ரா ?

அரவிந்த் : அண்ணே ஏதோ ஒரு பதிவுல உங்க காலை உடைச்சேன்னு சொல்லிட்டு நீங்க உங்க பேர மாத்திகிட்டிங்க. என்ன வேற நல்லா வாட்ச் பண்ணுறீங்க.

(குருஜி வருகிறார். புதுப் பெயரை எல்லாம் எடுத்துப் பார்த்தப் பின் விதிமுறையில் சில மாற்றங்களை அறிவிக்கிறார்)

1. சிங்கத்திற்கு பதில் கூண்டுக்குள் புலி இருக்கும்.

2. பெயர் இசட்டில் இருந்து ஆரம்பிக்கும்.

கார்க்கி : பரிசல் இப்போ நீங்க தான் முதல்ல போகணும். அதுக்குள்ள நான் ஒரு பதிவும் நாலு மீள் பதிவும் போட்டுருவேன்.

நாடோடி : நர்சிம்,நல்ல வேளை இப்பவும் நாம நடுவில வர்றோம்.

வினோத் (அதிஷா) : நான் சொல்லல நீயே அப்புல போய் உக்காருவேன்னு.

தண்டோரா : போ புலிக்கு ஜீப்ராவை ரொம்ப பிடிக்கும். அய்யோ பாவம்னு பார்த்தா ஓவரா பேசுற.கடைசிலே இப்படித்தான் ஆகும்.

அரவிந்த் : புத்தூர் கட்டுக்குக் காசு தர்றேன்.என்ன காப்பாத்துங்க.

தண்டோரா : (யோசித்து விட்டு) அடுத்த பதிவுல கைய உடைப்ப.நீ உள்ளேயே போ.

குருஜி : ரூல்ஸா பேசுற.. எப்படி பார்த்தாலும் நீ தான் வருவ.நீ பேர எந்த எழுத்துல வைச்சு இருந்தாலும் உன்கிட்ட இருந்து தான் ஆரம்பிப்போம்.

அரவிந்த் : அப்ப நான் ஏன் திவ்யா எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது - 2 எழுத முடியாதா.

வினோத் (அதிஷா) : இந்த பாயிண்ட நாங்க பின்னூட்டத்துல உன் சார்பா போடுறோம்.கவலைப்படாதே. என்ன லக்கி உங்க சிஷ்யன் உள்ள போறதுக்கு வருத்தப்படுறீங்களா ?


லக்கி : அதுக்கு இல்ல,அடுத்தது நாந்தான். தோழரே நான் உனக்கு என்ன பாவம்யா செஞ்சேன். நல்லது பண்ணுவீங்கனு பாத்தா எனக்கு இப்படி ஆப்பு வைக்கிறீங்க.

அதிஷா : முதல்ல அவன் போகட்டும் ஏதாவது செஞ்சு நிச்சயமாக காப்பாத்துவேன். எதுவும் முடியலனா நானும் உங்க கூட வர்றேன்.

லக்கி : புலிக் கிட்ட பிடிச்சுக் குடுக்கவா ?

அரவிந்த் உள்ளே போனவுடன் புலியைப் பார்த்து மயக்கம் போட்டு கிழே விழுகிறார்.பத்து நிமிடங்கள் கழித்து ஒரு குரல் கேட்கிறது. பார்த்தால் கை,கால்கள் கட்டிப் போட்ட நிலையில் குசும்பன்.

குசும்பன் : கட்ட அவுத்து விடு.

அரவிந்த் : அங்க வால்பையன் உங்களத் தேடுறாரு. இங்க நீங்க என்ன பண்ணுறீங்க.

குசும்பன் : புலியப் பிடிக்கிறதுக்கு ஆடு இல்லைன்னு சொல்லிட்டு என்ன பிடிச்சு ஆடு மாதிரி கட்டுப் போட்டுடாரு. அவர பின்னுட்டத்துலக் கிண்டல் பண்றேன்னு சொல்லிட்டு இப்படி செஞ்சுடாரு.

அரவிந்த் : அப்ப அந்த புலி எங்கே ?

குசும்பன் : அங்கே அந்த ஓரத்தில்

புலி மூலையில் முகத்தை மறைத்து கொண்டு அமர்ந்து இருக்கிறது.

அரவிந்த் : புலிக்கிட்ட கூட உங்க குசும்ப விடலையா? என்னவோ செஞ்சு இருக்கீங்க

குசும்பன் : என்ன நல்ல புலியா இல்ல கெட்ட புலியான்னு கேட்டேன்.

அரவிந்த் : இல்ல வேற என்னமோ இருக்கு

குசும்பன் : கொட்டை எடுத்த புளியா இல்ல எடுக்கத் புளியான்னு கேட்டேன்.

அரவிந்த் : என்ன கையிலே ரத்தம்?

குசும்பன் : இதுவும் அவர் வேலதான். ரத்த வாசனைக்கு புலி வரும்னு கைய கிழிச்சுட்டாரு.

ஒரு வழியாக வெளியே வந்ததும் குசும்பன் வால்பையனுக்கு போன் செய்து குருஜியைப் பிடித்து வைக்க சொல்கிறார். எல்லா சரக்கையும் லஞ்சமாக தருகிறேன் என்று வாக்கு கொடுக்கிறார்.

குசும்பன் : எனக்கு என்னமோ இங்க யாரோ அந்த புலியப் பிடிச்சிக் கிட்டு இருந்த மாதிரி இருக்கு.

அரவிந்த் : பின்ன 30௦ நிமிசமா உங்கள ஒண்ணுமே பண்ணலையே ?

குசும்பன் : எனக்கு ஒன்னும் ஆகல.அதுதான் உனக்கு பிரச்சனையா ?
வெளியே இருக்கும் பதிவர்களின் பெயரை எல்லாம் சொல்லு.

குசும்பன் : கண்டுப் பிடிச்சுட்டேன். உண்மைத்தமிழன் எடுத்த குறும்படம் தெரியுமா?

அரவிந்த் : பேரு தான் குறும்படம்.விஜய் டி.வி ல வர்ற குட்டிப்படம் அளவுக்கு ஓடும் .

புலியைப் பிடித்திருக்கும் கயிறை விட்டு விட்டு ஓடி வருகிறார் உண்மைத்தமிழன்.

அரவிந்த் : எப்படி கண்டுப் பிடிச்சீங்க ?

குசும்பன் : அப்பனே முருகான்னு சத்தம் அடிக்கடி கேட்டது.

புலி பைத்தியக்காரனைத் துரத்தி கொண்டு ஓடுகிறது.

வால்பையன் குருஜியை பிடித்துக் கொள்கிறார். குருஜி காரணம் தெரிந்த உடன் "கென் கிட்ட சொல்லி இதை விட நிறையச் சரக்கு வாங்கி தருகிறேன்." என்று சொன்னவுடன் அவரை விட்டு விட்டு இருட்டில் மாட்டுபவரைக் கோணிப் பையில் கட்டி குசும்பனிடம் கொடுக்கிறார்.

உண்மைத்தமிழன் : இந்த மாச என்னோட குறும்படத்த போடுறேன்னு சிவராம் வாக்குக் கொடுத்து இருந்தார்.அதை கெடுத்திட்ட. நீ தான் அந்த படத்த பாக்கணும்.

அரவிந்த் : மாயக்கண்ணாடி படத்த பாக்கும் பொழுது உங்க படத்த பாக்க மாட்டேனா ?

அவர் அசந்து இருக்கும் நேரத்தில் சட்டையைக் கூட மாட்டாமல் ஓடி போகிறார் அரவிந்த்.

உண்மைத்தமிழன் : (போனில்) உன் சட்டையில் இந்த அட்ரஸ் கிடைச்சுது. இதுக்கு கொரியர் பண்றேன். உங்க ஆபீஸ்ல எல்லாரும் சேர்ந்து பாருங்க.

அரவிந்த் : என்ன அட்ரஸ் ?

உண்மைத்தமிழன் : அ ,
4 வது குறுக்கு சந்து,
விவேகானந்தர் தெரு,
(பஸ்டாண்டு அருகே)

அரவிந்த் : அது உங்க தோஸ்த் அபிஅப்பா அட்ரஸ்.

புலியிடம் இருந்து பிழைத்ததால் 10 லட்சம் பரிசு பணம் சிவராம் அண்ணனுக்கு வழங்கப்படுகிறது. அதைக் கண்டு சில பதிவர்கள் பின்னுட்டத்தில் பொரிகிறார்கள்.இது "மேட்ச் பிக்சிங்" என்று கொதிக்கிறார்கள்.

துபாயில் பார்சலை பிரித்து பார்த்தால் அண்ணன் பாலபாரதி.ஓடப் பார்க்கும் குசும்பனைப் பிடித்து வெளுத்துக் கட்டுகிறார்.

உரையாடல் போட்டியின் வெற்றிக்குப் பிறகு அடுத்தப் போட்டியைப் பற்றிய அறிவிப்பு - 1

உரையாடல் போட்டிக்குப் பிறகு என்ன போட்டியை நடத்தலாம் என்று பைத்தியக்காரனும்,குருஜியும் யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பதிவர்கள் வெளி நாடுகளிலும்,வெளி மாநிலத்திலும் இருந்து கொண்டு விமர்சனக் கட்டுரை எழுதுவதால் "அவர்கள் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்" என்று பதிவர்களின் வீரத்தைப் பற்றிச் சிலர் சந்தேக விதைகளை விதைக்கிறார்கள். அதனால் பதிவர்களின் வீரத்தை நிருபிக்க ஒரு போட்டியை நடத்த முடிவு செய்கிறார்கள் இருவரும். பரிசு 10 லட்சம் (யார் வீட்டு பணமோ). போட்டியின் விதிகளைப் போட்டி நடக்கும் அன்று தான் தெரியும் என்ற அறிவிப்பு வருகிறது. அதை தொடர்ந்து பதிவர்கள் அனைவரும் சென்னையில் கூடுகிறார்கள்.


போட்டிக்கு ப்ளீச்சிங்க் பவுடர் வந்து இருக்கிறாரா என்று அனைவரும் தேடுகிறார்கள். கண்டுப் பிடிக்க முடியவில்லை.


அரவிந்த் : தோழர் அதிஷா


அதிஷா : நீ எனக்கு தோழர் இல்ல பாலர்.


அரவிந்த் : அப்ப மாமா அதிஷா இது ஒ.கே வா


அதிஷா : பேர் சொல்லியேக் கூப்பிடு. (மனதுக்குள்) இவனுக்கு ஒரு சின்ன சைஸ் ஆப்பு வாங்கி அடிச்சா தான் அடங்குவான் போல இருக்கு.


போட்டியின் விதிகளை இருவரும் (பைத்தியக்காரன்,குருஜி)
அறிவிக்கிறார்கள்.


1.சிங்கம் இருக்கும் கூண்டுக்குள் இந்த வழியாக போய் வேறு வழியாக வர வேண்டும்.


2.அகரவரிசையில் பதிவர்கள் கூண்டுக்குள் போக வேண்டும்.


இதை கேட்டவுடன் அரவிந்த் பிதாமகன் லைலா மாதிரி மண்ணில் விழுந்து அழுகிறார். அதிஷாவுக்கு வாய் கொள்ளாச் சிரிப்பு.காரணம் அரவிந்த் பெயர் முதலில் இருக்கிறது.


அரவிந்த் : என்ன சிரிப்பு சின்னப்புள்ள தனமா?


அதிஷா : உன்ன பார்த்தா எனக்கு சிரிப்புப் பதிவர் மாதிரி இருக்கு. (மீண்டும் சிரிக்கிறார்).உனக்கு நான் ஆப்பு அடிக்க வேண்டாம்.நீயே ஆப்புல போய் உக்காருவ.


அரவிந்த் : (அழுவதை நிறுத்தி விட்டு) ரொம்ப சிரிக்காதீங்க. (சிரிக்கிறார்)


அதிஷா : இந்த துன்பத்திலும் எப்படி சிரிக்கிற ?


அரவிந்த் : எனக்கு அடுத்து நீங்க தான். அத நினைச்சேன்,சிரித்தேன்.


அதிஷா : ஆதி இருக்காக.


அரவிந்த் : அவர் தாமிரானு போட்டியிலே பேர் கொடுத்து இருக்கார்.


அதிஷா : யார கேட்டு மாத்தினாரு. இரு போய் அவரு இடுப்புல குத்திட்டு வரேன்.அனுஜன்யா இருக்காக.


அரவிந்த் : அவர் யூத்தாம். அதனால வொய் வரிசையிலே வருவாராம்.


அதிஷா : இது முன்னாடியே தோழருக்குத் தெரியும் போல.அதான் உஷாரா லக்கிய யுவகிருஷ்னா என்று மாத்திக்கிட்டார்.


அரவிந்த் : எங்க அம்மா கூட சொன்னாங்க. புனைப்பெயர்ல எழுது சொன்னாங்க.நான் கேட்காம மாட்டிகிட்டேன்.


அதிஷா : ஆமா புனைப்பெயர்ல எழுதிடாலும். சரி தப்பிக்க ஏதாவது வழி சொல்லு.


அரவிந்த் : குருஜியோட ஒரண்டை இழுப்போம்.நீங்க தொடங்கி வைங்க


அதிஷா : நீயே இழு.


அரவிந்த் : முடியாது.நான் உள்ளே போக பயம் கிடையாது. நீங்க தான் தொடங்கனும்.


அதிஷா : (குருஜியை பார்த்து) போங்கையா நீங்களும் உங்க போட்டியும். எம் பேரு வினோத்.நான் அந்த பேர்ல தான் போட்டிப் போடுவேன்.


அரவிந்த் : அதானே எனக்கும் ஒரு புனைப்பெயர் இருக்கு நான் அதுல தான் போட்டிப் போடுவேன்.


குருஜி : சரி ஒரு தடவை தான் பேர் மாத்தலாம். (அரவிந்தை முறைத்துப் பார்த்துக் கொண்டே செல்கிறார்)


அரவிந்த் : அப்பாடா தப்பிச்சோம்.


நர்சிம் : நாடோடி, நல்ல வேளை நாம நடுவில வர்றோம்.


பரிசல் : கார்க்கி,எனக்கு முன்னாடி நீதான் போகனும். அதுக்குள்ள நான் எப்படியும் மூனு பதிவு போட்டு விடுவேன்.


வால்பையன் : குசும்பன் எங்கே, சரக்கு அங்கே.


கொஞ்ச நேரம் கழித்து


அரவிந்த் : அய்யா சிங்கம் களம் இறங்கிருச்சி.


சிங்கம் வந்து விட்டது என்று எல்லா பதிவர்களும் ஓடி மறைகிறார்கள்.


எட்டி பார்த்தால் முரளிக்கண்ணன் வருகிறார்.


தண்டோரா :

இத்தனை நாளாக எங்கு தான் போனாயோ.
நாட்களும் வீணானதே.

நையாண்டி நைனா : இதுக்கு ஒரு எதிர் கவுஜ இருக்கு சொல்லட்டுமா?


நர்சிம் : (மனதுக்குள்) இல்லனா என்ன விடவா போறீங்க.


தண்டோரா : எல்லாம் இந்த வால்பையன் தொடங்கியது. சொல்லுங்க சொல்லுங்க


நையாண்டி நைனா :

இத்தனை நாளாக எங்கு தான் ஒளிந்து கிடந்தாயோ.
ஊறுகாயும் வீணானதே.

டக்லஸ் : ம் ம்


முரளி : (கோபமாக) என்ன மனசுல உங்க இரண்டு பேருக்கும் பக்கடா,குட்டிமணி என்ற நினைப்பா?


தண்டோரா : இதுக்கும் ஒரு எதிர்கவிதை இருக்கு.


நையாண்டி நைனா :

வயிற்றில் உருளும்
சரக்கும், சிக்கனும் என்ற மிதப்பா ?


முரளி : நைனா.ரொம்ப வேண்டாம்.


நையாண்டி நைனா :

சரக்கு
எனக்கு கொஞ்சம் வேணும்.

முரளி வேறுப் பக்கம் திரும்பி கொள்கிறார்.


குருஜி : நையாண்டி நைனா இப்படியே போச்சு முதல நீங்க தான்.


நையாண்டி நைனா இதற்கு எதிர் கவுஜ சொல்லமல் அமைதியாக இருக்கிறார்.


வால்பையன் : என்ன அரவிந்த் உங்க புதுப் பெயர் என்ன ?


(தொடரும்...)


டிஸ்கி : ஒரு விளம்பரம்


அது என்ன பெயர். அதனால் குருஜி அரவிந்தை எப்படி மடக்குகிறார்,அதில் தப்பித்து இன்னொரு சிக்கலில் மாட்டும் அரவிந்த்,
குருஜியைத் தேடி வரும் ஒரு பூகம்பம் எல்லாம் நாளைய பதிவில்

Saturday, August 8, 2009

கே.பாலசந்தர் ஷாட்ஸ்

கே.பாலசந்தர் மரோச்சரித்ரா படம் எடுக்கும் போது அவருக்கு வயது 48. இந்த வயதில் ஒரு இவ்வளவு இளமையான படம் எடுக்க இவரால் மட்டுமே முடியும். இன்னொரு உதாரணம் அழகன் படம் வெளியான அவர் அறுபதைத் தாண்டிய இளைஞர். நாடோடிகள் படத்தில் அப்பாவும்,பிள்ளையும் கால் ஆட்டும் காட்சியை ஒப்பீடு செய்துக் காட்டுவது அவர் பள்ளியில் படித்தவர் சமுத்திரக்கனி என்பதை எனக்கு நினைவுப்படுத்தியது .

அப்படி நான் ரசித்த கே.பாலசந்தர் உரிய ஷாட்ஸ் சில

1. அழகன் படத்தில் விடிய விடிய போனில் மம்மூட்டியும்,பானுப்ப்ரியாயும் பேசும் காட்சி, பின்னணியில் ஒலிக்கும் "சங்கீத ஸ்வரங்கள்" என்ற பாடல். விடிய விடிய பேசுகிறார்கள் என்பதை கடிகாரத்தில் காட்டாமல், அணைக்காமல் ஓடும் டி.வியில் காட்டி இருப்பார். (12 மணிக்கு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு பிறகு காலை 7 மணிக்கு அலைவரிசை தொடங்கும்) .நான் கூட இப்படி முயற்சித்து முடியாமல் பாதியிலே அந்தப் பெண்ணைத் திட்டி விட்டேன்.

2. அரங்கேற்றம் கமலின் படிப்பிற்கு அலுவலக மேலாளரிடம் பணம் கேட்டப் போகும் பிரமீளாவைக் டுத்து விடுவார். பின்னணி காட்சியாக பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்து கொண்டு இருக்கும். பிராமணப் பெண்ணாக இருந்து விபச்சாரம் செய்யலாமா என கேட்டு அடிப்பவனை நீ பிராமணாக இருந்து கொண்டு விபச்சாரியிடம் வரலாமா என்று திரும்ப அறையும் காட்சி. பிரமீளாவின் வீட்டின் எதிரே உள்ள சுவரில் இருக்கும் குடும்பக்கட்டுப்பாடு விளம்பரத்தைத் தினம் தினம் பார்த்தும் மகளுக்கு கல்யாணம் நடந்தப் பிறகும் கர்ப்பமாக இருக்கும் அவரின் அம்மா.

3. மரோச்சரித்ராவில் கமலிடம் இருந்து வரும் கடிதத்தை சரிதாவிடம் கொடுக்காமல் எரித்து விடுவார் சரிதாவின் அம்மா. அந்தச் சாம்பலைக் காபியில் கலந்து சரிதா குடிப்பார்.(இந்த காட்சியை ராம.நாராயணன் படத்தில் இரண்டு நாய்களுக்கு மத்தியில் நடக்கும் அது பாலில் கலந்துக் குடிக்கும்). ஊடலைத் தீர்க்க இருவரும் லைட்டைப் போட்டுப் போட்டு அணைக்கும் காட்சி. தமிழில் டப்பிங் செய்யாமலே இந்தப் படம் சென்னையில் 600௦௦ நாட்கள் ஓடியது.

4. தண்ணீர் தண்ணீர் படத்தில் ஊரில் தண்ணீர் கிடைக்க வலி செய்யாத அரசாங்கத்தை எதிர்த்து ஓட்டு போடாமல் இருப்பார்கள். வாக்குச்சாவடியில் ஒருவரும் ஓட்டு போடாமல் இருக்கும் நேரத்தில் உள்ளே போய் அங்கு இருக்கும் தண்ணீரைக் குடித்து விட்டு வந்து விடுவான். அவனிடம் உள்ளே போனதற்குச் சண்டைக்குச் செல்பவர்களிடம் "இப்படித் தான் எப்பவாது நல்ல தண்ணி கிடைக்கும்" என்று சொல்வான்.

5. அக்னிசாட்சி படத்தில் சரிதாவிற்கு கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கும். ஏதோ கோபத்தில் சிவக்குமாரின் படத்தைக் கிழித்து விடுவார். பிறகு ஊசி நூலால் அந்தப் படத்தை தைத்து இருப்பார். (சமீபத்தில் கூட காபி வித் அனுவில் கூட அந்த புகைப்படம் காட்டப்பட்டது).

6. இருகோடுகள் படத்தில் ஏமாற்றி விட்டு சென்ற ஜெமினியை அவர் மேலதிகாரியாக வந்து "file" ,"life" என்று மாற்றி மாற்றி பேசியேக் கொல்லும் சௌகார் ஜானகி. பெரியக்கோடை அழிக்காமலே சின்னக்கோட்டைப் பெரிதாக்கி விடுவது.

7. எதிர்நீச்சல் இந்த படமே ஒரு பாலச்சந்தர் ஷாட் தான். நாடக மேடையிலே இதற்கு மாடிச்செட் போட்டு பார்வையாளர்களை மிரட்டியவர்.

8. ஒரு வீடு இரு வாசல் படத்தில் இரண்டு கதை முடிவில் இரண்டும் ஒன்று சேரும்.இந்த கதையின் சாயலைப் போல உள்ள தமிழ் படங்களே இல்லை என்று சொல்லலாம். முதல் கதை துணை நடிகர்களைப் பற்றியது. நான் எந்த படத்திலும் இவர்களைத் தான் அதிகம் பார்ப்பேன்.

9. சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் அக்கா தங்கைகள் மூவரும் சிவக்குமாரை விரும்புவார்கள். சிவக்குமார் கடைசிப் பெண்ணை விரும்புவார். ஒருவருடைய ஆசைக் கூட நிறைவேறாது. (வட போச்சு அதற்கு இந்த படம் பெரிய உதாரணம்)

10. அவர்கள் படத்தில் ஜுனியர் என்னும் பொம்மையின் மூலம் கமல் சுஜாதாவிடம் தன காதலைத் தெரிவிப்பார். கிளைமாக்ஸில் தான் தன் சொந்த குரலில் காதலைத் தெரிவிப்பார். தெலுங்குப் பதிப்பிலும் இவர் ஜெயசுதவிடம் சொல்வார்.

டிஸ்கி : கே.பாலசந்தர் நிகர் அவர் தான். அவர் ஆலமரம். அவர் சிஷ்யர்கள் என்று சொல்லிக் கொல்லும் படி இருக்கும் இயக்குனர்கள் குறைவே. அவர் செய்த தவறுகள் இன்னொருப் பதிவில்.

இன்னும் நிறையப் படங்கள் விடுபட்டு இருக்கலாம் (சிந்து பைரவி,அவள் ஒரு தொடர்கதை, புது புது அர்த்தங்கள்) பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

இது போல கேபிள்சங்கரும் ,தண்டோராவும் (உங்க குறும்படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது) படம் எடுக்க வேண்டும் என்பதே என் ஆசை.

Friday, August 7, 2009

கேபிள் சங்கரின் படத்திற்கு உதவும் பிற பதிவர்கள்

கேபிள் சங்கர் ஒரு அருமையான படத்தை எடுத்து விட்டு எல்லா வினியோஸ்தர்களுக்கும் போட்டு காட்டுகிறார்.படம் நன்றாக இருந்தாலும் கவர்ச்சியா எதுவும் இல்லாத காரணத்தால் வாங்க மறுக்கிறார்கள். தயாரிப்பாளர் அப்படி ஒரு காட்சியை சேர்க்கச் சொல்லி நிர்பந்தம் செய்கிறார்.ஒரே நாளில் முடிக்கச் சொல்லி உத்தரவு. அவர் படத்தின் தொழில்நுட்ப உதவியாளர்கள் யாரும் வர முடியாத சூழ்நிலை. உதவிக்குப் பதிவர்கள் செல்கிறார்கள்.

சனிக்கிழமை மாலை

முதலில் லக்கியும், அதிஷாவும்

கேபிள் : லக்கி நீங்க தான் உதவி செய்யனும்.

(காட்சியை விளக்கிய உடன் லக்கியின் முகம் மாறுகிறது)

லக்கி : நான் இருபது நாட்களுக்கு ஒரு முறை தான் சண்டை போடுவேன்.போன மாசக் கோட்டா வினவு கூடச் சண்டை போட்டு முடிஞ்சு போச்சு.அடுத்த கோட்டா வர இன்னும் பத்து நாள் இருக்கு. இப்பத்தான் ஆபாசமா எழுதுறான்னு ஒரே சண்டை.இதுக்கும் உதவினா எனக்கு எதிர்வினை எழுதவே நேரம் பத்தாது.

கேபிள் : அப்ப அதிஷா நீங்க ?

அதிஷா : தோழர் இல்லாத இடத்துல எனக்கு என்ன வேலை.எவனாவது ஏதாவது எழுதினா அலங்கல் மாதிரி புது வார்த்தைகளைப் போட்டுப் பதிவு எழுதுவேன். நிறைய வேலை இருக்கு வரட்டுமா. லாலே லாலலி லாலே.

கேபிள் : அப்ப உதவி ?

லக்கி : இவன் தான் என் புது சிஷ்யன் அரவிந்த்.இவன் ஏதாவது செய்வான்.


அரவிந்தை ஏற இறங்க ஒரு கைப்புள்ளையைப் பார்ப்பதுப் போல் பார்கிறார் கேபிள் .

கேபிள் : சரி பிரபலப் பதிவர் லிஸ்ட எடு.

(அரவிந்த் எழுதி கொடுத்த பிறகு சரிப் பார்க்கப்படுகிறது.)

லிஸ்டில் இருந்து ஒவ்வொரு பெயராக வாசிக்கப்படுகிறது.

அரவிந்த் : பாஸ் வால்பையன் ?

கேபிள் : இப்போ வருவார்.படத்தை அவரிடம் காட்டக் கூடாது.இல்ல நம்ம படத்தப் பார்த்து உலக சினிமா என்று சொல்லி விமர்சனம் எழுதுவார். ஒருத்தன் பாக்க மாட்டான்.

வால்பையன் உள்ளே வரவும் சரக்கும்,ஊறுகாயும் கொடுத்து மட்டை ஆக்கப்படுகிறார்.

அரவிந்த் : நையாண்டி நைனா?

கேபிள் : வேண்டாம் உள்ளவே விடாதே.இந்தக் காட்சிய இப்படி எடுத்தா எப்படி இருக்கும் கேமிராவ நம்மப் பக்கமாத் திருப்பி வைச்சுருவான்.

அரவிந்த் : அப்ப குருஜி ?

கேபிள் : வேண்டவே வேண்டாம்.முத்தக் காட்சியையே நல்லா லைட் போட்டுக் காட்டுறான்.இந்த காட்சிய இருட்டுல எடுக்கலாமா என்று பதிவு போடுவார்.அத ஆதரிச்சோ எதிர்த்தோ பைத்தியக்காரன் பதிவுப் போடுவார்.அது அப்புறம் வளர்மதி வரைக்கும் போகும்.

அரவிந்த் : அப்ப குசும்பன் ?

கேபிள் : அடுத்தவங்களைக் கலாய்ச்சே 300 ஃபாலோயர் வைச்சு இருக்கார்.இப்போ இங்க வந்து ஐடியா எதுவும் கொடுத்து அப்புறம் அது அவர் படமா என் படமானு எனக்கே சந்தேகம் வந்துரும். ஏற்கனவே சேது படத்த நான் எடுக்க உதவினேன்னு பதிவு போட்டாரு.( மோகன் வைத்யாவிற்கு டி.வி.எஸ் 50 ஒட்ட சொல்லி கொடுத்தது நம்ம குசும்பன் தான்)

அரவிந்த் : அப்ப கார்க்கி ?

கேபிள் : கொத்துப் பரோட்டா எழுதும் போதே ஆபாசமா இருக்குனுப் பின்னூட்டம் போடுவார். இந்தக் காட்சியும்,நடிக்கப் போகும் வில்லனைப் பத்தி கேள்விப்பட்டா எல்லோரையும் மொக்கை போட்டேத் தொலைச்சுருவார்.

அரவிந்த் : அப்படி என்ன சீன் ?

கேபிள் : எல்லாம் ரேப் சீன் தான்.

அரவிந்த் : அப்ப நானு?

கேபிள் : நானு அப்படி ஒரு பதிவரா?. நான் கேள்விப்பட்டதே இல்லை.

அரவிந்த் (கோபமாக) : நான் என்னை சொன்னேன். பீ கேர்புல்.

கேபிள் : டேய் காமடி ஃபெல்லோ. உன்ன மைண்ட்ல வைச்சு இருக்கேன். அடுத்தப் படத்தில் யூஸ் பண்றேன்.

அரவிந்த் : முரளிக்கண்ணன்

(முரளிக்கண்ணனுக்குப் போன் போடுகிறார்.)

கேபிள் : (காட்சியை விளக்கி விட்டு) ஏதாவது சொல்லுங்

முரளி : ஐம் எ காம்பிளான் பாய்.

கேபிள் : இதுக்கு சொல்லுங்க.

முரளி : ரொம்ப நன்றி. பதிவுப் போட மேட்டர் இல்லாம இருந்தேன். தமிழ் படத்தில் வந்த ரேப்ப வைச்சு ஒரு பதிவு எழுதி கல்லாக் கட்டிருவேன்.

கேபிள் : நீ வந்த ராசி சரியில்லை வெளியே போய் நில்லு.யாரையும் உள்ளே விடாதே.

நர்சிம் வருகிறார். அவர் மேல் ஒரு தனிப்பட்ட பாசம் அரவிந்த் வைத்து இருப்பதால் அவருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படுகிறது.

கேபிள் : நீங்க இந்த காட்சிக்கு ஏதாவது சொல்லுங்க

நர்சிம் : மாறவர்மன்ல இருந்து ஒரு காட்சி. வில்லன் நாயகியைக் கெடுக்க முயற்சி செய்யும் பொழுது நாயகன் வந்து விடுகிறான்.

கேபிள் : இது தான் மாறவர்மனோட கடைசி எப்பிசோட்னு நினைக்கிறேன். அதுக்கு நான் தான் மாட்டுனேனா ?

நர்சிம் : இது ஒரு மாஸ்டர் பீஸ்.

கேபிள் : நீங்க என்ன ஒரு காமடி பீஸ் மாதிரியே டீல் பண்ணுறீங்க.இந்த அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு.

நர்சிம் சோகமாக வெளியே வருகிறார்.

அரவிந்த் : மீ த பர்ஸ்டா ?

நர்சிம் : ஆமா பதிவப் படிச்சுட்டுப் பின்னூட்டம் மட்டும் போடாத.(சிரிக்கிறார்) சும்மா சகா. மீ தெ செகண்டு.

இந்த காட்சிக்கு ஏது லாஜிக்.ஒன்லி மேஜிக்.இசையை முடிவு செய்வோம் என்று அரவிந்தை அழைக்கிறார்.

கேபிள் : இசைன்னா என்ன ?

அரவிந்த் : இசைன்னா இசை.

கேபிள் : இப்பவே கண்ண கட்டுதே. சரி விடு தண்டோரா எங்கே ?

அரவிந்த் : பாஸ் ஒரு சின்னத் தப்பு நடந்து போச்சு. பாலா வீட்டு முன்னால தண்டோரா போட சொன்னத தப்ப எடுத்துகிட்டு நம்ம பதிவர் தண்டோராவ தூக்கி போட்டு கால் உடைஞ்சு போச்சு.

கேபிள் : என்ன பண்ணாலாம் ?

அரவிந்த் : நாடோடி இலக்கியன்.

கேபிள் : இப்ப தான் சங்க கடிக்கிற மாதிரி யோசனை சொல்லி இருக்கே. பாரேன் உனக்கு உள்ளேயும் என்னமோ இருந்திருக்கு.

நாடோடி இலக்கியன் : இதுக்கு சங்கர் கணேஷ் படத்துல ஆடு சண்டை போடும் போது ஒரு இசை வரும்.அத போடுவோமா?

கேபிள் : என்ன வைச்சு காமடி கீமடி பண்ணல தானே ?
நாடோடி இலக்கியன் : சரி இன்னொரு சங்கர் கணேஷ் படத்துல...

கேபிள் : வேண்டாம் வலிக்குது.அழுதுருவேன். எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.ஆணியே இல்ல இசையே வேண்டாம்.

கேபிள் : ஆதிய கூப்பிடு

ஆதியை அழைக்கும் பொழுது அரவிந்த் ரமா அக்காக் கிட்ட உளறி மாட்டி கொள்கிறார்.கேபிளுக்கு போன் வருகிறது.

ஆதி : வீட்ல மாட்டிக்கிட்டேன்.குரல் கேட்கிறது " இதுக்குத் தான் காலையிலே இருந்து ஆங்கிள் பாக்குறேன்னு ஒரு வேலையும் பாக்கலையா ? ஒழுங்கா எல்லா வேலையும் முடிச்சுட்டு போங்க."

கேபிள் : யாரை கூப்பிடலாம்.

அரவிந்த் : ஜாக்கி சேகர்.

ஜாக்கிடம் காட்சியை சொல்லாமலே படம் எடுக்க சொல்லப்படுகிறது.

கேபிள் : வில்லன் ரெடியானு பாரு.

வில்லனை எதிர்பார்த்தால் சாரு வருகிறார் சட்டையை கழற்றி கொண்டே.

கேபிள் : எதுக்கு சட்டைய கழத்துறீங்க ?

சாரு : என் படத்தில் நான் ஆண்களைத் தான் இப்படிக் காட்டுவேன்.

கேபிள் : இது என்னோட படம்.

சாரு : அப்ப சரி.கேமிராவின் முன் என் முகத்தைக் காட்ட நான் சமரசம் செய்து கொள்வேன்.பேசினப்படி காசு கொடுக்கலைன்னா இந்த வார விகடனில் உங்க பேர் வரும்.

கேபிள் : அரவிந்த் நீ வெளியே போ. (நாயகிடம்) அந்த சேலையை கொஞ்சம் விலக்கு.கொஞ்சம் கிழி.

"பெண்ணே ஆடையைக் களையும் முன் சற்றே யோசி.." என்று குரல் வருகிறது.தேடி பார்த்தா நம்ம ஜாக்கி.

கேபிள் : ரேப்ல கிழியாத சேலை எங்கே இருக்கு சொல்லு ஜாக்கி.

ஜாக்கி : ஏற்கனவே என்ன பிட்டு படம் பாக்குறான்னு ஒரே சண்ட.இதையும் நான் செஞ்சா பிட்டுப் படம் எடுத்துட்டான்னு வந்துரும்.நான் வர்றேன்.

ஜாக்கி போனதோடு இல்லாமல் கூடவே அந்த பொண்ணையும் அழைத்துச் செல்கிறார்.

கேபிள் : பேக்கப்.

வெளியே வருகிறார்

அரவிந்த் : யூ த லாஸ்டா ?

ஆதியிடமிருந்து போன் வருகிறது.மணி காலை 6. சண்டே .

ஆதி : என்னை வீட்ல போட்டு கொடுத்ததே அந்த அரவிந்த் தான் அவன விடாதீங்க.

கேபிள் : அவன பிடிங்க.

அரவிந்தை பிடித்து கை,கால் எல்லாம் கட்டி 6.50 புரப்படும் தாதர் செல்லும் வண்டியின் அப்பர் பர்த்தில் போடப்படுகிறார்."ரேனிகுண்டா வந்தப் பிறகுக் கட்டை எடுத்து விடுங்கள்" என்று எச்சரிக்கை வேறு.
ரேனிகுண்டாவில் ஜெகநாதன் வருகிறார்.

அரவிந்த் : அண்ணே கட்ட அவுத்து விடுங்க.இதைச் செஞ்சா நான் உங்க காலடி நாய்.

ஜெகநாதன் : ஐயோ பாவம்னு பின்னூட்டம்,தமிழ்மண ஓட்டுப் போட்டா நீ எனக்குத் தெரியாம இவ்ளோ வேலை செஞ்சு இருக்க.

அரவிந்தின் வாயில் துணியை வைத்து அடைக்கிறார்.கடப்பா வந்தப் பிறகு எடுத்து விடுங்கள் என்ற கட்டளை வேறு.

அரவிந்த் (கண்ணாலே): யூ டூ காலடி...

ஜெகநாதன் : யா மீ டூ...

கடப்பா வந்தா யார் வந்து என்ன செய்யப் போகிறார்கள் என்ற பயத்துடன் பயணம் தொடர்கிறது.

சென்னையில் தயாரிப்புத் தரப்பில் அந்தக் காட்சியை எடுக்க வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள்.

Thursday, August 6, 2009

சினிமாவில் எனக்கு பிடித்த கண்கள்

எனக்கு இந்த நடிகையின் பெயர் தெரியவில்லை (தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில் சொல்லவும்). ஜானி படத்தில் "ஆசைய காத்துல தூது விட்டு" பாடலில் மட்டும் வருவார்.ரஜினியை அவர் பார்க்கும் பார்வையில் காமமும்,காதலும் மாறி மாறி தெரியும் கூடவே அக்கறையும். ரஜினி மண்ணு மாதிரி இருப்பார் அந்த பாடல் முழுவதும். நான் இது போல படத்தை எடுத்து இருந்தால் (ரொம்ப ஒவர்டா டேய் அடங்கு..) ஸ்ரீதேவியிடம் சேர்க்காமல் அந்த பெண்ணிடம் சேர்த்து வைத்து இருப்பேன்.(ஆனா மகேந்திரன் சார் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு).இந்த பாடலை இளையராஜா பாலு மகேந்திராவின் தெலுங்கு படத்தில் போட்டு இருப்பார்.படமும் மொக்கை பாட்டும் மொக்கை.

வெயில் படத்தில் வரும் பிரியங்கா. கண்களில் தெரிந்த குறும்பும்,காதலும் பசுபதியை மட்டும் அல்ல படம் பார்ப்பவர்களையும் வசியம் செய்தது.குடுத்த காசு அந்த பெண்ணின் கண்களுக்கே சரியா போச்சு என்று சொன்ன நண்பர்கள் நிறைய. பசுபதி பேசும் பல வசனங்கள் வசந்தபாலன் ஆல்பம் படம் தோல்வி அடைந்த பிறகு அவர் நிஜத்தில் பேசிய வார்த்தைகள் தான்.

சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த சுவாதி. இவரும் ஜெய்யும் கண்களால் பேசிய காட்சிகளும்,கண்கள் இரண்டால் பாடலும் முதல் பாதி தொய்வில்லாமல் நகர உதவி புரிந்தது. ஜெய் கொல்லப்பட்ட பிறகு சசிகுமார் சுவாதியின் கண்களை கத்தியால் குத்தி விடுவார் இந்த காட்சியை மட்டும் படத்தில் இருந்து நீக்காமல் இருந்து இருந்தால் படம் இன்னும் பெரிய வெற்றி பெற்று இருக்கும்.

இந்த மூவருக்கும் ஒப்பனிங் நல்லா இருந்தது ஆனா பினிஷிங் சரியில்லை.

இனி வரும் மூவர் சினிவாவில் வெறும் கவர்ச்சியாக நடிக்க மட்டுமே பயன் படுத்தப்பட்டார்கள் என்பது பெரிய அபத்தம்.

சில்க் ஸ்மிதா - ஒரு காலத்தில் இவர் இல்லாத படத்தை வாங்கவே தயங்குவார்களாம் .காமம் அருவியாக ஒடிய கண்களுக்கு சொந்தக்காரர் . ஒரு உதாரணம் என்றால் மூன்றம் பிறை படமும்,அதில் வரும் பாடலும். நர்சிம் மூன்றாம் பிறையில் வரும் அந்த பாடலை பற்றி ஒரு பதிவில் எழுதி இருந்தார்.(அப்புறம் நான் என்ன எழுத)

தீபா - ஜானி படத்தில் இவர் அப்பாவியாக வந்து அடப்பாவியாக மாறுவார்.ஆரம்ப காட்சிகளில் தெரியும் கண்களில் தெரியும் குழந்தைத்தனமும், பிறகு ரஜினியிடம் மாட்டி கொண்ட பிறகு கண்களில் தெரியும் பயமும், பார்க்கும் சேலையை எல்லாம் எடுக்கும் பொழுது கண்களில் ஆசை தெரியும்.

புவனேஸ்வரி - பாய்ஸ் படத்திலும் ,இன்னும் சில படத்திலும் வந்து போவார். நல்ல காந்தக் கண்கள். பூனைக் கண்ணழகி என்ற பெயரும் உண்டு.

டிஸ்கி : ஒரு கவிதை சின்ன வயதில் எழுதியது

தூசு விழுந்தால் கூட
கண்களை கசக்குவதில்லை
காரணம் உன் பிம்பம்
கலைந்து விட கூடும் என!

(அடடே ஆச்சர்யக் குறி )

இந்த கவிதையை ஒரு பெண்ணிடம் படிக்க குடுத்த பொழுது என்னை திட்டி விட்டாள். நான் சொன்னேன் "பிடிச்சா பிடிச்சுருக்குன்னு சொல்லு இல்லை பிடிக்கலைன்னு சொல்லு அத விட்டு போட்டு சின்னப் பிள்ள மாதிரி திட்டுற.."

அவளுக்கு நான் வைத்த பட்டப்பெயர் "கண்". இப்பொழுதும் அவளை அப்படித்தான் கூப்பிடுகிறார்கள்.

Wednesday, August 5, 2009

நண்பர்களிடம் பிடிக்காத பத்து

1. தண்ணியடிச்சு பழக்கமில்லைன்னு சொன்னா காசு கொடுத்து வாங்கி கொடுத்துட்டு இதை எல்லாம் இல்லன்னா என்ன மனுஷன் இப்படி ஏத்தி விட்டே கத்து கொடுத்திட்டு நீங்க தெளிவா எப்பவாது அடிக்கிறீங்க.ஒருநாள் அடிக்காம விட்டாலும் கை நடுங்குது.ஏண்டா இப்படி கெட்டு போறீங்கன்னு அட்வைஸ் வேற

2. அப்பா அம்மா அந்த பையன் கூட சேராத சொன்னா கேட்காத நீங்க இதே வார்த்தைய ஒரு பொண்ணு சொன்னா மட்டும் எப்படி உடனே கேட்டு அத அப்படியே செய்றீங்க

3.ஏதாவது பிகர கஷ்டப்பட்டு பிக்கப் பண்ணி இருப்போம் இது கூடவா சுத்துறன்னு கெடுத்து விடறது இதுவே உங்க பிகர பத்தி சொன்னா சட்டைய பிடிக்கிறது .

4.பிகர் மாட்டுற வரைக்கும் கூடவே சுத்துறது பிக்கப் ஆனா வீட்டுக்கு வழியே தெரியாது. அந்த டாட்டா காட்டிட்டு அமெரிக்கா போச்சுனா அவ ரொம்ப மோசம்ன்னு புலம்புறது (அப்ப நீ என்று கேட்க வாய் வரைக்கும் வரும் ஆனா வராது)

5.எக்ஸாம் டைம்ல நீ கடைசி நிமிஷத்துல படிக்கிறது என்னனு கேட்டா இது எல்லாம் வராது வந்தாலும் சாய்ஸ்ல விடுறா அப்படின்னு சொல்றவன் நான் படிக்கிறத மட்டும் துருவி துருவி கேட்குறது.

6.எங்க பக்கத்து வீட்ல எதாவது புது பிகர் வந்தா இன்ரோ கொடுக்க சொல்ற நீ உங்க பக்கத்து வீட்ல வர்ற பிகர் பத்தி மூச்சு கூட உட மாட்டீங்களே.கேட்டா எங்க பேமிலி ப்ரெண்டுன்னு அடிச்சு விடுறது.

7.எக்ஸாம்ல என்னை பார்த்து காப்பி அடிச்சுட்டு என்னை விட நிறைய மார்க் எடுக்கிறது கேட்டா திருத்தியவன் சரி இல்லை எங்கிட்டோ இருக்கும் அப்பாவி மேல பழி போடுறது.

8. எவனாவது உன்னை திட்டி இருப்பான் அவன அடிக்க முடியாம மச்சான் உன்னை பத்தி அசிங்கமா சொன்னான் இல்லாது பொல்லாது சொல்லி குடுத்து அவன் கிட்ட சண்டைக்கு போக சொல்றது .

9.நல்லா ஓடுற படத்தை எல்லாம் பாக்காம ஏதாவது மொக்க படத்த ஆகா ஓகோ அப்படி சொல்லி பக்க வைக்கிறது (சரியா சொன்னா மட்டும் ஏதோ கேக்கிற மாதிரி தான்)

10.சும்மா போற நாய் மேல சொல்ல சொல்ல கேட்காம கல்ல தூக்கி போடுறது அது போட்டவனை கண்டுக்காம பக்கத்தில் இருக்கிற என்னை கடிக்க வர்றது (நான் கல்ல தூக்கி போட்டாலும் அது என்னை தான் விரட்டுது) கேட்டா நாய்க்கு நல்லவன பார்த்தா தெரியும்ன்னு தத்துவம் பேசுறது.

டிஸ்கி : இப்படி என்ன பண்ணினாலும்,எவ்வளவு தான் வாங்கி கட்டி இருந்தாலும் எங்கியாவது பார்த்து பழச நினைச்சி சிரிக்கும் போது எல்லாம் மறைஞ்சி போகுது.

"ஏ ஜலசா பண்ணுங்கடா... குஜாலா ஜில்பா காட்டுங்கடா" - நண்பர்கள் தினப்பதிவு

நாடோடியான நானும்,கிழிந்த பனியனும்

நாடோடிகள் படம் பார்த்து முடிந்த பிறகு என் கால்களையும்,காதுகளையும் நன்றாக தடவி பார்த்து கொண்டேன். பத்து வருடங்களுக்கு முன்பே தீர்மானம் செய்து கொண்டேன். செயல் படுத்தியும் விட்டேன். "காதலிக்கும் நண்பர்களுக்கு மட்டும் உதவி செய்ய கூடாது என்று". அதற்கு பிறகு நான் சேர்ந்த நண்பர்களிடம் வழக்கமாக சொல்வது - யோசனை மட்டும் தான் உதவி கிடையாது.

அதற்கு காரணம் யாராவது கொசுவர்த்திய நல்லா சுத்துங்க

பத்து படிக்கும் பொழுது நானும்,வினோத்தும் நெருங்கிய நண்பர்கள். பள்ளியில் இரண்டு மாதம் ஒரு சச்சரவால் அடைக்கப்பட்ட பொழுது சுல்தான் எங்களுடன் சேர்ந்து கொண்டான். வினோத்துக்கு அவனை பிடித்ததால் எனக்கும் பிடித்து தொலைத்தது. அந்த காலகட்டத்தில் சேர்ந்து பார்த்த படம் நட்பு (கருமம்! படம் அல்ல அவன்).

சுல்தான் வற்புறுத்தவே அவன் படித்த டியுசனிலே நானும் சேர்ந்தேன் ஆனால் படிக்கவில்லை.அங்கு படித்து வந்த சயீதா மேல் இவனுக்கு காதல் (அப்படி சொல்லி கொண்டு திரிந்தான்).அந்த ஏரியா பையனும் அவள் பின்னால் திரிய அவனை நான் மிரட்ட அவன் என்னை மிரட்ட அடித்து மட்டும் கொள்ளவில்லை. (அப்பவே நாங்கள் எல்லோரும் வடிவேலு மாதிரி தான்). தவிர பெண்களுக்காக சண்டை போடுவது எனக்கு பிடிக்காது.

அவளை மடிக்க அவன் என்னிடம் கேட்க நான் சொன்ன ஐடியாப்படி அறிவியல் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கதிலும் தமிழ்,தெலுங்கு,இந்தி,ஆங்கிலம் என்று எல்லா மொழிகளிலும் "நான் உன்னை காதலிக்கிறேன்" என்று எழுதி உள்ளே வைத்து அவளிடம் கொடுத்து விட்டோம். (சும்மாவே அறிவியல் புத்தகம் ஒரு எருமை மாதிரி இருக்கும் இதை வைத்த பிறகு கர்ப்பமான எருமை மாதிரி இருந்தது).அவள் ஒத்து கொண்ட சந்தோஷத்தில் அந்த துண்டு சீட்டுகளை எடுத்து வடபழனி ஆற்காடு ரோட் சிக்னலில் போட்டி போட்டு கொண்டு எறிந்தோம்.

ஒருநாள் வந்து "வா ஒரு இடத்திற்க்கு போவோம்" என்று இடத்தை சொல்லமல் இராயபேட்டைக்கு அழைத்து சென்றான்.பார்த்தால் அந்த பெண் படிக்கும் பள்ளி.அந்த ஏரியா பையன் வந்து எங்களை துரத்தவே

"மச்சான் அவன் ஒருத்தன் தான். நாம இரண்டு பேர். அவனை புரட்டி எடுக்க போரேன்" - இது நான்.

"அவசரபடாதே .." என்று சுல்தான் சொல்லி முடிக்கும் முன்பே எங்களை சுற்றி ஒரு நால்வர் அணி நின்று கொண்டிருந்தது.

அவர்களை சமாளித்து அனுப்பிய பிறகு (நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன்). வாட்ச்மேன் வந்து எங்களை விசாரிக்க..எங்கள் பதிலில் திருப்தி அடையாமல் ப்ரின்சி கிட்ட சொல்லுவேன் என்று மிரட்ட..சுல்தான் அவனை அடிக்க போக..எப்படியோ சமாளித்து அவனை இழுத்து வந்தேன்.

வரும் வழியில்

"இனிமே இது மாதிரி வேலைக்கு என்னை கூப்பிடாதே..எனக்கு பிடிக்கவில்லை..பிடிக்கவும் பிடிக்காது பெண்களுக்காக காத்து கிடப்பது.." என்று நான் சொல்லவும்

"ஏன் உனக்கு ஆள் இல்லாத பொறாமை..அதான் இப்படி பேசுற.." - இது சுல்தான்

"அன்னைக்கு புக்க மட்டும் மாத்தி கொடுத்து இருந்தா அது யார லவ் பண்ணிருக்கும் தம்பி..இனிமே இது விசயமா எங்கிட்ட வராதே.." என்று சொல்லி கூடவே நாலைந்து கெட்ட வார்த்தைகளை போட்டு அவனுக்கு வாயில் வயலின் வாசித்து காட்டினேன்.

இரண்டு வாரங்கள் கழித்து வினோத்திடம் பேசி கொண்டிருந்த பொழுது

"மச்சான் புதன் கிழமை ஏண்டா வரல.."

"இல்ல உடம்பு சரியில்ல.." - இது வினோத்

"பொய் சொல்லாத.. உன்னை வடபழனில நான் பாத்தேனே.." என்று சும்மா பிட்ட போட்டு பார்த்தேன்.

"ஸாரிடா..நான் சுல்தான் கூட இராயபேட்டைக்கு அந்த பொண்ண பாக்க போனேன்..அவன் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னான்"

"என்ன அங்க திரும்பவும் எதுவும் சண்டையா.. யார் கிட்டயாவது வம்பு இழுத்து இருப்பானே.."

"நாங்க அங்க போனப்போ போலிஸ் இருந்தாங்க.."

"தெரியும்..அவன் கூட போகாத உனக்கு அடி நிச்சயம் விழும்.. அவன் ஒடிருவான்.." அவன் வாட்ச்மேனிடம் வம்பு இழுத்த கதையை சொன்னேன்.(போலிஸ் வந்தததும் இதனால் தான்).

நான் அந்த டியுசனை விட்டு நின்று விட்டேன்.ஒரு மாதம் கழித்து என் வீட்டுக்கு வந்து மச்சான் உங்கிட்ட கொஞ்சம் பேசனும் என்று கூட்டி போய் என் காலில் விழுந்து அழ ஆரம்பித்து விட்டான்.உதவி செய்ய சொல்லி ஒரே தொல்லை.

"இப்போ மனி 8.00 அவ டியுசன் இருக்கிறது கே.கே.நகர்ல..நாம விருகம்பாக்கத்துல இருக்கோம்.. நாம போனா கூட அவள பிடிக்க முடியாது.." என்று நான் சொல்லவும்

"உங்க அப்பா வண்டில போவோம்.."

"எனக்கு வண்டி சரியா ஒட்ட வராது..எதுவா இருந்தாலும் நாளைக்கு பாக்கலாம்.."
"ப்ளிஸ்டா.."

"இதுதான் கடைசி.." என்று வண்டி கொடுக்க மறுத்த அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி வண்டியை வாங்கி கொண்டு அவளை பார்க்க போனோம்.

கே.கே.நகர் போய் அங்கு அவளை பிடிக்க முடியாமல்,அவள் இருக்கும் வளசரவாக்கதிற்கு போய் கடிதத்தை வாங்க சொல்லி கெஞ்சி எல்லாம் செய்து விட்டு வீட்டுக்கு வரும் பொழுது மனி 9.30. பயத்தில் வண்டியை நிறுத்த முடியாமல் சுவரில் மோதி கொண்டேன். அப்பா பார்த்து கொண்டிருப்பது தெரியாமல்.

"ஏன் லேட்.." என்ற கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் "போலிஸிடம் மாட்டி கொண்டேன்.." என்று பொய் சொன்னேன்.

அப்பா கோபத்தில் பனியனை போட்டு உலுக்க பனியன் கிழிந்தே விட்டது.அவரை சமாளிக்க குட்டி பொய்,குட்டி குட்டி பொய் சொல்லி வாயே வலித்து விட்டது.அதில் இருந்து உண்மையே சொல்ல ஆரம்பித்து விட்டேன்.

மூன்று நாட்கள் கழித்த பிறகு

"அவள் பதில் என்ன ?.." என்று நான் கேட்கவும்

"அவளுக்கு தமிழ் தெரியாதுன்னு சொன்னா.." என்று சுல்தான் சொல்லி முடிக்கும் முன் அவன் முதுகில் இரண்டு அறை விழுந்தது.(உங்க போதைக்கு நான் ஊறுகாயா)

சில பல காரணங்களால் அவன் நட்பை நானும் வினோத்தும் உதறி இருந்தோம்.சுல்தான் அந்த பெண்ணை விட்டு விலகி இன்னொரு பெண்ணை பார்ப்பதாக கேள்விப்பட்ட உடன் அவனை அடிக்க முடிவு செய்தோம்.அவனுக்கு ஆதரவாக ஒரு கும்பல் அதற்குள் உருவாகி இருந்தது.அவன் தனியாக மாட்ட காத்து கிடந்தோம்.

சுல்தான் எங்க ஸ்கூல் வாசலில் ஒரு பெண்ணை இடித்து விட(இங்கு சென்சார் செய்யப்பட்டுள்ளது).இது தான் சாக்கு என்று நானும் வினோத்தும் அவனை அடித்தோம் (அவன் காதில் அடிப்பதற்கான காரணங்கள் சொல்லப்பட்டது).

மூன்று வருடங்கள் கழித்து சலீம் வீட்டில் சுல்தான் என்னிடம் பேச வந்தான்.அவனை தவிர்த்து விட்டு சலீமிடம் "சுல்தானிடம் உஷாராக இரு.." என்று மட்டும் சொன்னேன்.

உடனே சலீம் புலம்ப ஆரம்பித்து விட்டான்."மச்சான் என் காதல கெடுத்ததே இவன் தான்.அந்த பொண்ணு கிட்ட பேச இவன கூட்டிகிட்டு போனா அங்க வந்து அந்த பொண்ண பார்த்து நீ சலீம தான் காதலிக்கனும் மிரட்டி காரியத்தையே கெடுத்துட்டான். பஞ்சாயத்து பண்ண வந்தவன் அவளை பிக்கப் பண்ணிட்டான்..நான் தப்பு செஞ்சுடேன்.. அவனுக்கு பதிலா உன்னை கூட்டிக்கிட்டு போய் இருக்கனும்.."

நான் பேசவே இல்லை.நினைத்து கொண்டேன் இப்படி.(மறுபடியும் முதல்ல இருந்தா..ஏம்பா என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கு..)

பின் குறிப்பு:(அடித்தற்கான காரணங்கள்)

1.ஒரு சப்ப பிகர காட்டி இத நீ பிக்கப் பண்ணு நான் வேணா உதவி செய்யவா என்று சுல்தான் கேட்டதற்கு

2. என் வீட்டில் பணத்தை திருடியதால்.

மகிழ்ச்சியான பின் குறிப்பு:

சயீதாவின் தம்பி சொறி நாய்குட்டிகளை நல்ல ஜாதிநாய்கள் என்று சுல்தான் தலையில் கட்டி 1500 ரூபாய் பிடிங்கி கொண்டான்.

Tuesday, August 4, 2009

ஹார்மோன் கோளாறு

அவன் தன் நண்பர்களிடம் கேட்டு கொண்டு இருந்தான்."எனக்கு ஏண்டா நான் பாக்குற ஒரு பொண்ணு கூட என்னை ஃப்ரெண்டா கூட ஏத்துக்க மாட்டேங்குது..."

"நான் பேசிக்கிட்டே இருக்கேன் யாராவது கேட்டு தொலைங்க..." என்று பொல்லாதவன் கருணாஸ் மாதிரி கதறி கொண்டு இருந்தவனை யாரும் கண்டு கொள்ளவே இல்லை.

காரணம் அவன் பார்க்கும்,பழக முயற்சிக்கும் பெண்கள் எல்லாம் அவனை விட ஒரு நாளாவது மூத்து தொலைத்திருந்தார்கள்.

அவர்களிடம் பழக ஆரம்பித்த உடன் சொல்லி வைத்தது போல் எல்லோரும் அவனை தம்பி என்றே அழைப்பார்கள்.

இப்படி அவனுக்கு கிடைத்த அக்காக்கள் நிறைய.

அவன் பத்து படிக்கும் பொழுது ஒரு ஒன்பதாவது படிக்கும் பெண்ணின் மீது ஈர்ப்பு வந்து விட்டது.
விசாரித்து பார்த்தால் அந்த பெண் அவனுடைய நண்பனின் தங்கை என்றும் இரண்டு வருடம் பெயிலாகி பின் தங்கி இருக்கிராள் என்றும் தெரிய வந்தது.

அதானே பார்த்தேன் நம்ம கணிப்பு மிஸ் ஆகாதே என்று பெருமை வேறு எருமைக்கு.

வழக்கம் போல அவன் ஒரு அக்காவைப் பார்த்து கொண்டு அலைய அந்த பெண்ணின் தங்கை அவன் பின்னால் திரிய அவனுடைய நண்பர்களோ "சேர்த்து வைக்கிறோம்" என்று தங்கையிடம் சொல்லி அவள் டீக்கடையைக் காலி செய்தார்கள்.

கல்லூரியில் படிக்கும் பொழுது ஒரு அக்கவிடம் பேச முதலில் அவளின் தோழியை மடக்க கடைசி வரை நட்பு தோழியோடு நின்று போய் விட்டது.

தம்பி என்று சொல்லாமல் அவனிடம் வேலை வாங்கிய அக்காக்கள் பட்டியலை எடுத்தால் அவன் வீடு மளிகைச் சாமான் பட்டியலை விட நிறைய வரும்.

அடிக்கடி அலுத்து கொள்வான்.என்னை சச்சின் மாதிரி சாதனை செய்ய விட மாட்டர்கள் என்று( விளையாட்டில் அல்ல வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதில்)

வேலைக்கு போன இடத்திலும் அவன் பார்த்த பெண்கள் அவனை விட வயது மூத்தவர்கள்.

சில வருடங்கள் கழித்து அவன் நண்பர்களைப் பார்க்க வந்திருந்தான்.

"மச்சான் எனக்கு கல்யாணம்.." என்று பத்திரிகை வைத்தான்.

பிரிக்காமலே பெண்ணின் வயதை பற்றி விசாரித்தார்கள்.

"என்னை விட இரண்டு வயது கம்மி" என்று சொன்னான்

இப்போ தாண்டா ஹார்மோன் கோளாறு (அப்பாடி தலைப்பு கிளைமாக்சுல எப்படியோ கொண்டு வந்துடேன்) போய் நீ சரியா இருக்கே என்று மகிழ்ச்சி கொண்டார்கள்.

"ஆனா அவளுக்கு ஒரு அக்கா இருக்குதுடா.அவ மேல.." என்று சொல்லி முடிக்கவும்

"திரும்ப திரும்ப பேசுர நீயி.." என்று நண்பர்கள் கோரசாக சொன்னார்கள்.

டிஸ்கி : நான் அவன் இல்லை.

போன பதிவில் பின்னுட்டம் போட்ட என் தம்பிக்காக ஒரு கவிதை.

பதின்ம வயதுகளின் வாய்ப்பாடே
காதல் * காதல் = காதல் தான்.
அதுவே கூப்பாடாக மாறுகிறது.
பிள்ளை பதின்மத்தின் படிகளை
கடக்கும் பொழுது.

(ஏன் இந்த கொலைவெறி)

Monday, August 3, 2009

நாம குழந்தையாகவே இருந்திருக்கலாம்

ஒரு சனிகிழமை என் அறையில் இருந்து செம்பூருக்கு செல்கையில் என் அம்மாவுடம் பேசி கொண்டிருந்தேன்.பள்ளிகளில் இருந்து குழந்தைகள் போய் கொண்டு இருந்தார்கள். ஒரே இரைச்சலாக இருந்தது. என்ன என்று எதிர்முனையில் கேட்கவும் "கன்றுக்குட்டிகள் போகிறது" என்று சொன்னேன்.

" பாத்து போ மாடு வந்து விட போகிறது" - இது அம்மா.

"எருமமாடு தான் உன்கிட்ட பேசிகிட்டு இருக்கே" என்று நான் சொல்லவும்.அம்மா புரியாமல் விழிக்க நான் சின்ன குழந்தைகளை கன்றுக்குட்டிகள் என்று சொன்னதை விளக்கினேன்.

நீ கூட எனக்கு ஒரு கன்றுகுட்டி தான் என்று அம்மா சொல்ல அது வேண்டுமானால் உண்மைதான் ஒரு காலத்தில் என்று நினைத்து கொண்டேன்.

காரணம் நான் கல்லூரி நான்காம் ஆண்டு முடிக்கும் வரை என் அம்மாதான் எனக்கு ஊட்டி விடுவார்கள். நான் ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வருவது போல கல்லூரிக்கு போகும் அவசரத்தில் அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருப்பேன். என் அம்மாவும் சளைக்காமல் பின்னால் வந்து சாப்பாடு கொடுப்பார்கள். என் தம்பிக்கு கூட கிடைக்காத அன்பு. (அவனுக்கு அவனை பார்த்து கொள்ள தெரியுமாம்).

நான் நண்பர்களிடம் பேசும் பொழுது அடிக்கடி சொல்லும் வார்த்தை."நாம குழந்தையாகவே இருந்திருக்கலாம் " என்பது தான்.

வேலை,பெண்கள் என்று ஒரு கவலையும் கிடையாது.பணம் பற்றிய பயமோ ,நிர்பந்தமோ எனக்கு 21 வயது வரை கிடையாது.

கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்ததால் என்ன பிரச்சினை வந்தாலும் முதலில் நிற்பேன்.பல தடவைகள் அடிகளை வாங்கியும் சில சமயம் கொடுத்ததும் இருக்கிறேன். இன்று முன்னால் செல்லும் தைரியத்தை தொலைத்து விட்டேன். (இப்போ சண்டை என்றால் போக்கிரி வடிவேலு ஐயோ சண்டையா என்று முதலில் ஓடி ஒளிகிறேன்)

குழந்தைகளிடம் வன்மங்கள் வளர வாய்ப்பு கம்மி.

என் பள்ளி நண்பர்களின் ஜாதி இன்று வரை எனக்கு தெரியாது. கல்லூரி நண்பர்களின் ஜாதி தெரியும்.(வளர்ந்து தொலைப்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது)

இன்று மும்பை ரயில்களில் பயணிக்கும் ஒவ்வொரு நாளும் கூடவே பயமும் பயணிக்கிறது. இதுவே பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நெல்லையில் நடந்த முக்கியப்புள்ளி படுகொலையின் நடந்த கடையடைப்பின் பொழுதும், கலவரத்தின் பொழுதும் சாலையோரம் இருந்த பூக்கடையில் தூங்கினேன் பயம் இல்லாமல்.

சின்ன வயதில் அன்று ஈன்ற ஆட்டுக்குட்டிகளையும், பொறித்த கோழிக்குஞ்சுகளையும் தொட்டு பார்த்து மகிழ்ந்த குழந்தை உள்ளம் இன்று ஆட்டுக்குட்டிகளையும், கோழிக்குஞ்சுகளையும் பார்த்தால் திரும்புமா என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.

இந்த பதிவை எழுதிய பிறகும் முணுமுணுக்கிறேன் "நாம குழந்தையாகவே இருந்திருக்கலாம் " என்று .


"நான் குழந்தை மனதைத் தொலைத்துப் பல வருடங்கள் ஆயிற்று என்று.. என்ன செய்ய விதி வலியது.." என்று போன பதிவில் என் தம்பி எழுதிய பின்னுட்டத்தை பார்த்த பிறகு எழுதிய பதிவு.

Saturday, August 1, 2009

வாயை குடுத்து எதுவோ புண்ணான கதை

இரண்டு நண்பர்கள்.முதல் நண்பன் ராணுவத்திலும் மற்றொரு நண்பன் காவல்துறையிலும் வேலை செய்கிறார்கள்.

போலீஸ்: நீங்கள் ஒவ்வொரு முறையும் ராணுவத்துக்கு வேலைக்கு போயிட்டு ஐந்து வருடம் கழித்து வரும் பொழுது உங்களுக்கு ஒரு பிள்ளை இரண்டு வயதில் இருக்கிறானே அவனை என்ன செய்வீங்க ?

ராணுவ வீரர்: போலீஸ்ல வேலைக்கு சேர்த்து விடுவோம்.

போலீஸ்: ?????

*****************
ஒரு வரப்பில் எதிர் எதிரே ஒரு பணக்காரரும்,ஏழையும் நடந்து வருகிறார்கள் .யாராவது வயலில் இறங்கி வலி விட வேண்டும் .

பணக்காரன் : நான் தாசி பெற்ற பிள்ளைகளுக்கு வழி விடுவதில்லை.

ஏழை : நான் தாசி பெற்ற பிள்ளைகளுத்தான் வழி விடுவேன் .வயலில் இருந்து இறங்கி கொள்கிறான்.

******************

மறைந்த சரவணா ஸ்டோர்ஸ் முதலாளிக்கும்,பக்கத்து பள்ளி மாணவர்களுக்கும் நடந்த பேச்சு.

மாணவர்கள் (போனில்) : சார் போட்டுக்க ஒரு தங்க ஜட்டி கிடைக்குமா ?
செல்வரத்தினம் பதில் சொல்வதற்குள் வைத்து போனை வைத்து விடுகிறார்கள்.

மாணவர்கள் :(மறுபடியும்) சார் போட்டுக்க ஒரு தங்க ஜட்டி கிடைக்குமா ?

செல்வரத்தினம் : தம்பி உன் *ண்டி வெங்கலத்துலையா செஞ்சு இருக்கு?

******************

ஒரு குழந்தையை மூன்று பேர் கடத்தி விடுகிறார்கள். ஒரு காவலர் துணிச்சலாக சென்று அவர்களை கொன்று விட்டு குழந்தையை மீட்டு வருகிறார்.

குழந்தையின் உறவுப்பெண்: சார் எப்படி அந்த நாய்களை சாக அடித்தீர்கள்

காவலர் :இந்த கையாலே அடித்து கொன்றேன்.உடனே அந்த பெண் கையில் முத்தம் தருகிறாள்.

காவலர் : இப்படி நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா வாயாலே கடித்து கொன்னேன்னு சொல்லி இருப்பேனே (வட போச்சா)

***************
ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் விளையாடும் பொழுது சண்டை வந்து விடுகிறது. யார் பெரியவர் என்று அடித்து கொள்கிறார்கள்.

பையன் : எங்க வீட்ல எல்லாம் இருக்கு.

பொண்ணு :எங்க வீட்டுலையும் தான் இருக்கு.

பையன் (கோபத்தில் பேண்டை கழற்றி) : இது இருக்கா

பெண் குழந்தை அழுது கொண்டே வீட்டுக்கு ஓட அந்த குழந்தையின் அக்கா விஷயத்தை தெரிந்து கொண்டு அவளை சமாதானபடுத்துகிறாள்

பெண்ணின் அக்கா: இனிமே அவன் வந்து உன்கிட்ட இப்படி பேசினான்னா சொல்லு இது இருந்தா அது நிறைய வரும்.

***********
நம் மனம் குழந்தை தனத்தை இழந்து விட்டது என்பதற்கு இந்த படம் சாட்சி .என்ன தெரிகிறது என்று பின்னுட்டத்தில் சொல்லவும்.(குழந்தைகளுக்கு வேறு மாத்ரி தெரியும் )