Monday, April 26, 2010

சச்சின் செய்த மேட்ச் பிக்சிங்

தலைப்பில் இருப்பது போல் குரல்கள் கேட்க ஆரம்பித்து விட்டது.எல்லாம் ரெடீப் அனானிகளின் வேலை.சென்னையுடன் தோற்றவுடன் இப்படி சொல்லி விட்டார்கள்.இன்றைய தினம் இரண்டு மனநிலையில் தான் நான் இருந்தேன்.சச்சின் ஆட வேண்டும்.காலிஸை விட அதிக ரன் எடுக்க வேண்டும்.அதே சமயம் சென்னை ஜெயிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.இது கிட்டதட்ட சாணியை மெறிச்ச பெண்ணின் மன நிலையை ஒத்து இருந்தது.(கணவன் பெயர் வாங்க வேண்டும்.சொந்த வீடு தோற்று விடக் கூடாது.)

கை குடுத்தால் கூட வலிக்கும் என்ற நிலையில் கூட களமிறங்கிய சச்சின் மேட்ச் பிக்சிங் செய்தார் என்று வாய் கூசாமல் சொல்லி விட்டார்கள்.அடுத்து 20-20 உலக கோப்பை சச்சின் ஆட வேண்டும் கோரிக்கை வேறு.அங்கு போய் ஆடாமலிருந்தால் இந்த வாய்கள் என்ன சொல்லும் என்று தெரியாதா என்ன.

சச்சின் சுயநலவாதி என்று சொன்னவர்களும் அதில் உண்டு.அதிக ரன் எடுக்க போவது யார் என்ற நிலைமையில் கொல்கத்தாவுடன் ஆடவில்லை.அதுவும் அனானி அறிவுஜீவிகளுக்கு மேட்ச் பிக்சிங்காக இருந்திருக்கலாம்.

சென்னையுடன் உடம்பு சரியில்லாமல் களத்தை விட்டு வெளியேறியது கூட மேட்ச் பிக்சிங் வரிசையில் வந்து விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் சந்தேகம் வராமல் மேட்ச் பிக்சிங் செய்ய முடிவு செய்து அரை இறுதியில் அவரே காயம் ஏற்படுத்தி கொண்டார் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

சச்சின் செய்தது ஒரே ஒரு தவறு தான்.போலார்டை முன்னரே இறக்காமல் விட்டு விட்டார்.அதுவும் அந்த அறிவுஜீவிகளின் கண்ணிற்கு அதுவும் ஒரு காரணமாக தெரியலாம்.அவர் ஒரு திறமையான கேப்டன் இல்லை என்பதற்கு சாட்சியாக மட்டுமே இதை எடுத்து கொள்ளலாம்.தோனி போலார்டை அவுட்டாக்கிய விதத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் அவர் ஒரு திறமையான கேப்டன் என்று.அவர் சொன்ன காரணம் அதிரடி ஆட்டக்காரர்கள் எல்லாம் வித்தியாசமான ஷாட்கள் ஆட மாட்டார்கள் நேராக தான் அடிப்பார்கள் என்றும் அதனால் ஹைடனை மிட் ஆப்பில் நிறுத்தாமல் பந்து வீச்சாளரை ஓட்டியே நிறுத்தியிருந்தார்.இருப்பதிலேயே கஷ்டம் ஸ்ரெயிட் டிரைவ் ஆடிக் கொண்டேயிருப்பது தான்.

இந்த வெற்றிக்குப் பின் தோனி சிகப்பு விளக்கு பகுதியில் நின்றாலும் அவரிடம் கையெழுத்து வாங்கும் கூட்டம் அதிகரிக்கும்.அட நான் சொன்னது சிக்னலை.

சச்சின் காயமடைந்த போது இந்தியாவிற்கு விளையாடியது இல்லையாம்.இன்னும் வேறு ஏதாவது இருந்தால் சொல்லவும்.

அட போங்கடா போக்கத்தப் பசங்களா.......................

6 comments:

Unknown said...

//அட போங்கடா போக்கத்தப் பசங்களா.......................//

டிட்டோ டிட்டோ டிட்டோ...

சச்சின் செஞ்சதுல இன்னிக்கி எனக்குப் பிடிக்காதது, ரெய்னா பால்ல அவுட் ஆகியும் வாக் பண்ணாததுதான்..

பாலா said...

//சச்சின் செஞ்சதுல இன்னிக்கி எனக்குப் பிடிக்காதது, ரெய்னா பால்ல அவுட் ஆகியும் வாக் பண்ணாததுதான்..

இதை நான் வழி மொழிகிறேன்..

இருந்தாலும் சச்சினுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பிலை என்று நினைக்கிறேன். ஏனென்றால் இதை விட முக்கியமான தருணங்களில் அவர் பெருந்தன்மையுடன் வெளியேறி இருக்கிறார்.

அகல்விளக்கு said...

//அட போங்கடா போக்கத்தப் பசங்களா.......................//

ரிபீட்டு...

DHANS said...

//அட போங்கடா போக்கத்தப் பசங்களா.......................//

ரிபீட்டு...

சி.வேல் said...

அட போங்கடா போக்கத்தப் பசங்களா

உங்களைதான்

சி.வேல் said...

சச்சின் செஞ்சதுல இன்னிக்கி எனக்குப் பிடிக்காதது, ரெய்னா பால்ல அவுட் ஆகியும் வாக் பண்ணாததுதான்..

இந்திய அணி ஆட்டம் எனில் வெளியெறி இருப்பார்