Friday, April 9, 2010

துவையல் - சென்ற வருட ஸ்பெஷல்

பதிவு எழுத ஆரம்பித்து ஒரு வருடம் ஆகி விட்டது.போன வாரத்தில் இருந்து இரண்டாவது வருடம்.கவனிக்க மறந்து விட்டேனே.பெரிதாக ஏதாவது சாதனை என்றால் நண்பர்களைத் தவிர எதுவும் இல்லை.போன வருடமும் பதிவு எழுத ஆரம்பித்த நாளில் பதிவர் சந்திப்பு நடந்தது.இந்த வாரமும் நடக்கிறது.அடுத்த வருடமும் நான் எழுத வேண்டும்.பதிவர் சந்திப்பும் நடக்க வேண்டும்.எல்லாம் ஹாட்ரிக் ஆசை தான்.இந்த வருடமாவது கருத்து சண்டை வராமல் உருப்படியாக எழுத வேண்டும் என்று உறுதிமொழிகள் எல்லாம் எடுக்கவில்லை. தினமும் பதிவு எழுத வேண்டும் என்ற கொலைவெறியை ஒரே நாளில் விட்டொழித்தது எனக்கே கொஞ்சம் ஆச்சர்யம் தான்.அப்படியே உருப்படியாக எதையாவது எழுதி படிப்பவர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தலாமா என்று நினைத்து பார்த்தால் எனக்கே என்னை பார்க்க பயமாகயிருக்கிறது.நோ டென்ஷன் பீ ஹேப்பி.

பசங்க படத்தை அடுத்து பாண்டியராஜ் இயக்கும் படம் வம்சம்.முதல்வரின் பேரன் அருள்நிதி நடிக்கிறார் என்பது எல்லாம் எனக்கு விஷயமேயில்லை.படத்தின் நான் எதிர்பார்ப்பது பாடல்களை தான்.இசை ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராக இருந்த தாஜ் நூர்.பெரிய திறமைசாலி.நண்பரின் நண்பர்.பெரிதாக வர வேண்டும்.ஏ.ஆர்.ஆரின் இரண்டு உதவியாளர்கள்(பிரவீண் மணி,ரபீக்(ஜக்குபாய்)) செய்த தவறே ஏ.ஆர்.ஆர் பாணி இசை தான்.அதை தாஜ் நூரும் செய்து விடக்கூடாது.

ஸ்ரீசாந்த் - நோ பால் போட்டு விட்டு பயபுள்ள என்ன வறுத்து வருது.நடுவரையே கைத்தட்டி பகடி செய்கிறது.வெறும் இருபது சதவீதம்(நாலே நாலு லட்சம்) போட்டி ஊதியத்தைப் பிடிங்கி விட்டார்கள்.அப்ப சம்பளம் என்னவென்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் யோசித்ததில் இருபது லட்சம் என்று கணக்கு சொன்னது.ஏன் சிறுவர்கள் எல்லாம் கோச்சிங் கேம்பில் பணம் குடுக்கிறார்கள் என்று ஸ்ரீசாந்த் மூலம் தெரிந்து கொண்டேன்.இவ்வளவு பணம் தந்தால் விளையாடினால் என்ன விளையாடாமல் இருந்தால் என்ன.தேவை பணம் தான்.

அவள் பெயர் தமிழரசி.எனக்கு படத்தில் ஒன்றே ஒன்று மட்டும் தான் பிடித்திருந்தது.அது நாயகியின் அத்தை பெண்ணாக வரும் செண்டு.பெயரே ஆயிரம் கதை சொல்லியது.உடனே பிளாஷ்பேக் என்று நினைத்து விட வேண்டாம்.அந்த பெண்ணும் அழகு.நடிப்பும் வருகிறது.இரண்டு மாற்றங்கள் செய்திருந்தால் எனக்கு படம் பிடித்திருக்கும்.கதையிலா என்று கேட்டால் இல்லை. நாயகனையும், நாயகியையும் மாற்றி இருக்க வேண்டும்.நடிக்க சொன்னால் இரண்டும் படத்தில் "வாழ்ந்திருக்கிறார்கள்".

வெற்றியாளன் என்ன சொன்னாலும் உலகம் நம்புகிறது.இது எனக்கு இரண்டு கதையை நினைவு படுத்தியது.வாரமலரில் சில வருடங்களுக்கு முன் எல்லாம் வெளியாகும் சிறுகதையில் ஒரு தரம் இருக்கும். முதல் படம் வெற்றி அடைந்தவுடன் அது வரை ஏழையாக கஷ்டப்பட்ட இயக்குனர் நான் பிறந்ததே பணக்கார குடும்பத்தில் என்று பேட்டி தருவார்.மனைவி ஏன் இந்த பொய் என்று கேட்பார்.என்னை மாதிரி யாரும் கஷ்டப்படக் கூடாது என்று சொல்வார்.அந்த கதையை நான் கிழித்து எறிந்தேன்.அப்படி ஒரு படம் தான் மாயக்கண்ணாடி.அதை ரசிகர்களே நிராகரித்து ரசனை இல்லாதவர்கள் என்று சேரனிடம் பட்டம் வாங்கி கொண்டார்கள்.அடுத்த கதை - கணவனும்,மனைவியும் காரில் செல்வார்கள்.காலில் செருப்பில்லாமல் பள்ளிக்கு செல்லும் சிறுவன் லிப்ட் கேட்பான்.இவன் தராமல் வந்து விடுவான்.மனைவி கோபப்படுவாள்.கணவன் சொல்வான் - "இப்படி செய்தால் தான் அந்த வெறியில் அவன் நாளை கார் வாங்குவான்".எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது.என்னை பொறுத்தவரை விமர்சனங்கள் தான் வெற்றியாளனை உருவாக்குகிறது.பொய்கள் அல்ல.அவமானமும்,அலட்சியமும் வெற்றியாளனை உருவாக்கினாலும் வெற்றி கிடைத்தப் பின் அவன் சொல்லும் பொய் நிச்சயம் அவனை கீழே தள்ளும்.வசந்த பாலனும்,கௌதம் மேனனும் இன்னொரு விக்ரமனாக மாறும் காலம் நிச்சயம் பக்கத்தில் தான் இருக்கிறது.

சச்சினை வளர்த்தது திறமையா விமர்சனமா என்று கேட்டால் விமர்சனம் தான் என்று சொல்லுவேன். சச்சின் அளவிற்கு யார் மேலும் இந்த அளவிற்கு விமர்சன வெப்பம் பாய்ந்தது கிடையாது.திறமை என்பது அவர் 1992 ஆஸ்திரேலியப் பயணத்தின் போதே நிரூபித்து விட்டார்.அதற்கு பின் அவரை வளர்த்தது எல்லாம் விமர்சனம் தான்.2005ம் வருடத்தின் போது எண்டூல்கர் என்று லண்டம் டைம்ஸ் ஆங்கிலப் பத்திரிக்கை பகடி செய்தது.கதறி அழுதேன் என்று சச்சினே சொல்லி இருக்கிறார்.அதன் பிறகு எடுத்த விஸ்பரூபம் நாம் பார்த்தது தான்.இன்னொரு காரணம் காம்ளி அணியில் இருக்கும் போது காம்ளி ஆடியப் பிறகே சச்சின் களமிறங்குவார்.சச்சின் அளவிற்கு திறமைசாலி.காணாமல் போனதற்கு காரணம் விமர்சனங்களை அவர் சரியாக எடுத்து கொள்ளாததே.என்னையும் விமர்சனம் செய்யலாம்.ஒருமுறை அதிஷா என்னிடம் சொன்னார் - "நானாவது ரஜினி,கமல் என்று விமர்சனம் செய்கிறேன்.பாவம் இவர்கள் அதிஷாவை விமர்சனம் செய்கிறார்கள்".

7 comments:

Raju said...

எனக்கு மாயக்கண்ணாடில ஒரு கேரக்டர் புடிக்கும்..!

டாக்டர்.ராமசாமி MBBS FRCS.!

அது யாருன்னு தெரியுமா..?
:-)

Anonymous said...

சொவதற்கு வேறொன்றுமில்லை...

காதுகளை பத்திரப்
படுத்திக் கொள்ளுங்கள்
இங்கு வார்த்தைகள்
சாணம் தீட்டப்படுகின்றன...


என் பொறுமையை
ஆட்கொள்ளும்
உன் எல்லை
இருமடங்கானப் பின்பே
எனது எழுத்தில்
முற்றுப்புள்ளி
மேலேறி வந்துவிடுகிறது...

வார்த்தைகளுக்கு
உத்தரவாதமில்லை
என் வாய்க்கும்
உன் காதுக்குமான
தூரத்தில்...

சில நேரங்களில்
என் வார்த்தைகளின்
எச்சங்கள் மட்டுமே
என்னை
அடையாளப்படுத்திவிடுகின்றன

அவனை நான்
கொல்லப்போகிறேன்
மரியாதையாக
கொல்லப்படுவதற்கு
தகுதியானவன் தான்...

என்ன அரவிந்த் ஒண்ணும் புரியலையா.நான் எழுதுன ஒரு post தான். நீ தேடிபோயா படிச்சிருக்கப்போர. அதான் படி நல்லா
அர்த்தம் புரிஞ்சுகிட்டு படி.

இரும்புத்திரை said...

ஆமா சார் நான் தேடி போய் படிப்பதில்லை.அதனால் தான் உங்களுடைய நேற்றைய பதிவில் பின்னூட்டம் எல்லாம் போட்டுயிருக்கிறேன்.இதை படித்து விட்டு கோபப்பட்டால் அது என்னுடைய வெற்றியே.என்னை கோபப்படுத்த சிலரால் தான் முடியும் என்று நினைக்கிறேன்.அர்த்தம் புரிந்து படிக்க இது என்ன லத்தீன் அமெரிக்க இலக்கியமா.

இரும்புத்திரை said...

இதை ஏற்கனவே படித்திருக்கிறேன்.பின்னூட்டங்கள் படித்ததில்லை.காரணம் ரீடரில் தான் படிப்பேன்.ஏன் இரண்டு மூன்று பின்னூட்டங்கள் அதில் இல்லை.காரணம் இந்த கவிதையை எடுத்து கொள்ளலாமா சரவணன்.

//வார்த்தைகளுக்கு
உத்தரவாதமில்லை
என் வாய்க்கும்
உன் காதுக்குமான
தூரத்தில்...//

ராஜூ அவர் நம்ம இயக்குனர் தானே.

Anonymous said...

தாராளமாக...

Nathanjagk said...

வெளுத்துக் கட்டு.. ​வெளுத்துக் கட்டூ..
மல்லிகைப் பூப்போலே படத்தையெல்லாம் ​வெளுத்தூக் கட்டூ..!!!

சில்க் சதிஷ் said...

விமர்சனங்கள் தான் வெற்றியாளனை உருவாக்குகிறது

புடிக்கும்