Monday, April 5, 2010

அங்காடித் தெருவும்,சாருவும்

அங்காடித் தெரு - நான் என்ன சொல்ல.சொல்ல ஒன்றுமே இல்லையா என்றால் நிறையவே இருக்கிறது.கிட்டதட்ட இப்படியும் சொல்ல முடியாது.மாயாண்டி குடும்பத்தாரும் அங்காடித் தெருவும் ஒன்று தான்.இரண்டுமே செண்டிமெண்டல் பேத்தல்களால் நிரம்பியது.என்ன மாயாண்டி குடும்பத்தார் படத்தில் மிகை நடிப்பு இருந்தது.இதில் இல்லை அவ்வளவு தான்.ஐம்பதாயிரம் மொய் வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் நாயகன் நடந்து போகும் இடத்தில் மட்டும் தான் கொஞ்சம் கலங்கி விட்டேன்.இதுவும் அது போல தான்.ஒரே ஒரு காட்சியில் மட்டும் தான் கலங்கி விட்டேன்.அது எது என்றால் ரெயில்வே கிராஸிங் விபத்து காட்சியா,நாயகியிடம் அவளுடைய மேனேஜர் செய்த அத்துமீறலா,ரவுடிகளின் துரத்தல்களா,ஆரம்ப காட்சியின் விபத்தா,செல்வராணியின் தற்கொலையா,தாசியின் குள்ளமான குழந்தையின் காரணமா என்றால் இப்படி எதுவுமே இல்லை.

அந்த காட்சி - எங்க அப்பா இருந்தா நான் இப்படி இருந்திருப்பேனா என்று வெடித்து அழும் காட்சி மட்டும் தான் பாதித்தது.அதில் மட்டும் தான் என்னளவில் அழுத்தம் இருந்ததாக தெரிந்தது.வெயில் படத்தில் நிறைய இடங்களில் இருந்த அழுத்தம் இந்த படத்தில் இல்லை.அந்த படத்தின் தாக்கத்திலே இந்த படத்தை உலகத்தரம் என்று சொன்னால் ஒன்றும் செய்ய முடியாது.அந்த படத்தின் தாக்கத்தால் இதை நிராகரிப்பதாகவும் எடுக்க முடியாது.காரணம் படம் பேப்பர் கட்டிங் செய்திகளால் கோர்க்கப்பட்டிருந்தது.அதை தனித்தனி சிறுகதைகளாக,கிளைக் கதைகளாக பார்க்கும் வித்தியாசமான பார்வை எந்த காலத்திலும் எனக்கு வந்து விடவே கூடாது.

படம் முழுவதும் அவ்வளவு அபத்தம் கொட்டிக் கிடக்கிறது.அதுவும் ஆரம்ப காட்சியில் இருந்து தொடங்கி விட்டது.இட்டமொழி என்பது கிராமமா.என்ன கொடுமை வசந்த பாலன் இது.(சுஜாதா சொன்னது தான் நமக்கு தெரியாத ஊரை எல்லாம் கதைக்குள் கொண்டு வரக் கூடாது).அது என் பெரியப்பா காலத்திலேயே (சுமார் அறுபது வருடங்களுக்கு முன்) சுற்று வட்டாரத்திலேயே பெரிய பள்ளியை கொண்டிருந்தது.என் அம்மா,சித்தி எல்லாம் படிக்கும் போது சொல்லவே வேண்டாம்.நான் படிக்கும் போது அது ஒரு பேரூர்.இப்போது - வசந்த பாலன் பீல்ட் வோர்க் செய்யும் போது சரியாக செய்ய வேண்டும்.

அடுத்தது ஆளியில்லாத ரெயில்வே கிராஸிங் எங்கே இருக்கிறது அதுவும் இட்டமொழி பக்கத்தில் என்று யோசித்தே அந்த "அழுத்தமான" காட்சியை கடந்து வந்தேன்.மகனை அதாவது நாயகனை வேலைக்கு அனுப்ப வேண்டும் என்றால் கட்டட வேலை செய்யும் போது கீழே விழுந்து இறந்ததாக காட்டினால் முடிந்து விடுமே.அதற்கு ஏன் இத்தனை பேரை பலி கொடுக்க வேண்டும்.ஓ பேப்பர் துணுக்கல்லவா மறந்து விட்டேன்.

நடுநடுவே நீளத்தைக் கூட்ட கழிவறை கதை,பழைய துணியை வியாபாரம் செய்யும் கதை எல்லாம் தொய்வு தான் தருகிறது.எங்கே பையை வாங்கி கொண்டு ஓடி வரும் தங்கையின் பிண்ணனியில் ஒரு பஸ் ஹாரன் கேட்டது.இவளும் காலியா என்று ஒரு நிமிடம் பதறி விட்டேன்.நல்ல வேளை அவருக்கு எந்த பேப்பர் கட்டிங்கும் கிடைக்கவில்லை போல.

ஆக யதார்த்தம் என்று சொல்லி நம் சோகங்களை கொஞ்ச நேரம் மறக்க செய்வது போல் படம் எடுப்பது தினமும் டிவி செய்திகள் பார்த்தே நம் சோகங்களை மறக்க முயல்வது போல தான்.அப்படி செய்தால் அது கண நேர வெற்றி தான்.பத்து வருடங்கள் கடந்த பிறகும் தலையில் வைத்து கொண்டாடும் அளவிற்கு இருந்தால் தான் ஒரு யதார்த்தமான சினிமா என்று நினைத்தே வளர்ந்து விட்டேன்.இன்னும் ஆறு மாதம் கழித்து பாருங்கள்.உங்களுக்கு புரியும்.புரியவில்லையா ஆறு வருடங்கள் எடுத்து கொள்ளுங்கள்.

இன்னும் நிறைய விஷயத்தை பேசலாம்.வெற்றி பெற்றவன் என்ன பேசினாலும் இந்த உலகம் நம்புகிறது.அந்த நம்பிக்கைகளை நான் உடைக்க விரும்பவில்லை.ஆனால் ஒரே ஒரு பொய்யை சொல்லாமல் விட்டால் எனக்கு தூக்கமே வராது.பீல்ட் வோர்க் என்று வசந்த பாலன் சொல்லும் அளவிற்கெல்லாம் அவர் எதுவும் செய்யவில்லை என்று இட்டமொழி "கிராமத்தை" அவர் விட்ட மொழியில் தெரிந்து விட்டது.

நான் எதிர்வினை எழுத மாட்டேன் என்று சொன்னாலும் சொன்னேன்.வடைகளாக கொட்டித் தருகிறார்கள்.லேட்டஸ்ட் வடை சாரு.இஷ்கியா படத்திற்கு சாரு விமர்சனம் எழுதியுள்ளார்.அதற்கு எதிர்வினை வரும் என்று தெரியும்.அதுவும் தப்பாக தான் வருகிறது.இரண்டு காதலர்களாம் என்ன கொடுமை சாரு இது.இரண்டு பேரும் வித்யாபாலனை காதலிப்பார்கள்.வித்யாபாலன் அவர்களை உபயோகித்து கொண்டாலும் அர்ஷாத் வர்ஸியிடம் அவருக்கு ஒரு நெருக்கம் இருக்கும்.இருவருக்கும் உடல்ரீதியாக தொடர்பு ஏற்பட்டதும் ஒரு பாட்டு வரும்.அதில் தெரியும் வித்யாபாலனின் காதல்.கடைசியில் இரண்டு காதலர்களுடன் போவதாக சாரு சொல்லியுள்ளார்.அதுவும் தவறு.நஸ்ரூதீன் ஷாவிற்கும் வித்யா பாலனுக்கும் உள்ள இடைவெளியில் தெரியும் அவர் யாரை காதலிக்கிறார் என்று.அடுத்தது அந்த திருத்தம் குலால் படத்திற்கு இசை விஷால் பரத்வாஜா கலி முத்திடுச்சுடா சாமி.சாருவுக்கு அவரை வெளுக்க சந்தர்ப்பம் கிடைத்தது.ஆனால் சாரு  இரண்டையும் மிஸ் செய்து விட்டார்.சாரு நீங்க பழைய பார்மில் இல்லை.கொலைவெறியோடு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தையும் ஹிந்தி படப் பாடல்களையும் கோர்த்து சொன்னதை சொல்கிறேன்.நாமெல்லாம் டாக்ஸி டாக்ஸி பாடல்களை சிலாகிப்பவர்கள்.வி.தா.வ படத்தை சிலாகிக்காமல் விடுவோமா.நாம் என்ன தான் பாடல்கள் போட்டாலும் அவர்களை இசையில் மட்டும் அடிக்கவே முடியாது என்று தான் நினைக்கிறேன்.அதற்கு ரஹ்மானின் இந்தி பாடல்களே சாட்சி.யப்பா சாமி இது எதிர்வினை இல்லை.(சாறு சங்கர் புரிந்ததா..)

தெலுங்கு பட வன்முறையையும்,கவர்ச்சியையும் நம்மால் முந்த முடியுமா.அதுமாதிரி இந்தி படத்தின் இசையையும் நாம் தொடவே முடியாது.மற்ற எல்லா விஷயத்திலும் நாம் முந்துவோம்.(ஒளிப்பதிவு - நிறைய பேர் இங்குயுள்ளவர்களே அங்கு பணியாற்றுகிறார்கள்)

28 comments:

இரும்புத்திரை said...

பையா படத்திற்கு பட விமர்சனம் போட்டதும் ஒரு பாலோயரை ஆளை காணோம்.இந்த விமர்சனத்திற்கு பின் பார்ப்போம்.

ராம்ஜி_யாஹூ said...

எனக்கும் அங்காடி தெரு எதிர் பார்த்த அளவு பாதிப்பு ஏற்படுத்த வில்லை, ஒரு வேலை நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்தேன் போல.

படத்தில் வரும் தமிழ் நாகர்கோயில் தமிழ், அது இட்ட மொழி, திருச்செந்தூர், உடன்குடி, திசையன் விளை தமிழே இல்லை

நீங்கள் சொல்வது போல தான், இட்ட மொழி, திசையன் விளை மக்கள் எல்லாம் படித்த விஷயம் தெரிந்த (அதுவும் சென்னை பற்றி கரைத்து குடித்தவர்கள்).

பழ கருப்பையா செம காமெடி., அவரின் பேச்சு அப்படியே காரைக்குடி செட்டியார் தமிழ்.,

அது போலவே மிகுந்த மிகை படுத்தல் காட்சிகள், சொப்பர்வைசொர் கிடைத்த ஆள்கள் மீது எல்லாம் வன்முறை, பாலியல் வன்முறை. எனக்கு நன்கு தெரியும் திருசெதூர், உடன்குடி, ஆறுமுகநேரி, குரும்பூர் பெண்கள் மீது கை வைத்தல் அந்த பெண்ணே கையை ஒடித்து கொடுத்து விட்டு தான் அடுத்த வேலை செய்வாள்.
அவ்வளவு வீரம் மிக்க பெண்கள்.

Unknown said...

வேற எந்த மாதிரி படம் எடுத்தாய்யா உங்களுக்கு பிடிக்கும்?
வேட்டைக்காரன் மாதிரியா?

Anonymous said...

வணக்கம் இரும்புத்திரை அவர்களே...
செண்டிமெண்டை பேத்தல்கள் என்று நீ சுயநினைவோடு ஒத்துக்கொண்டால் ஒன்றும் செய்ய முடியாது நீ இருட்டுக்குள் நடந்து சென்றுகொண்டிருக்கிறாய் என்றே அர்த்தம். நீ எவ்வளவுதான் கண்ணை சிமிட்டி பார்த்தாலும் அங்கே ஒன்றுமே இருக்காது.இதுவரை ஒரு கணமாவது யாரையும் பொருட்படுத்தாமல் உணது உணர்ச்சிகளை கொட்டிதீர்க்காமல் இருந்திருந்தால் நீ வாழ்ந்த வாழ்க்கையும் பொய்யானது.செத்துப்போனவன் எழுந்து வந்தான் என்றால் லாஜிக்கென்ற கொம்பை பிடித்துக்கொண்டு தொங்கலாம்.எதிரெதிரே நடந்து சென்ற நாம் இருவரும் சந்திக்கவில்லை என்றால் சந்திக்கவில்லை.ஒத்தையடிப்பாதையில ஒன்னுக்கு வந்துருச்சுனு கூட அவன் போயிருக்கலாம்.அதெப்படி இவன் வர்ற நேரத்துக்குதான் அவனுக்கு வரணுமா என்றால்
உங்கள மொதல்ல பாத்ரூம் போய்ட்டுவாங்னுதான் சொல்வேன்.என்னது? இடை இடையே கதையை நீட்ட இடைகதையா? கணநேரத்தை எதிர்பார்த்துகாத்திருக்கும் ஒரு லட்சம்பேரின் தற்கொலை சிந்தனைகளில் ஒரு சிந்தனை தன்னை தவறென்று உணர்ந்திருந்தால் போதும். அவைகள்தான் வாழ்வினைமாற்றிப்போடும் ஆதாரங்கள். அவர் தெரிந்தோ இல்லை தெரியாமலோ செய்தார் என்பதெல்லாம் இல்லை. நாறிப்போய்க்கொண்டிருக்கும் திரைக்கதை வரையையை மீறியிருக்கிறார்.அப்புறம் சிமாவுக்குலாம் யாரும் வரையறை அமைக்கமுடியாது. யாராவது சொன்னாங்கன்னு வந்து எதையும் சொல்லாதீங்க சிரிப்பா வருது.அட நான் சிரிக்கலப்பா இந்த காலக்கண்ணாடில அப்படிதான் தெரியுது.

புருனோ Bruno said...

இந்த படம் குறித்த என் கருத்துக்கள் அங்காடி தெரு பணியாளர்களும், அசிஸ்டெண்ட் டைரக்டர்களும், ஜூனியர் லாயர்களும் !!

Unknown said...

குரங்கு கையில பூமாலை கிடைச்சா அது என்ன பண்ணுமோ, அதே மாதிரிதான் உங்க கையில இந்த பிளாக் கிடைச்சதும்.

இரும்புத்திரை said...

யப்பா உசிதமணி மது அடுத்தவனை பிச்சிப் போடுற பூமாலையை குத்தம் சொல்லும் போது சொந்த முகத்தில் வாங்க

மதார் said...

@இந்திராகிசரவணன்
//நாறிப்போய்க்கொண்டிருக்கும் திரைக்கதை வரையையை மீறியிருக்கிறார்.அப்புறம் சிமாவுக்குலாம் யாரும் வரையறை அமைக்கமுடியாது. யாராவது சொன்னாங்கன்னு வந்து எதையும் சொல்லாதீங்க சிரிப்பா வருது.அட நான் சிரிக்கலப்பா இந்த காலக்கண்ணாடில அப்படிதான் தெரியுது.//
கண்டிப்பா ஒத்துக்கணும் , பல வருடங்களுக்கு முன்னே வந்த முதலாளித்துவ படங்கள் கூட இதற்க்கு தேவல . ஏங்க எங்கயாவது விவரம் தெரிஞ்சு பேசுறவன வெளில விடுவாங்களா?

//திரைக்கதை வரையையை மீறியிருக்கிறார்// இதுல மீறிருக்கார். பழைய படம் என்றால் போலீஸ் நிலையத்திலேயே ஆளை முடிச்சுருப்பாங்க.

//சிமாவுக்குலாம் யாரும் வரையறை அமைக்கமுடியாது.// நீங்க ஒரு Film maker முதல்ல சரியா சினிமாவ எழுதப் பழகுங்க . பார்த்தாலே சிரிப்பா வருது . அட நான் சிரிக்கலைங்க என் கம்ப்யூட்டர் மானிட்டர்ல அப்படிதான் தெரியுது .

//வரையறை அமைக்கமுடியாது// கண்டிப்பா அமைக்க முடியாதுதான் . சினிமா என்ன காட்டினாலும் கைகொட்டி பார்க்க ஆளுங்க இருக்குறாங்களே .

Anonymous said...

மதார் பட்டாணி அவர்களுக்கு வணக்கம்,நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...

//பல வருடங்களுக்கு முன்னே வந்த முதலாளித்துவ படங்கள் கூட இதற்க்கு தேவல//
ஏங்க என்னத்த புரிஞ்சிக்கிட்டீங்க...
அம்மா தங்கச்சிக்கு சாப்பிடவும் வக்கில்ல, வெளியபோனா ஒரு நாதியும் இல்ல ஆனாலும் முதலாளியை எதிர்த்து வெளியப்போறான்.அடித்தேகொண்றுவிடுவார்கள் என்று தெரிந்தும் அவர்களைபத்திப் பேசுறான்.போங்கடா மயிறுன்னு சவால்விட்டுட்டு ஒரு பொண்ண கையப்புடிச்சு கூட்டிட்டுப்போறான். என்னதான் உங்கப்பிரச்சனை கொடிதூக்கிக்கிட்டு நின்னாதான் முதலாளித்துவ எதிர்ப்புன்னு ஒத்துப்பீங்களா...

//நீங்க ஒரு Film maker முதல்ல சரியா சினிமாவ எழுதப் பழகுங்க . பார்த்தாலே சிரிப்பா வருது . அட நான் சிரிக்கலைங்க என் கம்ப்யூட்டர் மானிட்டர்ல அப்படிதான் தெரியுது .//

மானிட்டர்ல சினிமா பாக்கிற நீயெல்லாம் சினிமாவை பத்தி பேசக்கூடாது... இல்லை அதன் அர்த்தம் வேறென்றால் புரிந்துக்கொண்டு எழுதப்பழகு.

////
//வரையறை அமைக்கமுடியாது// கண்டிப்பா அமைக்க முடியாதுதான் . சினிமா என்ன காட்டினாலும் கைகொட்டி பார்க்க ஆளுங்க இருக்குறாங்களே.
////
என்ன லூசுதனமா பேசுரீங்க...
அது ஒரு முடிவில்லா தேடல். வரையறைகள் மாறிக்கொண்டுதான் இருக்கும் என்பது தான் என் கருத்து. இதற்கும் நீங்கள் கூறுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது...

Anonymous said...

இரும்புத்திரை அவர்களே...
என் பின்னூட்டத்திற்கு எதிர்கருத்திருந்தால் தைரியாக தெரிவியுங்கள்.நான் உங்கள் வலைதளத்தில்தானே வந்து பதிவிக்கிறேன்.
அதைவிட்டுவிட்டு பின்னூட்டத்தை அழிப்பதென்பது கோழைத்தனம்.
ஒரு நல்லப்படத்தை உன் கேவலமான மேதாவிதனத்தைக் கொண்டு நீ விமர்சிக்கலாம்.உன் விமர்சனதுக்கு எதிர்கருத்து தெரிவித்தால் உன்னால் பொருத்துக்கொள்ள முடியாது.
நீயெல்லாம் என்ன மயிருக்கு விமர்சனம் எழுத வர...

மதார் said...

@ இந்திராகிசரவணன்

//என்னதான் உங்கப்பிரச்சனை கொடிதூக்கிக்கிட்டு நின்னாதான் முதலாளித்துவ எதிர்ப்புன்னு ஒத்துப்பீங்களா...//

நான் சொன்னது அந்த காட்சியும் அதில் விடுபட்ட எதார்த்தமுமே , அங்கே கோடி பிடிக்க எல்லாம் நேரம் இல்லீங்க .



//மானிட்டர்ல சினிமா பாக்கிற நீயெல்லாம் சினிமாவை பத்தி பேசக்கூடாது... இல்லை அதன் அர்த்தம் வேறென்றால் புரிந்துக்கொண்டு எழுதப்பழகு.//



முதல்ல மத்தவங்களுக்கு மரியாதை குடுத்து பழகுங்க உங்களை விட வயதில் சிறியவரா இருந்தாலும் .



நான் எந்த மானிட்டர்ல படம் பார்த்தேன் ? நீங்க இவ்ளோ அறிவா? உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கும் என் கம்ப்யூட்டர் மானிடர் பார்த்து சிரிக்குறது என்ற அர்த்தத்தில் நான் சொன்னதையே புரிந்து கொள்ளாத நீங்கள் என்னை அர்த்தம் புரிந்து எழுதச் சொல்வது என்னவென்று சொல்வது மறுபடியும் என் மானிடர் சிரிக்குறது . சினிமா தொழிலில் சம்பந்தப்பட்ட நீங்கள் மட்டும் தான் திரையரங்கு போய் படம் பார்பீங்க மத்தவங்க எல்லாம் மானிட்டரில் படம் பார்ப்போம் அப்படியா ? உங்களுக்காக மட்டும் ஏங்க திரைச்செலவு?

Anonymous said...

வாருங்கள்...
//நீங்க ஒரு Film maker முதல்ல சரியா சினிமாவ எழுதப் பழகுங்க . பார்த்தாலே சிரிப்பா வருது . அட நான் சிரிக்கலைங்க என் கம்ப்யூட்டர் மானிட்டர்ல அப்படிதான் தெரியுது .//
ம்ம்ம்... நீங்கள் எழுதிய வாக்கியம் எனக்கு விட்டுச்சென்ற பொருள் அதுதான்...

நான் என்ன செய்ய தோழி...

மதார் said...

//ஒரு நல்லப்படத்தை உன் கேவலமான மேதாவிதனத்தைக் கொண்டு நீ விமர்சிக்கலாம்.உன் விமர்சனதுக்கு எதிர்கருத்து தெரிவித்தால் உன்னால் பொருத்துக்கொள்ள முடியாது.
நீயெல்லாம் என்ன மயிருக்கு விமர்சனம் எழுத வர...//

இது அவர் ப்ளாக் என்ன செய்யவும் அவருக்கு மட்டுமே உரிமை உண்டு . அவர் பதிவுக்கு வரும் எதிர் கருத்து இது ஒன்றும் புதிதல்ல .



//ஒரு நல்லப்படத்தை உன் கேவலமான மேதாவிதனத்தைக் கொண்டு நீ விமர்சிக்கலாம்.//

நல்ல படம் அது எல்லாருமே சொல்லணும் . உங்கள் பார்வைக்கு தெரிந்தவை அவருக்கு வேறு மாதிரி தெரியலாம் . பார்வையாளன் பார்வைகள் வேறுவேறு .



//நீயெல்லாம் என்ன மயிருக்கு விமர்சனம் எழுத வர...//

வார்த்தை கொஞ்சம் பார்த்து எழுதினால் நன்று . கோபத்தைக்கூட நியாயமான வார்த்தைகளால் மற்றவருக்கு புரியவைக்க முடியும் . வார்த்தைகளில் என் இவ்வளவு வன்மம் ?

ஜனநாயக நாட்டில் விமர்சனம் எழுத யாரும் யாரயும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை .


விமர்சனம் என்று சொல்லும்போதே அதில் பாராட்டுகளும் ஏச்சுகளும் இருக்கும் , அதை ஏற்றுக் கொள்பவனே உண்மையான படைப்பாளி .

Unknown said...

சொந்த முகத்தில் வாங்கன்னு நீங்க சொல்றதுக்கு என்ன அர்த்தம்? அதாவது பிளாக் வெச்சிருக்கவங்க மட்டும்தான்
உங்களுக்கு கமெண்ட் போடணுமா? பிளாக்கே இல்லாம சாதாரண ஜிமெயில் ஐடி வெச்சிருக்கிற
யாரும் உங்களுக்கு கமெண்ட் போடக்கூடாதா?

Anonymous said...

// இது அவர் ப்ளாக் என்ன செய்யவும் அவருக்கு மட்டுமே உரிமை உண்டு . அவர் பதிவுக்கு வரும் எதிர் கருத்து இது ஒன்றும் புதிதல்ல .//

எனக்கு ஒன்றுமட்டும் புரியவில்லை. எப்படி இப்படியெல்லாம் பேசமுடிகிறது உங்களால்...

நீங்கள் எழுதுவதை நாங்கள் படிக்கவேண்டும்.உங்களுக்கு நாங்கள் பதில் கூறுவதையும் நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் அப்படிதானே...

////வார்த்தை கொஞ்சம் பார்த்து எழுதினால் நன்று . கோபத்தைக்கூட நியாயமான வார்த்தைகளால் மற்றவருக்கு புரியவைக்க முடியும் . வார்த்தைகளில் என் இவ்வளவு வன்மம் ?
விமர்சனம் என்று சொல்லும்போதே அதில் பாராட்டுகளும் ஏச்சுகளும் இருக்கும் , அதை ஏற்றுக் கொள்பவனே உண்மையான படைப்பாளி .////

மேற்க்கூறிய கேள்விகளும் பதில்களும் உங்களுடைய ஒரே பின்னூடத்திலிருந்துதான்...

Unknown said...

இந்திராகிசரவணன் போட்ட கமெண்டை ஏன் டெலிட் பண்ணீங்க?

மதார் said...

போடலாம் தப்பில்ல , ஆனா இதையே சிலர் வேறு மாதிரி காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்துறாங்க , one optional choice for anony . I hope u hot this .

அர்ச்சனை said...

இந்த மாதிரி லூசுங்க எழுதுற பதிவை எல்லாம் கணக்குலேயே எடுத்துக்க கூடாது. இதுல கமெண்ட்'ல
வேற நாம அடிச்சுகிட்டு,.... இந்த பதிவை எல்லாம் கண்டுக்கவே கூடாது. அப்படியே போய் தொலையுதுன்னு விட்டுடணும்.
தமிழீழ்'ல பப்ளிஷ் பண்ணியும் ஒரு ஓட்டுக்கு மேல வாங்கலை.. யாருமே இதை மதிக்காதப்போ நீங்க மட்டும் எதுக்கு??? விட்டு தொலையுங்க..

மதார் said...

for archana nd இந்திராகிசரவணன்
http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/04/blog-post_06.html

plz visit this blog also ,i expect the words like loose .

Unknown said...

அர்விந்த், "Nobody is perfect here" அப்படின்னு ஒரு சுஜாதா டயலாக் வரும். அது உண்மைதான்
உங்க பதிவுல கூடத்தான் "இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்" அப்படிங்கிற இடத்துல
ஒவ்வோர் வாட்டியும் நம்பர் வரணும். ஆனா அது கரெக்டா வருதா? இல்லை இல்ல. அதுக்காக இந்த ஒரு குறைய சுட்டிக்காடி, ஒரு சின்ன விஷயத்தையே அரவிந்தால
சரி பண்ணத்தெரியலைன்னு சொல்லி உங்க எழுத்து திறமையை குறை சொன்ன அது சரியா இருக்குமா? ஒரு முற்றுப்புள்ளிக்கப்புறம் ஒரு இடைவெளி விட்டுத்தான் அடுத்த வார்த்தையை எழுதணுங்கிறது சம்பிரதாயம். நீங்க அப்படியா எழுதறீங்க? குறைகளை
சுட்டிக்காட்டுங்க. ஆனா குத்தாதீங்க.. வசந்தபாலன் மாதிரி ஆட்களுக்கு நீங்க கை கொடுத்து தூக்கிவிடலைன்னா கூட பரவாயில்லை. ஆனா இந்த மாதிரி மத்தவங்க பார்வையில நீங்க புத்திசாலியா தெரியணுங்கிறதுக்காக இந்த மாதிரி எழுதாதீங்க. (ரெண்டு பின்னூட்டம் கூட வராத உங்க பதிவுக்கு இருபது பின்னூட்டம் வர வெச்சிருக்கார் வசந்தபாலன்.)

மதார் said...

@ மது

அது ஏதோ டேச்னிகல் பிரச்னை எனக்கும் அப்படிதான் அது வருது . அப்போ எனக்கும் எழுதத் தெரியலைனுதான் சொல்வீங்களா ? ஒரு . , எல்லாம் இங்க பாருங்க . பார்க்க வேண்டியவை எவ்வளவோ இருக்கு ஏன் ஒரு சின்ன புள்ளிக்குள்ள உங்க பார்வையை குருக்குறீங்க ?

மதார் said...

அவர் ஒன்னும் எனக்கு பின்னூட்டம் போடுங்க வோட் போடுங்கனு கேட்கலையே , அவரே அதைப் பத்தி கவலைப் படல நீங்க ஏங்க இப்படி பீல் பண்றீங்க ?

வோட் விழுந்தாதான் அது நல்ல பதிவா? இந்த பிரச்னைதான் நான் முன்னாடி எழுதினது உங்களுக்கு பதில் இங்க இருக்கு

மதார் said...

http://mathar-itsallaboutmine.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
தமிழ்மணம் , தமிலிஷ் -ஓட்டு வியாபாரம்

Unknown said...

டெக்னிக்கல் பிரச்சனை, ஒருசின்ன கமா எல்லாம் சாதாரண விஷயம்தான். இதை வெச்சி எப்படி
ஒரு பதிவை மதிப்பிட கூடாதோ அதே போலத்தான் ஒரு படத்துல இருக்கிற சின்ன சின்ன தவறுகளும். சின்ன சின்ன தவறுகளை வெச்சி
ஒரு படத்தை மதிப்பிடாதீங்க. பேப்பர் கட்டிங்'குன்னு அவ்ளோ சாதரணமா சொல்லிட்டாரே... ரோஜா படம் கூட வெறும் பேப்பர் கட்டிங்'ல இருந்துதான் உருவாச்சு.
கன்னத்தில் முத்தமிட்டால் கூடத்தான் பேப்பர் கட்டிங்'ல இருந்து உருவாச்சி. ரோஜா படம் செய்யாத சாதனை என்ன?
இன்னைக்கு அயோவா யுனிவர்சிட்டியில கன்னத்தில் முத்தமிட்டால் படம் "பாடத்திட்டத்துல" ஒண்ணா இருக்கு. அப்போ பேப்பர் கட்டிங் எல்லாம்
கேவலம்ன்னு சொல்வீங்களா?


//அவர் ஒன்னும் எனக்கு பின்னூட்டம் போடுங்க வோட் போடுங்கனு கேட்கலையே //
அப்புறம் எதுக்குங்க தமிழீழ் ஓட்டுப்பட்டையை இணைச்சு வெச்சிருக்காரு? அதை தூக்கிட வேண்டியது தானே?

இரும்புத்திரை said...

@இந்திராகிசரவணன்

உங்க பின்னூட்டத்தை நான் தூக்கினேனா.என்ன காமெடி சார்.எனக்கு எவனை கண்டும் பயம் இல்லை.

இங்க போய் பாருங்க.. மொத்தம் 25 பின்னூட்டம் வந்ததாக காட்டும்.

அதுவே க்ளிக் செய்து பார்த்தால் 23 தான் இருக்கிறது.உங்க பின்னூட்டத்தின் லட்சணம் அது மாதிரி இருக்கு.கூகுளுக்கே புரியாமல் அதை காட்ட மறுக்கிறது.

காணாமல் போன இரண்டு பின்னூட்டங்கள்...

இந்திராகிசரவணன் show details 6:17 PM (21 hours ago)

இந்திராகிசரவணன் has left a new comment on your post "அங்காடித் தெருவும்,சாருவும்":

வணக்கம் இரும்புத்திரை அவர்களே...
செண்டிமெண்டை பேத்தல்கள் என்று நீ சுயநினைவோடு ஒத்துக்கொண்டால் ஒன்றும் செய்ய முடியாது நீ இருட்டுக்குள் நடந்து சென்றுகொண்டிருக்கிறாய் என்றே அர்த்தம். நீ எவ்வளவுதான் கண்ணை சிமிட்டி பார்த்தாலும் அங்கே ஒன்றுமே இருக்காது.இதுவரை ஒரு கணமாவது யாரையும் பொருட்படுத்தாமல் உணது உணர்ச்சிகளை கொட்டிதீர்க்காமல் இருந்திருந்தால் நீ வாழ்ந்த வாழ்க்கையும் பொய்யானது.செத்துப்போனவன் எழுந்து வந்தான் என்றால் லாஜிக்கென்ற கொம்பை பிடித்துக்கொண்டு தொங்கலாம்.எதிரெதிரே நடந்து சென்ற நாம் இருவரும் சந்திக்கவில்லை என்றால் சந்திக்கவில்லை.ஒத்தையடிப்பாதையில ஒன்னுக்கு வந்துருச்சுனு கூட அவன் போயிருக்கலாம்.அதெப்படி இவன் வர்ற நேரத்துக்குதான் அவனுக்கு வரணுமா என்றால்
உங்கள மொதல்ல பாத்ரூம் போய்ட்டுவாங்னுதான் சொல்வேன்.என்னது? இடை இடையே கதையை நீட்ட இடைகதையா? கணநேரத்தை எதிர்பார்த்துகாத்திருக்கும் ஒரு லட்சம்பேரின் தற்கொலை சிந்தனைகளில் ஒரு சிந்தனை தன்னை தவறென்று உணர்ந்திருந்தால் போதும். அவைகள்தான் வாழ்வினைமாற்றிப்போடும் ஆதாரங்கள். அவர் தெரிந்தோ இல்லை தெரியாமலோ செய்தார் என்பதெல்லாம் இல்லை. நாறிப்போய்க்கொண்டிருக்கும் திரைக்கதை வரையையை மீறியிருக்கிறார்.அப்புறம் சிமாவுக்குலாம் யாரும் வரையறை அமைக்கமுடியாது. யாராவது சொன்னாங்கன்னு வந்து எதையும் சொல்லாதீங்க சிரிப்பா வருது.அட நான் சிரிக்கலப்பா இந்த காலக்கண்ணாடில அப்படிதான் தெரியுது.

Tharshan show details 5:41 PM (22 hours ago)

Tharshan has left a new comment on your post "அங்காடித் தெருவும்,சாருவும்":

வேற எந்த மாதிரி படம் எடுத்தாய்யா உங்களுக்கு பிடிக்கும்?
வேட்டைக்காரன் மாதிரியா?

என்ன நடந்தது என்று தெரியாமல் என்னை கோழை என்று சொல்லி விட்டு என் பதில் கூட வாங்காமல் ஓடிப் போன உங்களுக்கு என்ன பெயர்.

இப்பஓ போய் பாருங்க.. மொத்தம் 24 பின்னூட்டம் வந்ததாக காட்டும்.

ஆனால் 22 தான் இருக்கும்.

அப்புறம் மது மற்றும் அர்ச்சனா - உங்களுக்கு பிடித்திருந்தால் அது உங்களோடு.இங்கே வந்து காமெடி பீஸாக மாற வேண்டாம்.

Anonymous said...

hahahahahaha....
you are a solid single piece aravind.

Unknown said...

உண்மையிலேயே நாம எல்லாம் காமெடி பீஸுங்கதான். இந்த மாதிரி
அரைவேக்காடுங்ககிட்ட போய் நம்ம கருத்தை பகிர்ந்துகிட்டு இருக்கோமே..
போய் வேலையை பாருங்க... யாருமே இல்லாத கடையில இன்னைக்கு நாம
மட்டுமாவது வந்து டீ ஆத்திருக்கோமே. அதை நினைச்சாவது சந்தோஷப்படுக்கட்டும்.
நம்மாள இவரோட ஹிஸ்டரியில 25 கமெண்ட் வந்திருக்கு.

இரும்புத்திரை said...

மதி அரைவேக்காடுகள் தான் அடுத்தவர்களை அப்படி சொல்வார்கள்.அடுத்து நான் எழுதும் பதிவுகளைப் படித்து விட்டு இன்னும் உங்களுக்கு கோபம் வரலாம் .தொடர்ந்து படியுங்கள்.முழுவேக்காடாக மாறலாம்.

இதற்கும் பதில் சொல்கிறேன் என்று என் பின்னூட்ட எண்ணிக்கைகளைக் கூட்ட வேண்டாம்.அதிக பின்னூட்டம் பெற்று வரலாற்றில் இடம் பிடிக்க வாய்ப்பு தந்து விட வேண்டாம்.