Thursday, May 13, 2010

ஐ.சி.சி செய்த பித்தலாட்டம்

கிரிக்கெட் வெள்ளையர்கள் விளையாட்டு என்பதாலோ என்னவோ ஆங்கிலேயர்கள்,ஆஸ்திரேலியர்கள்(இங்கிலாந்தில் குற்றவாளிகளை அடைக்க இடம் இல்லாமல் அங்கு கொண்டு விட்டார்களாம் அப்படி உருவானவர்கள் தான் இவர்கள்.அதனால் கிரிமினல் புத்தி என்பது இரத்தத்தில் ஊறி இருக்கிறது),தென் ஆப்பிரிக்கர்கள்,நியுசிலாந்து அணியினர் இவர்களுக்கு சாதகமாகவே நடப்பார்கள்.ஆசிய அணியினருக்கு வழங்கப்படும் தண்டனையும்,நடுவர்களின் தீர்ப்புகளும் எல்லாம் அவர்களுக்கு எப்படி சாதகமாக இருக்கிறது என்று காண்பிக்கும்.ஆனால் இந்த அளவிற்கு பிராடுத்தனம் செய்வார்கள் என்று நானே எதிர்பார்க்கவில்லை தான்.

இந்தியா இடம் பெரும் பிரிவில் இடம் பெற வேண்டிய இங்கிலாந்து எப்படி இடம் மாறி அடுத்த பிரிவிற்கு சென்றது என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.அதாவது ஏ1(ஆஸ்திரேலியா),பி2(ஸ்ரீலங்கா),சி1(இந்தியா),டி2(இங்கிலாந்து) என்று வர வேண்டிய பிரிவில் எப்படி வெஸ்ட் இண்டீஸ் வந்தது.டி பிரிவில் அவர்கள் தான் இரண்டு போட்டிகளையுமே வென்று விட்டார்களே.அப்படி என்றால் டக்வோர்த் முறைப்படி கொடுத்த வெற்றி செல்லாதா.

படங்களை பார்க்க

முதல் சுற்று ஆட்டத்திற்கு  முன்


முதல் சுற்று ஆட்டத்திற்கு பின்

இங்கிலாந்து அரையிறுதிக்கு வர வேண்டும் என்றே செய்யப்பட்ட மாற்றம் இது.கண்டிப்பாக இந்த பிரிவில் அந்த அணி விளையாடி இருந்தால் ஆஸ்திரேலியாவும்,இலங்கையும் துவைத்து எடுத்து இருக்கும்.இந்து கூட இலங்கை வெல்வதற்கு தான் வாய்ப்பு அதிகம்.சரியான அட்டவணையின் படி இந்தியா ஆறாம் தேதியே ஆடியிருக்க வேண்டும்.அடுத்த போட்டி எட்டாம் தேதியும் கடைசி ஆஸ்திரேலியாவுடன் மோதும் போட்டி பத்தாம் தேதியே முடிந்து இருக்க வேண்டும்.இந்தியாவில் ஆட்டத்தைப் பார்க்க அட்டவணையை வலிந்து திருத்தியிருந்தாலும் இங்கிலாந்து எப்படி அந்த பிரிவிற்கு போனது.

ஏன் இந்த பித்தாலாட்டம் என்று பார்த்தால் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் இறுதியில் மொத வேண்டும் என்பதே.அது ஒரு காலும் நடக்காது என்று இலங்கை இன்று நிரூபிக்கலாம்.ஒரு வேளை அதே அட்டவணைப்படி ஆடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்குமா என்றால் அது ஐ.பி.எல் பார்ட்டிக்கே வெளிச்சம்.தோனியின் திட்டங்களைப் பற்றி தனிப்பதிவே போட வேண்டும்.

7 comments:

இரும்புத்திரை said...

தமிலீஷ்,தமிழ்மணம் இரண்டிலும் யாராவது சேர்த்து விடவும்.

Random Thoughts said...
This comment has been removed by the author.
Random Thoughts said...

Hello,
This is very well known thing during Mini world cup tournaments. A1 and A2 are not the teams that come first and second in that pool. It is the seeded first and second.

For example, even though India won South Africa, India are not C1. They are C2 because when the tournament started with them being C2 (after last year ratings). However, if Afghanistan (C3) puts India out of super 8, then Afg play
all matches of C2.

This is so that as fans you can book tickets for Super 8 matches for the correct venues and correct dates which is a sensible thing to do :)

Unknown said...

I second whatever Random thoughts said above..

A1, A2, B1, B2, C1, C2, D1, D2 are decided on how they stood last year and not how they played their first round this year.

Unknown said...

SriLanka Englandukku aappu adikkarathai vida Pakistan Australiavukku aappu adikkirathaiththan naan romba ethir paakkuren.. :)))

Bala said...

சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளில் முதலில் நாக் அவுட் முறைதான் இருந்தது. அதனால் ஆஸ்திரேலியா ஒவ்வொருதடவையும் முதல் ஆட்டத்திலேயே தோற்று வெளியேறியது. இதன் பின் சுழற்சி முறை வந்ததும் ஆஸ்திரேலியாவால் அடுத்த சுற்றுக்கு வர முடிந்தது. அதோடு இரண்டு முறை கோப்பையையும் வென்றது. இதுவும் உள் குத்தாக இருக்குமோ?

உங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக இலங்கையை இங்கிலாந்து துவைத்து விட்டதே?

Vikram said...

ஒரு வாரமாக பதிவே போடவில்லையே?? வேலைப் பளுவா?