Friday, April 29, 2011

சம்பேஸ்தானுலு

பொண்ணுங்களுக்கு நேரம் காலமே தெரியாது. நாம யார் கிட்டயாவது வசமா சிக்கியிருப்போம். அப்போ தான் போன் பண்ணுவாங்க. ம், சரி, இல்ல இப்படி ஒரு வார்த்தையிலே பதில் சொன்னா உனக்கு என் மேல பாசமே இல்லன்னு ஆரம்பிச்சிருவாங்க. அப்புறம் சூடம் ஏத்தி சத்தியம் பண்ணணும்.

ரொம்ப நாள் கழிச்சி வீட்டுக்கு எல்லோரும் வந்துருந்தாங்க.ஏற்கனவே வீட்டுக்கு யார் வந்தாலும் வாங்கன்னு கேக்க மாட்டோம்னு எங்க ரெண்டு பேருக்கும் நல்ல பேரு. இப்படி வெளியே போனா சொல்லவே வேணாம். அடுத்து படிச்சி முடிச்சிட்டு என்ன பண்ணப் போறன்னு மாமா கேக்க இது என்னடா கேள்வின்னு நினைச்சிக்கிட்டு எரிச்சலில் கல்யாணம்னு சொன்னேன்.

அப்போ தான் அவ போன்.உன்னை உடனே பாக்கனும்னு வாயேன் என்று எப்போவும் இல்லாத திரு நாளா ஆரம்பிச்சா.

"நாளைக்கு..கண்டிப்பா.."

"இன்னைக்கு வா.அதுவும் உடனே."

எல்லோரும் என்னை பாக்குற மாதிரி ஒரு நினைப்பு." மாமா வந்து இருக்காங்க.நாளைக்கு தான் வர முடியும்."

"மாமாவுக்கு பொண்ணு இருக்கா. அது எப்படி தான் இந்த கேள்வி எல்லாம் பொண்ணுங்களுக்கு மட்டும் தோணுமோ."

"இருக்கு."

"அதான் வர சொன்னா வர மாட்டேன்னு சொல்ற."

"நேர்ல சொல்றேன்."

"ஒண்ணும் சொல்ல வேண்டாம். சரி விடு இப்போ சொல்லு எண் மேல லவ் இருக்கா இல்லையா."

"இருக்கு.."

"அப்போ ஐ லவ் யூன்னு சொல்லு"

"முடியாது..

"சரி உனக்கு இங்கிலீஸ் வராதுன்னு தெரியும். தமிழ்ல சொல்லு."

"எப்படி.."

"காதலிக்கிறேன்னு சொல்லு"

"றேன். போதுமா.."

"முழுசா சொல்லு.இல்ல நம்ம லவ் புட்டுக்கும்."

"காலிக்கிறேன் கொல்டி.. போதுமா.."

"இது தப்பாட்டம்."

"என்ன தம்பி யார் கிட்ட பேசுற..முகமே சரியில்ல..என்ன காலின்னு கேட்டுச்சி."

"இல்ல ராங் நம்பர்.அதான் காலிப் பண்றேன்னு சொன்னேன்."

ராங் நம்பர் கூட இவ்ளோ நேரம் என்ன பேச்சு. குடு நான் பேசுறேன்னு சொல்லவும் போன் கட்டாயிருச்சி.

போன் அடிக்கும் போதெல்லாம் என்னை பாக்க ஆரம்பிக்க நான் நழுவி வெளியே வந்துட்டேன்.

சரி போன் பண்ணி லவ்,பியார்,காதல் இப்படி எல்லாத்தையும் சொல்லிரலாம்னு வெளியே வந்தேன். வழக்கமா எங்க ஏரியா பொண்ணுங்க யார் கிட்டயாவது கேட்டு (கெஞ்சி கூத்தாடி) அவ வெட்டுக்கு போன் பண்ண சொல்லி போன் அவ கைக்கு போனதும் நான் பேசுவேன்.அவசரம்னா தான் ஆண்டாவுள்ள கை போகாதே. ஒருத்தரையும் காணோம்.

நானே போன் பண்ணினா அவங்க அப்பா போன் எடுக்க.

சார் நாங்க ஏக்நாத் பவுண்டேஷன்ல இருந்து பேசுறோம். நீங்க மாசாமாசம் பணம் கட்டினா ஊட்டில தேக்கு மரம்,பாக்கு மரம் எல்லாம் கிடைக்கும்னு சொல்லி முடிக்கல போன் வச்ச சத்தம் தான் கேட்டது.

பத்து நிமிஷம் கழிச்சி போன் பண்ணினா அவ தம்பி.

சங்கர் வீடா..

என் சலீம் வீடா..சைமன் வீடான்னு கேக்க வேண்டியது தானே.அக்கா கிட்ட கொடுக்கட்டுமா அப்பா கிட்ட கொடுக்கட்டுமா..

டேய் ராஜா அப்பா எல்லாம் வேண்டாம் அக்கா கிட்டே கொடு

அப்பா கிட்டயே தர்றேன்..

சரி கொடு..

ரொம்ப தைரியமோ..அப்பா..அப்பா..

உன் சயின்ஸ் நோட்ல ஒரு லெட்டர் இருந்ததே.அது இப்போ எங்க. உங்க அப்பா வரட்டும். என் தங்கச்சிக்கு லவ் லெட்டர் தர்றான்னு உங்க ரெண்டு பேரையும் கிழிக்கிறேன்.அக்கா கிட்ட கொடு செல்லம்.

அவ கிட்ட போன் போனதும்

கொல்டி இப்போ சொல்றேன். லவ் யூ.காதலிக்கிறேன்..இப்போ வரட்டுமா

வேண்டாம் விடு..நாளைக்கு..

என் மேல உனக்கு லவ்வே இல்ல

இருக்கு

அப்போ லவ் யூ சொல்லு

அப்புறம்

ஆங்.. என்னமோ சொன்னதா ஞாபகம்..உனக்கு இங்கிலீஸ் வராது. உன் கொல்டி மொழியில சொல்லு

என்ன சொல்லணும்

சாலப் பிரேமிஸ்தானுலு..

முடியாது..

நான் அப்போ த சொல்லாம விட்டேன். உனக்கும் ஒரு ஆப்சன் தர்றேன். நீ லுவை விட்டுரு. எங்க சொல்லு சாலப் பிரேமிஸ்தானு..

முடியாது ..

சொல்லு..இல்ல நம்ம லவ் புட்டுக்கும்..

முடியாது..

சரி விடு..அட்லீஸ்ட் சம்பேஸ்தானுலு சொல்லு.. சரி வேணாம் சம்பேஸ்தானு..

சம்பேஸ்தானு.. என்று அவ சொல்லி முடிக்கவும் அவங்க அப்பா வரவும் நான் போனை வைத்து விட்டேன்.

அடுத்த நாள் பாக்கும் போது அவ சொன்னா அவங்கப்பா செம திட்டாம். இப்படி எல்லாம் பேசக்கூடாதுன்னு தான் சென்னைக்கு வந்தோம். இங்க வந்தும் இப்படியான்னு ஒரு மணி நேரம் அட்வைஸ் ஆடை மழையா பெய்ததாம்.

அதுக்கு நான் தான் காரணம்னு சொல்லி எத்தனையோ தடவை சாரி கேக்க சொன்னா.நீ தானே ஆரம்பிச்ச நீ கேளுன்னு சொன்னா நீ எத்தனை சாரி சொன்னியோ அத்தனை சாரின்னு சொல்றா.

அப்போ தான் புரிஞ்சது பொண்ணுங்க கூட பேசினாலும் சம்பேஸ்தானுலு தான். பெசளைனாலும் சம்பேஸ்தானுலு தான். பொண்ணுங்க அரசியல்வாதியோட மோசம். அதான் 33 சதவீதம் கூட தரலைன்னு சொன்னதுக்கு ஒரு மாசம் பேசலை.

அந்த போன் நம்பர் தான் என் பயர்பாக்ஸ் பிரவுசரோட மாஸ்டர் பாஸ்வேர்ட்.

0 comments: