Wednesday, February 9, 2011

வாசகர் கடுதாசி - அதி தீவிர இலக்கியவாதி ஆவதற்கான முயற்சி

காலேஜ்ல படிக்கும் போது மாப்பிள்ளை பெஞ்ச்ல இருக்கிறதுல ஒரு சௌகர்யம் இருக்கத்தான் செய்யுது. தூங்கலாம்,சாப்பிடலாம்,பேப்பர் பட்டாசு வெடிக்கலாம்,ராக்கெட் விடலாம் இப்படி பல லாம். தண்ணி தெளிச்சி விட்டிருந்த கோஷ்டியை அடக்குறதுக்காகவே புதுசா ஒருத்தங்க வந்து இருக்கிறதா காலேஜ் முழுக்க ஒரே பேச்சு. எங்களுக்கு அந்த குடுப்பினை இல்ல போலிருக்கேன்னு நினைச்ச உடனே ஜாவா எடுக்கிறதுக்கு அவங்க வந்தாங்க.வந்ததுல இருந்து ஒரே மோதல்.அன்னைக்கு ஆரம்பிச்ச ஜாவா வெறுப்பு இன்னும் விட்ட மாதிரி தெரியல. அந்த செம் முழுக்க நான் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட். வெளியவே நிப்போம்.என்னை எல்லாம் எப்படி புதுசா புதுசா சாத்துறதுன்னு நினைப்போடவே வருவாங்க போல.

அன்னைக்கு அதிசயமா என்னை வெளியே போக சொல்லலை.புதுசா ஏதோ ப்ளான் இருக்குன்னு சுதாரிப்போட நான் தயாராயிருந்தேன்." இன்னைக்கு நம்ம அவுட்ஸ்டாண்டிங் அரவிந்த் கிளாஸ் எடுப்பார்.." இப்படி சொல்லிட்டு ரியாக்சனேயில்லாம என்னை பாக்க.

"நீங்க பாடம் எடுத்து தானே நான் எல்லாம் அவுட்ஸ்டாண்டிங்கா திரியிறேன்..நான் எடுத்தா எல்லோரும் அப்படி ஆயிருவாங்க..உலகத்துலையே பெரிய தப்பு என்னை மாதிரியே மத்தவங்களை மாத்துறது தான்.." அவங்க போட்ட பீமரை அசால்டா தட்டி விட்ட திருப்தி எனக்கு.

"மச்சான் எப்படிடா இப்படி எல்லாம் பேசுற.." இன்னொரு மாப்பிள்ளை

"சும்மாயிருடா..சாமி சாமகொடைக்கு தயாரா நிக்குது..நேத்து உதிரி பூக்கள் படம் பாத்தேன்..விஜயன் பேசுற வசனம் அது.."

ஸ்டேஜ்ல ஏறினாலே எனக்குன்னு இல்ல எங்க பசங்களுக்கே பில்டிங் ஸ்ட்ராங்கு.பேஸ்மெண்ட் வீக்கு கதை தான். ஒரு கிளாஸ் எடுக்க முடியல.நீ எல்லாம் என்னை கேள்வி கேக்குற முதல்வன் அர்ஜூன் ரேஞ்சுக்கு என்னை உசுப்பேத்தி விட்டு பாத்தாங்க.

ஒரு நாள் முதல்வராயிருந்தப் பிறகு பெட்ரோல் ஊத்தி கொளுத்தி ஜட்டியோட நிக்க விடுற சீன் கண்ணு முன்னால வந்து போச்சு. நான் முடியவே முடியாதுன்னு சொல்ல.

"ஸ்டேஜ்ல ஏறினப்பிறகு நீ சொல்றது தான் சரின்னு நினைச்சிக்கோ..கீழே இருக்கிறவன் எல்லோரையும் முட்டாளா நினைச்சுக்கோ..நான் கூட அப்படித்தான் நினைச்சுப்பேன்..குறிப்பா உன்னை முட்டாளா நினைச்சிப்பேன்.."

"முட்டாள் மத்தவனையும் முட்டாளா தான் பாப்பான்..நான் உங்களை இது நாள் வரைக்கும் புத்திசாலியா நினைச்சது தப்பாயிருக்கும் போல.." அடுத்த பீமரை அவுட் ஆப் ஸ்டேடியத்துக்கு தூக்குன திருப்தி எனக்கு.

"மச்சான் இதுவும் உதிரி பூக்கள் வசனமா.."

"டேய் நீயே கொளுத்த பந்தம் கொடுப்ப போல..சும்மாயிருடா.."

"அவுட்.." என்று விரல் கதவு பக்கமாக நீண்டது.அப்பவாவது சும்மா போயிருக்கலாம். அவுட்டுக்கு கையை மேல தூக்கணும்னு சொல்ல அடுத்த செமஸ்டர்லையும் அவுட் ஸ்டேண்டிங்கு ஸ்டூடண்டாவே வாழ்ந்தேன்.

அப்படியே வருஷம் தவ்வி ஓடியது.எத்தனை நாளைக்கு தான் உருண்டோடியதுன்னு எழுத. பழைய அராஜகத்தை எல்லாம் காட்ட வழியில்லாம நானும் அலைய ஆரம்பிச்சேன்.பதிவுலகம் தான் அராஜகம் அக்கப்போருக்கு வழின்னு தெரிய வர இங்கேயும் அவுட் ஸ்டேண்டிங் தொடர்கிறது.

இங்க அந்த லேடி லெக்சுரர் மாதிரி இங்க எழுத்தாள,இலக்கியவியாதிங்க தொல்லை. தெரியுதோ தெரியலையோ அடிச்சி விடுறது. அப்புறம் கேள்வி கேட்டா பின்னூட்டப் பெட்டியை மூடுறது. என்ன சொன்னாலும் நம்ம ஆளுங்க எதிர்வினை வைக்கிறேன்னு நிஜமாவே வினையை வைக்க "என்னை மாதிரி எழுத முடியுமா..இல்ல அவரை மாதிரி எழுத முடியுமான்னு அனானிஸ் வந்து சவுண்ட கொடுக்கும். அவரை மாதிரி நான் ஏன் எழுதணும் அதான் அவர் இருக்காரேன்னு சொல்லிக்கிட்டு விட்டுரணும்.

நாம எதிர்வினை மட்டும் தான் வைக்கணும். அதை அவர் படிக்க மாட்டாரேன்னு நினைச்சி வாசகர் கடிதமா எழுதினோம். ஒரு எழுத்துப்பிழை,கருத்துப்பிழை இல்லாம எழுத முடியல.நீ எல்லாம் பேச வந்துட்டன்னு உள்ள வைச்சி அடிச்சி அனுப்புவாங்க.அப்புறம் போனை போட்டு.

அதனால நான் என்ன சொல்றேன்னா நீங்க எழுதுறது மட்டும் தான் எழுத்து. விமர்சனத்துக்கு எல்லாம் மாறிக்கிட்டேயிருந்தா ஒரு நாளும் அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்டா மாற முடியாது.எங்க லெக்சுரர் சொன்னது தான் உங்களைத் தவிர எல்லோரும் முட்டாள் தான். அதனால வாசகர் கடிதம் எல்லாம் உங்களுக்கு நீங்களே எழுதிக்கோங்க.

அப்பரசன் டிப்பரசன் சப்பரசன் ஒன் டே தே வில் ஸ்ட்ரைக்.

1 comments:

பொற்கோ said...

என்னமா இருக்கு அவுட் சோர்சிங் பதிவுன்னா இது தான் பதிவு!