Saturday, June 20, 2009

விஜய் அவார்ட்ஸ் - சில துளிகள்

சென்ற வருடம் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டது " அஞ்சல - வாரணம் ஆயிரம் " எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது "கண்கள் இரண்டால் " பாடலை விட சிறந்த பாட்டு என்பதில் சந்தேகம் இல்லை
ஹாரிஸ் ஜெயராஜுக்கு இந்த விருதை கொடுத்தவர் கௌதம் மேனன் . கொடுத்து விட்டு நழுவ பார்த்தார் (கோபிநாத் விடவில்லையே )
எப்போ அடுத்த படத்தில் இணைவீர்கள் என்று கேட்டார் . கூடிய விரைவில் என்ற பதில் கௌதம் மேனனிடம் இருந்து வந்தது .
(Waiting for that film songs)

* சிறந்த பாடலாசிரியர் விருது தாமரைக்கு கொடுக்கப்பட்டது
நல்ல தேர்வு . வெற்றி என்பது வெற்றிடம் என்று கூறினார். தோல்வியை தான் ஆராய வேண்டும் , வெற்றியை அல்ல .வெற்றி(டத்தில்) - இருந்து தான் நாம் கூச்சல் போடுகிறோம் என்பது நூறு சதவீதம் உண்மை .

* சிறந்த ஒப்பனை - வாரணம் ஆயிரம் படத்திற்காக கொடுக்கப்பட்டது
நான் எங்கே தசாவதாரம் படத்திற்கு கொடுத்து கெடுத்து விடுவார்களோ என்று பயந்து விட்டேன் .
எனக்கு ஒப்புதல் இல்லாத சில விருதுகள்

* சிறந்த ஒளிப்பதிவாளர் - கதிர் (சுப்ரமணியபுரம் )
அதை விட சிறந்த ஒளிப்பதிவு கொண்ட படங்கள் இரண்டு இருக்கிறது தசாவதாரம்,வாரணம் ஆயிரம்

* சிறந்த புதுமுகம் - சாந்தனு
அலிபாபா கிருஷ்ணாவுக்கு விருது கொடுத்து இருக்கலாம்
விஜய் தொலைகாட்சி எடிட்டர் சில தவறுகளை செய்து இருந்தார்
சிறந்த புதுமுகங்கள் விருது கொடுக்க தமன்னா மற்றும் சின்ன தளபதி (கைப்புள்ள) பரத் சென்று இருந்தார்கள்

விருது கொடுக்கும் பொழுது விஜயை காட்டினார்கள் பக்கத்தில் தமன்னா இருந்தார் (எப்படி இரண்டு இடத்தில இருந்தார் என்பதற்கு விஜய் தொலைகாட்சிக்கே வெளிச்சம் )

* ஜெய் , சசிகுமார் இருவருக்கும் ஆங்கில வகுப்பு எடுத்த கதையை ஜேம்ஸ் வசந்தன் சொல்லி முடித்த பிறகு சசிகுமார் - நாங்கள் தமிழன் என்றார் .அரங்கமே அதிர்ந்தது

* ஜெய் மைக் கொடுத்தவுடன் இப்போ எல்லாம் பேசவே பயமாய் இருக்கிறது என்று கூறியவுடன் கோபிநாத் திரும்பவும் மைக் கொடுக்க சொன்னார்

* சிறந்த படம் , சிறந்த இயக்குனர் , சிறந்த குழு - விருகளை சசிகுமார் பெற்று கொண்டார் .சசிகுமார் இந்த விருதிற்கு மிக பொருத்தமானவர் - இந்த மூன்று விருது வாங்க அவர் பத்து முதல் பதிமூன்று வருடம் உழைத்து இருக்கிறார் (சேது - சுப்ரமணியபுரம்). குரு தட்சணையை அழகான முறையில் கொடுத்து இருக்கிறார் .(பாலா அமீர் மற்றும் ஜேம்ஸ் வசந்தன் )

எனக்கு போன வருடத்தில் வந்த படத்தில் பெரிதும் ஈர்க்காத படங்கள் - சுப்ரமணியபுரம் மற்றும் தசாவதாரம்.

தசாவதாரம் - அன்பே சிவம் (சில கமல் ரசிகர்களுக்கு பிடிக்காத படம் ) கவர்ந்த அளவுக்கு எனக்கு இந்த படம் பிடிக்கவில்லை (கவர்ச்சி காட்ட மல்லிகா செராவத்தின் பாடல் (the rock என்ற ஆங்கில படத்தில் இருந்து "சில" காட்சிகளை உருவி இருப்பார்கள் 1996 வருடம் வந்த படம் chemical weapon என்ற மூடிச்சில் தொடங்கும் கதை)

சுப்ரமணியபுரம் - நமக்கு வன்முறை மிகவும் பிடிக்கும் என்பதை நிருபித்த படம் இதற்கு வன்முறையை மறைத்து காண்பித்த அஞ்சாதே மற்றும் வன்முறையே இல்லாத பொம்மரில்லு (சந்தோஷ் சுப்பிரமணியம் ) சிறந்தது என்பது என் கருத்து.

சுப்ரமணியபுரம் - We can call this success as One Song Wonder (கண்கள் இரண்டால் )பருத்தி வீரன் படத்திற்கும் இதற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு (காதல் வந்த பிறகு பருத்தி வீரன் கார்த்தி இப்படி தலை ஆட்டுவார் இந்த படத்தில் தொடக்கத்திலே ஜெய் தலையை ஆட்டுவார்)

சுப்ரமணியபுரம் பிடிக்காமல் போனதற்கு இன்னொரு காரணம் - படத்தை முழுமையாக காட்டவில்லை. (ட்ரைலர் பார்த்தவர்களுக்கு தெரியும் சசிகுமார் சுவாதியை கத்தியுடன் துரத்தி செல்வார்) என்ன நடக்கும் என்றால் அவர் சுவாதியின் கண்களை பிடுங்கி எடுத்து விடுவார் பிறகு என்ன நிர்பந்தமோ ( பெண் பார்வையாளர்கள் அல்லது சென்சார் ) அந்த காட்சி வெட்டப்பட்டது .இருந்து இருந்தால் இன்னும் மிக பெரிய வெற்றியை பெற்று இருக்கும் .

சிறந்த நடிகர் சூர்யா - என் குழந்தை சாப்பிடும் பொழுது எனக்கு ஒரு வாய் ஊட்டும் அது போல கமல் எனக்கு இந்த விருதை விட்டு கொடுத்து உள்ளார் என்ற உவமை அழகாக இருந்தது .

விருது வாங்கும் பொழுது சூர்யாவின் குடும்பமே மேடையில் இருந்தது . மிக அழகான குடும்பம் .

சிறந்த உடை அலங்காரம் விருது - கௌதமி வாங்கினார் ( சிறந்த உடை அலங்காரத்தை விழாவிலும் காட்டினார் கண் கொள்ளா காட்சி) நன்றி - விஜய் தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர்
என்ன சொன்னாலும் விஜய் முகத்தில் ஒரு சலனமே இல்லை - நான் மிக ஆச்சர்யப்பட்ட ஒரு திறமை

கமல் என்ற பல்கலைகழகத்தில் நான் ஒரு கடைசி பெஞ்ச் மாணவன் என்று விஜய் கூறினார் (நீங்க பல்கலைகழகத்திற்கு வெளியே நிற்கும் மாணவன் )

மக்களுக்கு மிகவும் பிடித்த படங்களின் வரிசை - பீமா , ஏகன் , குருவி (என்ன கொடுமை சார் இது )

கோபிநாத்தின் நிகழ்ச்சி தொகுப்பு யூகிசேதுவின்( சென்ற வருடத்தின் நிகழ்ச்சி தொகுப்பு ) அளவிற்கு இல்லை

அரங்க அமைப்பு மிக அருமையாக இருந்தது .LED (Light Emission Diode) வைத்து விளையாடி இருந்தார்கள் .

பின் குறிப்பு

இந்த நிகழ்ச்சி பார்க்க நான் எட்டு மணி நேரம் செலவு செய்தேன் . இதை எழுத ஒரு இரண்டு மணி நேரம் எடுத்து கொண்டேன்

7 comments:

வில்லங்கம் said...
This comment has been removed by the author.
வில்லங்கம் said...

இத படிக்க நான் 2 நிமிடம் எடுத்துக்கொண்டேன்

இரும்புத்திரை said...

appa comment poda

Nathanjagk said...

நீங்கள் அவார்ட் ​கொடுத்தால் எப்படியிருக்கும்? உங்களின் பட தரவரிசை அறிய ஆவலாயுள்ளேன். எனது பட தரவரிசை விருப்பத்தை என் வலைபதிவில் இடுகையாக்கியுள்ளேன்.

இரும்புத்திரை said...

thanks jekanath

i will reply in your blog

Athisha said...

ஹிஹி பாக்காம விட்டுட்டேன் இப்போ பார்த்த மாதிரி இருக்கு.

நல்லா பாத்திருக்கீங்க பாஸு

தலைய ஆட்டி ஆட்டி

இரும்புத்திரை said...

thanks athisha