Thursday, June 11, 2009

இன்னொரு ஆட்டோகிராஃப் - ஒரு எதிர்வினை

உங்களுக்கு சாதகமா ஆட்டோகிராஃப் படத்த எடுத்து விமர்சனம் விமர்சனம் செஞ்சுடிங்க . ஏன் மத்த படங்களையும் விட்டு வைக்கணும்

படம் 1:
அஞ்சாதே படத்துல வர்ற பிரசன்னா கேரக்டர ஒரு பொண்ணு பண்ணி
இருந்தா ?சகிக்க முடியல இல்ல?

படம் 2:
சுப்ரமணியபுரம் படத்துல ஜெய்க்கு பதிலா சுவாதி தலைய ஆட்டிகிட்டு "கண்கள் இரண்டால் " பாட்டு பாடுனா ?
ரசிக்க முடியல இல்ல?

படம் 3:
பூ படத்துல ஸ்ரீகாந்த் இடத்துல பார்வதியையும் , பார்வதி இடத்துல ஸ்ரீகாந்தும் கேரக்டர் மாறி செஞ்சு இருந்தா ?
மனதில் ஒட்டவே இல்லை இல்ல?

ஒரு பெண்ணின் ஆட்டோகிராஃபை அறிந்து கொள்ள நம் எத்தனை பேருக்குவிருப்பம், அல்லது தைரியம் இருக்கிறது?

இந்த கேள்விக்கு பதில் ஆட்டோகிராப் படத்துல சிநேகாவுக்கு ஒரு காதல் தோல்வி இருக்கும் . சேரன பார்த்துதான் சினேகா அவங்க பழைய காதலன் கிட்ட இருந்து மீண்டு வந்தேன் என்று சொல்வாங்க .

இதே இடத்துல வேற ஒரு படத்த பொருத்தி பாக்கணும் தோணிச்சு
அந்த படம் அவள் அப்படித்தான்.

ஸ்ரீப்ரியா - ரவீந்தரின் காதல் தோல்விக்கு பிறகு சிவசந்திரன் ஸ்ரீப்ரியாவ ஏமாத்தி கடைசில "நீ ஏன் தங்கச்சி " அப்படின்னு சொல்வார் அதுக்கு ஸ்ரீப்ரியா ஒரு பதில் சொல்வாங்க - அருமையான பதில் .

பெண்களின் ஆட்டோகிராப் தெரிந்து கொண்டால் அவள் நிலைமை என்னவாகும் என்பதற்கு எடுத்துகாட்டு அவள் அப்படித்தான்.

இதுதான் பெண்களின் ஆட்டோகிராஃப் .மிக பெரிய வெற்றி .இயக்குனர் ரூத்தரையா தான் காணாம போய் விட்டார் .

இன்னும் பெண்களுக்கு ஆதரவா பெண்களை மையமாக வந்த படங்கள்
அவள் ஒரு தொடர்கதை , அவர்கள் , அபூர்வ ராகங்கள் - எல்லா படமும் வெற்றி படங்கள் வரதட்சனை கொடுக்க மாட்டேன் என்று சொன்ன ஏன் கல்லூரி தோழி அதிக பணம் வரதட்சனை கொடுத்து அமெரிக்காவில் இருக்கிறார் .

"நான் வீட்டுல இருந்து குழந்தைய பார்த்துகிறேன் நீ வேலைக்கு போ இந்த நிபந்தனைக்கு ஒத்து கொண்டால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் " என்று ஒரு வாத போட்டியில் நான் சொன்னதால் எனக்கு முறிந்த "நெருங்கிய " நட்பும் உண்டு .

"இந்த பொண்ணுங்களை படிக்க அனுப்ப கூடாது " என்று சொன்ன நண்பனிடம் "முதலில் உன் தங்கையின் படிப்பை நிறுத்து அதற்கு பிறகு மற்றவர்களை தடுக்கலாம் " என்று நான் சொன்னதால் இரண்டு மாதங்கள் இருவரும் பேசி கொள்ளவில்லை .

ஆண்கள் வளருவதே பெண்களிடம் தான் முதலில் ஆண் - பெண் பேதங்களை விதைப்பதே பெண்கள் .

ஆண் அழுதா "ஆண் பிள்ளை அழ கூடாது என்று தடுத்து விடுவார்கள் "
நான் உங்களிடம் கேட்கிறேன் "அப்ப நான் அழ வேண்டும் என்றால் பெண்ணாக தான் பிறக்க வேண்டுமா ?"

பெண் இயக்குனர் எடுத்த விஷ்வதுளசி என்ற படத்தை பெண்கள் எத்தனை பேர் பார்த்து இருக்கிறார்கள் ?

ஜானகி விஸ்வநாதன் எடுத்த குட்டி படம் எத்தனை பேருக்கு தெரியும் ?
நமக்கு தெரிந்தது எல்லாம் மீரா நாயரும் , தீபா மேத்தாவும் தான் .

முதலில் பெண்களுக்கு படம் எடுக்க ஒரு பெண் கூட தமிழ்நாட்டில் இல்லை (பிரியா , ரேவதி இவர்கள் எல்லாம் கணக்கில் இல்லை )

பெண்களுக்கு படம் எடுக்க ஆண்கள் தான் இருக்கிறார்கள் .பெண்கள் வந்து ஆட்டோகிராஃப் படம் எடுத்தால் நாங்கள் கை தட்டி வரவேற்ப்போம்.

ஆனால் அதை எடுக்க ,ஆதரிக்க எந்த பெண்களுக்கும் தைரியம் இல்லை .

4 comments:

Deepa said...

//பெண்கள் வந்து ஆட்டோகிராஃப் படம் எடுத்தால் நாங்கள் கை தட்டி வரவேற்ப்போம்.//

salute sir!

என் பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டத்தைத் தாண்டி நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.
நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

இரும்புத்திரை said...

thanks deepa

Anonymous said...

அடடா

இரும்புத்திரை said...

thanks pukalini