Wednesday, September 29, 2010

டோளேண்டா

நீங்க ஏதாவது பதிவில் இருந்து ஒரு பத்தி,அல்லது ஒரு வரி அல்லது ஒரு வார்த்தையை வைத்தே வக்கிரம் என்று முடிவு செய்யலாம்.அதுவே அடுத்தவனும் ஒரு வரியை வைத்து கொண்டு விவாதம் செய்ய முடியுமான்னு  நீங்க கேட்டா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

இப்படி எல்லாம் சொல்றதுக்கு ஆதாரம் இருக்கான்னு கேக்கோணும்.இல்லமலா இப்படி சொல்வாங்கன்னு சொன்னா அடம்பிடிக்கோணும்.மண்டபத்துல எழுதியாவது போடணும்.அப்படி எழுதினா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

மூணு மாசத்து முன்னாடி எனக்கு கொள்கை கிடையாது தீடிர் காற்றழுத்த மாற்றத்தால் நான் மாறினாலோ இல்லை மற்றவர்கள் வேறு காற்றழுத்த மாற்றத்தினால் மாறினால் அப்ப அப்படி சொன்ன இப்ப இப்படி சொல்றன்னு கேட்டா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

உங்களுக்கு வேண்டாதவன் ஏதாவது செஞ்சா கட்டப்பஞ்சாயத்து கூட்டணும்.அதுவே நம்ம ஆதாரம் சிக்கிட்டா வேணும்னா சைபர் கிரைம் போங்க.அங்க செல்லாதுன்னு சொன்னா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

பழைய வெறுப்புல சான்ஸ் கிடைச்சா கூட்டத்தோட சேர்ந்து வெளுக்கணும் அப்புறம் எவனாவது திருப்பி வெளுத்தா பழைய வெறுப்புன்னு பருப்பு கடைஞ்சா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

எவனாவது சிக்க மாட்டான்னா காத்து கிடந்து எச்சில் துப்பணும் அதுவே நாம சிக்கிட்டா மறந்து கூட வாயை திறக்கக்கூடாது.அப்படி இருந்தா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

அப்புறம் முக்கியமா நல்லா வெட்கப்படத் தெரியணும்,வேதனை படத் தெரியணும் யாராவது இப்போ வந்து வேதனை படுங்கன்னு சொன்னா நான் அப்படி சொல்லலை என்று சொல்லத் தெரிந்தா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

ஆணாதிக்கத்தை எதிர்க்கிறோம் அப்படின்னு சொல்லணும் யாராவது கவிஜ எழுதுற ஆள் சிக்கினா எப்படி சொத்து வந்தது கிசுகிசு எழுத தெரியோணும் அப்படி தெரிந்தா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

எழுத்திலே ஜாதி துவேஷம் தெரிந்தது அடுத்தவனைப் பாத்து சொல்ல தெரியணும் மத்தவங்க அப்படி சொன்னா இதுல எங்க ஜாதி தெரியுதுன்னு சொல்லணும்.அப்படி சொன்னா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

இப்படி ஆனதால எனக்கு ஆபத்து ஆபத்துன்னு சொல்லணும்.போட்டோ அனுப்பியிருங்காங்க அதனால எனக்கு ஆபத்துன்னு சொன்னா ஆதாரம் கேட்டு சிரிக்கோணும்.அப்படி சிரிச்சா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

நல்லா வெட்டி ஒட்டத் தெரியணும்.நாம செய்யலாம்.அடுத்தவன் செஞ்சா வெட்டி ஒட்டினதுன்னு சொல்லோணும்.அப்படி சொன்னா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

யார் என்ன எழுதினாலும் காத்து கிடந்து மைனஸ் போடணும்.அப்படி அடுத்தவன் போட்டா திட்டோணும்.அப்படி திட்ட தெரிஞ்சா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

போரம்ல நாம யாரைப் பத்து வேணாலும் பேசலாம்.ஐ மீன் ஜார்ஜ் புஷ்,ஒசாமா.ஆனா நம்ம ஆளுங்களை யாராவது பேசிட்டா இப்படி புறம் பேசுறாங்களேன்னு சொல்லோணும்.அப்படி சொன்னா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

9 comments:

சங்கர் said...

டோளண்டா - அற்புதமான கலைச்சொல்லாக்கம் ரைட்டர் அரவிந்த் அவர்களே :)

எல் கே said...

nach

வெட்டிப்பேச்சு said...

புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. நான் புதுசுங்க. பாதிப் படத்துல வந்த feel இருக்கு. ஆனா நீங்க சொன்னவிதம் எனக்கு புடிச்சிருக்கு.

ஆமா... ஏன் இப்படி யெல்லாம்?
என்னமோ போங்க...

? said...

super

கிருஷ்ண மூர்த்தி S said...

அரவிந்த்!

யார் யார் டோலேண்டா என்பதை நன்றாக define செய்திருக்கிறீர்கள்!

அபி அப்பா said...

நீ என் டோளேண்டா:-)))

Radhakrishnan said...

சும்மா இரு! சொன்னா கேளேண்டா! ;)

மங்குனி அமைச்சர் said...

இதெல்லாம் படிச்சிட்டு வோட்டு மட்டும் போட்டு கமன்ட் போடாம போனா , அப்ப இவருதான் "டோளண்டா"

மார்கண்டேயன் said...

டோளேண்டா

என்னமோ போடா,

இது யாருக்கனுப்புற வார்(war) ப்ளேண்டா,

யாருக்கோ குழி வெட்டியுள்ளேண்டா ன்னு சொல்றது புரியுளேண்டா