Sunday, September 19, 2010

கிழிக்கப்பட்ட டைரியின் பக்கங்கங்களிலிருந்து

முதல் தடவை காலேஜ் போகும் போதுதான் பார்த்தேன்.டிபன் பாக்ஸை ஒரு ஐயர் பொண்ணைப் பிடிக்க சொல்லி விட்டு சிக்கனை வெளுத்து கொண்டிருந்தாள்.அவள் ஆளுமை எனக்கு பிடித்திருந்தது.கூடவே அவளையும்.அவ எனக்கு தான் என்று சொல்லும் அளவிற்கு எனக்கு வெளியுணர்வு கூட வேலை செய்யவில்லை.

எனக்கு அமீபா கூட ஒழுங்காக வரைய தெரியாது.அவளுக்கு இஞ்சினீரிங்க் டிராயிங்க் கூட அமீபா தான்.நான் அவளுடன் பேசிய வார்த்தையே "எனக்கும் வரைந்து தர முடியுமா.." என்று தான்.பின் கேட்காமலே எல்லா முறையும் வரைந்து தந்தது அவளுக்கும் என்னை பிடித்ததை காட்டியது.

அவ ஏரியாவுக்கு வீடு மாறியிருந்தேன்.அவளுக்காக மாறினேன் என்று அவள் நினைத்திருக்கலாம் என்று நான் நினைத்தேன்.வீட்டில் பொருள்களை அடுக்காமல் தப்பிக்க அவள் வீட்டுக்கு போனால் அவள் பாட்டிக்கு என்னை பிடிக்கவில்லை.முறைத்து கொண்டேயிருந்த காரணத்தால் அவளுக்கு குடுக்க வைத்திருந்த கேட்பரீஸ் சாக்லேடடி நான் சாப்பிட்டு விட்டு தாளை அங்கிருந்த புத்த்கத்தில் வைத்து விட்டேன்.அது இன்னமும் இருப்பதாக அவள் ஒருமுறை சொன்னதாக ஞாபகம்.

"எங்க அக்கா யாரையாவது அவ பிரெண்டை முன்னாடியே வீட்டுக்கு கூப்பிட்டு இருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காது.." அவள் சொல்லி முடிக்கும் முன் நான் "நான் ஒண்ணும் உன் பாட்டியைக் கல்யாணம் செய்ய போவதில்லையே.." முடித்திருந்தேன்.

கைவளையம் அணிவது எனக்கு பிடிக்கும்.வீட்டில் அப்பாவுக்கு பிடிக்காது.அவ குடுத்த வெள்ளி கைவளையத்தை கல்லூரியில் மட்டும் அணிந்து கொள்வேன்.எனக்காக என் ஸ்டாப்பில் இறங்குவாள்.அங்கிருக்கும் சந்தில் பேசும் போது அப்பா பார்த்து விட்டு திட்டியதாக சொன்னாள்."முன்னாடி என் பின்னாடி வந்த பையனை அடித்து விட்டார் தெரியுமா.நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.." சொல்லும் போது கண் கலங்கியது."எவனாவது இளிச்சவாயன் கிடைச்சா ஏன் உங்க அப்பன் அடிக்க மாட்டான்..கை வச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்.." போபத்தில் உதடு துடிப்பது பார்த்து அவள் அழுதாள்.கொஞ்சம் சந்தோஷம் தான்.எனக்காக ஒரு பொண்ணு அதுவும் எனக்கு பிடிச்ச பொண்ணு அழும் போது எல்லா அப்பாகளையும் திட்டலாம்னு தோணிச்சி.துடைக்க முயற்சித்தேன்.முகத்தைத் திருப்பி கொண்டாள்.தெறித்த கண்ணீரின் சூடு இன்றும் அப்படியே இருக்கிறது.

அழுது கொண்டிருந்தவளை எப்படி சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை."எனக்காக அழுத பெண்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது.." மெதுவான குரலில் சொன்னேன்.

அழுகையை நிறுத்தியிருந்தாள்.கொஞ்ச நேரம் கழித்து "இதுக்கு முன்னாடி எத்தனை பேர் அழுதாங்க.." சஜக நிலைக்கு வந்திருந்தாலும் குரலில் தழுதழுப்பு மிச்சமிருந்தது.

"இதென்னடா புது வம்பு வருது.." என்று நினைத்தாலும் சுதாரித்து விட்டேன். "அப்படியெல்லாம் யாருமில்லை..நீ தான் முதல் பொண்ணு.."

"அப்புறம் எப்படி எண்ணிக்கையில் ஒண்ணு கூடும்.." பவுன்சர் கேள்வி முகத்தில் அறைந்தது.

"ஜீரோவுல இருந்தது..இப்போ ஒண்ணு கூடியிருக்கு..அதான் அப்படி சொன்னேன்.."

"நல்லா பொணுங்களைக் கவுக்கற மாதிரி பேசுறடா..உன்னால நிறைய பேர் அழுதுருப்பாங்கடா.." சொல்லிக் கொண்டே கட்டிப் பிடித்தாள்.டாவினால் வந்த கொஞ்ச நஞ்ச கோபமும் அடுத்து வந்த முத்ததில் அடங்கியது.

கல்லூரியில் இரண்டாம் வருட பீஸிற்கு பேங்க் பேங்காக ஏறிக் கொண்டியிருந்தோம்.அலைய வைத்து கொண்டிருந்தார்கள்.போன் செய்து "எங்கப்பா ஒட்டியாணம் வாங்கி தந்திருக்கிறார்..ரொம்ப நல்லாயிருக்கு.." சொல்லும் போதே கோபம் தலைக்கேறியிருந்தது.

"இப்போ அங்க என்ன இருக்குன்னு ஒட்டியாணம்..உங்க அப்பனுக்கு தான் அறிவில்ல..உனக்குமா.."

"இப்போ ஏன் எங்க அப்பாவை திட்டுற.."

"உங்க அப்பனுக்கு எல்லாம் உங்க ஸ்டேட்ல வேலை கிடைக்காதா..இங்க வந்து எங்களுக்கு லோன் கொடுக்காம தாலிய அறுக்கிறான்.."

"எங்க அப்பாவா.."

"அவனை மாதிரியே ஒருத்தன்..எல்லோரும் உங்க அப்பன் மாதிரியே இருக்காங்க.."

இயலாமை அவள் மேல் வெடித்திருந்தது.லோன் கிடைக்கும் வரை அவளிடம் பேசவில்லை.கிடைத்த உடன் கோவிலுக்கு வர சொல்லியிருந்தாள்.ஆளே மாறியிருந்தாள்.நிறைய அழுதிருப்பாள் போல.

"உனக்கு எப்பவும் யார் மேலயாவது கோபப்படலைனா தூக்கம் வராதா..அதுவும் நான்,எங்க அப்பான்னா போதும்.."

"ஒட்டியாணம் நல்லாயிருக்கா.."

"பேச்ச மாத்தாதே.."

"எங்கூட ஓடி வரும் போது அந்த ஒட்டியாணம் எடுத்திட்டு வருவியா.."

"உனக்கு ரொமன்டிக்காவே பேச தெரியாதா..பாக்க தெரியாதா..எப்ப பாத்தாலும் யாரைடயாவது முறைக்கிறது.."

"ஆமா..அது ஒண்ணு தான் குறைச்சல் ரொமாண்டிக் லூக் விட்டா கவுண்டமணி மாதிரியே இருக்கும்.." நினைத்தை வெளியே சொல்லவில்லை.

"எங்க வீட்ல வி.சி.டி ப்ளேயர் வாங்கியிருக்கோம்..வீட்லையும் யாரும் இல்ல..ஒரு முக்கியமான சிடி இருக்கு..நீ வாயேன் சேர்ந்து பாக்கலாம்.."

"நீ எதுக்கோ அடி போடுற..திஸ் இஸ் நாட் ரொமாண்டிக்..நான் வர்றலப்பா இந்த ஆட்டதுக்கு.."

"பார்த்தா ரொமான்ஸ் என்ன எல்லாமே வரும்.."

"என்ன சிடி.."

"அதான் வரலன்னு சொல்லிட்ட..அப்புறம் என்ன.."

"என்ன சிடி.."

"உங்க மாமா,அத்தையோட கல்யாண சிடி.."

(தொடரும்..)

2 comments:

நீ தொடு வானம் said...

அபுனைவுன்னா இன்னா

இரும்புத்திரை said...

அசிங்கம்னா சிங்கம் தவிர மத்த மிருகத்தைக் குறிக்குமா.