Monday, September 6, 2010

வேதம் தெலுங்கு- சில பகிர்வுகள்

வேதம் படத்தின் முடிவில் எப்படி கதையின் நாயகர்கள் எல்லோரும் வேதம் கற்றுக் கொள்கிறார்கள், கற்றுத் தருகிறார்கள் என்பது தான் கதை.ஐந்து நபர்களின் வாழ்க்கை,லட்சியம் எப்படி வெற்றி,தோல்வி அடைகிறது என்ற கதையை மும்பை தாக்குதலோடு அற்புதமாக கோர்த்திருக்கிறார்கள்.

மஞ்சு மனோஜ் - தேசத்திற்காக போராடியதால் என் அப்பாவை இழந்து விட்டேன் என்று பாடகனாக அவன் வழியைத் தேர்வு செய்கிறான். பயணத்தின் ஊடே மஞ்சு மனோஜ் ஒரு சீக்கியரிடம் வம்பு செய்ய அதனால் ஒரு விபத்து ஏற்படுகிறது.பின் ஒரு அசாம்பாவிதம் நடக்கும் போது அதே சீக்கியரால் காப்பாற்றப்படுகிறான். கண் முன் எது நடந்தாலும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற வேதம் சீக்கியரால் போதிக்கப்படுகிறது.

அல்லு அர்ஜூன் - காதலுக்காக திருட முயற்சிப்பவன் மாட்டி பின் அம்மாவினால் மாறி உண்மையை சொல்லப் போகும் போது ஒரு முத்தத்தால் திரும்ப திருட முயற்சிக்கிறான். அதிலும் மனம் மாறி எப்படி தன் உயிரை கொடுத்தாவது மற்றவர்களைக் காப்பாற்ற வேண்டும், உண்மை பேச வேண்டும் என்று வேதம் கற்கிறான்.உண்மையை லஞ்சத்தால் மறைக்க முடியும்.இங்கு அர்ஜூனுக்கு லஞ்சமாக தரப்பட்டது முத்தம். யாரந்த பெண்.அவளுக்காக திருட முயற்சிப்பது நியாயம் தான்.

சரண்யாவின் மாமனார் - பணத்திற்காக நன்றாக படிக்கும் பேரனை அடமானமாக ஆனப்பின் அவனை மீட்க மருமகளின் கிட்டினை விற்க நகரத்திற்கு வருகிறார்கள்.பணம் காணாமல் போய் திரும்ப கிடைத்து உயிர் போகும் நேரத்தில் பிழைத்து அந்த சந்தர்ப்பம் சொல்லித்தந்த தைரியத்தால் பேரனை மீட்கிறார்.

அனுஷ்கா - விபச்சாரம் செய்தும் பெரிதாக பணம் பார்க்க முடியாமல் தனியாக தொழில் தொடங்க வந்த இடத்தில் போலீஸ்,ரவுடி என்று மாட்டிக் கொண்ட போதும் மனம் மாறாமல் உயிர் போகும் நேரத்தில் வரும் மாற்றத்தினால் வேறு ஊருக்கு பிழைக்க செல்கிறார்.சரண்யா மட்டும் எப்படி நடிக்கும்  எல்லா படத்திலும் ஸ்கோர் செய்கிறார்.தெரியவில்லையே.தமிழில் இன்னும் மிளிர்வார்.

மனோஜ் பாஜ்பாய் - எல்லா முஸ்லீம்களும் கெட்டவர்கள் கிடையாது என்று தன்னைத் துன்புறுத்தும் காவலருக்கு வேதம் கற்றுத் தருகிறார்.மனோஜ்பாஜ்பாய் தமிழில் விஜய்,விஷாலிடம் அடி வாங்கும் கதையில் பார்க்கவேகூடாது.

அனுஷ்காவின் நடிப்பில் மரி என்ற ஆட்டுக்குட்டி கதை நினைவுக்கு வந்தது.எல்லோருமே யாரோ ஒருவரிடம் அழத் தயாராகத் தானிருக்கிறோம். உடன் வரும் திருநங்கை அக்காவிற்காக மருத்துவரிடம் எத்தனை முறை வேண்டுமானாலும் அதற்கு தயார் என்று அழுமிடத்தில் அனுஷ்கா தெரியவில்லை.சரோஜா தான் தெரிந்தார்.ஏன் நிறைய படங்களில் சரோஜா அடிக்கடி வருகிறது.

மனோஜ்,அர்ஜூன் இருவருமே கடைசி காட்சியில் இறக்கிறார்கள்.கமல் மட்டும் நடித்தால் தொடரும் காட்சிகள் பதிவுலகத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகும்.மனோஜின் அப்பா தேசத்திற்காக உயிரழந்தவர். அதனால் ஒரு நாளில் தேசத்தின் நாயகனாக மாறுகிறான்.அல்லு அர்ஜூனுக்கு அவருடைய சமுதாயத்தில் பெரிய பெயர் கிடைக்கிறது. தேசத்தின் நாயகன் என்று போற்றப்படவில்லை. காரணம் ஜாதி,அந்தஸ்து என்று தெலுங்கு பதிவர்கள் விமர்சனம் எழுதினார்களா என்று எனக்கு தெரியவில்லை.கண்டிப்பாக ஜாதியை இழுத்து விடும் பதிவர்கள் எழுதுவார்கள்.

ஏன் தலைப்பைத் தமிழில் வானம் என்று மாற்றினார்கள். இதிலிருந்தே தெரிகிறது அந்த படம் கொத்து புரோட்டாவாக மாறி விடும்.அல்லி அர்ஜூனும்,மனோஜூம் அவர்களின் அப்பாக்களைக் கேட்காமல் நடித்த முதல் படம்.விஜய் டிவியில் அந்த பெண் சொன்னதில் என்ன தப்பு.எந்த பெண் என்ன சொன்னார் என்று யாரும் கேட்டு விடாதீர்கள்.

நான் யாருக்கும் வேதம் ஓதுவதில்லை.காரணம் ஓதினால் சாத்தானாக மாறி விடுவேன் என்ற பயம் தான். நிறைய பேர்கள் சாத்தானாக இருந்து கொண்டு வேதம் ஓதுகிறார்கள். ஆனால் அதன் படி நடப்பதில்லை.
சிலரைத் தவிர யாரையும் எனக்கு வேதம் சொல்லித் தர அனுமதிப்பதில்லை.

2 comments:

மதன் said...

appada..oru valiya oru nalla post unkitta irunthu..

Yaraiyum thittama oru post podave mudiyatha?

இரும்புத்திரை said...

ithula yaaraiyavathu thitti irukkenaa