Saturday, September 18, 2010

எலி வால்

"நாம இந்த நிமிஷம் வரைக்கும் காதலிக்கிறோம் அதாவது தெரியுமா.." எனக்கு முதுகு காட்டிக் கொண்டிருந்தவளிடம் கேட்டேன்.

"தெரியும்..அதுக்கென்ன இப்போ.." அலட்சியமாக பதில் வந்தது சத்யாவிடமிருந்து.

"நீ இல்லாம ஒரு வாழ்க்கையை என்னால நினைக்க கூட முடியல.." சினிமா பாணியில் இருந்தாலும் அந்த சமயத்தில் அந்த வார்த்தைகள் தான் கிடைத்தது.அதுவும் இன்றைய அசாதாரண சூழ்நிலையில் நிச்சயம் கிண்டல் செய்வாள்.

"டோண்ட் பீ சில்லி..உனக்காக அமெரிக்காவை எல்லாம் விட முடியாது.." அதே பாணியில் பதில் சொன்னாள்.

"பணம் கிடைத்தால் ஆப்பிரிக்கா வைர சுரங்கத்தில் கழுதை சாணி பொறுக்கினால் கூட உனக்கு ஓகே தான்.." கோபத்தில் உதடு துடிப்பது தெரிந்தது.

"மரியாதையா பேசு..முட்டாள் மாதிரி பேசாதே.." பதிலுக்கு சீறினாள்.

"உனக்கென்னடி மரியாத..உனக்கும்,காசு குடுத்தா..! வர்றவளுக்கும் வித்தியாசமே இல்ல.." வார்த்தைகளை அள்ளித் தெளித்து விட்டேன்.

"ச்சீ..உன்னப் போய் இவ்வளவு நாளா நல்லவனா நினைச்சேனே..இனிமே என் முகத்திலேயே முழிக்காத..மீறி வந்த..போலீஸ்ல சொல்லி குடும்பத்தோட ஜெயில்ல அடைச்சுருவேன்.." கத்திக் கொண்டிருந்தாள்.

"போலீஸ்ல சொல்லி தான் பாரேன்..நீ கூட இருக்கும் போது எடுத்த வீடியோ எல்லாம் இருக்கு..அதுவும் அவங்க கையில கிடைக்கும்.." சத்யாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை ரசித்தேன்.

"சார்.." சத்யாவின் அப்பாவுக்கு உச்சரிப்பிலே ஒரு சங்கடம் தெரிந்தது.இவனை போய் சார் என்று சொல்லி விட்டோமே என்று நினைத்திருப்பாரோ.

"சொல்லுங்க..என்ன பிரச்சனை.."

"சத்யா என் பொண்ணு..அமெரிக்காவுல நிச்சயம் பண்ணியிருக்கோம்..ஒரு பையனை காதலிச்சிருப்பாள் போல..சேர்ந்து சுத்தும் போது வீடியோ எடுத்திருக்கான்..போலீஸுக்கு போக பயமாயிருக்கு நீங்க தான் எப்படியாவது அதை அவன்கிட்ட இருந்து வாங்கணும்.."

"இந்த பொண்ணுகளுக்கு மட்டும் அமெரிக்காவுல இருந்து எவனாவது வர்றான் பாரேன்.." ஏதோ அல்லக்கை அடித்த விட்டுக்கு எல்லோரும் சிரித்தார்கள்.அவனைத் தவிர.

"சரி பாக்கலாம்.." அவன் விட்டேத்தியாக பதில் சொன்னான்.

"சார் நீங்க எவ்வளவு கேட்டாலும் தர்றேன்..புலி வாலைப் பிடித்தது மாதிரியிருக்கு.."

"புலி வாலா..என்ன தருவீங்க.." வாய் விட்டு சிரித்தான்.

"என்ன கேட்டாலும்.." சத்யாவின் அப்பா அழாதது மட்டும் தான் பாக்கி.

விளைவு எனக்கு மூக்கு உடைந்திருந்தது.என்னிடமிருந்த அவளுடைய போட்டோவை எல்லாம் பிடுங்கியிருந்தார்கள்.சத்யாவின் அப்பாவை அழைத்தார்கள்.

"வாங்கிட்டீங்களா..எவ்வளவு பணம் வேணும் சார்.." பரபரப்பாய் கேட்டார்.

"பணம் எல்லாம் வேண்டாம்.உங்க பொண்ணு போட்டோவைப் பார்த்தேன்..எனக்கு பிடிச்சிருக்கு..கல்யாணம் பண்ண எனக்கு விருப்பம்.உங்களுக்கு ஓகேவா மாமா.." அவன் சொன்ன பதிலில் என்னை முறைத்தார்.

"அவனை விட்டுத் தள்ளுங்க..இனிமே உங்க வழிக்கு வர மாட்டான்..அது ஒரு எலி வால்.." அவரை பேச விடாமல் அவனே சொல்லிக் கொண்டிருந்தான்.

அவருக்கு நிஜப்புலி வாலை மிதித்து விட்ட எஃபேக்ட் கொடுத்தார்.

"வீட்டுக்குப் போங்க மாமா..பேசிட்டு நல்ல முடிவா சொல்லுங்க.." வழியனுப்பி வைத்தான்.என்னையும் வெளியே அனுப்ப சொல்லி சைகை காட்டினான்.

"ல்லாம் உன்னால தாண்டா..என் பொண்ணு வாழ்க்கையே போச்சு.." என் சட்டையைப் பிடித்து அழுதார்.

"இன்னும் எதுவும் அவங்க கையில் சிக்கல..நீங்க பயப்படாதீங்க..அது சிக்கவும் சிக்காது..இருந்தா தானே சிக்கும்.."

"தம்பி எதுவும் சிக்காம பார்த்துக்கோங்க..நான் என்ன வேணுனாலும் உங்களுக்கு செய்றேன்.." மரியாதையின் அளவு மாறியிருந்ததில் எனக்கு ஆச்சர்யமில்லை.

"உங்க பொண்ணு.."

"சரி என் பொண்ணு அவனை கட்டுறதுக்கு உங்களேயே கட்டலாம்.." குரல் உடைந்தது தெரிந்தது.

"நான் இன்னும் முடிக்கல சார்..உங்க பொண்ணு மாதிரியே அவசரப்படுறீங்கன்னு சொல்ல வந்தேன்..நீங்க கவலைப்படாம கல்யாண வேலையைப் பாருங்க..என்னால பிரச்சனை வராது.." என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தேன்.

வன் நின்றுக் கொண்டிருந்தான்.வந்த வேகத்தில் கன்னத்தில் அடித்து விட்டான்.

"முட்டாள்..காரியத்தையே கெடுத்து விட்டாயே..அந்த ஆளே ஒத்துக்கிட்டான்..உனக்கெங்கடா போச்சு புத்தி.." இன்னொரு முறை கை ஓங்கினான்.

"அடி..நல்லா அடி மச்சான்..அவள நான் இப்பக் கூட காதலிக்கிறேன்..அதான் அந்த ஒத்துக்க முடியல.." கண்ணீரால் ஒரு திரை விழுந்தது.

"என்னடா உளர்ற.."

"கோபத்தில் வீடியோ எடுத்திட்டேன் சொன்னது பொய்..இப்ப அவளை கல்யாணம் செஞ்சா கூட வீடியோ எடுத்திருப்பானோன்னு அவளுக்கு ஒரு எண்ணம் இருந்து கிட்டேயிருக்கும். எனக்கும் அன்னைக்கே எடுத்து இருக்கணுன்னு ஒரு எண்ணம் இன்னும் வலிக்கும் மச்சான்..அதான் அவளை விட்டுட்டேன்.." சொல்லிக் கொண்டிருந்த என் கன்னத்தில் அவன் கை அனிச்சையாக தடவியது.

8 comments:

எல் கே said...

nice twist

VELU.G said...

அருமையா முடிச்சிருக்கீங்க

Vikram said...

nice... kai thadaviyathu... i liked those words...

எறும்பு said...

நல்லாருக்கு..

எறும்பு said...

என்ன இந்த மாதிரி கதைக்கு கமெண்ட் போடவே யோசிக்க வேண்டியிருக்கு.. இத்தனை வருஷம் பதிவுலகில் குப்பை கொட்டியும் எது ஒரிஜினல் புனைவு எது டுபாகூர் புனைவுன்னு தரம் பிரிக்க தெரியலையே..
:0

velji said...

நல்லாயிருக்கு!

Unknown said...

மீள் பதிவு

VISA said...

Nice one yar...