Thursday, September 16, 2010

செல்வராகவன்,யுவன்சங்கர்ராஜா,நா.முத்துகுமார்,அரவிந்த் கிருஷ்ணா

விழியோரமாய் ஒரு நீர்த்துளி
வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ
உணர்ந்தால் போதும் போதும்

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை

செல்வராகவன்,யுவன் சங்கர் ராஜா,நா.முத்துகுமார்,அரவிந்த் கிருஷ்ணா - இந்த நால்வர் கூட்டணி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த காலத்தில் அமரும் ராஜியும் உருகி உருகி பினாத்திக் கொண்டிருந்தார்கள்.

புல் பேசும் பூ பேசும்
புரியாமல் தீ பேசும்
தெரியாமல் வாய் பேசும்
தொட்டு தொட்டு விட்டு விட்டு
கட்டிக்கொள்ளும் போதை

நெருப்பு வாயினில்
ஒரமாய் எரியும்

இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் பிரிந்து கொண்டிருக்கும் கூட்டணி போல புதுப்பேட்டை பாடல்களும்,இசையும் முந்தைய படங்களை மிஞ்ச முடியவில்லை.

அந்த சமயத்தில் அமருக்கு நெருப்பு வாய் முழுவதும் எரிந்து தெரிந்தே வாய் பேசி ராஜியின் அப்பாவை அசிங்க அசிங்கமாக திட்டி வைத்தான். கோல்டி ___டுங்களா தமிழ் நாட்டில் வந்து எங்களுக்கு வேலை இல்லாமல் செய்றாங்க என்று அவள் அப்பாவை குறி வைத்து அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை எல்லாம் சொல்லி முடித்திருந்தான்.அன்றோடு நால்வர் கூட்டணி பிரிவு போல முதலில் ராஜி பிரிய..

தெலுங்கு யாரடி நீ மோகினியில் அரவிந்த் கிருஷ்ணா வெளியேற,யுவன் சங்கர் ராஜாவும்,நா.முத்துகுமாரும் செல்வராகவனின் கதையான யாரடி நீ மோகினி தமிழ் படத்தில் வெளியேறினார்கள்.

அதை தொடர்ந்து அமரின் காதலும் பிரிந்தது.

செல்வராகவன் வைரமுத்து,ஜி.வி.பிரகாஷூடன் சேர,யுவன் யார் யாரிடமோ சேர இன்னும் அந்த பழைய மேஜிக் நடக்கவேயில்லை.

ராஜி யாரையோ கல்யாணம் செய்ய அமருக்கு ராஜியின் கல்யாணம் நடந்து பல மாதங்கள் கழித்தே தெரிந்தது.

செல்வராகவனும்,யுவன் சங்கர் ராஜாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் தோல்வியில் முடிய அமரும் இன்று தனித்தே நிற்கிறான்.

அசிங்கமான வார்த்தைகள் அரங்கேற்றம் நடந்து இன்றோடு நான்கு வருடங்கள் முடிந்து விட்டது.அமரின் துக்கத்தை இன்று வெடி வைத்து கொண்டாடுகிறார்கள்.

செப் 15,2006 சாயங்காலாம் ஆறு மணி.அமர் அந்த சமயத்தில் மும்பையில் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில் போராடிக் கொண்டிருந்தான்.ராஜியை ஹாங்காங்கிலிருந்து எவனோ ஒருவன் பெண் பார்க்க வந்திருந்தான்.கோழையாக தோற்று போய் கழிவறையில் ராஜி சம்பந்தப்பட்ட எல்லா புகைப்படங்களையும் எரித்து கொண்டிருந்தான். நினைவுகளை மட்டும் இன்னும் எரிக்க முடியவில்லை.நினைவுகள் அமரை எரிக்கிறது.

2 comments:

நான் தமிழன். said...

அண்ணாச்சி ரெண்டு தடவை வந்திருக்கு

இரும்புத்திரை said...

மாத்திட்டேன் நான் தமிழன்.அண்ணாச்சியா அவ்வ்வ்வ்வ்வ்