Friday, April 30, 2010

சுறாவும்,வட போச்சேகளும்

வேட்டைக்காரன் படம் வரும் முன்னால் விஜய் பதிவுகள் மட்டும் பத்து பதிவு எழுதினேன்.சுறாவுக்கு எல்லாம் எழுத ஆசை இருந்தாலும் தலைநகரம் நாய் சேகர் வடிவேலு ஞாபகம் தான் வந்தது."என்னை அடிச்சி டயர்ட் ஆகி ரவுடிகள் எல்லாம் ஊரை விட்டு ஓடிட்டாங்க இப்போ நீங்களா.." அது மாதிரி தான் விஜய் செய்வதும்.எவ்வளவு தான் கை வலிக்க டைப் அடிச்சி நக்கல் அடித்தாலும் அடுத்த படமும் இதே மாதிரி தான் இருக்கும்.இதுல படம் ஓட அரசியலுக்கு வருவேன் என்று பில்டப் வேற.ஒரு நாள் மொத்தமாக வட போக போகுது.அன்னைக்கு தெரியும்.சுறா விமர்சனமா வேட்டைக்காரன் விமர்சனத்தைப் படித்து  கொள்ளுங்கள்.டான்ஸ் ஆடுறேன்னு எக்ஸர்சைஸ் செய்யும் லிஸ்ட்டில் விஜய் சேர்ந்து விட்டாரே.அது ஒண்ணு தான் வரும் என்று நான் நினைத்து கொண்டிருந்தேன்.அந்த வடயும் போச்சா.

தாத்தா இல்லப்பா தாதா - கடந்த மூன்று ஐ.பி.எல் போட்டிகளிலும் அவர் அணி மட்டும் தான் அரையிறுதிக்கு போகவில்லையாம்.தாதா ரசிகர்களும் சரி விஜய் ரசிகர்களும் சரி பழங்கதைகள் பேச அவர்கள் வாய்ப்பு தந்திருக்கிறார்கள்.கங்குலிக்கு கொல்கத்தா டெஸ்ட் மேட்ச், லார்ட்ஸ் சட்டை கழட்டல் போல விஜய்க்கு கில்லி போக்கிரி.இவருக்கு பயந்தே மகேஷ் பாபு படம் நடிப்பது இல்லையாம்.ஷாரூக்கான் கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றினால் நிர்வாண நடனம் போடுவேன் என்று சொன்னார்.நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. கங்குலி மீது அவ்வளவு நம்பிக்கை.என்ன இருந்தாலும் பஞ்சாப் கூட வடையை மிஸ் பண்ணிட்டீங்களே தாதா.மும்பை அணியின் சவலைப் பிள்ளைகளாக ஆடிய போட்டியில் முழு பலத்துடன் இறங்கிய போது தான் எனக்கு மேட்ச் பிக்ஸிங்காக இருக்கும் என்று தோன்றியது. சச்சின் ரசிகர் அதனால் தான் இப்படி சொல்கிறேன் என்று யாரும் வடையைக் கேட்ச் பிடிக்க வேண்டாம்.

நித்தியானந்தா ஆம்பிளையே இல்லையாம்.என்ன கொடுமைடா அப்புறம் அது எதுக்கு அறுத்து போட்டு விட வேண்டியது தானே.நான் நாக்கை சொன்னேன்.இப்படி சொன்னதை கேட்டதும் சாருவின் காமரூப கதைகளில் ஏதோ பக்கத்தைப் படித்தது போலிருந்தது இதுல ரஞ்சிதாவை இரவில் தான் விசாரிக்க வேண்டுமாம்.ஆமா அப்படியே விசாரிங்க.அப்பத்தான் ஆறு மணிக்கு மேல் எது நடந்தாலும் நடிகர் சங்கம் கேட்காது.அட வடையில் பங்கு கேட்காது என்று சொன்னேன்.

பசில் ராஜபக்சேவை கொரில்லா அறைந்து விட்டதாம்.கொரில்லாவுக்கு கூட தெரிகிறது.அது ரொம்ப அமைதியாம்.யாரையும் அடிக்காதாம். முதலில் அடி வாங்கியதே தானைத் தலைவர் தானாம். கொரில்லா அங்கேயே இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும்.இல்லை வெள்ளை வேன் வைத்து கடத்தி விடப் போகிறார்கள்.அப்புறம் மகிந்தா தான் சார்க் கூட்டமைப்பின் தலைவராம் என்று கொடுமைடா இது.இந்த வடையை யாருப்பா அந்த ஆளுக்கு கொடுத்தது.

சன் டிவி வரிசையாக மொக்கை படங்களை ரீலிஸ் செய்ய காத்திருக்கிறது.அடுத்தது சிங்கம் என்று நினைக்கிறேன்.இப்படியே செய்து கொண்டு இருங்கள்.எந்திரன் என்ற பெரிய வடையை பரிமாறும் போது எரிச்சலில் யாருமே சாப்பிட வராமல் போய் விட போகிறார்கள்.

ரெட்டைச்சுழி பார்த்து விட்டேன். பசங்க கதைகளில் வந்தாலும் ஒரு பெரிய காதல் ஜோடிகளின் கதை வேண்டுமா.இமயம்.சிகரம் என்று சொல்லியே ஊசிப் போன வடைகளை எல்லாம் தரக்கூடாது.பசங்களை வைத்து படம் எடுக்க ஆசைப்படுகிறவர்கள் 1994லில் வந்த லிட்டில் ராஸ்கல் படத்தை ஒரு முறையாவது பார்க்கலாம்.பார்த்து விட்டு அந்த வடையை கவ்வ வேண்டாம்.விட்டு விடுங்களேன்.

5 comments:

"ராஜா" said...

விஜய்க்கு இன்னும் எத்தன வடைதான் போகும்...

சங்கர் said...

யோவ் ரைட்டரு, வட போறது போகட்டும், எப்போ தொடர் கதை எழுதப் போற?

Unknown said...

// சங்கர் said...
யோவ் ரைட்டரு, வட போறது போகட்டும், எப்போ தொடர் கதை எழுதப் போற?//

தம்பி நீங்க எப்ப தொடர் பதிவை தொடரப் போறீங்க??

பனித்துளி சங்கர் said...

பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html

கார்க்கிபவா said...

/"ராஜா" said...
விஜய்க்கு இன்னும் எத்தன வடைதா/

ஆமா பாஸ்.. இப்படியே போனா தொடர் தோல்வி நாயகன் என்று அஜித்திடம் இருக்கும் ஒரே பட்டத்தையும் தட்டி பறித்துவிடுவார் போலிருக்கிறது