கதை நாயகன் - முட்டாள் என்று மற்றவர்களிடம் பெயர் வாங்க விரும்பும் அதி புத்திசாலி."கொஞ்சமே கொஞ்சம்" கோபம் வரும்.எல்லாம் புரிந்து கொள்ளும் வயது வரை கிராமத்தில் இருந்ததால் வயது,படிப்பு என்று பாரபட்சம் காட்டாமல் எல்லோரையும் வம்புக்கு இழுப்பவன்.வாரத்திற்கு குறைந்தபட்சம் ஏழு சண்டையாவது இழுத்தால் தூக்கம் பொத்துக் கொண்டு வருமளவிற்கு நல்லவன்.மின்னலே படத்தின் தீவிர ரசிகன்.ராஜ் டிவியில் போடுவதால் அந்த படம் பார்ப்பதை தவிர்ப்பவன். அதில் வரும் ராஜேஷ் சிவகுமாரை ஆதர்ஷமாக கொண்டிருந்தாலும் மெக்கானிக்கல் இஞ்சினீயரிங் கிடைக்காமல் ராஜீவ் சாமுவேல் போல கணினி படித்து அமெரிக்காவில் _____ கழுவ ஆசைப்பட்டவன்.மின்னல் வெளிச்சத்தில் யாரையும் பார்க்க முடியாமல் டியூப் லைட் வெளிச்சத்தில் கூட டிம்மாக இருந்த சாதாமணிகளை காதலித்த கதையை இனி பார்ப்போம்.
கதை நாயனுக்கு ஏதாவது பெயர் வைக்க வேண்டுமே.இணையத்தில் இந்த பக்கங்களுக்கு சாவே இல்லாத காரணத்தால் அவனை அமர் என்று அழைப்போம்.இனி..
"அமர் இன்னைக்கு இ.டி கிளாஸ் இருக்கு..தெரியும் தானே..டிராப்டர் கொண்டு வரலையா.." பஸ்ஸில் ஏறும் போதே ஒரு குண்டுப் போட்டு விட்டு தான் அடங்கினான்.பெயர் விக்ரம்.பெண்களை வசியப்படுத்துவது போல் பேசுவான்.எதிர் எதிர் துருவங்கள் முதல் சந்திப்பிலேயே ஈர்த்து கொண்டது ஒன்றும் அதிசயமாக தெரியவில்லை.கல்லூரியில் பெண் தோழிகளை வைத்தே மதிப்பு.முடித்தப்பின் வைத்திருக்கும் பணத்தை வைத்து மதிப்பு.அதனால் அவனுக்கு ஒரு மதிப்பு உண்டு.
"பாக்கலாம்..இன்னும் அதுக்கு நாலு மணி நேரம் இருக்கு.." இடியே இடித்தாலும் சாதாரணமாக எடுத்து கொள்ளும் வழக்கமிருப்பதால் அதை மிக சாதாரணமாக எடுத்து கொண்டான்.ப்ளஸ் டூ பொது தேர்வின் நடந்த போது அவனை தவிர வீட்டில் எல்லோரும் முழித்துக் கொண்டிருப்பார்கள்.
"மச்சி முதல் நாளே கெட்டப் பெயர் வாங்க முடிவு பண்ணிட்டியா.." விக்ரமால் முடிந்த அளவு இவனுக்காக கவலைப்பட்டான்.
"எப்படியும் துணைக்கு ஆள் கிடைக்கும்..இ.டி வரையவே எனக்கு பிடிக்கல..பி.ஈ படிப்புல தமிழ் எல்லாம் ஒரு பாடமா வராதா.." அமர் அவன் கவலையை சொல்லிக் கொண்டிருந்தான்.
வகுப்பில் பார்த்தால் அவனைத் தவிர எல்லோரும் டிராப்டர் கொண்டு வந்திருந்தார்கள்.சுற்றும் முற்றும் குனிந்து நிமிர்ந்து பார்த்தால் அவனைத் தவிர எல்லோரும் டக் இன்,ஷூ என்று அமர்க்களப்படுத்தி கொண்டிருந்தார்கள்.இவர்களை மாற்ற ஒரு அமர் பத்தாது என்று நினைத்து கொண்டான்.
புதிதாக உள்ளே வந்தவன் "நான் அர்ஜூன்..உங்களுக்கு இ.டி எடுக்கிறேன்..உங்க பெயரை எல்லாம் சொல்லுங்க.."
ஒவ்வொருத்தியாக பீட்டர் விட்டுத் தள்ளினார்கள்.சுவாரஸ்யமில்லாத வழவழவென்ற அறிமுகம்.ஒருத்தி அதிபுத்திசாலி பி.ஈ படித்து விட்டு எம்.சி.ஏ படிக்க போகிறேன் என்று சொல்ல அமர் மட்டும் சத்தமாக சிரித்து வைக்க அர்ஜூனிடம் மாட்டிக் கொண்டான்.
"உங்க பெயர் என்ன சார்..ஏன் சிரிப்பு.."
"அமர்..இல்ல பி.ஈ படிச்சிட்டு எம்.சி.ஏ வா..இதுல படிக்கிறது தான் அதுலையும் வரும் என்று நினைக்கிறேன்.."
"உங்க லட்சியம் என்ன.."
"...."
"அரியர் இல்லாமல் கிளியர் பண்ணுவதா.." வகுப்பே அமரை பார்த்து பல்லைக் காட்டியது.
"இப்போ திருப்தியா..உக்காரட்டுமா.." அமர் பார்வையில் ஒரு முறைப்பு தெரிந்தது.
"நான் நடத்துறதை நல்லா புரிஞ்சுகிட்டா அது இன்புட்..பரிட்சையில் அதை கொண்டு வருவது அவுட்புட்.." அவன் பாட்டுக்கு அறுத்து கொண்டிருந்தான்.
அமர் மட்டும் கவனிக்காமல் இருப்பது போல் தெரிய வர அர்ஜூன் திரும்பவும் அவனை பிடித்து..
"ஆமர் நீங்க இன்புட் - அவட்புட் எக்சாம்பிள் சொல்லுங்களேன்.."
"நாம சாப்பிடுற சாப்பாடு இன்புட்..அதுவே அடுத்த காலையில் வேற வழியா.."
"போதும் நிறுத்து.." அர்ஜூன் கத்தினான்.
"வந்தா அவுட்புட்.." சொல்லி நிறுத்தவும் அர்ஜூன் முறைத்து கொண்டே "எல்லோரிடமும் டிராப்டர் இருக்குதா.." என்று அமரின் வீக்னெஸ்ஸில் கையை வைத்தான்.
"..."
"இதுக்கெல்லாம் வாய் திறக்க மாட்டீங்களே சார்..இல்லையா அது இல்லாமல் என் கிளாசிற்கு வராதே.." சொல்லி விட்டு போய் விட்டான்.
"மச்சி இதுக்குத்தான் அப்பவே சொன்னேன்..எதுவும் பேசாதேன்னு.." விக்ரம் சொல்லி வருத்தப்பட்டான்.
இண்டர்வெல்லில் பக்கத்து கிளாஸ் பையன் ஒருவன் வந்து அமரை விசாரித்து கொண்டிருந்தான்.
"நான் தான் அமர்.. என்ன வேணும்.."
"நான் சுமன்.."
"கோல்டியா.." நினைத்து கொண்டதை வெளியே கேட்கவில்லை.முதல் என்ன காரணமாக வந்திருப்பான் என்று தெரிந்து கொள்ளும் வாய் வரை வந்ததை அடக்கி கொண்டான்.
"அமர் இந்தா நேத்து டிராப்டரை பஸ்ஸில் விட்டு விட்டேன்..நீ வைத்துக் கொள்.." கொடுத்து விட்டு நன்றி சொல்வதற்குள் போய் விட்டான்.
இ.டி கிளாஸ்..
"அமர் எங்கே போற..பின்னாடி தானே வழக்கமாய் உட்காருவோம்.." விக்ரம் பக்கத்தில் இடம் போட்டு விட்டு அழைத்தான்.
"இல்ல மச்சி..இன்னைக்கு மட்டும் முன்னாடி..இல்ல அவன் வந்து என் பக்கத்தில் நிற்பான்.." என்று சொல்லி விட்டு ஒரு பெண் பக்கத்தில் காலியாக இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டான்.
"என் பிரெண்ட் வரா.." அவள் இடத்திற்கு சொந்தம் கொண்டாட
"பின்னாடி என் பிரெண்ட் ஒரு இடம் போட்டு வச்சிருக்கான்..அங்க உக்கார சொல்.."
அர்ஜூன் அமரை ஆச்சர்யமாக பார்த்தான்.இவனுக்கு எப்படி டிராப்டர் கிடைத்தது என்பது போலிருந்தது அவன் பார்வை.
"எல்லோரிடமும் பென்சில் இருக்கா..அமர் உங்கிட்ட.."
அமர் ஒரு காந்தி காலத்து பென்சிலை காட்ட அர்ஜூன் கோபத்தில் முறைத்தான்.
"சரி சார்..நான் வெளியே போறேன்.." என்று போவது போல் அமர் பாவ்லா காட்ட
பக்கத்தில் இருந்த பெண்ணிடம் இருந்து ஒரு பென்சில் வாங்கி தந்து அம்ரின் ஆசையில் மண்ணைப் பாறாங்கல்லோடு சேர்த்துப் போட்டான்.
ஒரு வழியாக இ.டி கிளாஸ் முடிந்ததும்..
"அமர் நீ என் நண்பன்டா.." விக்ரம் கொஞ்சிக் கொண்டிருந்தான்.
"என்ன விஷயம்..எலி ஏன் இப்போ அர்ஜண்டா டவுசரை கழற்றி கொண்டு நிற்கிறது.."
"இல்லடா நீ ஒரு பொண்ணு இடத்துல உக்காந்தயில்ல..இடம் இல்லாமல் என் பக்கத்தில் தான் இருந்தா..இந்த கிளாஸ்ல அவன் தான் டாப் பிகர்.." விகரம் சொல்ல சொல்ல வயிறு எரிய தொடங்கியது.
"யாருடா அந்த பொண்ணு.."
"அதை விடு..உன் பக்கத்தில் ஒரு பொண்ணு இருந்துதே.."
"ஆமாண்டா அது ஒரு டப்பா பிகர்..பென்சில் தர அழுவுது.." அமர் இயலாமையில் பொழிந்தான்.
"டேய் அவ யார்ன்னு தெரியுமா..அர்ஜூனோட தங்கச்சி.."
"..." அமருக்கு பேச்சே வரவில்லை.இனி என்ன நடந்தாலும் அந்த சூப்பர் பிகர் பக்கத்தில் உக்கார முடிவு செய்தான்.
(தொடரும்..)
Wednesday, May 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
என் பெயரையும் சாந்தாமணி பெயரையும் என் அனுமதியில்லாமல் உபயோகித்திருக்கும் அரவிந்த் மேல் நீதிமன்ற வழக்கு தொடர இருக்கிறேன்
இதுதான் சாரு சங்கர் ரொம்ப நாளா எதிர்பாத்துக்கிட்டிருக்கிற தொடர்கதையா??
// முகிலன் said...
இதுதான் சாரு சங்கர் ரொம்ப நாளா எதிர்பாத்துக்கிட்டிருக்கிற தொடர்கதையா??//
கதையா?
கதை விறுவிறுப்பாகத்தான் செல்கிறது . தொடருங்கள் . அடுத்த பதிவுக்கு வந்துவிடுகிறேன் .
கதை விறுவிறுப்பாகத்தான் செல்கிறது . தொடருங்கள் .
நல்லாயிருக்கு காலேஜ் காம்பஸ் ஊர்வலம் :))
தொடரட்டும்!
ட்ராப்டர் எல்லாம் வருதே? இன்ஜினியரிங் காலேஜ்தான்னு கன்பார்ம் ஆயிடுச்சு!
அடுத்த வாரம் ஃபவுண்டரிக்குள்ள ஒரு ரவுண்டு ஓட்டுங்க அரவிந்த்.
முதலாமாண்டு பெண்கள் ஃபவுண்டரியில் வந்து மண்ணைக் குழைத்து மோல்டிங் செய்யும் காட்சி என்னே பரவசம்?
மெக்கானிக்கல் பசங்களுக்கே அதுதெரியும்!!
Post a Comment