Thursday, April 1, 2010

லவ்,செக்ஸ்,தோக்கா - இந்தி பட விமர்சனம்

படம் பார்க்கும் போது நம்மை ஒரு மூன்றாவது கண் பார்த்து கொண்டேயிருக்கிறது என்றே எனக்கு தோன்றியது.படம் முழுவதும் ஹேண்டி கேம்மில் எடுத்திருப்பார்கள் போல.நல்ல முயற்சி.படம் படுதோல்வி.இன்னும் விலாவாரியாக போனால் ரங்கநாதன் தெருவுக்குள் எல்லாம் காலடி எடுத்து வைக்க வேண்டும்.அதனால் சின்னதாக.

மூன்று கதைகள்.தொடர்பேயில்லாமல் காட்டப்படுகிறது,முதலில் ஒரு சமூகம் சம்மதிக்காத காதல்.தமிழ்ப்படம் மாதிரி ஷாரூக்கானை வெளுத்து வாங்குகிறார்கள்.தாழ்ந்த ஜாதியை சேர்ந்த இயக்குனருக்கும்,உயர்ந்த ஜாதி நாயகிக்கும் காதல்.அப்பாவுக்கு தெரியாமல் காதலிக்கிறார்கள்.கட்டிப்பிடிக்கும் நாயகனின் கையை உடைத்து விடுகிறார்கள்.காதலிப்பவனை சும்மா விடுவார்களா.ஓடிப் போய் திருமணம் செய்கிறார்கள்.நரித்தனமாகப் பேசி வரவழைத்து இருவரையும் அடித்தே கொல்கிறார்கள்.உச்ச நீதிமன்றமே இதற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது இன்னும் நாம் கற்காலத்திலேயே இருக்கிறோம் என்பதற்கு ஒரு சாட்சி.

அடுத்தது காமம்.பல்பொருள் அங்காடியில் வேலை பார்க்கும் ஒருவன் கூட வேலை பார்க்கும் பெண்ணை வசியப்படுத்தி அவளுடன் இருக்கும் பொழுது அதை வீடியோவாக எடுக்கிறான்.அதற்கு முதல் கட்டமாக அவள் நம்பிக்கையை அடைகிறான்.காதலிக்கிறான்.சண்டையிடுகிறான்.இதை பார்த்தாவது ஒரு நாலு பேர் திருந்தினால் சரி.

அடுத்த கதை துரோகம்.டிவி சேனலில் வேலை பார்க்கும் இருவர்,அவர்களிடம் கிடைக்கும் வீடியோ அதை வைத்து சம்பந்தப்பட்டவனை மிரட்டுகிறார்கள்.வீடியோ எப்படி எடுத்தார்கள்.அது என்ன துரோகம் என்றால் இதிலும் ஒரு பெண்.காஷ்மீர் அழகியின் நிஜ கதையை இதில் படமாக்கியிருக்கிறார்கள்.

எப்படி இந்த கதைகள் வந்து ஒரு புள்ளியில் இணைகிறது என்பது மட்டும் தான் பல்ப் பிக்சன் பாணியில் இருந்தது.செய்தி தாள்களில் வரும் செய்தியை வைத்தே தோரணம் கட்டியிருக்கிறார்கள்.தமிழில் இது ஒரு முயற்சி நடந்தது.அது பாலசந்தரின் ஒரு வீடு இரு வாசல்.அந்த படத்தை எடுத்தால் இன்று மூன்று மெகா சீரியல்கள் தேறும்.

இன்னும் இருக்கிறது.அவசர வேலை காரணமாக அவை ஒத்தி வைக்கப்படுகிறது.

2 comments:

சங்கர் said...

//பல்ப் பிக்சன்//

இன்னிக்கு பஸ்சுல கூட இதே வார்த்தையை பார்த்தேன், அது என்ன குண்டு பல்பா? குழாய் பல்பா? எத்தன வாட்ஸ்?

இரும்புத்திரை said...

0 watts