யார் யாரோ சொன்னாங்க.கெஞ்சி கேட்டாங்க.அம்மா கூட சென்னை வரும் போதெல்லாம் பேசவே மாட்டேன்னு இப்படி ப்ளாக்கைக் கட்டிப் பிடிச்சிட்டு கிடந்தா பேச எப்படி நேரம் இருக்கும்,மும்பை போய் பேசவேயில்லையே பேசவே இல்லைன்னு போன் பில்ல ஏத்துவ இப்படி சொல்லி பாத்தும் கேக்காத நான் கென் குடுத்த அதிர்ச்சி வைத்தியத்துல தெளிஞ்சி போயிட்டேனே.
ஒரு நாளைக்கு மூணு பதிவு எல்லாம் எழுதி படிக்கிறவங்க உயிரை வாங்கி இருக்கிறேன்.இப்போ நாலு நாளைக்கு ஒரு பதிவு கூட எழுத முடியாம கற்பனை வறட்சியில் கிடக்குறேன்.(வடிவேலு நேத்து தான் சொன்னார்.என் மேல பொய் வழக்குப் போட்டு நகைச்சுவை திறமையை எல்லாம் அழிக்க பாக்குறாங்க.இது காமெடியா இருந்தா நான் சொன்னதும் காமெடி தான்.)வடிவேலு சொன்னது சீரியஸ் தான் என்றால் அது மாதிரி இதுவும் சீரியஸ் தான்.
தெரியாமல் அவரை ரைட்டர் கென் என்று சொல்லி விட்டேன்.அதுக்கு அவர் ஓட்டுறப் பஸ்ல எல்லாம் ரைட்டர் என்று என்னை சொல்லனுமா.அப்படி சொன்னதுல இருந்து எனக்கு பதிவு எழுத வரவே மாட்டேங்குது.நானூறு பதிவு எழுதி ஜேம்ஸைப் படிக்க வைக்கலாம்னு பாத்தா இப்படி சொல்லி சாய்ச்சு போட்டீங்களே மக்கா.ஒரு அனானி நான் புக் ரீலிஸ் பண்ணவில்லை என்ற வருத்தப்பட்டு ஆறாயிரம் ரூபாய் தர்றேன் என்று சொன்னார்.நான் அதில் பாதியை அவருக்கு தருகிறேன் என்று சொன்னேன்.அவரை புத்தகம் வெளியிட வைத்து உண்மையான ரைட்டர் ஆக்கி விடலாம் என்று பார்த்தால் சிக்குவேனா பார் என்கிறார்.
இதுவாது பரவாயில்ல.உங்களுக்கு இருக்குற வாசகர் வட்டமும்,பின்னூட்ட அளவுகளும் என்று கிண்டலாக சொல்கிறார்.ஏன் வெந்தப் புண்ல வேல் பாய்ச்சுறார்னு சாந்தாமணி கேட்டு சொல்லட்டும்.ரைட்டர் இந்த வார்த்தைக்கு இவ்வளவு சக்தியா.
நானே இங்க இருக்கிற ஒரு ரைட்டரைப் பார்த்து ரைட்டர் ஆகணும் என்று ஆசைப்பட்டேன்.அதுக்கு தண்டனை இவ்வளவு பெருசா.அடுத்து யாரு தினமும் எழுதுறார் என்று பார்த்து அவரை அப்படி கூப்பிட்டால் எழுதுவதை நிறுத்துவாரா என்று டெஸ்ட் செய்து விடலாம்.
ரைட்டர் ஜெயமோகன்.
ரைட்டர் ஜெயமோகன்.
ஆகா ஸ்மைலியை விட்டு விட்டேனே.கென் சொல்லும் போது ஸ்மைலி போடுவாரே.
ரைட்டர் ஜெயமோகன் :-)))))))
ரைட்டர் ஜெயமோகன் :-)))))))
இப்படி எழுதியதால் யாருக்காவது கோபம் வந்து பாயைப் பிராண்ட வேண்டாம். கோபமிருந்தால் கென்னை தொடர்பு கொள்ளவும்.தல கென் நீங்க சொன்ன மாதிரியே டெஸ்ட் பண்ணிட்டேன்.
Tuesday, April 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
:)))))))))))))))))
en perai anumathi ilama use panina ungalai miruga vathai thadupu satathin keez eean kaithu pana kudathu :)))))))))))
yes its true ken :-))))))
ரைட்டு (நீங்களுமா?)
எனக்கு ஒரு ஆறாயிரம் வாங்கித் தரமுடியுமா?
அன்புள்ள அ,
நலமா? உங்கள் பதிவுகளை ஒரு எழுத்து கூட விடாமல் வாசித்து, அவ்வப்போது பின்னூட்டமும் இட்டுவரும் எண்ணிலடங்கா வாசகர்களில் ஒருவன் நான், இந்தப் பதிவை படித்த உடன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன், காரணம், இதுநாள்வரை நான் மட்டுமே தங்களை ரைட்டர் என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன் என்று நினைத்திருந்தேன், ஆனால், அது தமிழ் கூறும் நல்லுலகின் ஒட்டுமொத்த அவா என்பதை இப்போது அறிந்தேன், எங்கள் விருப்பத்தை விரைவில் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்
இப்படிக்கு
நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் 1238 பக்க நாவல் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்பு வாசகன்
சங்கர்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment