காந்தாரி பத்து மாதத்திற்கும் மேலாக கர்ப்பமாக இருக்கிறாள்.ஆனால் குந்திக்கு தர்மன் பிறந்து விடுகிறான். ஆத்திரத்தில் வயிற்றில் குத்திக் கொண்டதால் பிண்டமாக குழந்தை பிறக்கிறது.வியாசர் உதவியினால் அதை நூறு துண்டுகளாக வெட்டி நூறு தங்க குடத்தில் ஈடுகிறார்கள். கொஞ்சம் மிச்சமிருக்கும் துண்டை இன்னொரு குடத்தில் இடுகிறார்கள். பீமன் பிறந்து கொஞ்ச நேரத்தில் (அது மணியாக அ நாட்களாக இருக்கலாம்) கழுதை மாதிரி கத்திக் கொண்டு துரியோதனன் பிறக்கிறான். கொஞ்ச கொஞ்ச இடைவெளிகளில் துச்சாதனன் என்று ஆரம்பித்து கடைசியாக துச்சலை பிறக்கிறாள். மத்த கதை நமக்கெதுக்கு.இந்த கதையின் நாயகி துச்சலை தான்.
துச்சலை ஜயத்ரதனை திருமணம் செய்கிறாள்.பதிமூன்றாவது நாளின் போரின் பத்ம வியூகத்தில் அபிமன்யூவை மட்டும் உள்ளே விட்டு தர்மன்,பீமன் போன்றவர்கள் உள்ளே விடாமல் தேக்கி வைக்கிறான். அபிமன்யூ கொல்லப்பட்டதும் புத்திர சோகத்தில் நாளை சூரியன் மறையும் முன் ஜயத்ரதனை நான் கொல்வேன் இல்லை தற்கொலை செய்து கொள்வேன் என்று காண்டீபத்தின் மீது சத்தியம் செய்கிறான். கௌரவர்களுக்கு சந்தோஷம் தான்.அடுத்த நாள் ஜயத்ரதனை சுற்றி நின்றே போர் புரிகிறார்கள்.அர்ஜூனனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அர்ஜூனன் மீதிருக்கும் இயல்பான பாசத்தால் சூரியனை மறைக்கும் கிருஷ்ணனால் வெளியே வருகிறான் ஜயத்ரதன். இருளை நீக்கியவுடன் அர்ஜூனன் ஜயத்ரதனை கொல்கிறான்.(இங்கே இன்னொரு பிரச்சனையிருக்கிறது.ஜயத்ரதனின் தந்தை ஒரு வரம் வாங்கி வைத்திருக்கிறான்.ஜயத்ரதனின் தலையை எவன் கீழே தள்ளுகிறானோ அவன் தலை வெடிக்க வேண்டும் என்று.ஸ்பீடி மேத்மெடிக்ஸில் ஒரு வார்த்தை உண்டு கேரி ஃபார்வர்ட்.கிருஷ்ணன் அந்த தலையை தவம் செய்து கொண்டிருக்கும் ஜயத்ரதனின் தந்தையின் குகைக்கு கேரி ஃபார்வேட் செய்ய,கையில் ஏதோ தட்டுப்படுகிறதே என்று கண் விழித்து பார்த்தால் மகனின் தலை.வாங்கிய வரம் நினைவுக்கு வரும் முன்னே தலையைக் கீழே தள்ள ஒரே கல்லிலே இரண்டு மாங்காய் கதை தான். இதற்கு காரணம் புத்திர சோகத்தில் அவன் ஏதாவது சபதம் எடுத்து விடக்கூடாதே).இருள் ஆனப்பின்னும் சண்டை போட்டார்கள் என்ற காரணத்தால் அன்று இரவும் சண்டை நடக்கிறது.கடோத்கஜனைக் கொன்றப்பின் தான் போர் நிற்கிறது.
பதினெழாவது நாள் யுத்தத்தின் முடிவில் கர்ணன் சாய்க்கப்படுகிறான். காந்தாரி துரியோதனின் கூடாத்திற்கு வருகிறாள்.அவனுக்கு எங்கு அடிப்பட்டாலும் ஒன்றும் ஆகாமல் இருக்க முதல் முறையாக கண்கட்டை எடுக்க முடிவு செய்கிறாள்.ஆற்றில் நீராடி விட்டு துணியில்லாமல் வருமாறு சொல்கிறாள். விஷயம் தெரிந்த கிருஷ்ணன் துச்சலையிடம் போய் இந்த பிரச்சனைக்கு காரணம் சகுனி தான்.இன்னும் பிரச்சனை வராமலிருக்க சகுனியின் பகடைக்காய்களை ஆற்றில் எறிந்து விட சொல்ல அவளும் செய்ய போகிறாள்.நடுவில் ஒரு வாழைத்தோப்பு. எதிரில் துரியோதனன் ஒன்றுமில்லாமல் வர தங்கையைப் பார்த்து ஒரு வாழையிலையை எடுத்து மறைத்து கொள்கிறான்.அவள் பகடையை ஆற்றில் எறிய மனித எலும்புகளால் செய்யப்பட்ட பகடைகள் சிரிக்கிறது.துரியோதனன் வந்ததும் கண்கட்டை அவிழ்த்து அவனை உற்று நோக்கும் காந்தாரி இடையில் இருக்கும் வாழையிலையால் அதிர்ச்சி அடைகிறாள். பதினெட்டாவது நாள் போரின் முடிவில் துரியோதனன் தொடையில் அடித்து கொல்கிறான் பீமன்.அது கதை யுத்தத்தின் அதர்மம்.அசுவாத்தாமாவை படைத்தலைவனாக ஆக்கி விட்டு இறந்து போகிறான்.
இதில் அதிர்ச்சியான டிவிஸ்ட்.கௌரவர்கள் ஆசைப்படும் பெண்களை எல்லாம் பாண்டவர்கள் தான் தட்டுகிறார்கள்.திரௌபதி,சுபத்ரா,பலராமன் மகள் செல்வி(அபிமன்யூ).ஆனால் அதிர்ச்சிகரமாக துச்சலையின் ஒரே மகளான கலந்தாரியை கைப்பிடிப்பது அல்லியின் மகனான புலந்திரன்.கலந்தாரியயை துரியோதனன் சிறையில் அடைக்க அல்லியின் உதவியால் சிறைக்கு செல்லும் புலந்திரனால் கர்ப்பமடையும் கலந்தாரியயைத் தீயிட்டு கொளுத்த முடிவு செய்கிறான். அல்லி பெரும் மழை வரவழைத்து அவளை காப்பாற்றுகிறார்கள்.குழந்தை பிறந்ததும் அர்ஜூனனிடம் பவளத்தேர் கேட்கிறான் புலந்திரன்.பேரனுக்கு தேர் வாங்க போன கேப்பில் பவளக்கொடி என்று பெண்ணை அர்ஜூனன் திருமணம் செய்ய கோபத்தில் அல்லி படையெடுக்க கிருஷ்ணன் விளையாட அடப்போங்கடா மாமனுக்கும் மச்சானுக்கும் வேறு வேலையே கிடையாதா.
Sunday, October 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
தெரிந்த கதையில் தெரியாத பல நிகழ்வுகள். தகவலுக்கு நன்றி, நண்பரே!
பேரனுக்கு தேர் வாங்க போன கேப்பில் பவளக்கொடி என்று பெண்ணை அர்ஜூனன் திருமணம் செய்ய கோபத்தில் அல்லி படையெடுக்க கிருஷ்ணன் விளையாட அடப்போங்கடா மாமனுக்கும் மச்சானுக்கும் வேறு வேலையே கிடையாதா.
பேரனுக்கு தேர் வாங்க போன கேப்பில் பவளக்கொடி என்று பெண்ணை அர்ஜூனன் திருமணம் செய்ய கோபத்தில் அல்லி படையெடுக்க கிருஷ்ணன் விளையாட அடப்போங்கடா மாமனுக்கும் மச்சானுக்கும் வேறு வேலையே கிடையாதா.
***********************************
ஹிஹிஹி
’ஆத்து மணல எண்ணினாலும் எண்ணலாம் அர்ச்சுனன் பொண்டாட்டியை எண்ண முடுயாது தம்பி’... போலவே நிறைய கிளைக்கதைகள்(மகாபாரதத்துல) உள்ளது எழுதவும்.நன்றி.
அபிமன்யு மணந்தது உத்தரை என்ற இளவரசியை தானே!!! அஞ்ஞாத வாசத்தின் போது பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த விராட தேசத்து இளவரசி தான் இந்த உத்தரை... 13-ஆம் வருடம் முடிந்ததும், பாண்டவர் யாரெனத் தெரிந்ததும், நபும்சகனாக இளவரசிக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த அர்ஜுனனுக்கே அவளை மணமுடிக்க விராடன் இயைந்த போது அதை மறுத்தவனும் அர்ஜுனனே. "அவளுக்கு நான் குரு ஆகிவிட்டமையால் அவள் என் மகள் போன்றவள்" எனச் சொல்லி தன மகன் அபிமன்யுவிற்கே மணமுடிக்கிறான். "பார்த்தேன் ரசித்தேன்" என்ற P.B.Srinivas அவர்கள் பாடிய பாடல் இந்த ஜோடிக்கு தான் என நினைக்கிறேன். ஆனால் இராஜாஜி எழுதிய "வியாசர் விருந்து" என்ற version-இல் துச்சலை பற்றிய குறிப்புகள் இல்லை என்றே தோன்றுகிறது....
கௌரவர்கள் விருப்பப்பட்ட பெண்களை பாண்டவர்கள் தட்டி சென்றமைக்கு இன்னொரு சான்று சாத்யகி - பூரிசிவரசு... இவர்களின் தந்தையர். துரோணர் மறைவு நிகழும் தருணத்தில் நிகழும் இன்னொரு அநியாய இழப்பு பூரிசிவரசு என்ற கௌரவ மன்னனின் மரணம்.
//கௌரவர்கள் விருப்பப்பட்ட பெண்களை பாண்டவர்கள் தட்டி சென்றமைக்கு இன்னொரு சான்று சாத்யகி - பூரிசிவரசு... இவர்களின் தந்தையர். துரோணர் மறைவு நிகழும் தருணத்தில் நிகழும் இன்னொரு அநியாய இழப்பு பூரிசிவரசு என்ற கௌரவ மன்னனின் மரணம்.//
இது பற்றி நீங்க சொல்லணும்னு ஆசைப்படுறேன் விக்ரம்.
Post a Comment