முதல் பத்து நிமிடங்கள் பார்த்து ஒரு படம் கவரவில்லை என்றால் அதை புறக்கணித்தே பழக்கப்பட்டவன் இந்த முறை கடைசி இருபது நிமிடங்கள் பிடித்திருந்த காரணங்களுக்காக இந்த முறை புறக்கணிக்கிறேன். தமிழ் ப்ளாக்கன் என்ற மூகமுடியைக் கழற்றி வைத்து விட்டு படம் பார்த்து விட்டேனா என்ற சந்தேகம் இன்னமும் மிச்சமிருக்கிறது. அதை மாற்றியிருந்தால் படம் வரும் முன்னே படையெடுப்பதைப் போல எப்.ஏ.கூ எழுதியிருக்கலாம். கழன்று போனது கழன்று போனதாகவே இருக்கட்டும்.
எல்லாமே தொடக்க காட்சியிலே தயாராக இருக்கிறது.ரோபோ முதல் ஐஸ்வர்யா ராய் காதல் முதல். சயிண்ட்ஸ்ட் என்றாலும் அந்த தாடி அவருடையது பத்து வருட ஆராய்ச்சியில்லை முப்பது வருட ஆராய்ச்சி என்று சொல்கிறது. அதே தாடியோடு போய் டெல்லி குமாரை டாடி என்று சொல்லும் போது அவர் மனதுக்குள் நினைத்தாரோ இல்லையோ நீங்க ரெண்டு பேரும் ஒரே செட் தானே என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன். டீவியைப் போடு என்று சொன்னதும் கீழே போடும் ரோபோவிடம் எதையும் சரியாக சொல்ல வேண்டும் என்று சொல்லும் ரஜினி அதை எவோலுவேஷன் கூட்டிக் கொண்டு போகும் போது மறப்பது இயல்பாக இருக்கிறது.வசீகரன் என்ற பெயர் ரோபோ ரஜினிக்கு இயல்பாக பொருந்துகிறது.அந்தளவிற்கு வசீகரிப்பது சிட்டி தான்.
பரிசோதனையில் தோற்று விட்டு வரும் போது தீவிபத்தில் காப்பாற்ற சிட்டி போராடிக் கொண்டிருக்கும் போது ஈகோவினால் உந்தப்பட்டு ரஜினி டேனியிடம் டிவி பார்க்க சொல்லும் போது தீவிபத்தில் மாட்டியிருக்கும் பெண்ணைக் காப்பாற்றும் இடத்தில் அந்த இடம் ரஜினிக்கு எதிராகவே திரும்பும் போது ஷங்கர் பளீச்சிடுகிறார். தொடர்ந்து உணர்வுகளை உணர செய்யும் இடத்தில் அவருடைய உணர்வுகளை பொருத்தி விட்டாரோ என்ன.சந்தானம் உணர்வை பொருத்தியிருந்தாலும் ஐஸ்வர்யாவை காதலிக்கத்தொடங்கியிருக்கும் என்பது தான் உண்மை. சந்தானம், கருணாஸ்,டேனி எல்லார் பங்கையும் ரஜினியே செய்திருக்கிறார்.ஒன்று அந்த அளவிற்கு ஐஸ்வர்யா அழகாக இருக்கிறார்.ரெண்டு அப்படி இருந்தால் தான் இந்த கதையை நகர்த்த முடியும். இந்த இடத்தில் உபேந்திரா 2002ம் ஆண்டு நடித்த ஹாலிவுட் என்ற கன்னடத்தில் வெளியான படம் நினைவுக்கு வராமலில்லை. அதன் பட்ஜெட் மூன்று கோடி ரூபாய் தான்.அதிலேயே இந்த கதையை சொல்ல முடிந்தால் இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்திற்கு இன்னும் விளையாடியிருக்கலாம் என்றே தோன்றியது.
திரி இடியட்ஸ் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இங்கு இடைவெளியிலே வந்து விடுவது அடுத்த சுவாரஸ்யம்.அடுத்து இயக்கப்போகும் படத்தில் விஜய் பார்க்க போகும் பிரவசத்தில் நம்பிக்கை இல்லையா என்ன. சொல்லித்தருபவர்கள் சொல்லித்தந்தால் தான் உணர்ச்சிகள் வரும்,கோபம் வரும் எல்லாம் வரும் என்பது ஐஸ்வர்யா முத்தமிடும் காட்சியில் கண்களில் தெரிகிறது. தொடர்ந்து வரப்போகும் ஜவ்வு மிட்டாய்க்கு முன் அதை பொம்மை,கடிகாரம் என்று வித்தியாசமாக செய்து தரும் ஜவ்வு மிட்டாய்காரன் போல முதல் பாதியின் லாவகம் தெரிந்தது.
ஷங்கரின் கிராப்பைப் பார்த்தால் இது தான் உச்சம் என்று சொல்வார்கள். நிச்சயம் முதல்வன் தான் உச்சம். எந்திரன் அந்த கிராப்பைத் தொட்டு விட்டு கீழிறங்கும் இடத்தில் ஏதோ ஒரு இடத்தில் பொருந்துகிறது .சண்டைக்காட்சிகளிலும், நடனத்திலும் டூப் என்பது தெரிந்தாலும் அந்த கைத்தட்டல் எல்லாம் ரஜினிக்குத்தான்.
பொறாமையின் உச்சத்தில் நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லுமிடத்தில் ரஜினியின் கண்களில் தெரியும் பெருமிதமும், ரோபோ ரஜினி முத்தமிடும் போது கண்களில் தெரியும் ஆத்திரமும் அதை தொடர்ந்து வரும் தியாகம்,துரோகம் வசனமும் சுஜாதா இருந்திருந்தால் என்று தோன்றியது.இன்னமும் தோன்றுகிறது.
காதலிக்காக கொடு பிடிக்கும் காட்சி எல்லாம் எஜமானில் பட்டாம்பூச்சி பிடிக்கும் காட்சிக்கு பக்கத்தில் கூட நிற்காது.அந்த அளவிற்கு சூர மொக்கை.
அடுத்த பரிசோதனையின் போது அது தோல்வியில் முடியும் கோபத்தில் ரஜினி அதை வெட்டும் போது பிராசரின் உள்ளே எத்தனை சிப் உடைந்திருக்கும் என்று தோன்றினாலும் ரயில் சண்டையின் போது மற்றவர்களிடம் அவ்வளவு அடி வாங்கியும் கன்னத்தில் மட்டும் சிராய்ப்பு விழுவது தான் நகைச்சுவையின் உச்சக்கட்டம். அடுத்தது அவ்வளவு வெட்டியும் கை கால்களை அதனால் பொருத்த முடியும் என்றால் அது ஷங்கரின் கற்பனையின் உச்சக்கட்டம்.இதிலிருந்து சுஜாதா மறைந்து போகிறார்.
ஒரு பாட்டிற்கு லீட் கொடுக்க வரும் கலாபவன் மணியின் காட்சியின் போது இந்த நேரம் சிட்டி இருந்திருந்தால் என்று ஐஸ்வர்யா சொல்வார்.அதற்கு முன்னால் தான் சிட்டி போனால் என்ன என்று சொல்வார்.நமக்கு தேவை என்றால் அதாவது பிட் அடிக்க,படிக்க,காப்பாற்ற,கொசு பிடிக்க வேண்டுமென்றால் தேவை.இல்லையென்றால் வேண்டாம்.
மூன்று முகம் ரஜினி + வடிவேலு கெட்டப்பிலிருக்கும் ரஜினி ரத்தம் சிந்தியதிலிருந்து யார் அந்த கருப்பு ஆடு என்று கண்டுப்பிடிப்பது சுவாரஸ்யம்.மேமே.அதை தொடர்ந்து வரும் கிராபிக்ஸ் காட்சிகள் சாதாரண ரசிகனை ஊமையாய் வாய் மூடி வைத்திருக்கும்.பேபே.
தொடர்ந்து அதகளம் தான்.அதாவது பொருட்சேதம் தான்.எத்தனை குண்டுகளால் சுட்டாலும் சிறு சிராய்ப்பு கூட விழாத அதகளம். இந்த இடத்தில் பாக்யராஜ் இருந்தால் ஐஸ்வர்யா ரோபோ செய்திருப்பார்.
கடைசியில் கேப்டன் பிரபாகரன் காலத்து கோர்ட் சீன்.வசீகரனின் மரணத்தண்டையில் ஆரம்பித்தது சிட்டியின் தற்கொலையில் முடிகிறது. மறுபடியும் சிட்டிக்கு வசீகரன் அதை கட் செய்து விட்டாரோ என்னவோ.நான் பீலிங்க்ஸ் ஆப் இந்தியாவை சொன்னேன்.அவ்வ்வ்வ்வ்வ்வ்.
கடைசியில் வருவது போல வன்மம் இல்லாமலிருந்தால் என்று ரோபோ ரஜினி சொல்லும் போது நன்றாகயிருந்தாலும் அது என்றுமே சாத்தியமில்லை என்பது தான் உண்மை.
ஷங்கரும்,ஏ.ஆர்.ரகுமானுக்கும் இது தான் சிறந்த படம் என்று இன்னமும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. வருங்காலத்தில் நான் கணினி வாங்கும் போது தவறி கீழே விட்டாலும் அதுவே சரி செய்து கொண்டால் எவ்வள்வு நன்றாகயிருக்கும்.சுஜாதா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாகயிருந்திரும். இன்னும் கொஞ்சம் கத்திரி மட்டும் யோசனை போட்டிருந்தால் இன்னும் வசீகரித்திருப்பான்.
Saturday, October 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
எலக்கியவியாதியா மாறிட்டு வர்ற ஒன்னுமே புரியல
நீங்க தான் உண்மையான இலக்கியவாதி.பாருங்க எலக்கியவாதின்னு சொல்றீங்க.
எப்ப்டி இருக்கிங்க....
நா
நாளைக்கு தான் போறேன்...,
Nalla alasal...
அழகா எழுதியிருக்கீங்க அரவிந்த் உங்களிடமிருந்து பொசிடிவ்வா ஒரு விமர்சனம் வருவதே மகிழ்ச்சி
இதை நான் முதலில் Science Fiction movie என்றே எடுத்துகொள்ள மாட்டேன்.
எனக்கு Screenplay கூட பிடிக்கல.
Hollywood na பிரமாண்டம் மட்டுமா இருக்கும்...
ஆனா படாத சும்மா சொல்ல கூடாது... செம காமெடி... அட்டகாசமான காமெடி...
முக்கியமா ரோபோக்கு(நான் திட்டல) Red chip மாத்தன பிறகு அட்டகாசமான காமெடி...
படம் முடிஞ்சி வீட்டுக்கு வந்த அப்பறம் கூட நெனச்சி நெனச்சி சிரிசிகிட்டு இருந்தேன்.
பி.கு: உங்க பதிவ கலாநிதி மாறன் பார்க்க மாட்டார் இல்ல...
ஐயோ பாப்பார்ண... படம் சூப்பர்... இந்த மாதிரி ஒரு படம் தமிழ் ல வந்ததே எல்லா...
Post a Comment