Sunday, October 3, 2010

பிரஸ்தானம் - ஒரு மனிதனின் எழுச்சியும் வீழ்ச்சியும்

பிரகாஷ்ராஜ் ஒரு காலத்தில் என் ஆதர்ஷமாகவே இருந்திருக்கிறார். அதனாலவோ என்னவோ நான் பிரகாஷ்ராஜை கூர்ந்து கவனித்து வருகிறேன். பிரஸ்தானம் என்ற தெலுங்கு படத்தை அவர் ரீமேக் செய்ய உள்ளார் என்று தெரிந்ததும் முதல் வேலையாக அந்த படத்தைத் தேடிப்பிடித்து பார்த்தேன். அந்தபுரம் என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்ததிலிருந்து அவர் நல்ல படங்களாகவே செய்திருக்கிறார் என்பது தான் உண்மை.

பிரஸ்தானம் பார்த்து முடித்து விட்டு கனமான அமைதி நிலவியது.சில இடங்களில் என்னையே பார்த்தது போலிருந்தது.எங்காவது சண்டை இழுத்து விட்டு வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக கிரிக்கெட் பேட்,ஸ்டம்பை எடுத்து கதவுக்கு பின்னால் வைப்பது தான் வழக்கம்.எவனாவது வந்தால் பெயர்த்து விட வேண்டும் என்று.இதுவரை அதற்கு சந்தர்ப்பமே இல்லாமல் போய் விட்டது.அது மாதிரி ஒரு காட்சி. ஆனால் வந்தவன் தான் பேட்டைப் பிடுங்கி அடித்து விட்டான்.சரி திரைக்கதை அப்படி.இதை படித்து நான் ஒரு ரவுடி என்று யாராவது நினைத்து கொண்டால் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை.

அறிந்தும் அறியாமலும் மாதிரி ஒரு அண்ணன் தம்பி கதை.இந்த மாதிரி கதைகளுக்கு நான் அதிக முக்கியத்துவம் என்னை அறியாமலே தருகிறேன். ஆனால் அறிந்தும் அறியாமலும் மாதிரி இல்லாமல் கடைசி வரை தொடரும் ஈகோ போராட்டம்.வழக்கம் தம்பியாக வருபவரின் நடிப்பு தான் என்னை கவர்ந்தது.எப்படி இந்த ஸ்டார்கேஸ்ட் பிடித்தார்கள் என்று இன்னமும் ஆச்சர்யம் குறையவில்லை. சாய் குமார் என்ற நடிகனுக்குள் இவ்வளவு நடிப்பா.தமிழில் ஆர்.டி.எக்ஸ் என்று வில்லன் கதாபாத்திரம் தந்து நடிக்க வைத்து கொண்டிருக்கிறோம். பிரகாஷ்ராஜ் அந்த நடிப்பைத் தொட்டாலும் அதில் நிச்சயமாக சாய்குமார் தெரிவார்.

சர்வானந்த் தான் மூத்தப்பையனாக நடித்தது.ஆனந்த் என்ற பெயரில் ஏதோ ஒரு ஈர்ப்பு எனக்கு இருக்கிறது.பரமானந்த் என்ற ஒரு பெயரில் சிறைச்சாலை படத்தில் ஒரு கதாபாத்திரம் வரும்.உன்னுடைய பெயருக்கு என்ன அர்த்தம் என்று ஒரு ஆங்கிலேய அதிகாரி கேட்பான். நீங்கள் என்னுடைய நாட்டை போனால் எனக்கு பரம ஆனந்தம் என்று சொல்லி விட்டு உதை வாங்குவார். அதிலிருந்து இந்த ஈர்ப்பு வந்ததா என்று தெரியவில்லை.சர்வானந்தை நெம்ப பிடிச்சிருக்கு.எனக்கு பிடிச்சிருப்பதால் சர்வானந்தைப் பிடிச்சிருக்காம் என்று அழுத்தி சொல்லி விட வேண்டாம்.திட்டி விட வேண்டாம்.

அரசியல் ஆதாயத்திற்காகவும்,தன் சொந்தத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் அல்லது கொல்கிறார்கள் என்பது தான் பிரஸ்தானம் படத்தின் கதை.

தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை பிறக்கிறார்கள் என்பதை இந்த படத்தில் சொல்லும் போது ஆதித்த கரிகாலனை நகர்த்தி விட்டு ராஜ ராஜ சோழனை அரியாசனத்தில் கொண்டு வரப் போராடிய கதை தான் ஞாபகம் வந்தது.

3 comments:

நீ தொடு வானம் said...

இன்னும் சொல்லியிருக்கலாம்.

ஆ.ஞானசேகரன் said...

//தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை பிறக்கிறார்கள் என்பதை இந்த படத்தில் சொல்லும் போது ஆதித்த கரிகாலனை நகர்த்தி விட்டு ராஜ ராஜ சோழனை அரியாசனத்தில் கொண்டு வரப் போராடிய கதை தான் ஞாபகம் வந்தது.//


ம்ம்ம் நல்லாசொல்லியுள்ளீர்கள் நண்பா

Unknown said...

Welcome back to normal ...