Wednesday, October 6, 2010

கொள்கைக்காக நட்பா நட்புக்காக கொள்கையா - திரும்பும் பூமராங்

//பதிவுலகில் சிலர் நட்புதான் முக்கியம், கொள்கையோ, நேர்மையோ, முக்கியமல்ல என்கிறார்கள்.//

ஹலோ பொங்கு மகா ச"மூத்திரங்களே" இருக்கீங்களா.இப்போ உங்களுக்கு நேர்மை முக்கியமா கொள்கை முக்கியமா இல்ல நட்பு மட்டும் தான் முக்கியம்.இல்ல அந்த நட்பு போடும் பைசா பெறாத ஓட்டு முக்கியமா.ப்ளீஸ் டெல் மீ.

//ஒரு பெண் பதிவர் தனிப்பட்ட நட்பு காரணமாகவும், நம்பிக்கை காரணமாகவும் பலருடன் பேசுகிறார், சாட் செய்கிறார், தன்னைப் பற்றிய விவரங்களை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் பகிர்ந்து கொள்கிறார். //

அதே குதூகலத்துடன் தான் மற்றவர்களையும் பற்றி பேசினாரா.அதை கேட்டு தயவு செய்து சொல்லவும்.இன்னும் நிறைய விஷயங்களை நான் சொல்லாமல் விட்டு விட்டேன்.வெளியே எடுத்து போட எனக்கே கூச்சமாக இருக்கிறது.

//ஒரு பெண்பதிவரை குறிப்பிட்ட ஆண்பதிவர் தகாத முறையில் பேசுகிறார். இதை இன்னொரு ஆண் பதிவர் தட்டிக் கேட்காமல் அந்த வக்கிரம் பிடித்த ஆண்பதிவரின் எழுத்து ரொம்ப பிடிக்கும் என்று குறிப்பிட்டால் இந்த பிரச்சினையை பேச நினைக்கும் நம்மைப் போன்றவர்கள் என்ன நினைப்போம்? அந்த வக்கிரம் பிடித்த ஆண்பதிவருக்கு வக்காலத்து வாங்கும் அவரது நண்பரை கண்டிப்போம். //

ஒரு பெண்பதிவர் அல்ல இரண்டு பெண் பதிவரின் புகைப்படத்தை பொதுவில் அனுப்பியதற்கு தட்டிக் கேட்டவன் ஆணாதிக்கவாதி,சாடிஸ்ட், மன நிலை பாதிக்கப்பட்டவன்.கண்டிப்போம் என்று சொல்லி விட்டு ஒண்ணும் சொல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம் கொள்கையா இல்லை நட்பா. ப்ளீஸ் டெல் மீ.அப்படி சொன்னா தான் வருங்காலத்தில் சொம்பு தூக்க முடியும்.இல்ல வாங்க கூட முடியாது.

//இவை எல்லாவற்றுக்கும் மேலாக பொதுவெளியில் ஒருவர் தவறிழைக்கிறார் என்றால் அந்த தவறின் தன்மையைப் பொறுத்து அதன் சமூக விளவைப் பொறுத்து அதை கண்டிக்கவேண்டாமா, இல்லையா?//

அடங்கொன்னியா இப்படி எல்லாம் பேச யார் சார் உங்களுக்கு சொல்லித்தர்றது.

//இதையெல்லாம் செய்யாமல் அவருடன் நட்பு பாராட்டியிருந்தால், அல்லது அந்த பிரச்சினையை ஒதுக்கியிருந்தால் எங்கள் பெயர் கம்யூனிஸ்டுகள் அல்ல. அதற்கு சந்ததர்ப்பவாதிகள், பிழைப்புவாதிகள் என்று பெயர்.//

இப்போ மட்டும் நாட்டாமை பாதம் பட்டா வெள்ளாமை வந்து விடும் என்று பாடவா முடியும்.அதே சந்தர்ப்பவாதிகள்,பிழைப்புவாதிகள் என்று தான் சொல்ல முடியும்.

//குறிப்ப்பிட்ட பிரச்சினையில் இனி யாரும் நடுநிலைமை என்ற பாதுகாப்பான சந்தர்ப்பவாதத்தை பின்பற்ற முடியாது என்ற வகையில் இங்கே அனைவரும் ஒரு நிலைப்பாடு எடுத்தாக வேண்டும் என்ற தார்மீக அற உணர்வு குறித்த பார்வை உருவாக்கப்பட்டிருக்கிறது.//

இன்னும் ஏன் சொம்பு தூக்கல.பேரீச்சம் பழத்துக்கு போட்டாச்சா.

//இன்று சந்ததர்ப்பவாதிகளின் அணி பெரிதாக இருக்கலாம். ஆனாலும் அது காக்காய் கூட்டமென்பது ஒரு பிரச்சினை வரும் போது புரியும்.//

எப்படி உங்களைப் பத்தி நீங்களே சரியா அன்னைக்கே எழுதியிருக்கீங்க மிஸ்டர் சொம்புஸ்.

//கண்ணெதிரே நடக்கும் வன்முறையை தன்னலத்தின் சாதக பாதகத்தை அளவிடாமல் தட்டிக் கேட்பதுதான் உழைக்கும் மக்களின் பண்பாடு//

இன்னைக்கு பண்பாடு பெட்டியில் கிடக்கிறதா.

//ஒரு ஆண் என்ற முறையில் அவர் அவமானப்படுகிறார். வேதனைப்படுகிறார். ஆணாதிக்கம் குறித்த சமூகப் பார்வை கொண்ட எந்த மனிதனும் செய்யக்கூடிய நேர்மையான சுயவிமரிசனம் அது.//

இப்போ யாரும் வெட்கப்பட வேதனை அடைய துக்கப்பட துயரப்பட யாருமே இல்லையா.என்ன கொள்கை.

//சந்தேகப்படுவதற்கு எந்த ஒரு பெண்ணுக்கும் உரிமை இருக்கிறது என்பது சமூகத்தின் தரம்தாழ்ந்த நிலைமையை காட்டுகிறதே அன்றி அந்த பெண்ணின் தவறல்ல. //

அப்படியே தெரியாதவர்களைப் பற்றி புரளி பேசுவதற்கும் உரிமை இருக்கிறது என்று சொம்பு கழகத்தில் தீர்ப்பு வழங்கி விடுங்கள்.

//இனி நாங்கள் எழுத்தில் மட்டும் போராடப்போவதில்லை!

போராடிய லட்சணம் தான் தெரிகிறதே.இரண்டு வாரங்கள் விசாரித்து விட்டு எழுதியதாக சொன்ன சொம்புஸ் இந்த விஷயங்களை மட்டும் ஏன் விட்டு விட்டார்கள்.

//“நானே ராஜா நானே மந்திரி” என்ற வகையிலான அமைப்பாக ம.க.இ.க இருக்கும் பட்சத்தில் ஒரு வேளை இக்கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றிருக்க முடியும். துரதிருஷ்டவசமாக நாங்கள் ஜனநாயக பூர்வமாக இயங்கும் ஒரு அமைப்பாக இருக்கிறோம். //

எப்படி இப்படி பச்சமண்ணு மாதிரியே பேசுறீங்க.முடியலடா சாமி.பகிரங்க விசாரணைக்கு நீங்க அழைச்சி வந்துட்டாலும்.

//கருத்து வேறுபாடு வரும் சந்தர்ப்பங்களில் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதுதான் அவரது ஜனநாயகப் பண்புக்கும், தோழமை உணர்வுக்கும், நேர்மைக்கும் உரை கல்லாக இருக்கிறது. //

நேர்மையை பத்தி தயவு செய்து நீங்க எல்லாம் பேசவே பேசாதீங்க.

//குற்றம் சாட்டுபவர்கள் தங்களுடைய குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களிடமே ஆதாரம் கேட்கும் கேலிக்கூத்தை இப்போதுதான் பார்க்கிறோம். இது ஒரு பாசிஸ்ட் நீதிமன்றத்தில் கூட காணமுடியாத நீதி வழங்கு முறையாக அல்லவா இருக்கிறது !//

அவங்க கேட்டா தப்பு.போட்டோ வெளியிட்டு விட்டார் என்று சொன்னதும் ஆதாரம் நீங்க கேக்கல.என்ன கொடுமை சொம்பு இது.ஏன் உங்க சொம்பை நீங்களே வலுக்கட்டாயமாக நசுக்க சொல்கிறீர்கள்.நீங்க ஆதாரம் கேட்டா கேலிக்கூத்து இல்லையா சொம்புகளே. இது பாஸிஸ்ட் நீதிமன்றத்தில் கூட காண முடியாத நீதி இல்லையா.

உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவனுக்கு ஒரு நியாயமா.உடனே உங்களை நான் புறக்கணிக்க சொல்ல மாட்டேன்.அப்புறம் இணையத்தில் குஸ்தி பழக தவுட்டு மூட்டைக்கு நாங்க எங்க போவோம் சொல்லுங்க.

உங்களுடைய கொள்கை தான் என்ன.

பரிந்துரை,மகுடத்தில் தொடர்ந்து நிற்க வேண்டும்.அப்படி யாராவது பறித்து விட்டால் அடுத்த நாளே வம்புக்கு இழுக்க வேண்டும்.அதற்கு ஓட்டு போட ஒரு கும்பல் வேண்டும்.பரிந்துரையை யாராவது பறித்து விட்டால் அடுத்த நாளே வம்பிழுக்க வேண்டும்.

அப்துல்லாவுக்கு அறிவுரை சொல்ல என்ன தகுதி இருக்கிறது உங்களுக்கு.அவர் சொன்னதை போல உங்க தோழர்கள் புரளி பேசாமல் இருக்க சொல்லுங்க பாதி பிரச்சனை முடிவுக்கு வந்து விடும்.அதை சொல்ல வக்கு இல்ல.அடுத்தவனுக்கு அறிவுரை சொல்லணும்னா ஓடி வர்றது. இனி எங்கயாவது தெரியாம சொம்பத் தூக்கிட்டு வர்றதைப் பாத்தேன்,அப்புறம் இருக்கு.

ஓட்டுப் பொறுக்கி பணம் பொறுக்கி என்று சொல்ல வேண்டியது.நீங்க இணையத்தில் செய்வதை அவர்கள் வெளியே செய்கிறார்கள்.எல்லா கொள்கையும் ஒண்ணுதான்.

இப்போ தமிழ்மணத்தில் உங்களுக்கு எதிரா ஒரு எதிர்பதிவு வந்து பரிந்துரையில் நின்னா போதும் உடனே உங்க ஆளுங்க நிறைய பதிவுகளுக்கு ஓட்டுப் போட்டு அதை இறக்கி விட்டுட்டு தான் மறு வேலை.இதில் எல்லாம் ஒத்துப் போகும் நீங்கள் உங்க தரப்பில் யாராவது தப்பு செய்தால் வாயைத் திறக்க மறுப்பதேன்.விமர்சனத்தைக் கூட தாங்க சக்தி இல்லை என்றால் அதுவே எனக்கு வெற்றி தான்.

நீங்க ஒருத்தனை எதிர்க்க சேர்ந்தா நியாயம் அதே மாதிரி நிறைய பேர் உங்களை எதிர்த்தால் நீர்த்து போக செய்கிறார்களா.என்ன கொடுமை சொம்பு.

ஜாதி பற்றி பேச வேண்டியது - உங்க ஆளுங்க எதுல ஒத்துப் போறாங்களோ இல்லையோ இதுல ஒத்துப் போறாங்க.இனி பதிவுலகத்தில் சொம்பு தூக்குற வேலை எல்லாம் பாக்க முடியாது.

இதையும் இன்னொரு வாட்டி நல்லா படிங்க.

நீங்க ஏதாவது பதிவில் இருந்து ஒரு பத்தி,அல்லது ஒரு வரி அல்லது ஒரு வார்த்தையை வைத்தே வக்கிரம் என்று முடிவு செய்யலாம்.அதுவே அடுத்தவனும் ஒரு வரியை வைத்து கொண்டு விவாதம் செய்ய முடியுமான்னு  நீங்க கேட்டா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

இப்படி எல்லாம் சொல்றதுக்கு ஆதாரம் இருக்கான்னு கேக்கோணும்.இல்லமலா இப்படி சொல்வாங்கன்னு சொன்னா அடம்பிடிக்கோணும்.மண்டபத்துல எழுதியாவது போடணும்.அப்படி எழுதினா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

மூணு மாசத்து முன்னாடி எனக்கு கொள்கை கிடையாது தீடிர் காற்றழுத்த மாற்றத்தால் நான் மாறினாலோ இல்லை மற்றவர்கள் வேறு காற்றழுத்த மாற்றத்தினால் மாறினால் அப்ப அப்படி சொன்ன இப்ப இப்படி சொல்றன்னு கேட்டா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

உங்களுக்கு வேண்டாதவன் ஏதாவது செஞ்சா கட்டப்பஞ்சாயத்து கூட்டணும்.அதுவே நம்ம ஆதாரம் சிக்கிட்டா வேணும்னா சைபர் கிரைம் போங்க.அங்க செல்லாதுன்னு சொன்னா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

பழைய வெறுப்புல சான்ஸ் கிடைச்சா கூட்டத்தோட சேர்ந்து வெளுக்கணும் அப்புறம் எவனாவது திருப்பி வெளுத்தா பழைய வெறுப்புன்னு பருப்பு கடைஞ்சா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

எவனாவது சிக்க மாட்டான்னா காத்து கிடந்து எச்சில் துப்பணும் அதுவே நாம சிக்கிட்டா மறந்து கூட வாயை திறக்கக்கூடாது.அப்படி இருந்தா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

அப்புறம் முக்கியமா நல்லா வெட்கப்படத் தெரியணும்,வேதனை படத் தெரியணும் யாராவது இப்போ வந்து வேதனை படுங்கன்னு சொன்னா நான் அப்படி சொல்லலை என்று சொல்லத் தெரிந்தா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

ஆணாதிக்கத்தை எதிர்க்கிறோம் அப்படின்னு சொல்லணும் யாராவது கவிஜ எழுதுற ஆள் சிக்கினா எப்படி சொத்து வந்தது கிசுகிசு எழுத தெரியோணும் அப்படி தெரிந்தா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

எழுத்திலே ஜாதி துவேஷம் தெரிந்தது அடுத்தவனைப் பாத்து சொல்ல தெரியணும் மத்தவங்க அப்படி சொன்னா இதுல எங்க ஜாதி தெரியுதுன்னு சொல்லணும்.அப்படி சொன்னா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

இப்படி ஆனதால எனக்கு ஆபத்து ஆபத்துன்னு சொல்லணும்.போட்டோ அனுப்பியிருங்காங்க அதனால எனக்கு ஆபத்துன்னு சொன்னா ஆதாரம் கேட்டு சிரிக்கோணும்.அப்படி சிரிச்சா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

நல்லா வெட்டி ஒட்டத் தெரியணும்.நாம செய்யலாம்.அடுத்தவன் செஞ்சா வெட்டி ஒட்டினதுன்னு சொல்லோணும்.அப்படி சொன்னா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

யார் என்ன எழுதினாலும் காத்து கிடந்து மைனஸ் போடணும்.அப்படி அடுத்தவன் போட்டா திட்டோணும்.அப்படி திட்ட தெரிஞ்சா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

போரம்ல நாம யாரைப் பத்து வேணாலும் பேசலாம்.ஐ மீன் ஜார்ஜ் புஷ்,ஒசாமா.ஆனா நம்ம ஆளுங்களை யாராவது பேசிட்டா இப்படி புறம் பேசுறாங்களேன்னு சொல்லோணும்.அப்படி சொன்னா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

உங்க கொள்கை என்ன பத்து நாளுக்கு ஒரு தடவை மாறுமா இன்னும் அக்டோபர் ஒன்பதாம் தேதி வரவில்லையே.அதுக்குள்ள மாற்றமா.நாம ஆதாரம் கேட்டே நீர்த்து போக செய்யணும்னு சொன்னதுக்கு ஆதாரம்.இந்த பிழைப்பு பிழைப்பதற்கு பெயர் தான் புரட்சி போல.அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லும் போது அதில் பாதியாவது கடைப்பிடிக்கணும்.இல்ல ஒரு காலத்திலும் சொம்பு நெளிசலை எடுக்க முடியாது.இன்னொரு விஷயம் ஆதாரம் கேளுங்க ஐடியா தரும் போது சிக்காம இருக்கணும் சரியா.


அடுத்தவர்கள் ஆதாரம் கேட்டால் விலகிப் போவேன் என்று சொல்வது தான் நேர்மையா.இப்படித்தானே மங்களூர் சிவாவும் ஆதாரம் கேட்டார்.அப்படி உங்களை ஆதாரம் கேட்பது பாசிஷம் என்றால்  நீங்கள் ஆதாரம் கேட்பது பாசிஷத்தில் வராது இல்லையா.அப்புறம் உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்க.இப்பவும் பண்ண முடியலைன்னா எப்பவுமே முடியாது.அப்புறம் புறக்கணிக்க கூட யாரும் இருக்க மாட்டாங்க.ஏற்கனவே மூகமுடி போட்டுட்டு தான் சுத்துவீங்க.இனி முக்காடு போட்டுட்டு சுத்துங்க.

3 comments:

நீ தொடு வானம் said...

ஆப்புல ஜம்ப் பண்ணி உக்காந்தா இப்படி ஆகுமா

இரும்புத்திரை said...

கதம் கதம்

வெட்டிப்பேச்சு said...

//உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவனுக்கு ஒரு நியாயமா.உடனே உங்களை நான் புறக்கணிக்க சொல்ல மாட்டேன்.அப்புறம் இணையத்தில் குஸ்தி பழக தவுட்டு மூட்டைக்கு நாங்க எங்க போவோம் சொல்லுங்க.
//

??!!:))))