Thursday, October 7, 2010

துவையல் - குஷி ஸ்பெஷல்

தாஸ் படத்தில் வடிவேலு மதுரைக்கு புதிதாக வருவார்.டீக்கடையில் அமர்ந்திருக்கும் முரட்டு மனிதரிடம் சின்னப்பையன் வம்பிழுப்பான்."டேய் தடிமாட்டுப்பயலே ஒத்தைக்கு ஒத்த வாடா.." என்று பேசி பொறுமை இழந்து பன்னை எல்லாம் எடுத்து அடிப்பான். வடிவேலு கோபத்தில் சொம்பை பழக்க தோஷம் டீ கிளாசை வைத்து விட்டு பொங்குவார். அந்த முரட்டு ஆசாமியும் தடுத்துப்பார்த்தும் முடியாத காரணத்தால் விட்டு விடுவார்.வடிவேலு அவனை அடிக்க ஓடுவார்.கடைசியில் கிட்னி போய் விடும்.அடி வாங்கியவன் சும்மா தானிருப்பான்.புதுசா வந்தவன் குதிக்கத்தான் செய்வான்.இன்னும் கைவசம் ஐம்பது பன் இருக்கே எடுத்து அடிக்கலாம்னா நெருக்கமானவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று தடுக்கிறார்கள்.அதுவும் சரிதான்.ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க.நாயை அடிப்பானேன் ____ அள்ளி ஏன் சுமக்கணும்.நாய்னு புனைவு எழுதிட்டான்னு எச்சில் துப்ப வர வேண்டாம்.டேக் டைவர்சன்.

இனி ஆஸ்திரேலியாவும் என் தாய் நாடுகளில் ஒன்று.கிரிக்கெட்டில் தோற்று விட்டதால் சொல்லவில்லை. இனி ஆஷஸ் பார்க்கலாம்.டீவியில் இல்லை நேரிலேயே பார்க்கலாம்.வெள்ளைக்காரப் பெண்களுடன் மேட்ச் பாக்கலாம்.உடனே செல்லமே படத்திலிருந்து வெள்ளைக்கார முத்தம் பாட்டு கேட்க வேண்டும் போலிருந்தது.ஆஷஸ் பை தி ஆஸிஸ்,பார் த ஆஸிஸ்,டூ த ஆஸிஸ்.இப்படி ஆஸிக்கு வார்த்தைக்கு வார்த்தை ஆதரவு தெரிவிப்பதால் அதுவும் எந்த ஆதாரமும்,முகாந்திரமும் இல்லாத காரணத்தால் எனக்கு ஏதாவது சேதாரம் ஏற்பட்டாலும் அதற்கு காரணம் அமெரிக்காவிலிருக்கும் ஒசாமா தான் காரணம்.

காமன்வெல்த் ஆண்களுக்கிடையில் நடந்த தொடர் நீச்சல் போட்டியைப் பார்த்தேன். இந்தியா, ஆஸ்திரேலியா,இங்கிலாந்து,தென் ஆப்பிரிக்கா,கனடா என்று "பலம்" வாய்ந்த அணிகள். வழக்கம் போல ஆஸ்திரேலியா மேல பெட் கட்டினேன்.கடைசி ரவுண்டில் ஆஸியை முந்தி இங்கிலாந்து வீரர் வர அப்படியும் ஜெயித்தது ஆஸி வீரர்கள் தான். அவர்கள் நாலாவது ரவுண்ட் முடிக்கும் போது இந்திய வீரர்கள் மூன்றாவது ரவுண்ட் முடித்து செம லீடிங்கில் இருந்தார்கள்.இந்தியா இத்தனை வருடத்தில் இத்தனை தங்கம் வெல்வது முதல் முறை.

விக்கி தி ரோபோட் தொடர் பார்த்து இருக்கிறீர்களா.1985-1989 வரை நான்கு வருடங்கள் ஒரு வருடத்திற்கு தலா இருபத்தி நாலு எபிஸோட். எந்திரன் எல்லாம் அது முன்னாடி பிச்சை வாங்கணும். காதல்,மனித உணர்வு, கண்ணீர்,சோகம்,பாசம் என்று கலந்து கட்டி அடித்த குழந்தை ரோபோட் நாடகம். விஜய் டிவியில் திரும்ப போட்டார்கள்.அதில் நடித்த யாருமே அதன் பின் பெரிதாக சோபிக்கவில்லை. முக்கியமாக விக்கியாக நடித்த பெண் அடுத்த இரண்டே வருடத்தில் நடிப்பிற்கு முழுக்கு.இவ்வளவு பெரிய பட்ஜெட்டிற்கு இன்னும் விளையாடியிருக்கலாம்.குழந்தை நட்சத்திரமாக இருந்து பெரிய நடிகனாக வருவான் என்று எதிர் பார்க்கப்படுபவர்கள் எல்லாம் பின்னாளில் பல்ப் வாங்கியிருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் கமல் குறத்தி மகன் படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் வருபவருக்கு பின்னால் கோஷம் போட்டுக் கொண்டிருப்பார்.அவரிடம் கேட்டால் அந்த படம் எல்லாம் அவர் நடித்ததாகவே சொல்ல மாட்டார்.அதில் தம்பியாக நடித்தவர் அதற்குப்பின் எத்தனை படம் நடித்தார் என்று யாருக்குமே தெரியாது.அவமானம் தான் மிகப்பெரிய போட்டியாளன் என்பது எவ்வளவு நிஜம்.

நாம் எப்படி இருக்கிறோமோ அதே மாதிரி தான் உலகமும் நமக்கு தெரியும்.துரியோதனன் நாட்டை சுத்தி பார்த்து விட்டு ஒரு நல்லவன் கூட இல்லையே என்று சொன்னானாம்.தர்மன் நாட்டை சுத்தி பார்த்து விட்டு என்ன இந்த நாட்டில் கெட்டவர்களே இல்லை என்று சொன்னாராம்.நாம எப்படி நடந்துகிறோமோ அதே பாணியில் தான் மற்றவர்களும் நம்மிடம் நடந்து கொள்வார்கள்.புனைவுன்னே வைச்சுக்கலாம். மகாபாரதம் புனைவு தானே.

சிவாஜி படம் பார்க்கும் போது "தலைவா.." என்று நானும் கத்தியிருக்கிறேன்.மும்பை அரோரா தியேட்டரின் அமைதியை உடைக்க கலாட்டாவிற்கு செய்திருந்தேன்.எந்திரன் பார்க்கும் ஒரு கைத்தட்டல் கூட என்னிடமிருந்து எழவில்லை. உள்ளுக்குள் இருந்த கலாட்டா செய்பவன் செத்து விட்டானா.தம்பி அந்த சமயத்தில் ஏதோ ஒரு நிறுவனத்தில் நாலாயிரம் ரூபாய்க்கு வேலை செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் போகவில்லை என்றாலும் சம்பளத்தில் வெட்டுவார்கள்.அதையும் மீறி அவன் படம் பார்க்க போய் விட்டான்.நான் ஒரு பக்கத்திற்கு அவனுக்கு மெயில் அனுப்பியிருந்தேன்.அது தான் என்னுடைய முதலும் கடைசியுமான _______ இருந்திருக்கும். இந்த முறை அவன் எந்திரன் பார்க்கவில்லை. அவனுக்குள் இருந்த முதல் நாள் முதல் காட்சி பார்ப்பவன் மாறி விட்டானா.இது இரண்டிற்கும் பதில் குசேலன் என்ற புள்ளியில் பெட்முடா முக்கோணமாக மாறி வேடிக்கை காட்டுகிறது.ஒரு பத்து தியேட்டர் இருக்குமா பெங்களூரில்.அதில் குசேலன் படம் ஓட மன்னிப்பு எல்லாம் கேட்டது காரணமாக தெரிந்தாலும் உண்மையான காரணம் பெர்முடா முக்கோணமாக இருந்து பால் தாக்கரே என் கடவுள் என்று சொன்னதும் கோபம் கட்டமாக செவ்வகமாக வேகமாக வளர்கிறது.அது நேரத்திற்கு தகுந்த மாதிரி இடத்திற்கு தகுந்த மாதிரி பேசுவது.இந்த காரணத்தால் இரண்டு ஆட்சி,அதிகாரம் எல்லாம் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை. நல்லவேலை எட்டாமல் போனது என்று இன்று சந்தோஷமாக இருக்கிறது.நேரத்திற்கு தகுந்த மாதிரி பேசுவதால் சில பேரை அடிக்கடி வெளுக்க வேண்டியுள்ளது.

9 comments:

நீ தொடு வானம் said...

மீள் பதிவு இல்ல.சண்டை ஸ்டாப்பு போல.

Praveenkumar said...

நகைச்சுவை பகிர்வு அருமைங்க...!

அத்திரி said...

:)))))))))

ok

வால்பையன் said...

//நாம் எப்படி இருக்கிறோமோ அதே மாதிரி தான் உலகமும் நமக்கு தெரியும்.துரியோதனன் நாட்டை சுத்தி பார்த்து விட்டு ஒரு நல்லவன் கூட இல்லையே என்று சொன்னானாம்.தர்மன் நாட்டை சுத்தி பார்த்து விட்டு என்ன இந்த நாட்டில் கெட்டவர்களே இல்லை என்று சொன்னாராம்.நாம எப்படி நடந்துகிறோமோ அதே பாணியில் தான் மற்றவர்களும் நம்மிடம் நடந்து கொள்வார்கள்.//


சித்தன் போக்கு என்ற சிறுகதை தொகுப்பு ஒன்று இருக்கு நண்பா!, பிரபஞ்சன் எழுதியதுன்னு நினைக்கிறேன், எந்த கதையிலும் வில்லன் கிடையாது, நமக்கு சாதகமான விசயங்கள் நடக்க வில்லை என்பதற்காக மற்றவர்கள் கெட்டவர்கள் இல்லை, அனைத்தும் சூழ்நிலை சார்ந்ததே என எழுதியிருப்பார்!

என்னுடய மனநிலையும் பல வருடங்களாக அதே தான்!, அவ்வாறு மாறிய பின் எனக்கு கோவமே வருவதில்லை, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு என் வாழ்க்கையே!

வால்பையன் said...

சாருவுக்கு பிடிக்காத எந்திரன் உங்களுக்கு பிடித்திருந்தால் தான் நான் ஆச்சர்ய பட்டிருப்பேன்!

தக்காளி, அது ஏன்யா உன்னையையும், சாருவையும் பிரிக்கவே முடியல! :)

ராவணன் said...

என்ன சொன்னாலும் முதல் காட்சி பார்க்கவேண்டும் என்ற ஆவல் ரஜினி படம் தவிர எந்த நடிகனது படமும் அந்த இடத்திற்கு வராது.
தெரியாத்தனமாக சகலகலாவல்லவன் என்ற படத்திற்கு(15-8-1982)
மதுரையில் சென்ட்ரல்
தியேட்டருக்குச் சென்றுவிட்டேன்.
நல்லவேளை டிக்கெட் கிடைக்கவில்லை.
ரஜினி எப்போதும் இந்த பிராமண மதம் கொண்டவர்தான்.பாபா என்பார்...கூபே என்பார்,அவர் எந்த நேரத்திலும் தன் சுயத்துடனேயே உள்ளார்.
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் கருணாநிதி போன்றவர்கள் இருக்கும் நாட்டை, ஆளும்நாட்டை வேண்டாம் என்று கூறுவீர்களா? நான் வேண்டாம் என்று வந்துவிட்டேன்.

அடுத்த மாதம் தாய்லாந்து(phuket) செல்கின்றேன்(this side 2, this side 2).இது எப்படி...?

கார்க்கிபவா said...

//தக்காளி, அது ஏன்யா உன்னையையும், சாருவையும் பிரிக்கவே முடியல!//

ரிப்பீட்டேய்ய்

அகல்விளக்கு said...

//வால்பையன் said...

சாருவுக்கு பிடிக்காத எந்திரன் உங்களுக்கு பிடித்திருந்தால் தான் நான் ஆச்சர்ய பட்டிருப்பேன்!

தக்காளி, அது ஏன்யா உன்னையையும், சாருவையும் பிரிக்கவே முடியல! :)
//

ஹிஹிஹி...

வாலை வழிமொழிகிறேன்...

வெட்டிப்பேச்சு said...

//வால் பையன் said ..

நமக்கு சாதகமான விசயங்கள் நடக்க வில்லை என்பதற்காக மற்றவர்கள் கெட்டவர்கள் இல்லை, அனைத்தும் சூழ்நிலை சார்ந்ததே ..//

இதுதான் வாழ்வின் உண்மையும் கூட.