Sunday, November 28, 2010

நொந்தலாலா - உயிர்மையில் வரவே வராத கட்டுரை

நந்தலாலா பற்றி வந்த எல்லா விமர்சனங்களையும் படித்து விட்டேன்.இன்னொரு முறை அழுத்தம் திருத்தமாக இரண்டு மணி நேரம் ஓடிய கிகுஜிரோ படத்தை இரண்டரை மணி நேரம் பின்னால் முன்னால் நகர்த்தி பார்த்து வேண்டிய மட்டும் குறியீடுகளைக் குறித்து கொண்டேன். விமர்சனங்களை வைத்து பார்த்தாலே நிறைய காட்சிகளை ஓப்பிட முடிகிறது.எண்பதுகளில் மணிரத்னம் செய்ததை மிக லாவகமாக மிஷ்கின் செய்கிறார்.(எப்படி என்றால் இரண்டு மூன்று படத்தை பிராய்ந்து எடுத்து திறம்பட ஒட்ட வைக்கும் நேர்த்தியால் நாயகன் டைம்ஸ் பத்திரிக்கை முதல் நூறு சிறந்த படங்களில் ஒன்றாக வந்தது.) ஆப்பிரிக்காவில் பெண்கள் லுங்கி அணியார்கள்,வீடு உயரத்திலிருக்கும் அது எப்படி யோகியில் வந்தது என்று கேள்வி மேல் கேள்வி வைத்த சாரு இதை கொண்டாடுகிறார். கிகுஜிரோ படத்தில் தலையில் இலைகளைத் தொப்பியாக இருந்தது நந்தலாலாவில் கையில் பனையோலையாக வைத்திருப்பது போல மாற்றி விட்டால் உலகத்தில் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக ஆகி விடுமா.


 அமீரிடம் சாரு வைத்த கேள்வியையே(பருத்தி வீரனை அப்படியே வங்காள மொழியில் சுட்டு எடுத்து விட்டு இயக்கம் சாரு என்று போட்டால் விடுவீர்களா) திரும்ப சாருவிற்கு வைக்கலாம்.ஜீரோ டிகிரியை கொஞ்சம் நகாசு வேலை பார்த்து எழுதியவர் மிஷ்கின் என்று போட்டால் விட்டு விட முடியுமா. கடைசி காட்சியில் மிஷ்கினின் கதாபாத்திரத்தின் பெயர் தெரிகிறதாம்.பார் யூவர் கைண்ட் இன்பர்மேஷன்,லோஷன், மோஷன் ஜப்பானிய படத்திலும் கடைசியில் தான் தெரிகிறது.இன்னும் பிற ஒற்றுமைகள்

1.டேட்டிங் போகும் ஜோடி - நந்தலாலாவில் தேனிலவிற்கு போகும் ஜோடி.(லிவிங் டூ கெதர் என்று சொன்னாலே தமிழகத்தில் போராளியாக மாறி விடுவார்களே.அதனால் இதிலும் நேட்டிவிட்டி.

2.லாரிக்காரனுடன் சண்டை இதில் கிகுஜிரோ ஜெயிக்கிறார் - அதில் லாரி டிரைவர் மிஷ்கின் பற்றி உண்மையை அறிந்து கொள்கிறார்.

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

பழங்காலத்திலிருந்தே தாசியின் மீது நமக்கு அடங்காத ஆர்வமிருக்கிறது.மாறி வரும் தமிழ்ச்சமூகத்தால் சமீப காலமாக வந்த திரைப்படங்களில் நாயகியை அப்படி ஒரு கதாபாத்திரங்களில் பார்த்தால் அது சொல்லப்படாத ஈர்ப்பாக மாறுகிறதோ என்ற எண்ணம் வராமலில்லை.வேதம் படத்தில் அனுஷ்கா ஏற்றுக் கொண்ட வேடமது.தப்புத்தாளங்களில் சரிதா,அரங்கேற்றம் படத்தில் பிரமீளா என்று பாலசந்தர் ஆடி முடித்த எழுபதுகளின் ஆட்டம் திரும்ப ஒரு சுற்று வருகிறது.

பையனின் அம்மாவை தேடி சென்று அவளுக்கு இன்னொரு குடும்பம் இருப்பதை அறியுமிடம் தான் கிகுஜிரோ படத்தில் இடைவேளை.அதை மிஷ்கின் ஆர்டர் மாற்றி இறுதி காட்சிக்கு பக்கத்தில் வைத்திருப்பார். ஜப்பானிய படத்தில் ஹோமில் இருக்கும் அம்மாவை நந்தலாலாவில் மிஷ்கின் கொண்டு ஹோமில் சேர்த்தால் அது அட்டக்காப்பியில் இருந்து தழுவல் என்று ஆகி விடும் ஆக்கி விடுவார்கள் போல.

அமீர் சாருவின் புத்தகம் வெளியிடும் போது நான் புத்தகமே படிப்பதில்லை என்று சொன்னார்.அவரும் மிஷ்கின் போல லத்தீன் அமெரிக்க புத்தங்களைப் படித்திருந்தால் யோகியை சரியாக தமிழ்ப்படுத்தியிருப்பார்.அவருக்கும் ஒரு அம்பாஸிடர் கார் கிடைத்திருக்கும்.

நந்தலாலா விமர்சனமே இப்ப தான் வருதாம்.வெரி ஸ்லோ.நான் யுத்தம் செய் பார்த்துட்டேன்.திருட்டு என்பது அடுத்தவன் கற்பனையைத் திருடுவதும் தான்.என்றாவது யாராவது எழுதிய மாஸ்டர் பீஸ் கதையை நான் திருடி கொஞ்சம் மாற்றி எழுதி பெயர் வாங்கினால் யாரும் வந்து கேக்காதீங்க.நானும் அடிச்சி விடுவேன்.என் அண்ணன் வாழ்க்கையில் நடந்தது என்று.மிஷ்கினுக்கு மட்டும் தான் அண்ணன் இருக்கிறாரா என்ன.

நவம்பர் பதினைந்தாம் தேதி எழுதியது.

ஒரிஜினல் யுத்தம் செய் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.இதை பார்த்து விட்டு நான் பார்த்த திரில்லர்களிலேயே முதல் ஆயிரம் படத்தில் இதுவும் ஒன்று என்று சாரு சொல்லலாம்.மூலத்தில் (இருபத்தியொரு வயதில் துணை இயக்குனருக்கு மூலம் வந்தால் இப்படு உட்கார்ந்து யோசிப்பானா என்று மிஷ்கின் அடுத்து தரப் போகும் பேட்டியில் சொல்லலாம்.ஏற்கனவே வேட்டி கழன்று விட்டது.அது மாதிரி நிலை எனக்கு வரணுமா.அதனால் தெளிவாக) மூலப்படத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகளுமே ஆண்கள். இதில் சேரனுக்கு துணையாக தீபா என்ற புதுமுகம் தான் பெண் போலீஸ் அதிகாரி.வில்லன் கடைசி வரை பிடிபடவில்லை. மிஷ்கின் அந்த குழந்தையே நீங்க தான் என்பது போல சக போலீஸ் அதிகாரி தான் அந்த வில்லன் என்று சொல்லலாம்.ஏன் சக என்று சொல்ல வேண்டும் சேரன் தான் அந்த வில்லன் என்று சொல்லலாம். நாமும் ஆகா இதுக்கு ஆஸ்கார் கிடைக்காதா ஆம்பாஸிடர் கார் கிடைக்காதா என்று மூச்சுத் திணற திணற அசராமல் பேசுவோம்.

இன்னும் மிச்சமிருக்கிறது.ஸ்டே டியூண்ட்.

5 comments:

Rettaival's Blog said...

இந்த மிஷ்கின் , அமீர், கௌதம் மேனன் , இவனுக அடிக்கிற லூட்டி இருக்கே...ஆனா ஊனா குமுதம் ஆனந்தவிகடன்ல பேட்டின்னு எடுத்துவைக்கிற வாந்திக்கும் இவங்களோட ஒரிஜினாலிட்டிக்கும் ..சத்தியமா தமிழ்நாட்டுல தான்யா இதெல்லாம் நடக்கும்!

அது சரி(18185106603874041862) said...

எந்திரன் தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த படமாக இருக்கும் போது இதில் பெரிய ஆச்சரியமில்ல. நித்யானந்தர் கடவுள். அவன் ஒரு கயவாளி. யோகி அமீர் என்னை ஏமாற்றி விட்டார். நான் பிரச்சினையின் அடிப்படையில் மட்டுமே ஜெயமோகனை விமர்ச்சிக்கிறேன். ஜெயமோகனின் அம்மா அப்பா சாவுக்கு காரணம் ஜெயமோகன் தான். அடுத்த இம்பாக் விருது எனக்கு தான்.

karthi said...

good one.waiting for further .....

Suresh Kumar M said...

nice analysis... keep it up...

Suresh Kumar M said...

nice analysis... keep it up... truth hurts...