Friday, July 31, 2009

பிட்டு படம் எடுப்பது எப்படி ?

அதிஷா சொல்லி தருவார் என்று ரொம்ப நாள் நானும் காத்து கிடந்தேன்.அவர் சொல்லி தருவது மாதிரியே தெரியவில்லை. நானே முயற்சி செய்து கற்று கொண்டேன். எனக்கு ஒரு விஷயம் தெரிந்து கொண்டால் நான் அதை ஊருக்கே கத்து கொடுப்பேன். இந்த விசயத்தில் நான் இன்னும் கத்துக்குட்டி தான் (எப்பவும் பத்து பாயிண்ட் எழுதுவேன் இதுல ஐந்தே ஐந்து பாயிண்ட் தான்).

உங்களிடம் வி.சி.டி கட்டரோ, டி.வி.டி ரிப்பரோ இருந்தால் உங்களுக்கு பிடித்த தமிழ் படத்தில் இருந்து பிடித்த காட்சியை வெட்டி எடுத்து கொள்ளலாம். அல்லது பிடிக்காத காட்சியை வெட்டி எரிந்து விடலாம்.(விஜய் டி.வியில் பார்ப்பது போல குட்டி படம் பார்க்கலாம்) வேறு படத்தில் இருந்து காட்சியை எடுத்து இன்னொரு படத்துடன் சேர்த்து நல்ல பொழுதுபோக்கான படத்தை பார்க்கலாம்.

you tube போன்ற இணையதளங்களில் இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ்,தெலுங்கு பட நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளை (பால கிருஷ்ணா நடித்தது ) தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

நண்பர்கள் யாராவது அவர்கள் வீட்டில் உங்களுக்கு பிடித்த காட்சிகளை வைத்து இருந்தால் அவர்களிடம் பெண் டிரைவில் கேட்டு வங்கி கொள்ளலாம்.

புளு டூத், இன்ப்ரா ரெட் போன்ற தொழில்நுட்பங்களை உபயோகித்து உங்கள் கைபேசியிலே பெற்று கொள்ளலாம் (வேறு மாதிரியான படம் இருந்தால் காவல்துறை உடனே கைது செய்கிறார்கள் அவர்களும் தொழில்நுட்பங்களை உபயோகித்து வருகிறார்கள். அந்த மாதிரி படங்களை தவிர்ப்பது நல்லது)

உங்கள் அலுவலகத்தில் சில இணையதளங்கள் தடை செய்யப்பட்டு இருக்கும். அது மாதிரி பட்சத்தில் உங்களுக்கு பிடித்த பாடல் காட்சிகளை மெயிலில் அனுப்ப சொல்லி பெற்று கொள்ளலாம்.

டிஸ்கி : (இது தான் நிறைய)

இப்படிதான் தலைப்பு வைத்து குமுதம்,ஆனந்த விகடன் நம் ஏ எல்லோரையும் மாற்றி வருகிறது. அவர்களிடம் கேட்டால் மக்களுக்கு பிடித்ததை தான் எழுதுகிறோம் என்று சொல்வார்கள்.மக்களுக்கு பிடித்தது உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டால் பதில் வராது.

பிட் என்றால் துண்டு என்று அர்த்தம் வருகிறது. நல்ல காட்சிகளும் ஒரு முழு படத்தில் ஒரு துண்டு தான்.

எதையாவது எதிர்பார்த்து ஏமாந்து இருந்தால் நான் பொறுப்பல்ல (டாக்டர் பிரகாஷ் பக்கத்தில் அமர எனக்கு தைரியம் பத்தாது)

புலிய பார்த்து பூனை சூடு போட்டுகிச்சாம் புலி - அதிஷா அப்ப பூனை - நான் இல்லை சொன்னா நம்பவா போறீங்க

அடிச்சு விளையாடுங்க

8 comments:

வால்பையன் said...

நிஜமான பிட்டு படம் தான் எடுக்கப்போறிங்கன்னு வந்தேன்!

அப்படி எடுக்குற மாதிரி இருந்தா அதிஷாவயே கதாநாயகனா போட்டுருங்க!

இரும்புத்திரை said...

thanks valpaiyan

Unknown said...

"குங்குமம்" பத்திரிக்கையில் சேர உங்களுக்கு பிரகசாமான வாய்ப்பு இருக்கிறது அரவிந்த் அண்ணா:)

இந்த வாரம்:
சிம்புவும் த்ரிஷாவும் காதலிக்காத வரை எனக்கு(எனக்கு அல்ல) எந்த பிரச்னையும் இல்ல - கௌதம் மேனன்:)

Suresh Kumar said...

குங்குமம்" பத்திரிக்கையில் சேர உங்களுக்கு பிரகசாமான வாய்ப்பு இருக்கிறது அரவிந்த் அண்ணா:)

நானும் ஆமோதிக்கிறேன்

இரும்புத்திரை said...

thanks cibi and suresh

இரும்புத்திரை said...

//குங்குமம்" பத்திரிக்கையில் சேர உங்களுக்கு பிரகசாமான வாய்ப்பு இருக்கிறது அரவிந்த் அண்ணா:) //

ithu varungaala amerika janaathipathi mathiri irukku

listla kunkumatha vituten

Unknown said...

சிக்கன் பிரியாணி போடுவிங்கனு பார்த்த அஞ்சு ரூவா காக்கா பிரியாணி போடுறிங்களே:( போதுண்டாப்பா

இரும்புத்திரை said...

cibi only kaakkaa briyaani aquafina kidaikathu