இதுவரை ஆஸ்கர் ஒரே ஒரு தமிழனுக்கு மட்டுமே சாத்தியம் ஆகி உள்ளது. அது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் இந்திய மொழியில் முயன்று இருந்தால் ஒரே ஒரு பிரிவில் மட்டுமே அவர் போட்டி போட்டு இருப்பார். நிச்சயம் வென்று இருக்க மாட்டார். அவர் நேரடி ஆங்கில படத்தில் வேலை பார்த்ததால் அவருக்கு ஒன்றுக்கு இரண்டாக ஆஸ்கர் சாத்தியப்பட்டது.
ஆக மொத்தம் நேரடி ஆங்கில படத்தில் வேலை பார்த்தால் மட்டுமே ஆஸ்கர் ஒரு இந்தியனுக்கு கிடைக்கும்.
அப்பொழுது ஒரு தமிழனுக்கு (குறிப்பாக ஒரு நடிகருக்கு அல்லது இயக்குனருக்கு) ஆஸ்கர் கிடைக்க என்ன செய்ய வேண்டும்.
முதலில் தமிழில் வெற்றி பெரும் படத்தைத் தெலுங்கு மொழியில் டப் அல்லது ரீமெக் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் இந்தி திரையுலகம்
அந்த படத்தை திரும்பிப் பார்க்கும்.
அப்படி தெலுங்கு மொழியில் வெற்றி பெரும் படத்தைத் தான் இந்தியில் ரீமெக் செய்வார்கள். ஆனால் பெரும்பாலான தமிழ் படங்கள் தெலுங்கு மொழியில் வெளியான உடன் மண்ணைக் கவ்வி விடும்.
அதற்கு சில உதாரணங்கள் (டப் செய்து மண்ணைக் கவ்வியவை)
சுப்ரமணியபுரம், அயன்,
(ரீமெக் செய்து மண்ணைக் கவ்வியவை)
ஆட்டோக்கிராப் (தெலுங்கு மொழியில் தோல்வி அடைந்த உடன் இந்தி ரீமெக் நிறுத்தப்பட்டது),ஜெமினி, காக்க காக்க, துள்ளுவதோ இளமை,காதல் கொண்டேன், திருடா திருடி, சித்திரம் பேசுதடி மற்றும் பல.
தெலுங்கிலும் வெற்றி பெற்று இந்தியில் மண்ணைக் கவ்வியவை - அந்நியன், தசாவதாரம் (மூன்று மொழியிலும் ஒரே நடிகர்)
ரீமெக் செய்து வெற்றி பெற்றது - கஜினி (அமீர் கான் ), சேது (ராஜசேகர் மற்றும் சல்மான் கான்)
இந்தியில் போய் தோல்வி அடைந்த படம் - மின்னலே (சயிஃப் அலி கான் அப்பாஸ் கேரக்டரில் நடித்தார் இன்று அவர் ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹீரோ + கரீனா கபூரின் காதலன்)
தமிழிலில் தோல்வி அடைந்து தெலுங்கு மற்றும் இந்தியில் வெற்றி பெற்ற படம்
சார்லி சாப்ளின் (நோ என்டரி), கபடி கபடி, பம்மல்.கே.சம்பந்தம் (காம்பக் இஸ்க்)
முதலில் தெலுங்கு படத்தில் வெற்றி பெற வேண்டும்(இந்தியில் நுழைய) அல்லது நேரடி இந்தி படத்தில் நடிக்க வேண்டும்.
தெலுங்கு மொழி எப்படி இந்தியில் அளவுக்கோலோ அது போல ஆங்கில படத்தில் நடிக்க இந்தியில் பெரும் வெற்றி தான் அளவுக்கோல்.
இப்பொழுது அமீர் கான் ரஹ்மானுக்கு வாங்கி தந்த இயக்குனர் டேனி போயல் நேரடி ஆங்கில படத்தில் நடிக்க உள்ளார்.( ஆஸ்கரைக் குறி வைத்து தான்)
அப்ப நம் தமிழ் நடிகனுக்கு வாய்ப்பு இருக்குமா ?
நிச்சயம் சூர்யாவிற்கு இருக்கிறது (ராம் கோபால் வர்மாவின் அடுத்த இந்தி படத்தின் ஹீரோ வேறு யார் சூர்யா தான் அவரை வாழ்த்துவோம்.)
Friday, July 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நம் சினிமாக்காரர்களும் சரி, அதை மிகவும் சீரியசாக எடுத்துக் கொள்ளும் பார்வையாளர்களான நாமும் சரி, என்னத்துக்கு ஆஸ்கார் மோகம் பிடித்து அலைகிறோம். ஆஸ்கார் என்பது ஹாலிவுட்டிற்கு என நிர்ணயிக்கப்பட்ட ஒரு விருது. அது ஒன்றும் எல்லா திரைப்படங்களையும் அளக்கும் அளவுகோல் என்பதை புரிந்து கொள்ள முயலுங்கள்.
thanks prasanna
முதலில் தமிழில் ஒரு நல்ல படத்தை எடுத்து, அதற்கு "Academy Award for Best Foreign Language Picture" கிடைத்தால், அது நமக்கு பெருமை. அதை விட்டுவிட்டு அமெரிக்காவில் கொடுக்கும் ஒரு விருதுக்கு இப்படி முட்டிமோதுவதில் என்ன லாபம் அரவிந்த்... பேசாமல் நல்ல தமிழ் படம் வெளிவர வேண்டிக்கொள்வோம்... :)
Post a Comment