பின்னாடி இருந்து ஒரு பெண்ணை பார்த்து பரவசப்பட்டு அந்த பெண்ணை ஓவர்டேக்செய்து ஏமாந்து நிற்போமே அது போல டிரைலர் பார்த்து ஒரு மொக்க படத்த பார்த்து விட்டு வருவோமே (உதா சேவல்,சின்னா (கூச்சமே படாம ஜூராசிக் பார்க் படத்துல வர்ற காட்சிய சுட்ட ஒரே ஜீவன் சுந்தர்.சி) .
நம்ம பின்னாடி ஒரு பொண்ணு நடந்து வரும் சட்டுன்னு திரும்பி பார்க்க முடியாது.தப்பா நினைச்சுட்டா (நல்ல பிகரான்னு கண்டு பிடிப்பது ரொம்ப சுலபம் எதிர்ல வர்றவன் கண்ணைப் பார்த்தால் தெரிஞ்சிட போகுது). மொழியே தெரியாமல் படம் பார்த்து ரசிப்பது இதில் சேரும் - தில் சாத்தா ஹை இந்தி படம் .
ஊர்ல இருக்கிறவன் ஒருத்தனுக்கு கூட அந்த அட்டு பிகர பிடிக்காது ஆனா நமக்கு பிடிக்கும் அப்படி பிடித்த மொக்க படம் - புதிய கீதை (விஜய் ரசிகர்கள் கூட காறி துப்பிய படம்).
ரொம்ப நாளாக கேள்விப்பட்ட அழகான பொண்ணு தீடிர்ன்னு வீட்டுக்கு வந்து "நாங்க பக்கத்துக்கு வீட்டுக்கு வந்து இருக்கோம் கொஞ்சம் சுத்தியல் வேணும்.."அப்படி சொன்ன உடனே ஆணி ,சுத்தியல் ,நாற்காலி ,நீங்க உட்பட அவங்க வீட்டுல பொய் இருப்போமே - ரொம்ப நாள் பார்க்க ஆசைப்பட்டு பிறகு ஏதோ ஒரு லக்குல பார்த்த படம் மரோசரித்ரா .
சின்ன வயதில் மூக்கு சிந்திகிட்டு திரியும் பெண்களை பார்த்தாலே கோபம் வரும் நமக்கு ஒரு வயது வந்த உடன் இந்த அழுக்குஉருட்டி உள்ளே ஒரு அழகியா ? என்று ஆச்சர்ய படுவோம் - மொக்க அடிதடி படமா கொடுத்த தெலுங்கு சினிமா திசை மாறி பொம்மரில்லு, ஹாப்பி டேஸ், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் என்று படம் வரும் பொழுது ஆச்சரியமாக இருக்கும் .
சின்ன வயசுல அந்த பெண்ணை விழுந்து விழுந்து சைட் அடித்து இருப்போம் அவளுக்கு திருமணம் ஆன கொஞ்ச நாட்களுக்கு பிறகு இதை போய்யா ரசித்தோம் என்று நமக்கு நேம் குட்டி கொள்வோமே - காதல் கொண்டேன் ,துள்ளுவதோ இளமை,அந்தமான் காதலி,திரிசூலம் போன்ற படங்கள் இந்த வரிசையில் வரும் .
நண்பர்கள் சிலாகித்து சொல்வார்கள் அந்த பொண்ண மாதிரி அழகி கிடையாது .தொண்டையிலே சாப்பாடு போவது வெளியே இருந்து பார்ப்பவனுக்கு தெரியும் .ஆனா பொய் பார்த்தா சொன்னவன் மேலே கொலைவெறியே வரும் - அப்படி அவர்கள் சொல்லி கொலைவெறி வந்தது மாசிலாமணி,காதலில் விழுந்தேன் ,தெனாவட்டு போண்டா சன் டிவி யின் விளம்பரங்களைத் தாங்கி வரும் படங்கள்.
தீடிர்ன்னு ஏரியாக்குள்ள ஒரு புது பொண்ணு வந்த உடன் பரபரப்பு கிளம்புமே இத்தனை நாளாக எங்கு தான் இருந்துதோ என்று விசாரித்து தள்ளுவோமே -வந்து பத்தே நாட்களில் திரையரங்கை விட்டு தூக்கிய பிறகு ரசிக்கப்படுவது தெரிந்து வந்த படம் சேது.
+1 படிக்கும் பொழுது ஒரு கல்லூரி பெண்ணின் நட்பை முறித்து கொள்ளாவிட்டால் பரிட்சையில் காட்ட மாட்டேன் என்று மிரட்டியே அந்த நட்பை உடைத்த ஒரு +2 படித்த நெருங்கிய கிராதகன். அவனுக்கு தெரியாமல் பேசுவது அல்லது பேச முயற்சிப்பது - நெருக்கமான காதல் காட்சிகள் வந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் ரிமோட்டை தேடுவது போல பாவ்லா காட்டுவது (குருதிப்புனல்) கண் தொலைக்காட்சியிலே இருக்கும், கை தேடும் .
உறவினர் வீட்டுக்கு வந்து இருக்கும் பெண்ணோடு தொடக்கத்தில் எரிச்சலோடு பழகி பிறகு அவள் அல்லது நாம் ஊருக்கு போகும் நாள் வரும் பொழுது பதற்றத்தோடு பேச வேண்டியதை சீக்கிரம் சொல்ல வேண்டும் என்று ஒன்றுமே சொல்லாமல் திரும்பி வரும் வழியில் அவளை மறக்கும் விதமாக அடுத்த பெண்ணைப் பார்ப்போமே - வேறு வழி இல்லாமல் மொக்க படத்தையும் பார்த்து வெளியே வந்த உடன் அடுத்த படத்தைப் நோக்கி செல்வது( காதல் வைரஸ் பார்த்து நொந்த பிறகு மௌனம் பேசியதே படத்தை பார்த்தது போல)
Friday, July 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
super boss :-))
//பின்னாடி இருந்து ஒரு பெண்ணை பார்த்து பரவசப்பட்டு அந்த பெண்ணை ஓவர்டேக்செய்து ஏமாந்து நிற்போமே//
ஆரம்பமே அட்டகாசம் தல...
:))))
வித்யாசமான பதிவு+பார்வை.
:)
thanks raja, யாத்ரீகன் , நாடோடி இலக்கியன்
ellorum adikadi vanga boss
thanks raja, யாத்ரீகன் , நாடோடி இலக்கியன்
ellorum adikadi vanga boss
thanks cibi
பெண்களை நிலா பூ மற்றும் பல மென்மையானவற்றோடு ஒப்பிட்டு வந்த வரும் இக்கால கட்டத்தில், பெண்களை சினிமாவோடு ஒப்பிட்டது சற்று புதுமை:) வரவேற்போம் புதுமையை:) பெண்கள் படிக்காத வரை உமக்கு எந்த பிரச்னையும் இல்லை அரவிந்த் அண்ணா:)
thambi enna vida nalla eluthra appadiye ponnuka kittayum matti vitutiye cibi sellam
அப்படி அவர்கள் சொல்லி கொலைவெறி வந்தது மாசிலாமணி,காதலில் விழுந்தேன் ,தெனாவட்டு போண்டா சன் டிவி யின் விளம்பரங்களைத் தாங்கி வரும் படங்கள்.
supperr
சன் டி.வீ.விளம்பரக்களை பர்ர்த்து அந்த
படம் பர்ர்கும் ஆசையே போய்விடும்
சீக்கிரமா முடிச்சிட்டீங்களே..
இன்னம் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்!
thanks yoga,venkat,kalaiarasan
Post a Comment