நமக்கு இரட்டை இதிகாசங்களாக மகாபாரதம்,ராமாயணம் இருப்பது போல கிரேக்கர்களுக்கு இலியாத் மற்றும் ஒடிசியஸ் இரட்டை இதிகாசங்களாக இருக்கிறது.
ப்ரியமின் தங்கை ஹெசயொனை கிரேக்கர்கள் கடத்தியதில் ஆரம்பிக்கிறது கதை. தங்கையை அனுப்ப சொல்லி ப்ரியம் கேட்டும் அவர்கள் மறுக்கிறார்கள். இது டிரோஜன்களின் முறை.ஹெலனைத் தூக்கி வருகிறான்.கிரேக்கர்கள் ஹெலனைஅனுப்பி விடுமாறு கேட்கிறார்கள். இது பிரியமின் முறை.மறுக்கிறான்.போர் நடக்கிறது.ட்ராய் எரிகிறது.
பாரீஸ் பிறக்கும் போது அவனுக்கு அம்மாவுக்கு கொள்ளிக்கட்டைகள் பறப்பது போல கனவு வருகிறது. மகாபாரதத்தில் துரியோதனன் பிறக்கும் போது சகுனம் சரியிருக்காது. கர்ணனைத் தண்ணீரில் விட்டது போல பாரீஸை கொல்ல சொல்லி பிரியம் ஒருவனிடம் கொடுக்கிறான். கொல்ல மனமில்லாமல் அவன் இதா மலையில் மிருங்கள் சாப்பிடும் என்று நினைத்து பாரீஸை அங்கு போட்டு விடுகிறான். பெண் கரடி அவனுக்கு பால் கொடுத்து காப்பாற்றுகிறது.வீட்டிற்கு தூக்கி வந்து வளர்க்கிறான்.
ப்ரியத்தின் போட்டிகள் வைக்கிறான். பாரீஸ் கலந்து கொண்டு ஜெயிக்கிறான். இவன் யார் கீழ்ஜாதி பையன் என்று இளவரசர்கள் சண்டைக்கு போக ப்ரியத்திற்கு உண்மை தெரிய வருகிறது. பாரீஸ் இளவரசனாகிறான். கர்ணன் அங்க தேசத்து மன்னன் ஆகிறான்.
இப்படி நிறைய ஒற்றுமைகள். சரி கதைக்கு வருவோம். ஹெலனைக் கடத்தியப்பின் கிரேக்கர்கள் படைத் திரட்டுகிறார்கள். அவர்களுக்கு தெரியும். அக்கீலிஸ் மற்றும் ஒடிசியஸ் இருந்தால் தான் ட்ராய் நகரத்தை அழிக்க முடியும் என்று. அக்கீலிஸின் தாய்க்கு தெரியும். அவன் ட்ராய் போனால் திரும்ப மாட்டான் என்று. ஒடிசியஸின் பிரச்சனை வேறு.அவன் ட்ராய் போனால் அவன் இதாகா திரும்பி வர இருபத்தியொரு வருடங்கள் ஆகும். இருவருக்குமே(இருவரின் குடும்பத்துக்குமே) போரில் கலந்து கொள்ள விருப்பமில்லை.
அர்ஜூனன்,கிருஷ்ணன் மாதிரி இரண்டும் கதாபாத்திரங்களும் கோல்மால் செய்வதில் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் இல்லை. இருவரும் இல்லாத போரில் என்ன சுவாரஸ்யத்தை கண்டு விட முடியும். ஒடிசியஸ் பைத்தியம் போல நடிக்கிறான்.அவர்கள் வரும் போது ஏரில் கழுதையையும்,காளையையும் பூட்டிக் கொண்டு நிலத்தில் உழுது கொண்டிருக்கிறான்.உப்பை தூவுகிறான். வந்ததில் ஒருவன் ஒடிசியஸின் மகனை ஏரின் முன்னால் போடுகிறான்.இவன் ஏர் ஓட்டுவதை நிறுத்துகிறான். பைத்தியமில்லை என்று ஒடிசியஸைக் கண்டுப்பிடித்தவனுக்கு ட்ராய் போர் நடக்கும் போது ஒரு பெரிய ஆப்பாக வைக்கிறான்.
அக்கீலிஸைத் தேடி வருகிறார்கள்.அவனுடைய அம்மா அந்தப்புரத்தில் மகனை ஒளித்து வைத்து விடுகிறாள். எங்கு தேடியும் அக்கீலிஸ் கிடைக்கவில்லை.அந்தப்புரத்தில் உள்ள பெண்களுக்கு பரிசு கொடுத்து விட்டுப் போகிறோம் என்று சொல்லி அந்தப்புரத்தில் நுழைகிறார்கள். வாள்,வில்,ஈட்டி, திரவியங்கள் என்று பொதுவாக வைத்து எடுத்து கொள்ள சொல்கிறார்கள். அக்கீலிஸ் வாள்,வில், ஈட்டியையும்,பெண்கள் திரவியத்தையும் எடுக்க அக்கீலிஸை ஒரே அமுக்காக அமுக்குகிறார்கள்.
அர்ஜூனன் கொஞ்ச காலம் பேடியாக நடித்தது நினைவுக்கு வரலாம். கிருஷ்ணனுக்கு பாதத்தில் அடிப்பட்டால் தான் சாவு வரும் என்பது போல அக்கீலிஸிற்கு அங்கு அடித்தால் தான் சாவு வரும். துர்வாசருக்கு பாதம் தவிர எல்லா இடத்திலும் பாயாச அபிஷேகம் கிருஷ்ணன் செய்த காரணத்தால் இந்த சாபம்.அக்கீலிஸின் தாய் காலைப் பிடித்து கொண்டு நதியில் அவனை முக்குகிறாள்.கைக்குள் இருக்கும் பாதம் நனையவில்லை. இருவரும்(அ மற்றும் கி) பாதத்தில் அம்பு பாய்ந்து இறக்கிறார்கள்.
திருமணம் ஆன பெண் இரண்டு கதையிலும் கடத்தப்படுகிறாள். கிரேக்க கதையில் விருப்பத்துடன்(கிரேக்கர்கள் பொறுத்தவரை அது கடத்தல் தான்). ட்ராய், இலங்கை இரண்டும் தீப்பிடித்து எரிகிறது. குறிப்பிட மறந்த ராமாயண, இலியாத் ஒற்றுமைகள். ராமாயணத்தையும்,மகாபாரத்தையும் மிக்ஸியில் போட்டு அடிச்ச மாதிரி ஒரு பீலிங்.
பிறப்பில் பாரிஸ் கர்ண,துரியோதன கலவையாக இருந்தால் அக்கீலிஸ் இறப்பில் அர்ஜூன,கிருஷ்ண கலவையாக இருப்பது தான் நகைமுரண். அக்கிலீஸ் இறந்தப்பின் நம்ம கிரேக்க கிருஷ்ணன் ஒடிசியஸ் கடமையை செவ்வனே செய்கிறார். மகாபாரதப் போர் முடிந்தப்பின் துவாரகை எப்படி அடித்துக் கொண்டு அழிந்ததோ அதே போல் இதாகாவிலும் மக்கள்ஸ் அடித்து கொண்டு சாகிறார்கள்.
Saturday, February 26, 2011
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Excellent . . .
Post a Comment